சூர்யா நடித்திருக்கும் ரத்த சரித்திரம் தெலுங்கு, இந்தியில் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. தமிழில் ஒரேயொரு பாகம். ஏன் இந்த பாரபட்சம்?
சூர்யா நடித்திருக்கும் சூரி கதாபாத்திரம் முதல் பாகத்தில் மொத்தம் பத்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. இரண்டாம் பாகத்தில்தான் சூரியின் விஸ்வரூபம். சூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெளியிடுவது?
அதனால்தான் தமிழில் மட்டும் இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒரே பாகமாக வெளியிடுகிறார்கள். அப்படியானால் ஒரே டிக்கெட்டில் இரண்டு படமா என்று சிவராத்திரி ஞாபகத்தில் குதிக்காதீர்கள்.
முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டையும் எடிட் செய்து ஒரே பாகமாக்கியிருக்கிறார்கள்.
தீபாவளிக்கு ரத்த சரித்திரம் திரைக்கு வருகிறது.
0 கருத்துரைகள்: