குவார்ட்டர்னு பேரு வச்சாலே ஒரு கிக்குதான் போலிருக்கு! வ என்று பெயர் மாற்றிவிட்டாலும், ரசிகனின் நாவில் நர்த்தனமாடுவது அந்த பழைய அறிவிப்புதான். அதாவது குவாட்டர் கட்டிங்! மிர்ச்சி சிவா நடித்திருக்கும் இந்த படத்தை தமிழ் படம் என்ற காவியத்தை(?) தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ்தான் தயாரித்திருக்கிறது.
தமிழ் படத்தின் தாறு மாறான ஹிட் குவார்ட்டர் விலையையும் கன்னா பின்னாவென்று ஏற்றி விட்டிருப்பதுதான் ஆச்சர்யம். முந்தைய படத்தை போலவே இந்த படத்தையும் வெளியிடுகிற உரிமை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனத்தின் கையில்தான். விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்திற்கு இருக்கிற வரவேற்பு அளவுக்கதிமாக இருப்பதால் துரை.தயாநிதியும் அளவு கடந்த சந்தோஷத்திலிருக்கிறார்.
கிட்டதட்ட எட்டு கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியிருக்கிறதாம் இந்த படம். எந்திரன் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் இந்த படத்தையும் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்ட க்ளவுட் நைன் நிறுவனத்திடம், படத்தை தீபாவளிக்கு வெளியிடுங்க என்று கேட்டுக் கொண்டார்களாம் இப்படி பெரும் விலை கொடுத்தவர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பட்டாசு திருநாளில் திரைக்கு வரப்போகிறது குவார்ட்டர் கட்டிங்.