CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label மாமதுரை. Show all posts
Showing posts with label மாமதுரை. Show all posts


மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள்


மதுரை மாநகரின் தொன்மையை நினைவு கூர்ந்து இதன் பெருமையை உணர்ந்து நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வரும் தலைமுறைக்கு ஊட்டும் நோக்குடன் "மாமதுரை போற்றுவோம்" என்ற  விழா மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் 8, 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது. 

  • மதுரையைப் போற்றுவோம்,
  • தொன்மையைப் போற்றுவோம்,
  • வைகையைப் போற்றுவோம் 
என மூன்று தலைப்பின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.


நிகழ்ச்சிநிரல்:
பிப்.,3 காலை 7 மணிக்கு அரசரடி ரயில்வே மைதானத்தில் "மதுரைக் காகத்தான்' மாரத்தான் ஓட்டம் துவங்கும். பெரியார் பஸ்ஸ்டாண்ட், சிம்மக்கல் வழியாக தமுக்கம் வரை செல்லும் ஓட்டத்தில் 3 பிரிவினர் பங்கேற்பர். அவர்களுக்கு சான்றிதழ்கள், டி ஷர்ட் வழங்கப்படும். பெண்கள், சிறுவர்களுக்கு மீனாட்சி கல்லூரி வரையும், ஆண்களுக்கு ரேஸ்கோர்ஸ் வரையும் நடைபெறும். பிப்., 7ல், கிடாரிப்பட்டி சமணர் குகையில் இருந்து ஜோதி கொண்டு வரப்படும். கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மரீஸ் சர்ச், மீனாட்சி கோயிலில் வரவேற்பு அளிக்கப்படும். 

பிப்., 8ல் விழா துவங்கும். அன்று காலை தமுக்கம் மைதானத்தில் தீபம் ஏற்றப்படும். கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

பிப்.,9ல், "தொன்மையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமுக்கம் மைதானத்தில் கருத்தரங்கு, மாலை 3 மணிக்கு மேல், "தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா' என்ற தலைப்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மதுரை கல்லூரியில் இருந்து கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் 9 வாகனங்கள், தெற்குவெளிவீதி, கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் வந்தடையும். பின், கலைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மூன்றாம் நாளான பிப்.,10ல், "வைகையை போற்றுவோம்' நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஆறு சுத்தம் செய்யப்படுகிறது. வைகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் "முப்பரிமாண மாதிரி' வைக்கப்படும். மாலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் மக்கள் தீபம் ஏற்றுவர். 8 மணிக்கு மேல் வானவேடிக்கை, பின், 9.30க்கு தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றப்படும். 

மாமதுரை சிறப்பு ஏற்பாடுகள்:
விழாவைப் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த  அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டை ஆகிய இடங்களில் 3டி – முப்பரிமாண காட்சி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலவாசல் கோட்டையின் மிச்சமுள்ள பகுதியில் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.  விளக்குத்தூண் அருகில் பழந்தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப் பிடித்து வீரன் ஒருவர் அடக்கும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.  பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளியே கிளம்பும் யானையின் சிற்பக்காட்சி பழங்காநத்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

  
வைகையைப் போற்றுவோம்:
 3-ம் நாள் நிகழ்வான வைகையை போற்றுவோம் விழாவிற்கான பணி தற்போது வைகை ஆற்றில் நடைபெற்று வருகிறது. 

