காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு டில்லியில் இருந்து 60 ஆயிரம்பிச்சைக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
டில்லியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 30 சதவீதத்தினர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். 69.94 சதவீதம் ஆண்கள், 30.04 சதவீதம் பெண்களும் இதில் அடங்கும். கடந்த ஒருவாரத்துக்கு முன்பெல்லாம், கல்காஜி கோயிலில் ஒருவர் சாதாரணமாக 600 பிச்சைக்காரர்களை பார்க்க முடியும்.இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்காக 71 நாடுகளில் இருந்து டில்லி வந்துள்ள வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில், நல்ல பெயர் எடுப்பதற்காக, பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர். தவிர, பாதை ஓரங்களில் பலூன், பேனா மற்றும் பத்திரிகை போன்ற சிறு பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போன்றவர்களும், ஒரே இரவில் துரத்தப்பட்டுள்ளனர்.
அரசின் இந்த செயலுக்கு, மனித உரிமை மற்றும் அரசு சாராத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதுகுறித்து சமூக சேவகர் பிரகாஷ் சிங் என்பவர் கூறுகையில்,"" எங்களுக்கு வந்த தகவல்கள் படி, ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் பலர் ரயில்வே ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிற மாநில நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களிடம், காமன்வெல்த் போட்டி முடிந்த பின் தான் இங்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளனர்,'' என்றார்.
0 கருத்துரைகள்: