CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label நான் என்னத்த கண்டேன். Show all posts
Showing posts with label நான் என்னத்த கண்டேன். Show all posts


விவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்)


இருக்கேனா? இல்லையா?
போன மாசம் மொத வாரத்தில் சில பதிவுகள் எழுதினது. அப்புறம் இப்போ தான் எழுதறேன். ரொம்ப பிஸி (எப்ப பாரு, இத ஒண்ணு சொல்லிக்கிறாங்க) அப்படி நீங்க சத்தமாவே சொல்றது கேட்குது. என்ன செய்ய, பிஸியா இருக்கறதை வேறெப்படி சொல்றது? ஆனா மொபைலில் பேஸ்புக், நண்பர்களின் பதிவுகள் என ஓரளவு இருக்கேன். ஆனா, கமெண்ட்ஸ் போட முடியல. ஆனா, பதிவு பிடிச்சிருந்தா போன்ல கூப்பிட்டு நல்லது, கெட்டத சொல்லிடறேன்.

வலைச்சரத்தில் எழுதிய விஜயன் துரையின் சில பதிவுகளில் அவரது உழைப்பு நன்றாகவே தெரியும். அதனால், போனில் பாராட்டு தெரிவித்தேன். அதே போல, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் போனில் பாராட்டு தெரிவித்தேன். 

******************************************
பதிவரின் மிரட்டல் விமர்சனம்:
ஒரு பதிவர் ஆதிபகவன் படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். படம் ஒர்த் இல்லை, ஆனா தியேட்டர்ல போய் கண்டிப்பா பாருங்க?ன்னு பாரா, பாராவா சொல்லி இருந்தார். யாராவது திட்டனும்னா போன் பன்னுங்கன்னும் கமென்ட்-இல் தில்லா போன் நம்பரும் தந்திருந்தார். உடனே, போன் செய்து, பதிவுல விமர்சனம் போட்டிருகிங்க, எப்படி இப்படி எழுதியிருகிங்க அப்படி பேச ஆரம்பிச்சதும், சுதாரிச்ச அவர், தெரிஞ்ச குரலாவே இருக்கே, நீங்க யார்ன்னு தெரியலையேன்னு பேச்சை டைவட் பண்ணிட்டார். அப்பொறமா என்னை கண்டுபிடிச்சிட்டார். விமர்சனம் நீளமா இருந்தாலும், நல்லா எழுதியிருக்கிங்க'ன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். அவரு கண்டுபிடிக்கலைனா கொஞ்ச நேரம் கலாய்ச்சிருப்பேன். ஒ.. அவர் யார்னு சொல்ல மறந்துட்டேனே? நம்ம, திடமான சீனு தான்.

******************************************
விழித்த போலீஸ்:
மதுரையில், இப்ப சமீபமா எங்க திரும்பினாலும் போலீஸ் சார், அதிக கூட்டமுள்ள ஷேர் ஆட்டோ, இருசக்கர  வண்டிகளை மடக்கி, டாக்குமென்ட் இல்லாதவங்க, சந்தேக நபர்கள் என பிடிச்சு பைன் போட்டுறாங்க. ஆனா, சில ரூல்ஸை காத்துல பறக்க விட்டுறாங்க. முக்கியமா ஹெல்மெட் பத்தி கண்டுக்க மாட்டிங்கறாங்க. எவ்வளவு தான் ஹெல்மெட் முக்கியத்துவம் பத்தி சொன்னாலும், மக்களும் சரியா பாலோ பண்றதே இல்லை. ஹெல்மெட் போடாதவங்களை போலீஸ் புடிச்சு பைன் போட்டா நல்லது தான். போலீஸ் நண்பர்களே, ஹெல்மெட் வேட்டையை தொடருங்களேன்.

என்னதான் போலீஸ் விழிப்பா இருந்தாலும், அவங்க கண்ணுல கையை வுட்டு ஆட்டுறது இந்த ஷேர் ஆட்டோக்கள் தான். அதிக கூட்டம், ஓவர் ஸ்பீடு, விபத்தை ஏற்ப்படுத்துதல் என அவங்க தொல்லை அதிகம் தான். அதனால, ஷேர் ஆட்டோவை கடுமையா கண்ட்ரோல் செய்யணும்.

ஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா?

******************************************
தெளிவான பசங்க:
போன ஞாயித்து கிழமை சூரியன் எப்எம்-இல் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். தலைப்பு, படிப்பறிவா? பட்டறிவானு வாதம் நடந்துச்சு. 
 அதுல ஒருத்தர் சொன்ன சுவாரஸ்யம் கீழே:

அப்பா: டேய், அவன் உன்கூட தானே படிக்கிறான்.. அவன் தொன்னுத்தி அஞ்சு மார்க் வாங்கியிருக்கான். நீ இருபத்தி அஞ்சு மார்க் தான் வாங்கியிருக்க... உன்னை என்னடா செய்யறது?

மகன்: அப்பா திட்டாதிங்க...


அப்பா:ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்... ரெண்டு பேரும் டீப் பிரண்ட்ஸ்,ரெண்டு பேருக்கும் ஒரே டீச்சர்,ரெண்டு பேரும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போறீங்க......ஒண்ணாவே விளையாடுரிங்க....ஒண்ணாவே சாப்பிடுறிங்க...ஒரே கடையில புக், நோட் வாங்கறிங்க...அப்புறம் ஏண்டா, மார்க் மட்டும் ஒண்ணாவே எடுக்க மாட்டிங்கிற...அட்லீஸ்ட், பாஸ் மார்க் வாங்கலாமே...


மகன்:அப்பா திட்டுறத நிறுத்துங்க...எல்லாமே சரிதான்... ஆனா அவனுக்கும், எனக்கும் அப்பா வேறயாச்சே????

எப்புடி, பையன் விவரமா பதில் சொல்லி இருக்கான். 

******************************************
பதிவர் சந்திப்பு:


இடமிருந்து: நான், மதுரை சரவணன், G.M.பாலசுப்ரமணியன், சீனா ஐயா, ரமணி ஐயா
கடந்த வாரம் பெங்களூரில் இருந்து பதிவர் G.M. பாலசுப்ரமணியன் குடும்பம் சகிதமாக மதுரைக்கு வந்திருந்தார். ஐயா பாலசுப்ரமணியன் http://gmbat1649.blogspot.in/ என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவருடன் மதுரை பதிவர்கள் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொன்டிருந்தோம்.மேற்கண்ட படத்தில் இன்னொரு பதிவர் இல்லை. அவர் மதுரையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர். அவரது வலைப்பூ மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள் அவரும் அன்று தான் அறிமுகம் ஆனார்.

******************************************
இலவச மென்பொருள் அறிமுகம்:
இனி ஒவ்வொரு நா.எ.க பகுதியில் ஒரு இலவச மென்பொருள் தரவிறக்க லிங்க் பகிரப்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Avast Browser Cleanup Tool
Remove Toolbars And Disable Unwanted Add-Ons From Your Favourite Browsers.
Features:
  1. Remove toolbars and disable unwanted add-ons from Internet Explorer, Mozilla Firefox and Google Chrome.
  2. It can help you remove browser toolbars and plugins from the system that either have a bad reputation based on community ratings, or that aggressively modify system settings.
  3. Avast Browser Cleanup is a portable tool, which means you won’t need to go through any installation hassles, and can use it on the go from a USB flash drive.
  4. Apart from removing toolbars and unwanted add-ons from supported browsers, the application also lets you disable any browser add-ons that you don’t require to be active all the time, but still want to keep installed.
  5. Avast Browser Cleanup also features an option to reset your current browser settings to the default values.
  6. The program detects major toolbars such as the Ask toolbar, Babylon Search toolbar or the AVG Security toolbar and many minor toolbars and plugins.
  7. It works on Windows XP, Windows Vista, Windows 7 and Windows 8.
Download here
******************************************

ஜில் ஜில் ஜிகர்தண்டா:


மேலும் வாசிக்க... "விவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்)"



விஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் என்னத்த கண்டேன்)


ஹாய் பிரண்ட்ஸ்..

