வணக்கம் வலை நண்பர்களே,
BLOG - வலைப்பூ என்பது கூகிள் தரும் ஓர் இலவச சேவை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இலவச சேவைக்கு சிலர் பணம் செலவு செய்து சொந்த முகவரியும் வாங்கியிருப்போம். ஆனாலும் கூகிளின் இலவச டாஷ்போர்ட் உபயோகித்து பதிவுகள் எழுதி வருகிறோம். பதிவுகளை எழுதுபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை வைத்திருப்பார்கள். அதனடிப்படையிலே அவர்களின் பதிவுகள் எழுதப்பட்டு இருக்கும். அவரர்களின் பதிவுக்கும் கண்டிப்பாக வாசகர்கள் இருப்பார்கள். அந்த வாசகர்கள் அவரது பதிவை விரும்பி வந்து படிப்பவர்களாகவும் இருக்கலாம், அதே சமயம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த பதிவு எந்தளவுக்கு மோசமாக எழுதப்பட்டு உள்ளது என அறியவும் படிக்கலாம். எல்லோருக்கும் எல்லா வலைப்பூக்களும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
வலைப்பூவை பெரும்பாலும் தங்களின் பொழுதுபோக்கிற்காக தான் ஆரம்பிக்கிறோம், என்ன எழுதுவது எனத் தெரியாமல் ஆரம்பித்து, பிறகு எப்படி எழுத வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டு அதனடிப்படையிலும் பதிவுகளை எழுதுகிறோம். சரி, நாம் எப்படி எழுதினாலும் அதை படிப்பவர்கள் இருக்கிறார்கள். இணைய தேடுதல் மூலமாகவும் அவர்கள் நமது தளத்திற்கு வந்திருப்பார்கள். அப்படி வந்திருப்பவர்கள் நமது பொழுதுபோகிற்காக எழுதியதை வாசிக்க வேண்டிய தலையெழுத்து எதனால் உருவாகிறது? நாம் அந்த பதிவை எழுதியதால் மட்டுமே அவர்களுக்கு அந்த தலையெழுத்து உருவாகிறது.. அப்படி தலையெழுத்தால் படிப்பவர்கள் அந்த பதிவிற்கு கருத்திடவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கருத்திட்டவர்கள் நமது பதிவை ஏதேனும் குறை சொல்லியிருந்தால், அதற்கு பதிலாக, நான் பொழுதுபோக்காக எழுதினேன். அதை நீ ஏன் படிச்ச? ஏன் கமென்ட் போட்ட, எப்படி குறை சொல்லலாம்? என நாம் கேட்டால் அது நியாயமா?
பொழுதுபோக்குக்காக மட்டுமே எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன். அந்த பதிவை ஏன் இப்படி எழுதியிருக்கிங்கன்னு யாரும் கேட்க உரிமை கிடையாது என்றும், நானா உங்களை பதிவு படிக்க சொன்னேன் என கேட்பதும் முட்டாள்தனம் இல்லையா? சில பதிவுகள் முட்டாள்தனமாக எழுதினாலும் அதையும் பிறர் ரசிக்கும்படி சொல்ல முடியுமே.
அதை விடுத்து என் பிளாக், என் பதிவு, என் காசுல எழுதறேன், உன்னை படிக்க சொன்னேனா? உன்னை கமென்ட் போட சொன்னேனா? தினமும் படிக்க சொல்லி வற்புறுத்தினேனா, எழுதறது என் இஷ்டம், ஹிட்ஸ்க்காகவும் எழுதுவேன், ஆனா நீ அதை ஹிட்ஸ்க்கான்னு கேட்க கூடாது. அப்படியும் கேட்டா மறுபடியும் என் பதிவு, என் காசுன்னு பதில் சொல்ல வேண்டியது...
பொழுதுபோக்குக்கு எழுதுகிறார்கள் என்றால் அதை எதற்காக பப்ளிஷ் செய்ய வேண்டும்? வெட்டி நேரம் கிடைகறப்ப பொழுதுபோக்கா எழுதி எழுதி டிராப்டிலேயே வைத்துக்கொள்ளலாமே... அப்படியே பதிந்தாலும் அதை ஏன் அனைவருக்கும் தெரியும்படி பப்ளிக்காக காட்ட வேண்டும்? தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் காட்டினாலே போதுமே? ஹிட்சுக்காக இல்லை என்றால் hit counter எதற்கு வைக்க வேண்டும்?
என்ன பொழப்புடா???????????????????
டிஸ்கி:
முன்னொரு காலத்தில் (2013-இல்) ஹிட்ஸ்க்காக அலைந்த, எதை வேண்டுமாலும் எழுதிய, திருடிய, காப்பியடித்த பதிவருக்காக பொங்கிய பதிவு இது. ரெண்டு மூணு வருசமா ட்ராப்டில் தூங்கிக் கொண்டிருந்தது...
நானும் ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் சொந்தமாக எழுதத் தெரியாத அப்போது ஹிட்ஸ்க்காக எழுதினேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்..
நானும் ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் சொந்தமாக எழுதத் தெரியாத அப்போது ஹிட்ஸ்க்காக எழுதினேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்..
13 கருத்துரைகள்:
யார் பாஸ் அது?
@ராஜபாட்டை - ராஜா
கவனிக்க டிஸ்கி
யப்பா...! ஏனிந்த கோபம்... ஆனாலும் வலைப்பக்கம் வந்தது சந்தோசம் தல...
நியாயமான அறச்சீற்றம் நண்பரே...
தமிழ் மணம் 4
வந்ததற்கு நன்றி!
எப்படியோ வாசியும் வலையைதூசு தட்டியாச்சு )))மீண்டும் வலையில் காண்பது மகிழ்ச்சி.
மீண்டும் வலைப்பக்கம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்கிறேன்.
த ம 5
//சில பதிவுகள் முட்டாள்தனமாக எழுதினாலும் அதையும் பிறர் ரசிக்கும்படி சொல்ல முடியுமே.//
பிறர் ரசிக்கும்படி சொல்வது என்பது மெத்தக்கடினம்.
என்னைப் போன்ற முட்டாள்கள்
பன்முறை தோற்ற களம்.
கருத்துகளில் குற்றம் காண்போர்
வறுத்தேடுப்பார் வேதனை உறச்செய்வார்
எனினும், சினம் காக்க.
என யான் எனக்குள்ளே
என்றுமே சொல்லிக்கொள்வேன்.
நும்மிடம் சொல்ல ஆசை தான்.
நா எழவில்லையே !!
பா ஒன்று பாடி
பிரகாஷைப் போற்ற ஆசை.
சுப்பு தாத்தா.
ரைட்டுதான் ...
ரொம்ப நாளாச்சு போல ...
கோபத்தின் காரணம் புரியவில்லை நண்பரே
எனினும் நீண்ட நாட்கள் கழித்து
வலையில் தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே
ஆறுவது சினம் என்று நல்லா ஆறப்போட்டு இப்போ பப்ளிஷ் பண்ணியிருக்கீங்களே :)
ஆனாலும் காப்பியடிக்கும் திருடும் மக்கள் இன்றும் (என்றும்) இருக்கிறார்கள்தானே..
டூ லேட்...யோவ், தூக்கம் வரலேன்னா இப்படியா பண்றது?
"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்... என்று சாட்டையை நன்றாகவே சொடுக்கியுள்ளீர்கள்...
scientificjudgment