CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்

பின்லாந்தில் கடலுக்கு அடியில் இருந்து 70 ஷாம்பெய்ன் மது பாட்டில்கள் கிடைத்துள்ளன. 230 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இவற்றின் மதிப்பு ரூ.22 கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தின் ஒரு பகுதியாக இருப்பது ஆலண்ட் தீவுக்கூட்டம். பால்டிக் கடல் நடுவே உள்ளது.

 இங்கு ஸ்வீடன், பின்லாந்து நீச்சல் வீரர்கள் கடந்த ஜூலையில் சாகசம் செய்யும்போது, கடலுக்கு அடியில் 150 அடி ஆழத்தில் உடைந்த கப்பல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். கப்பலின் உடைந்த பகுதிகளுக்கு இடையே சில பாட்டில்கள் இருந்தன.

கப்பல் எந்த ஆண்டு விபத்துக்குள்ளானது என்று தெரிந்துகொள்வதற்காக ஒரு பாட்டிலை மட்டுமே மேலே எடுத்து வந்தனர். பரபரப்பாகிவிடும் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் மொத்தம் 70 ஷாம்பெய்ன் பாட்டில்கள் கிடைத்துள்ளன. கடலுக்கு அடியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், சூரிய ஒளி படாத இடத்தில் இருந்ததால் ஷாம்பெய்ன் இப்போதும்கூட குடிக்கும் நிலையில் இருக்கிறதாம்.

கப்பல் 200 ஆண்டு பழைமையானது என தெரியவந்தது. ஷாம்பெய்ன் சரக்கு 1780 வாக்கில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 1825&ல் தயாரிக்கப்பட்ட ஷாம்பெய்ன்தான் உலகிலேயே பழைய சரக்காக கருதப்படுகிறது.

பின்லாந்து சரக்கு தயாரானது 1780-களில் என்பது நிரூபணமானால் இதற்கு அந்த பெருமை கிடைக்கும். தலா ரூ.31.9 லட்சம் என 70 பாட்டில் விலை ரூ.22 கோடியை தாண்டும் என்கின்றனர் ‘சரக்கு’ நிபுணர்கள்.
மேலும் வாசிக்க... "ஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்"



கைபேசியில் வரும் தொல்லைகள்


இந்த 21-ம் நூற்றாண்டில் நம் நாட்டில் மற்ற துறைகளைக் காட்டிலும் தகவல் தொடர்புத் துறையில் மிகப் பெரிய புரட்சி நடந்திருக்கிறது. குறிப்பாக, கைபேசி (செல்போன்) வருகையால் வணிகர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ள தகவல் தொடர்பு சாதனமாக மாறி, தற்போது, அது அத்தியாவசியப் பொருளாகவும் நிலைபெற்றுவிட்டது.  

கைபேசியால் பல்வேறு பயன்களை நாம் அனுபவித்து வந்தாலும், மறுபுறம் சில வேதனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்யும் சில விரும்பத்தகாத செயல்களே இதற்குக் காரணம். இதில், தேவையற்ற அழைப்புகள் உபயோகிப்பாளர்களுக்கு பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளன.  இந்தத் தேவையற்ற அழைப்புகளால் முக்கிய அலுவல்களில் இருக்கும் உபயோகிப்பாளர்களின் கவனம் திசை திரும்புவதுடன், பணியிடையே தொந்தரவும் அளிக்கிறது என்பதுதான் உண்மை. 

கைபேசி என்பது முக்கியத் தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருக்க வேண்டுமே தவிர, அது உபயோகிப்பாளர்களுக்கு வேதனை தரும் வகையில் இருக்கக்கூடாது.  புதிதாக கைபேசி வாங்கும் ஒருவர் தனக்குப் பிடித்தமான தனியார் தொலைபேசி நிறுவனத்தில் தொகுப்பி அட்டை  (சிம்கார்டு) வாங்கி தனக்கான தொடர்பு எண்ணைப் பதிவு செய்கிறார் என்றால், அந்த எண்ணை யார், யாருக்கு அளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அந்த நபருக்கு மட்டுமே உரிமை உண்டு.  ஆனால், தற்போது இதற்கு மாறாக குறிப்பிட்ட அந்தத் தனியார் தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள சில டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கைபேசி வைத்திருப்பவர்களின் எண்களை வாங்கி தங்களது வருமானத்துக்காக தனிநபர் கடன், துணி, நகைக் கடைகளில் தள்ளுபடி போன்ற தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன. இதனால் வரும் சில தகவல்கள் சிலருக்கு உபயோகமாக இருந்தாலும், பெரும்பாலானோரைப் பாதிக்கிறது என்பதே உண்மை.  