ஏமாந்துட்டேன்:
என்னத்த சொல்ல? 
    முந்தா நாள் ஜட்ஜ் நைட் கண் முழிச்சு படத்துக்கு தடையை  விலக்கினார். நாமெல்லாம் சந்தோசப்பட்டு படம் ரிலீஸ் பண்ணிருவங்கனு ஆர்வத்துல இருந்தோம். அதை நம்பி நானும் அடுத்து நம்மூருல என்னென்ன நடக்கும்னு ஒரு பதிவு எழுதியிருந்தேன். பதிவு போட்டுட்டு பேப்பரை மேஞ்சா,  இன்னொரு ஜட்ஜ் நல்லா கண் முழிச்சு விஸ்வரூப படத்துக்கு மறுபடியும் தடை போட்டுட்டாருன்னு போட்டிருந்தாங்க. இதனால நான் போட்ட பதிவு ஒர்த் இல்லாம போயிருச்சுன்னு நினைக்கும் போது ரொம்ப பீலிங்கா இருக்கு. அப்படி இப்படி என நடக்கும்னு நெனச்சது எல்லாத்துக்கும் சேர்த்து ஜட்ஜ் ஐயா தடை போட்டுட்டார். அவரு எப்ப தடையை நீக்கி, நான் பதிவுல சொன்னது எல்லாம் நடக்கும்???? மீ வெயிட்டிங்.....

மதுரை பொருட்காட்சி:
போன மாசம் மதுரையில மூணு வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு கண்காட்சி போட்டிருந்தாங்க. ஒண்ணு தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சியோட கல்விக் கன்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போயிருந்தேன், இந்த வாட்டி அப்படியொண்ணும் சிறப்பா இல்லை. சில காலேஜ் பசங்க செஞ்சிருந்த இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பம், காய்கறி சிற்பம் என கொஞ்சம் புதுசா பார்த்தேன். ஆனா பொழுது போக்க அப்படியொண்ணும் விரும்பறது மாதிரி இல்லை. 

அடுத்து மூன்றுமாவடி சர்ச் மைதானத்தில் வண்ண மீன் கண்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போன வாரம் தான் போயிருந்தேன். அன்னைக்கு தான் கடைசி நாள்னு போட்டிருந்தாங்க. ஜஸ்ட் மிச்ச்னு நெனச்சுட்டேன். கிட்டத்தட்ட நூறு மீன் தொட்டியில கலர் கலரா மீன்கள் வரிசையா வச்சிருந்தாங்க. சில மீன்கள் நல்லா சுறுசுறுப்பாவும், சிலது சோம்பேறியாவும் இருந்துச்சு. ஆனா பொழுது போக்குனு பார்த்தா டோட்டல் வேஸ்ட். எந்தப் பொருள் எடுத்தாலும், அப்படின்னு சில கடைகள் இருந்துச்சு. அங்க எல்லா பொருட்களுமே அழுக்கு மண்டி போயிருந்துச்சு. அதையும் சிலர் வாங்கிட்டு தான் இருந்தாங்க. 

இந்த கண்காட்சிகளில் எடுத்த போட்டோஸ் நிறைய இருக்கு. தனியா ஒரு பதிவுல போடறேன்.

அடுத்து ஐயர்பங்களா மைதானத்தில் ஒரு கண்காட்சி போட்டிருந்தாங்க. அங்க போக முடியல. ஏன்னா ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு. இந்த கண்காட்சி பத்தி தனியா பதிவு எழுதியிருக்கலாமோ?????

"மாமதுரை" அப்படின்னா?:

மதுரையில மாமதுரைன்னு சில இடத்துல விளம்பரங்கள் பார்த்தேன். பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டு பக்கத்துல மீனாட்சியம்மன் கோயிலுக்கு போற சந்திப்பு பக்கத்துல மாநகராட்சி சொந்தமான ஆபீஸ் இருக்கு. அங்க புதுசா பெயின்ட் அடிச்சு சுத்தம் பண்ணி மாமதுரை, மாமதுரைன்னு பெரிசா விளம்பரம் போட்டிருந்தாங்க. அங்க கண்காட்சி மாதிரி மாத்தியிருக்கறதா கேள்விப்பட்டேன். மதுரை மாவட்டத்தின் பழமையை நினைவுபடுத்தவும், இன்றைய தலைமுறைகளுக்கு விளக்கவும் இந்த மாமதுரை விழா எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். மேலும் விவரங்கள் அறிய இந்த பதிவை வாசிக்கவும்.