இங்கு வைகை ஆறு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எந்த வழியாக மதுரைக்கு வருகிறது, எப்படி கடலில் போய் சேருகிறது என்பதை மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், விளக்கும் வகையிலான முப்பரிமாண (3-டி) வடிவமைப்புகள் ஏற்பாடு செய்யும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

மதுரை மக்கள், மாணவ, மாணவிகள் வைகை ஆற்றை பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளவும், தொன்மை வாய்ந்த இந்த வைகை ஆற்றை காப்பாற்றவும், பேணி பாதுகாக்கவும், இந்நிகழ்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும். வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் மரக்கன்றுகளை நடவும், தொடர்ந்து கன்றுகளை பராமரிக்கவும், லயன்ஸ் கிளப் பொறுப்பேற்றுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று கவனித்து வருகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்விழா மூலம் மதுரையின் புகழ் திக்கெங்கும் பரவவும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு: படங்கள், செய்திகள் பல இணைய தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது
மேலும் வாசிக்க... "மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள்"



விஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் என்னத்த கண்டேன்)


ஹாய் பிரண்ட்ஸ்..

ஏமாந்துட்டேன்:
என்னத்த சொல்ல? 
    முந்தா நாள் ஜட்ஜ் நைட் கண் முழிச்சு படத்துக்கு தடையை  விலக்கினார். நாமெல்லாம் சந்தோசப்பட்டு படம் ரிலீஸ் பண்ணிருவங்கனு ஆர்வத்துல இருந்தோம். அதை நம்பி நானும் அடுத்து நம்மூருல என்னென்ன நடக்கும்னு ஒரு பதிவு எழுதியிருந்தேன். பதிவு போட்டுட்டு பேப்பரை மேஞ்சா,  இன்னொரு ஜட்ஜ் நல்லா கண் முழிச்சு விஸ்வரூப படத்துக்கு மறுபடியும் தடை போட்டுட்டாருன்னு போட்டிருந்தாங்க. இதனால நான் போட்ட பதிவு ஒர்த் இல்லாம போயிருச்சுன்னு நினைக்கும் போது ரொம்ப பீலிங்கா இருக்கு. அப்படி இப்படி என நடக்கும்னு நெனச்சது எல்லாத்துக்கும் சேர்த்து ஜட்ஜ் ஐயா தடை போட்டுட்டார். அவரு எப்ப தடையை நீக்கி, நான் பதிவுல சொன்னது எல்லாம் நடக்கும்???? மீ வெயிட்டிங்.....

மதுரை பொருட்காட்சி:
போன மாசம் மதுரையில மூணு வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு கண்காட்சி போட்டிருந்தாங்க. ஒண்ணு தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சியோட கல்விக் கன்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போயிருந்தேன், இந்த வாட்டி அப்படியொண்ணும் சிறப்பா இல்லை. சில காலேஜ் பசங்க செஞ்சிருந்த இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பம், காய்கறி சிற்பம் என கொஞ்சம் புதுசா பார்த்தேன். ஆனா பொழுது போக்க அப்படியொண்ணும் விரும்பறது மாதிரி இல்லை. 

அடுத்து மூன்றுமாவடி சர்ச் மைதானத்தில் வண்ண மீன் கண்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போன வாரம் தான் போயிருந்தேன். அன்னைக்கு தான் கடைசி நாள்னு போட்டிருந்தாங்க. ஜஸ்ட் மிச்ச்னு நெனச்சுட்டேன். கிட்டத்தட்ட நூறு மீன் தொட்டியில கலர் கலரா மீன்கள் வரிசையா வச்சிருந்தாங்க. சில மீன்கள் நல்லா சுறுசுறுப்பாவும், சிலது சோம்பேறியாவும் இருந்துச்சு. ஆனா பொழுது போக்குனு பார்த்தா டோட்டல் வேஸ்ட். எந்தப் பொருள் எடுத்தாலும், அப்படின்னு சில கடைகள் இருந்துச்சு. அங்க எல்லா பொருட்களுமே அழுக்கு மண்டி போயிருந்துச்சு. அதையும் சிலர் வாங்கிட்டு தான் இருந்தாங்க. 

இந்த கண்காட்சிகளில் எடுத்த போட்டோஸ் நிறைய இருக்கு. தனியா ஒரு பதிவுல போடறேன்.

