டிஸ்கி: கூடல்நகர்ல கிளம்பி சிம்மக்கல் புது மண்டபம், அண்ணாநகர், மேல மாசி வீதி, மாநகராட்சி ஆபீஸ் போயிட்டு வந்த அனுபவங்களே கீழ்க்கண்ட வரிகள்.
சிம்மக்கலுக்கு புது மண்டபம் பக்கம் போகனும்னு யானைக்கல் வழியா வந்தேன். கொஞ்சம் பணம் தேவைக்காக நாம அக்கௌன்ட் வச்சிருக்குற பேங்க் ஏடிஎம் தேடி பணம் எடுக்கலாம்னா அங்க சர்விஸ் டேம்ப்ரவர்லி நாட்அவைலேபிள் அப்படின்னு மானிட்டர்ல பெரிசா எழுத்து காட்டுச்சு. நொந்து போயி வேற ஏடிஎம் தேடி போகணும், பக்கத்துல என் அக்கௌன்ட் இருக்குற பேங்க் இல்லை, அதனால வேற பேங்க் ஏடிஎம்ல அகௌன்ட்ல இருக்குற பணத்தை எடுத்துட்டு, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பக்கமா கீலமாசி வீதியில வந்தா திடீர்னு ட்ராபிக் போலிஸ் இது நோ என்ட்ரின்னு கை காட்டுனாங்க. இந்த வழியா தானே புது மண்டபம் போக முடியும்னு கேட்டா, இப்போ வழி மாறிப்போச்சு. அந்தப்பக்கமா போங்கன்னு திருப்பி விட்டுட்டாங்க.
புது மண்டபம் பக்கம் கெஸ் ஸ்டவ் ஸ்பேர்ஸ் கடை நிறைய இருக்கு. ஆமாங்க ஒரு லைட்டரும், பர்னரும் வாங்க கோயிலை சுத்தி வரணுமானு யோசிச்சு அங்க பக்கத்துல வண்டிய நிறுத்தலாம்னு போனா அது ஆட்டோ ஸ்டாண்டுக்கு சொந்தமான இடம், வண்டிய நிறுத்தக்கூடாதுன்னு ஆட்டோக்காரர் தடுக்க, வண்டி நிறுத்த இடம் தேடி... தேடி.... ஒரு இடத்துல எப்படியோ நுழைச்சுட்டேன். கொஞ்சம் தூரம் நடந்து போயி ஸ்பேர் வாங்க வேண்டியது வாங்கிட்டு வண்டிய எடுத்துட்டு இன்னொரு வேலையா மேலமாசி வீதி பக்கமா போனேன்.
ரொம்ப தாகமா இருக்குன்னு ஒரு ஜூஸ் கடைப்பக்கமா ஒதுங்கி சில்லுன்னு ஒரு லேமன் ஜூஸ் சாப்பிடலாம்னு வண்டிய நிறுத்த இடம் தேடியே நாக்கு வறண்டு போயிருது. ஹி...ஹி.... அம்புட்டு வெயிலுங்கோ, திரும்புற இடமெல்லாம் பைக் கூட்டமா இருக்கு. நடுவுல கொஞ்சம் இடம் பிரீயா இருக்கேன்னு ஒரு ஆர்வத்துல போயி பாத்தா, கடைக்காரங்க இரும்புல பிளாட்பாரம் போட்டு ஆக்கிரமிச்சு வச்சிருக்காங்க. சரி, அடுத்து கொஞ்சம் தள்ளி கொஞ்சம் கேப் இருக்குன்னு அங்க போயி பாத்தாலும் அங்கேயும் இரும்பு பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு. ஐயா, கடைக்காரங்க புண்ணியவான்களே, நாங்க எங்கதான்யா வண்டிய நிறுத்தறதுன்னு மனசுக்குள புலம்பிட்டே, வேற இடம் தேடி, ஒரு இடத்துல நிறுத்திட்டு நாம நிமுந்து பாத்தா அங்க நோ பார்க்கிங் போர்டு பெரிசா தொங்கிட்டு இருக்கு.