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை எடுத்துப் பேசினால் நாங்கள் குறிப்பிட்ட வங்கியிலிருந்து பேசுகிறோம்;

வீடு கட்டக்  கடன் தருகிறோம் என்றதும் நம்முடைய கவனம் திசை திரும்புகிறது. அச்சமயம், நாம் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசினால் விபத்தின்றி தப்பிக்கலாம்.  இந்த அவசர யுகத்தில் பெரும்பாலானவர்கள் கைபேசியில் பேசிக் கொண்டே செல்கின்றனர். இதனால், விபத்தில் சிக்க நேரிடுகிறது. இதுபோல, நின்று பேசுவதால், நேரம் விரயமாவதுடன், பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாகும் சூழல் உருவாகிறது.    மேலும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம்; தனிநபர் கடன் குறைந்த வட்டியில் தருகிறோம்; இது தொடர்பாக பேசுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா? எனக் கூறுகின்றனர். இதனால், விவரம் தெரியாத பல பெண்கள் தேவையற்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். சில வீடுகளில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதற்கும் இந்த அழைப்புகள் காரணமாக அமைகின்றன.  

அண்மையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது சக அமைச்சர்களுடன் முக்கிய அலுவலில் ஈடுபட்டபோது, சிணுங்கிய கைபேசியை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது, அவரது முகம் இறுகிய முகமாக மாறியதாகத்  தெரிகிறது. காரணம், அவருக்கு வந்த அழைப்பில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம் என்ற அழைப்புதான்.  இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா உடனடியாகத் தனது துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, தேவையற்ற அழைப்புகளை இனி அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்.  இதேபோல, உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் இருக்கும் அம்பானிக்கே வீடு கட்ட அழைப்பு விடுத்த சம்பவம் அண்மையில் நடந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.  இதேபோன்று தேவையற்ற அழைப்பைப் தவிர்ப்பது குறித்து குறிப்பிட்ட தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டால், உங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்பை ரத்து செய்ய குறிப்பிட்ட குறியீட்டை "டைப்' செய்து அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பினால், தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்கள் ரத்து செய்யப்படும் எனத் தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன.  ஆனால், டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு நமது அனுமதியில்லாமல் கைபேசி தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ள தொலைபேசி நிறுவனங்கள் அதனை ரத்து செய்வதற்கு நமது கைபேசியிலிருந்தே குறுந்தகவல் அனுப்பக் கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

மேலும், தனியார் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து வரும் அழைப்புகளைத் தொடர்புகொண்டால், "நீங்கள் எங்களுடன் ஜாலியாக அரட்டை அடிக்க வேண்டுமா?' உடனே குறிப்பிட்ட எண்ணை அழுத்துமாறு கூறுகின்றனர். இதனை அழுத்தாமல் விட்டுவிட்டால் நாம் தப்பினோம், வயோதிகர்கள் அறியாமை காரணமாக கை தவறி ஏதோ ஒரு பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக அவர்கள் குறிப்பிட்ட எண்ணை அழுத்திவிட்டால் அவ்வளவுதான். நமது கைபேசிக்கான தொகை இருப்பு குறைந்துவிடும். இது தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் மற்றொரு வேதனை.  எனவே, தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து கைபேசி உபயோகிப்பாளர்களின் எண்களைப் பெறும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் அரசு விதிகளைக் கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே தேவையற்ற வேதனைகளிலிருந்து விடுபட முடியும்.
மேலும் வாசிக்க... "கைபேசியில் வரும் தொல்லைகள்"



"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வை....


சீனாவின் பெய்ஜிங்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 100 கிலோ மீட்டர் தூரத்தில் 10 நாள்கள் நீடித்த இந்தப் போக்குவரத்து நெரிசல்தான் "உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' என்று வருணிக்கப்படுகிறது. வாகனப் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்று இதுவரை கவலை அடைந்து வந்த உலக நாடுகள், போக்குவரத்து நெரிசல் மனித சமுதாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்பதையும் இப்போது சிந்திக்கத் தொடங்கிவிட்டன.  இத்தகைய மோசமான நிலைக்கு உலக நாடுகள் அனைத்துமே உள்கட்டமைப்பைப் புறக்கணித்து, வளர்ச்சி, மேம்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதுதான் முக்கியக் காரணம். 









    இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமல்ல, சிறிய நகரங்கள்கூட போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடுகின்றன. விவசாயத் தொழில் நசிவடைதலும், நகர்ப்புறத்தை ஒட்டியே தொழிற்சாலைகள் அமைதலும் வேலைவாய்ப்பைத் தேடி கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி நகர்தலும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் நகர்ப்புறங்களின் மக்கள் தொகை அசுர வேகத்தில் பெருகிவருகிறது. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, நகர்ப்புறங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கப்படுவதில்லை. இதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாகியுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து நெரிசலால் பொன்னான நேரம் வீணாகிறது. மற்றொருபுறம் வாகன எரிபொருளும் விரயமாகிறது. போக்குவரத்து நெரிசலால் தில்லியில் மட்டும் தினசரி  ரூ.10 கோடி மதிப்பிலான எரிபொருள் வீணடிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாமல் வழியிலேயே உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் அதிகமான உயிரிழப்புக்குப் போக்குவரத்து நெரிசலும் பிரதான காரணமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணாமல் ஆம்புலன்ஸில் அவசர எச்சரிக்கை விளக்கு பொருத்தி என்ன பயன்? ஆட்சியாளர்கள் எங்காவது செல்வதென்றால் அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே அவர்கள் செல்லவிருக்கும் வழியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்தில் அமர வைக்கவும், தூக்கி எறியவும் வல்லமை படைத்த வாக்குச்சீட்டைக் கையில் வைத்துள்ள பொதுமக்களின் நிலையோ பரிதாபம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலை, கிராமப்புறச் சாலை உள்பட அனைத்துச் சாலைகளின் மொத்த நீளம் 33 லட்சம் கி.மீ.   இன்னும் எத்தனையோ கிராமங்களில் சாலை வசதியே இல்லை என்பதிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் சாலை விஷயத்திலும், மக்கள் நலனினும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  பிற நாடுகள் உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் புதுப்புது அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த விஷயத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பல்லாயிரம் கோடி முதலீட்டில் அன்னிய நிறுவனங்கள் வாகன உற்பத்தித்  தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். பல்லாயிரம் கோடி அன்னிய முதலீட்டைப் பெற்று தாங்கள் சாதனை (?) புரிந்துவிட்டதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துப் பெருமை தேடிக்கொள்ளவும் முயல்கின்றனர். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாட்டை உற்றுநோக்கினால் உண்மை புலப்படும். அவர்களின் செயல்பாடு வெறும் மாயை என்பது அம்பலமாகும். இந்தியாவில் அளிக்கப்படும் சலுகைக்காகவும், இந்தியா மிகப் பெரிய சந்தையாக உள்ளதாலேயே அன்னிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கின்றன.  அன்னிய கார் நிறுவனங்கள் அனைத்துமே நூறு சதவீதம் சுய ஆதாயத்துக்காக மட்டுமே இந்தியாவில் தடம்பதிக்கின்றன. அன்னிய நிறுவனங்கள் என்று இந்தியாவில் தடம்பதித்ததோ அன்றே போக்குவரத்து நெரிசல் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.  அதற்காக அன்னிய கார் நிறுவனங்களை இங்கு தொழில்தொடங்க அனுமதிப்பது தவறு என்று கூறவில்லை. இதில் சில ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்தியாவில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதில் எந்த நிறுவனம் பங்கேற்க சம்மதிக்கிறதோ அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கலாம். ஏன், சாலை வசதிகளை ஏற்படுத்த சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமேகூட அனுமதி வழங்கலாம். இந்தியாவின் அனைத்து நகரங்களிலுமே போக்குவரத்து போலீஸôர் குறைவாக உள்ளனர். போக்குவரத்துப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் முதலில் போக்குவரத்துப்  போலீஸôரின் எண்ணிக்கையை அதிகரித்தல் அவசியம். சாலைகளில் போக்குவரத்துப் போலீஸôர் நின்று பணியாற்றத் தேவையான வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியவில்லை. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.  தனிநபர் வாகனம் அதிகரித்து வருவதும் போக்குவரத்துப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் மக்கள் அரசு பேருந்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். அதேசமயத்தில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் செüகரியமாகப் பயணம் செய்வதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.   சுற்றுச்சூழல், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசு வாடகை சைக்கிள் திட்டத்தை லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாடகை சைக்கிள் திட்டத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தலாம். இதையெல்லாம்விட பழைய சாலைகளைச் சீரமைத்தல், புதிய சாலைகளை உருவாக்குதல், சந்திப்புகளில் மேம்பாலங்களை கட்டுவதில் அரசு அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.
மேலும் வாசிக்க... ""உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வை...."

விநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு

  ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை விநாயக சதுர்த்தி தினம்.

இல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜை!

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

நாமம் பல தத்துவம் ஒன்று!

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

விநாயக சதுர்த்தி வரலாறு!

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
மேலும் வாசிக்க... "விநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு"



உடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....


தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.
ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த 'ரெட் டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் (ஆதாரம்: Journal of food science, Nov/Dec 2004).
ஆப்பிள்கள்களைக் கொண்டு, ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் வாசிக்க... "உடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்...."

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1