CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label வெயில். Show all posts
Showing posts with label வெயில். Show all posts


மதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அப்பப்பா?

டிஸ்கி: கூடல்நகர்ல கிளம்பி சிம்மக்கல் புது மண்டபம், அண்ணாநகர், மேல மாசி வீதி, மாநகராட்சி ஆபீஸ் போயிட்டு வந்த அனுபவங்களே கீழ்க்கண்ட வரிகள்.

சிம்மக்கலுக்கு புது மண்டபம் பக்கம் போகனும்னு யானைக்கல் வழியா வந்தேன். கொஞ்சம் பணம் தேவைக்காக நாம அக்கௌன்ட் வச்சிருக்குற பேங்க் ஏடிஎம் தேடி பணம் எடுக்கலாம்னா அங்க சர்விஸ் டேம்ப்ரவர்லி நாட்அவைலேபிள் அப்படின்னு மானிட்டர்ல பெரிசா எழுத்து காட்டுச்சு. நொந்து போயி வேற ஏடிஎம் தேடி போகணும், பக்கத்துல என் அக்கௌன்ட் இருக்குற பேங்க் இல்லை, அதனால வேற பேங்க் ஏடிஎம்ல அகௌன்ட்ல இருக்குற பணத்தை எடுத்துட்டு, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்கமா கீலமாசி வீதியில வந்தா திடீர்னு ட்ராபிக் போலிஸ் இது நோ என்ட்ரின்னு கை காட்டுனாங்க. இந்த வழியா தானே புது மண்டபம் போக முடியும்னு கேட்டா, இப்போ வழி மாறிப்போச்சு. அந்தப்பக்கமா போங்கன்னு திருப்பி விட்டுட்டாங்க. 

புது மண்டபம் பக்கம் கெஸ் ஸ்டவ் ஸ்பேர்ஸ் கடை நிறைய இருக்கு. ஆமாங்க ஒரு லைட்டரும், பர்னரும் வாங்க கோயிலை சுத்தி வரணுமானு யோசிச்சு அங்க பக்கத்துல வண்டிய நிறுத்தலாம்னு போனா அது ஆட்டோ ஸ்டாண்டுக்கு சொந்தமான இடம், வண்டிய நிறுத்தக்கூடாதுன்னு ஆட்டோக்காரர் தடுக்க, வண்டி நிறுத்த இடம் தேடி... தேடி.... ஒரு இடத்துல எப்படியோ நுழைச்சுட்டேன். கொஞ்சம் தூரம் நடந்து போயி ஸ்பேர் வாங்க வேண்டியது வாங்கிட்டு வண்டிய எடுத்துட்டு இன்னொரு வேலையா மேலமாசி வீதி பக்கமா போனேன். 

ரொம்ப தாகமா இருக்குன்னு ஒரு ஜூஸ் கடைப்பக்கமா ஒதுங்கி சில்லுன்னு ஒரு லேமன் ஜூஸ் சாப்பிடலாம்னு வண்டிய நிறுத்த இடம் தேடியே நாக்கு வறண்டு போயிருது. ஹி...ஹி.... அம்புட்டு வெயிலுங்கோ, திரும்புற இடமெல்லாம் பைக் கூட்டமா இருக்கு. நடுவுல கொஞ்சம் இடம் பிரீயா இருக்கேன்னு ஒரு ஆர்வத்துல போயி பாத்தா, கடைக்காரங்க இரும்புல பிளாட்பாரம் போட்டு ஆக்கிரமிச்சு வச்சிருக்காங்க. சரி, அடுத்து கொஞ்சம் தள்ளி கொஞ்சம் கேப் இருக்குன்னு அங்க போயி பாத்தாலும் அங்கேயும் இரும்பு பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு. ஐயா, கடைக்காரங்க புண்ணியவான்களே, நாங்க எங்கதான்யா வண்டிய நிறுத்தறதுன்னு மனசுக்குள புலம்பிட்டே, வேற இடம் தேடி, ஒரு இடத்துல நிறுத்திட்டு நாம நிமுந்து பாத்தா அங்க நோ பார்க்கிங் போர்டு பெரிசா தொங்கிட்டு இருக்கு.

ஐயோன்னு மிரண்டாலும் மனசு, "தம்பி இந்த இடம் கிடைச்சதே பெரிசு. வண்டிய பார்க் பண்ணிட்டல்ல, கம்முன்னு போயி ஜூஸ் குடின்னு" சொல்ல, ஜூஸ் கடைக்கு போனா, அங்க ஈ.. ஈ... யா கூட்டம் கூட்டமா மொச்சுட்டே இருக்கு. எந்த ஜூஸ் கடைக்கு போனாலும் இப்படித்தான்னு, மனச தேத்திட்டு ஜூஸ் வாங்கி கொஞ்சம் வயிறை குளிர வச்சுட்டு அடுத்து அங்க பக்கத்துல பாக்க வேண்டிய வேலையை முடிச்சுட்டு திரும்ப கோரிப்பாளையம் வழியா அண்ணாநகர் போயிட்டு அங்க ஒருத்தர பாத்துட்டு, மறுபடியும் பெரியார் வந்து, மாப்பாளையம் போற பாலம் பக்கத்துல இருக்குற மாநகராட்சி ஆபீஸ்ல அப்ரூவல் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து ஹெல்மெட் கழட்டுனா தலைக்கு குளிச்சுட்டு வந்த மாதிரி அம்புட்டு ஈரமா இருந்துச்சு. வீட்டுல ரெண்டு வாட்டர்கேன் தண்ணி குடிச்சதுக்கு அப்புறம் தான் உடம்புல வெக்கை கொஞ்சமா தனிஞ்சுச்சு.

ஸ்ஸ்ஸ்ஸ்அப்பப்பா என்னா வெயிலு.... என்னா வெயிலு.... அக்னி நச்சத்திரம்ங்கறது சரியாதான் இருக்கு. ஹெல்மெட் (போலீஸ் ரூல்ஸ்) போட்டுட்டு பைக் ஓட்ட முடியல...... தலைமுடி எல்லாம் வேர்த்து விறுவிறுத்து போயிருது. ரோடெல்லாம் தூசியும் குப்பையுமா இருக்கு. எந்த பக்கமா போனாலும் இப்படித்தான் இருக்கு. இதுல ரைட், லெப்ட் திரும்புறவங்க யாருமே இன்டிக்கேட்டர் இருந்தும் பெரும்பாலும் போடறது இல்லை. அட, சொந்தமா கை இருக்குல, அதையாவது எந்தப் பக்கம் திரும்பறதுன்னு காட்டறாங்களா? ம்ஹும்... அதுவும் இல்லை. முன்னாடி போறவன் எப்போ திரும்புவான்னு ஒரு எதிர்பார்ப்பிலேயே வண்டி ஓட்ட வேண்டியிருக்கு. ம்ஹும், அவங்கவங்களுக்கு என்னென்னா அவசர வேலை இருக்கோ?


நமது இணையப்பூங்கா தளத்தில்:

மேலும் வாசிக்க... "மதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அப்பப்பா?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1