பேஸ்புக்கும் விஸ்வரூபமும்:
 விஸ்வரூப பட விவகாரத்தில் பேஸ்புக்கில் விஸ்வரூபமா வளர்ந்து கமலுக்கு ஆதரவா, எதிரா ஸ்டேடஸ், வாக்குவாதம்னு செம பீக்குல நம்ம ஆளுங்க இருக்காங்க. இன்னும் சிலர், நாட்டுல காவிரி, மின்வெட்டு, கூடங்குளம், இலங்கை தமிழர் பிரச்சனைன்னு எத்தனையோ பிரச்சனை இருக்கு, அதுக்கெல்லாம் கிளர்ந்தெழாத பேஸ்புக் நண்பர்கள், கமல் காசு போட்டு எடுத்த படம் பிரச்சனையில இருக்குன்னு இப்படி கொந்தளிக்கறாங்களேன்னு நியாயமும் பேசுறாங்க. ஸ்டேடஸ் போடறது பேஸ்புக்கில் நம்ம உரிமைங்க. அதுக்காக வெட்டு குத்து நடக்கற அளவுக்கு வேணாங்க.

என்னைப்பற்றி:
போன வருஷம் பதிவுலகில் கொஞ்சம் விலகியிருந்தேன். அதுக்கு காரணம் புது வீடு கட்டிட்டு இருந்தேன். இப்போ வீட்டு வேலை ஓரளவு முடிஞ்சி புதுமனை புகு விழாவும் நடத்தியாச்சு. இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு வீட்டு வேலை இருக்கு. ஆனாலும் இப்ப லோன், மற்றும் அலையுற டென்ஷன் இல்லாம கொஞ்சம் டைம் கெடச்சதால சில பதிவுகள் எழுதிட்டு வரேன். அப்புறமா வீடு கட்டுன அனுபவத்தை வச்சு ஒரு பதிவு எழுதற எண்ணமும் இருக்கு. பார்ப்போம்.

பதிவுகள் எழுதாம இருந்த காலத்தில நான் எழுதிட்டு இருந்த CNC Programming தொடர் சில புதியவர்களிடம் சேர்ந்திருக்கு. ஆமா சிலர் அடுத்த பார்ட் எப்போ வரும்? கொஞ்சம் டவுட் இருக்கு. கிளியர் பண்ணுங்கன்னு  மெயில்கள் அனுப்பி இருந்தாங்க. அவங்களுக்காக தொடரை ரீஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன். கொஞ்சம் எக்சாம்பிள் வீடியோ தந்து பதிவு எழுதனும்னு நினைக்கிறதால லேட் ஆகுது. சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):

மேலும் வாசிக்க... "விஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் என்னத்த கண்டேன்)"



டாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் என்னத்த கண்டேன்)


ஹாய் பிரண்ட்ஸ்....
எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பதிவு எழுதி. இப்போ ஒரு பதிவு எழுத டைம் கெடச்சுச்சு. 

டிஸ்கி: (எவன் கண்டுபுடிச்சது இந்த டிஸ்கிய, அப்படின்னு யாராச்சும் டென்ஷன் ஆனா, அதன் வரலாற்றை பதியவும்)
"நான் என்னத்த கண்டேன்" அப்டின்னு ஒரு புதிய பகுதி மூலமா உங்களை சந்திக்க வந்திருக்கேன். நம்ம பிரண்ட் செங்கோவியின் "நானா யோசிச்சேன்" ரேஞ்சுக்கு இல்லாட்டியும் எதோ என்னால முடிஞ்ச ரேஞ்சுக்கு படைப்பை (ஹி... ஹி...) தந்திருக்கேன்.

 இன்னைக்கு நம்ம நாட்டின் 64வது குடியரசு தினம். அனைவருக்கும் வாழ்த்துகள். அந்தக்காலத்தில் அன்னியரிடமிருந்து நம்ம நாட்டை நமது முன்னோர்கள் போராடி மீட்டுத் தந்திருக்காங்க. ஆனா நம்ம அரசியல்வாதிகள் நம்ம வர்த்தகத்தை பாதிக்கும் மேல அந்நியருக்கு விக்க முடிவு பண்ணியிருக்காங்க. இதனால நமக்கு லாபமா? நஷ்டமா? லாபமா இருந்தாலும், நஷ்டமா இருந்தாலும் நம்ம வர்த்தகம் அந்நியர் கைக்கு போயிருச்சு என்பதை மறுக்க முடியாது. இப்ப சாதகமா இருந்தாலும் பின்னாடி பாதகமா மாறாதுன்னு என்ன நிச்சயம் அரசியல்வாதிகளே? நீங்க இப்ப அஞ்சாண்டு ஆண்டுட்டு கல்லா நொப்பிட்டு ஏப்பம் விட போயிருவிங்க. காலம் முழுசும் பிரச்னையை சந்திக்கிறது நானும் எனது வருங்காலமும் தான் என நினைக்கும் போது, கையை பிசையரத தவிர என்ன செய்றதுன்னு தெரியில. ஏன்னா நாங்கெல்லாம் சேர்ந்து தானே உங்களை ஆட்சியில உட்கார வச்சிருக்கோம். இப்ப நாங்க யோசனை பண்ணி என்ன செய்றது? சரி, விடுங்க புலம்பாம குடியரசு தினத்துல டிவில நிறைய படம் போடறாங்க. பார்க்க போறேன். நீங்களும் எதையும் கண்டுக்காம டிவி பாக்க உட்காருங்க.

"டேய்... தம்பி மேல ஏறு... படியில நிக்காத.... ஏறுடா.... நீ கீழ விழுந்தா அஞ்சு நிமிசத்துல உன் கதை முடிஞ்சிரும். ஆனா எனக்கு ஆயுள் முழுசும் பிரச்சனை. சொன்னாக் கேளுடா தம்பி" என ஒரு கண்டக்டர் புலம்பறத பார்த்தேன். நெஜமாலுமே பாவங்க கண்டக்டர்ஸ்... டிக்கட் போட்டு, கணக்கு வழக்கை குறிப்பெழுதி, பஸ் ஸ்டாப்பில் எறங்க வேண்டியவங்களை எறக்கி, ஏற வேண்டியவங்களை ஏத்தி, இப்படி தங்களோட வேலைக்கு நடுவுல இப்படி ஸ்கூல் பசங்களை படியில நிக்க விடாம மேல ஏத்த அவர் படும் பாடு சொல்லி மாளாதுங்க... ஸ்கூல் பசங்களே படியில நிக்க வேணாம்னு உங்க நல்லதுக்கு தான் கண்டக்டர் சொல்றாங்க. புரிஞ்சு நடந்துக்கங்க பாய்ஸ்....

நேத்து, இன்னைக்கு, நாளைக்கு என மூணு நாளைக்கு வரலாறு காணாத லீவு விட்டிருக்காங்க. ஸ்கூலுக்கு, ஆபீசுக்கு லீவு விட்டத சொல்ல வரல. நம்ம அரசின் பட்ஜெட்டில் பெரும் பங்கு வகிக்கும் டாஸ்மாக் தான் மூணு நாள் லீவு. இப்படி லீவுன்னு ஒரு பேப்பர்ல ரெண்டு நாளுக்கு முன் படிச்சேன். அதுல லீவு வந்தாலும் குடிமகன்கள் குடிக்காம இருக்க மாட்டாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடியே பாட்டில் பாட்டிலா வாங்கி ஸ்டாக் பண்ணிக்குவாங்க. அதனால டாஸ்மாக் அந்த மூணு நாளைக்கு பெருசா லாஸ் ஆகாதுன்னு ஒரு அதிகாரி பேட்டி தந்திருக்கார். எப்புடி, நம்ம மக்கள் காரியத்துல கண்ணா இருப்பாங்கன்னு நம்மாளுக புரிஞ்சு வச்சிருக்காங்க பாருங்க.