அடுத்து ஐயர்பங்களா மைதானத்தில் ஒரு கண்காட்சி போட்டிருந்தாங்க. அங்க போக முடியல. ஏன்னா ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு. இந்த கண்காட்சி பத்தி தனியா பதிவு எழுதியிருக்கலாமோ?????

"மாமதுரை" அப்படின்னா?:

மதுரையில மாமதுரைன்னு சில இடத்துல விளம்பரங்கள் பார்த்தேன். பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டு பக்கத்துல மீனாட்சியம்மன் கோயிலுக்கு போற சந்திப்பு பக்கத்துல மாநகராட்சி சொந்தமான ஆபீஸ் இருக்கு. அங்க புதுசா பெயின்ட் அடிச்சு சுத்தம் பண்ணி மாமதுரை, மாமதுரைன்னு பெரிசா விளம்பரம் போட்டிருந்தாங்க. அங்க கண்காட்சி மாதிரி மாத்தியிருக்கறதா கேள்விப்பட்டேன். மதுரை மாவட்டத்தின் பழமையை நினைவுபடுத்தவும், இன்றைய தலைமுறைகளுக்கு விளக்கவும் இந்த மாமதுரை விழா எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். மேலும் விவரங்கள் அறிய இந்த பதிவை வாசிக்கவும்.

பேஸ்புக்கும் விஸ்வரூபமும்:
 விஸ்வரூப பட விவகாரத்தில் பேஸ்புக்கில் விஸ்வரூபமா வளர்ந்து கமலுக்கு ஆதரவா, எதிரா ஸ்டேடஸ், வாக்குவாதம்னு செம பீக்குல நம்ம ஆளுங்க இருக்காங்க. இன்னும் சிலர், நாட்டுல காவிரி, மின்வெட்டு, கூடங்குளம், இலங்கை தமிழர் பிரச்சனைன்னு எத்தனையோ பிரச்சனை இருக்கு, அதுக்கெல்லாம் கிளர்ந்தெழாத பேஸ்புக் நண்பர்கள், கமல் காசு போட்டு எடுத்த படம் பிரச்சனையில இருக்குன்னு இப்படி கொந்தளிக்கறாங்களேன்னு நியாயமும் பேசுறாங்க. ஸ்டேடஸ் போடறது பேஸ்புக்கில் நம்ம உரிமைங்க. அதுக்காக வெட்டு குத்து நடக்கற அளவுக்கு வேணாங்க.

என்னைப்பற்றி:
போன வருஷம் பதிவுலகில் கொஞ்சம் விலகியிருந்தேன். அதுக்கு காரணம் புது வீடு கட்டிட்டு இருந்தேன். இப்போ வீட்டு வேலை ஓரளவு முடிஞ்சி புதுமனை புகு விழாவும் நடத்தியாச்சு. இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு வீட்டு வேலை இருக்கு. ஆனாலும் இப்ப லோன், மற்றும் அலையுற டென்ஷன் இல்லாம கொஞ்சம் டைம் கெடச்சதால சில பதிவுகள் எழுதிட்டு வரேன். அப்புறமா வீடு கட்டுன அனுபவத்தை வச்சு ஒரு பதிவு எழுதற எண்ணமும் இருக்கு. பார்ப்போம்.

பதிவுகள் எழுதாம இருந்த காலத்தில நான் எழுதிட்டு இருந்த CNC Programming தொடர் சில புதியவர்களிடம் சேர்ந்திருக்கு. ஆமா சிலர் அடுத்த பார்ட் எப்போ வரும்? கொஞ்சம் டவுட் இருக்கு. கிளியர் பண்ணுங்கன்னு  மெயில்கள் அனுப்பி இருந்தாங்க. அவங்களுக்காக தொடரை ரீஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன். கொஞ்சம் எக்சாம்பிள் வீடியோ தந்து பதிவு எழுதனும்னு நினைக்கிறதால லேட் ஆகுது. சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):

மேலும் வாசிக்க... "விஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் என்னத்த கண்டேன்)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1