
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
பைரவா..
பலரும் விமர்சனம் சொல்லி படம் பார்க்க இருப்பவர்களை தமிழ் ராக்கர்ஸ் பக்கம் திருப்பியது நியாயமே என இயக்குனர் பரதன் நிரூபித்துள்ளார்...
.
தளபதி விஜய் கால்சீட்டும், ஹிட் கொடுக்கும் ராசி கீர்த்தி சுரேஷ் கால்சீட்டும், நாலு பைட்டு, நாலு பாட்டு, நாலு பன்ச் டயலாக் இருந்தா போதும், என நினைத்திருப்பார் போல...
கூடவே தொட்டுக்க, காட்சி நீளத்தை நீட்டிக்க சதிஷ், தம்பி ராமையா, மற்றும் பல துணை நடிகர்கள், மெயின் வில்லன், இணை வில்லன், துனை வில்லன் என ஆட்கள் பட்டாளம் அதிகம்...
பேங்க் லோன் தராமல் இழுத்தடிக்கும் ரவுடியை அடித்து துவைப்பதில் ஆரம்பிக்கிறது விஜயின் ஸ்கோப்...
அப்படியே இண்ட்ரோ சாங்... விஜய்க்கு மாஸ் சாங் என நினைத்தால், அது தவறு என நிரூபித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்...
.
கீர்த்தி சுரேஷ் இண்ட்ரோ... அழகாக இருக்கிறார். தன் உதட்டை சுழிக்காமல் படம் முழுதும் நடித்துள்ளார்.. அப்படியே இனி வரும் படங்களில் நடித்தால் கீர்த்தியை ரசிக்கலாம்.
.
கதையை நகர்த்த ப்ளாஷ்பேக் தேவை தான்... ஆனா, இம்புட்டு நீளமா என நெளியும் போது விஜய் சபதம் எடுத்து வில்லன்களை புரட்டி போடும் பைட், க்ளைமாக்ஸ் பைட்டையும் மிஞ்சியிருக்கு... அதோட படத்தையும் முடிச்சிருக்கலாம். நாமளும் படத்தைக் கொண்டாடியிருப்போம்
.
இரண்டாம் பாதியில் கதைக் களமான திருநெல்வேலிக்கு செல்கிறார் விஜய். கூடவே படமும் மெதுவாக நகர ஆரம்பிக்கிறது. இடையிடையே சில பஞ்ச், பைட், நினைவில் கொஞ்சமும் நிக்காத ஒரு மெலோடி, செண்டிமெண்ட் என நகர்ந்து, பாப்பா பாப்பா பாட்டில் தான் நிமிர்ந்து உட்கார்கிறோம்.
.
க்ளைமாக்ஸ் பைட்.. படத்தை முடித்து வைக்க உதவுகிறது. அவ்வளவே...
.
கதை:
பணம் கொழிக்கும் மருத்துவ கல்லூரி தொழிலில் பலியாகும் ஒரு மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க, நீதியின் உதவியை நாடி, அதன் மூலம் வில்லனை பழி வாங்கும் கதையே பைரவா.
.
விஜய்:
ரொம்பவும் சத்தம் போடாம, கொஞ்சமும் மெலிந்து, கொஞ்சம் புதுமையான ஹேர் ஸ்டைலில் வருகிறார். கத்தி, துப்பாக்கி, தெறி என விஜய் ரசிகராக அல்லாதவர்களையும் ஈர்த்த விஜய் இந்தப்படத்தில் அவர்களை தக்க வைக்கவில்லை. வழக்கமான விஜயின் வேகம் இப்படத்தில் இல்லை. காரணம் இயக்குனர் மட்டுமே. இயக்குனர் சொல்லிய மட்டுமே நடித்திருக்கிறார் போல...
.
கீர்த்தி சுரேஷ்:
அழகாய் இருக்கிறார். அவசியமான, தெவைக்கு மட்டும் எக்ஸ்ப்ரெசன் தந்து நம் மனதில் இடம் பிடிக்கிறார். வீட்டில் இருக்கும் காட்சியில் கூட பட்டு சேலை, தலை நிறைய பூ என வலம் வருகிறார். மற்றபடி தொடரியில் இழந்த ரசிகர்களை இப்படத்தில் தக்க வைத்துள்ளார்.
.
இதர நடிகர்கள்:
சோலோ பெர்பார்மன்ஸ் காமெடியர்களான சதீஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர்களின் காட்சிகள் ரொம்பவே குறைவு. சதீஷ்க்கு மட்டும் கொஞ்சம் நீளம். இவர்கள் இல்லாவிட்டாலும் படத்தில் பாதிப்பு இருந்திருக்காது.
.
இசை:
சந்தோஷ் நாராயணன். இவருக்கு கமர்சியல் படத்திற்கு இசை அமைக்க தெரியாது என்பதை நிருபித்திருக்கறார். படத்தின் இறுதியில் வரும் பாப்பா பாப்பா பாட்டு மட்டும் ரசிக்கும் படியாக இல்லாவிட்டால் பைரவா படத்தில் பாட்டு ஏதும் இருந்துச்சான்னு கொஞ்ச நாள்ல மறந்திருப்போம். பின்னனி இசை அப்படின்னா, தீம் பாட்டை மட்டுமே திரும்ப திரும்ப போடுவதாகும். ரெண்டு பைட்டுக்கு இந்த வரலாம்.. வரலாம்.. வா தீம் சாங்... இன்னொரு பைட்டுக்கு ஒரு வயலினோ, கிடாரோ மெலோடியில்...
.
இயக்குனர்:
விஜய்காக எட்டு வருசம் காத்திருந்தேன் என மீடியாவில் சொல்லி வருகிறார் பைரவா இயக்குனர் பரதன். இப்படி ஒரு வேகமில்லாத திரைக்கதைக்கா? இதே கதை இயக்குனர் ஹரி கையில் கிடைத்திருந்தால்????
.
விஜய் ரசிகர்களுக்கு:
பொங்கல், சர்க்கரை பொங்கலாக இல்லாமல், வென்பொங்கலாக வந்திருக்கும் படமே பைரவா.....
.
மற்றவர்களுக்கு:
வீட்டில் பொங்கும் பொங்கலை ரசித்து ருசித்து சாப்பிட்டு கரும்பையும் மென்று, டிவி நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். இன்னும் சில மாதங்களில் எதாவது சேனலில் போடும் போது பக்கத்தில் கொறிக்க ஸ்நாக்ஸ் வைத்துக் கொண்டு பார்க்கலாம்.
4 கருத்துரைகள்:
தைப்பொங்கல் வாழ்த்துகள்!
அருமையான கண்ணோட்டம்
பைரவா வெற்றி நடை போடுகிறதே!
பார்த்தவர்கள் அனைவரும் "அவ்வளவு சரியில்லை" என்றே சொல்கிறார்கள்...
பார்த்தாச்சு. ஹும் நீங்கள் சொல்லியிருப்பதுதான்...
கீதா: பார்த்தவர்களின் கமென்ட்ஸ் அவ்வளவு பாசிட்டிவாக இல்லை...உங்கள் விமர்சனமும் ..அப்படியே...பார்க்கும் எண்ணமும் இல்லை
தொலைக்காட்சியில் வரும்போது நேரமும் ஆர்வமும் இருந்தால் பார்க்க உத்தேசம்