தோணி கேப்டனா இருக்கனுமா வேணாமா? பலரும் பல கருத்துக்களை சொல்லிட்டு இருக்காங்க. தோனிக்கு வயசாயிருச்சு. அவரு கேப்டன் தகுதியை இழந்துட்டார், அவரு முன்ன மாதிரி நிறைய ரன் அடிக்கறது இல்லை. வேணும்னா ஒன் டே மேட்சுக்கு மட்டும் கேப்டனா வச்சுக்கலாம். காம்பிர், விராட் ஹோலி ரெண்டு பேருல ஒருத்தரை கேபடனா ட்ரை பண்ணலாம். இப்படி கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் எதிர்ப்பு தர்றாங்க. அதே சமயத்துல தோணி சிறந்த கேப்டன், அவருக்கு பின் இன்னொருத்தர் என தேடும் காலம் இப்ப இல்லை. தோணி தலைமையில் T20, 50 over உலககோப்பை வாங்கியிருக்கோம். அவரு களத்தில் கோவப்படாம பிரச்னையை ஈஸியா கையாளுவார். இப்படியும் சில ஜாம்பவான்கள் சொல்றாங்க. என்னக்கென்னவோ, இப்போ இந்திய டீமில் துவக்கம், மிடில் ஆர்டர், பவுலர்ஸ் என எல்லாமே சரியான பார்ம் இல்லாம ஆட்டம் கண்டுகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். இதையெல்லாம்  சரி பண்றத வுட்டுட்டு கேப்டனை குறை சொல்றதுல நியாயம் இல்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க?

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில நம்ம (ஆமா நம்ம, எல்லா பதிவர்கள், பேஸ்புக்ல இருக்கறவங்க எல்லாரும் இவருக்கு ரசிகர்கள் ஆகிடாங்க) பவர் ஸ்டார் தனது உலகப்புகழ் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கார். சந்தாணம் பவரை ஓட்டு ஓட்டு என ஓட்டியும் பவர் அசராமல் நடிப்பு திறமையை காட்டினதுல, அவரை வச்சு படம் எடுக்க பிரபல டைரக்டர்ஸ் கியூவுல நிக்கறதாகவும், சுமாரா அம்பது லட்சம் சம்பளம் பேசி இருப்பதாகவும் நியூஸ் அடிபடுது. ஆகா... பவர் ஒர்த் பவருக்கு தெரியுமா? தெரியாதோ? மத்தவங்களுக்கு தெரியுதுப்பா.....

நம்ம பிரபல பதிவர், ஊர் சுற்றும் வாலிபன், ஹோட்டல்களின் பலி ஆடு,  வருங்கால சினிமா வில்லன் கோவை நேரம் ஜீவா போன வாரம் நெல்லை விஜயம் செய்து உணவு ஆபீசரிடம் அல்வா வாங்கிட்டு இருந்தார். அதனால் என்னவோ தெரியில என்கிட்டே போன்ல பேசுறப்போ அல்லவா ச்சே... அல்வா பத்தி அதுவும் இருட்டுக்கடை அல்வா பத்தி ரொம்பவே புகழ்ந்து சொல்லிட்டு இருந்தார். மச்சி.. இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன். அவரு போய்யா.. மதுரைன்னா மணக்கும் மல்லி, ஜில் ஜிகர்தண்டா தான் பேமசுன்னார். நானும் விடல.. அதேபோல தான்யா அல்வாவும் பேமசு. இருட்டுக்கடை அல்வா ஒரு டேஸ்ட்ன்னா, மதுரை பிரேமா விலாஸ் அல்வாவும் டேஸ்ட்தான் என சொன்னேன். ஆனா பயபுள்ள நம்பவே இல்லை. ஒரு நாள் மதுரை வர்றப்ப அல்வா வாங்கி தா.. டேஸ்ட் பண்ணிட்டு நல்லா இருக்கான்னு சர்டிபிகேட் தர்றேன்னு சொல்லியிருக்காரு. ஆக, ஜீவா மதுரைக்கு வர்றப்ப அல்வா கடைல சொல்லி கொஞ்சம் இல்ல.. இல்ல... நிறைய டேஸ்ட் இருக்குற மாதிரி அல்வா செய்ய சொல்லனும்னு முடிவோட இருக்கேன். அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...

டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):
மேலும் வாசிக்க... "டாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் என்னத்த கண்டேன்)"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1