ஐயோன்னு மிரண்டாலும் மனசு, "தம்பி இந்த இடம் கிடைச்சதே பெரிசு. வண்டிய பார்க் பண்ணிட்டல்ல, கம்முன்னு போயி ஜூஸ் குடின்னு" சொல்ல, ஜூஸ் கடைக்கு போனா, அங்க ஈ.. ஈ... யா கூட்டம் கூட்டமா மொச்சுட்டே இருக்கு. எந்த ஜூஸ் கடைக்கு போனாலும் இப்படித்தான்னு, மனச தேத்திட்டு ஜூஸ் வாங்கி கொஞ்சம் வயிறை குளிர வச்சுட்டு அடுத்து அங்க பக்கத்துல பாக்க வேண்டிய வேலையை முடிச்சுட்டு திரும்ப கோரிப்பாளையம் வழியா அண்ணாநகர் போயிட்டு அங்க ஒருத்தர பாத்துட்டு, மறுபடியும் பெரியார் வந்து, மாப்பாளையம் போற பாலம் பக்கத்துல இருக்குற மாநகராட்சி ஆபீஸ்ல அப்ரூவல் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து ஹெல்மெட் கழட்டுனா தலைக்கு குளிச்சுட்டு வந்த மாதிரி அம்புட்டு ஈரமா இருந்துச்சு. வீட்டுல ரெண்டு வாட்டர்கேன் தண்ணி குடிச்சதுக்கு அப்புறம் தான் உடம்புல வெக்கை கொஞ்சமா தனிஞ்சுச்சு.
ஸ்ஸ்ஸ்ஸ்அப்பப்பா என்னா வெயிலு.... என்னா வெயிலு.... அக்னி நச்சத்திரம்ங்கறது சரியாதான் இருக்கு. ஹெல்மெட் (போலீஸ் ரூல்ஸ்) போட்டுட்டு பைக் ஓட்ட முடியல...... தலைமுடி எல்லாம் வேர்த்து விறுவிறுத்து போயிருது. ரோடெல்லாம் தூசியும் குப்பையுமா இருக்கு. எந்த பக்கமா போனாலும் இப்படித்தான் இருக்கு. இதுல ரைட், லெப்ட் திரும்புறவங்க யாருமே இன்டிக்கேட்டர் இருந்தும் பெரும்பாலும் போடறது இல்லை. அட, சொந்தமா கை இருக்குல, அதையாவது எந்தப் பக்கம் திரும்பறதுன்னு காட்டறாங்களா? ம்ஹும்... அதுவும் இல்லை. முன்னாடி போறவன் எப்போ திரும்புவான்னு ஒரு எதிர்பார்ப்பிலேயே வண்டி ஓட்ட வேண்டியிருக்கு. ம்ஹும், அவங்கவங்களுக்கு என்னென்னா அவசர வேலை இருக்கோ?
நமது இணையப்பூங்கா தளத்தில்:
நமது இணையப்பூங்கா தளத்தில்:
20 கருத்துரைகள்:
மதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அப்பப்பா?
>>>
ம்க்கும் மத்த ஊருலலாம் மழை பெய்யுற மாதிரியும், உங்க ஊருல மட்டும்தன் வெயில்ங்குற மாதிரியும் அலுத்துக்குறீங்களே?! இங்கயும் அதே வெயிலும் வெக்கையும்தான் தம்பி
அட இறைவா... இன்டிகேட்டர்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டு தன் போக்குல திரும்பற ஜந்துக்கள் இங்கதான்னு நினைச்சா... மதுரையிலயும் அப்படித்தானா? ஒரே நாள்ல கிட்டத்தட்ட பாதி மதுரைய சுத்தியிருக்கீங்க. வெயிலு இப்புடிப் பொலம்ப வெச்சதுல ஒண்ணும் அதிசயமில்ல...
வணக்கம் பிரகாஷ்!மொத்தத்துல "அவரு" ராச்சியம் இல்லாமப் போயிடுத்துன்னு சொல்ல வரீங்களோ,ஹி!ஹி!ஹி!!!மழை பெய்யக்குடாது,வெயிலும் அடிக்கக் கூடாதுன்னா எப்படிங்க?சும்மா ஒரு மொட்ட போட்டுக்குங்களேன்,யாரும் கேட்டா வேண்டுதலுன்னு "பெருமை"யா சொல்லிக்கலாம்,ஹ!ஹ!ஹா!!!!
@ராஜி
ம்க்கும் மத்த ஊருலலாம் மழை பெய்யுற மாதிரியும், உங்க ஊருல மட்டும்தன் வெயில்ங்குற மாதிரியும் அலுத்துக்குறீங்களே?! இங்கயும் அதே வெயிலும் வெக்கையும்தான் தம்பி///
என்ன செய்ய... நீங்களும் அலுத்துகிட்டிங்களோ
ஐய்யா பெரியவரே, சித்திரை வெயில்....(அக்னி வெயில்)..அதையும் ஒரு பதிவா.....திறமைச்சாலி போங்க - ஏன்னா சொன்ன விதம் ம்ம் நடத்துங்கவோய்
@கணேஷ்
ஒரே நாள்ல கிட்டத்தட்ட பாதி மதுரைய சுத்தியிருக்கீங்க. ////
எங்க போனாலும் வண்டிய நிறுத்த இடம் தேடியே அலுத்து போயிருச்சு
@Yoga.S.
வணக்கம் பிரகாஷ்!மொத்தத்துல "அவரு" ராச்சியம் இல்லாமப் போயிடுத்துன்னு சொல்ல வரீங்களோ,ஹி!ஹி!ஹி!!!///
ஐயா, என்னத்தையாவது சொல்லி கோர்த்து விடாதிங்க............
Ithukku thaan....
Enkitta apa apa....
Phone-la...
Pesanugarathu.....
Thappu panniteenga.....
Pirakash..........!!!!!!!dd
சைட் அடிக்க மேலமாசி வீதி கீழ மாசி வீதின்னு சுத்தும்போதெல்லாம் வெயிலு தெரியலை வீட்டு வேலையா போனா வெயிலடிக்குதோ....!
நல்லா சொன்னீங்க! எங்க ஊர்லயும் சூரிய பகவான் காச்சி எடுக்கிறார்! தலை காட்ட முடியலை!
வெயில் அதிகம் தான்...
மதுரைக்காரரே இப்படி அலுத்துக்கிட்டா திருச்சி, வேலூர் பக்கம் இருக்கவங்களலாம் என்ன பண்ணுவாங்களோ?
எங்கு பார்த்தாலும் வெயிலின் தாக்கம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்...
////ரைட், லெப்ட் திரும்புறவங்க யாருமே இன்டிக்கேட்டர் இருந்தும் பெரும்பாலும் போடறது இல்லை. அட, சொந்தமா கை இருக்குல, அதையாவது எந்தப் பக்கம் திரும்பறதுன்னு காட்டறாங்களா? ம்ஹும்... அதுவும் இல்லை. /////
ஹி ஹி ஹி .., என்ன தல இப்புடி கேட்டுபுட்டீங்க ரூல்ஸ்செல்லாம் பாலோ பண்ணியிருந்தா நாங்க எப்பயோ டெவலப்பாகிருக்க மாட்டோமாக்கும் ..? சும்மா கிண்டல் பண்ணாதீங்க தல ..!
என்னவோ போங்க...
இப்படி வெயில் வெயில்ன்னு படிச்சாவது நாங்க சந்தோசப் பட்டுக்கிறோம்...
மதுர மட்டுமா இங்க யாழ்ப்பாணத்திலும் அணல் மழைதான்..அண்ணா
சாமீ ! இங்கேயும் அப்படித்தான் !
ஒரு வெயிலு ஒங்கள எப்படி பொலம்ப வச்சுட்டு பாருங்க..பட் அதுல ஒரு நன்மை நடந்திருக்கு ..ஒங்கள பதிவு எழுத தூண்டியிருக்கு பாருங்க.
தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
பிரகாஷ் வெயிலை தணிக்க வண்டியில் எப்பவும் தண்ணீர் வைத்துகொள்ளுங்கள் ஹெல்மெட் அணியும் முன்பு கைக்குட்டை அல்லது க்கோட்டன் துணியை தலயில் கட்டிகொண்டாள் ஈரம் உறிஞ்சிடும் ( எங்க வீட்ல இப்படி தான் பண்ணுவாங்க ) ஆனா அருமையா பகிர்த்து இருக்கீங்க மதுரையை சுற்றி வந்த அனுபவம் எங்களுக்கும் கிடைத்தது
மதுரையில மட்டுமா சென்னையிலும் அதே வெயிலா, அதான் கத்திரி முடிஞ்சி உங்க வலை பக்கம் வந்தேன்
எழுத்தாளர் வல்லிக்கண்ணன் திருநெல்வேலியிலிருந்து பரமக்குடிக்கு நடந்தே வந்தார். அவல் மட்டுமே உணவு. இத்தனை வண்டிகள் வரும் என்று நினைத்திருந்தால் வண்டி நிறுத்த இடம் கண்டிப்பாக ஒதுக்கியிருப்பார்கள்.
மதுரையில் மட்டுமல்ல, உலக முழுக்க வண்டிய நிறுத்த இடம் கண்டுபிடிக்க வேண்டும்.
அதனால்தான் மால்களில் 1 மணிக்கு ரூ.20 நிறுத்தக் கட்டணம் வசூலிக்கிறான்.