CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்


வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்
சென்னை அருகே உள்ள வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டபுரம். பல்லவர்கால துறைமுக நகரம். இங்குள்ள புடைப்புச்சிற்பங்களும், கோவில்களும் உலகப்புகழ் பெற்றவை. தெய்வங்களின் உருவங்கள், புராணக்கதை காட்சிகள், சமுதாய நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
கடற்கரை கோவில்:
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும். இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
பஞ்ச ரதம்:
பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. முதலாம் மகேந்திரவர்மன், அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது. கோவில்களின் மாதிரிக்காக பஞ்ச ரதங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அர்ச்சுனன் தபசு:
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்-படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம்:
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
எப்படிப் போகலாம்?
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. 
நன்றி: குமுதம் 
மேலும் வாசிக்க... "கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்"



கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்!



இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,

அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.



செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி
வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.



உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.



இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.

100
கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால்

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.



சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

 ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் வாசிக்க... "கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்!"

தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு

            

தேசிய பாரம்பரிய விலங்காக யானையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
எந்தவொரு மன நிலையில் இருந்தாலும் மனிதனால் வியந்து பார்க்கப்படும் விலங்கு, யானை. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் மனிதர்களுடன் இயல்பாக பழகும் யானை, இந்தியாவின் கலாசார வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் 25 ஆயிரம் யானைகள் உள்ளன. ஆனால், சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
             எனவே, தேசிய விலங்கான புலியை பாதுகாப்பது போலவே யானையையும் பாதுகாக்க மத்திய அரசு திட்டம் வகுத்தது. யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், யானைகள் வசிக்கும் மாநிலங்களுக்கு கடந்த 1992-ம் ஆண்டில் இருந்தே நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
               இந்த நிலையில், "யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் போலவே, தேசிய யானை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்" என்றும் யானைகள் திட்ட குழு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது. இதற்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, கடந்த 13-ந் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக, தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு"



புதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து பாருங்களேன்!!!

------------------------------------------------------------------------------
நண்பர்களே! கடந்த ஒரு வாரமாக நம் தமிழ்வாசியில் இடுகைகள் வெளியிட முடியவில்லை. நான்  புதிய வீட்டிற்கு குடியேறியதால் அங்கு இன்டர்நெட் தொடர்புக்கு காலதாமதம் ஆனதே காரணம்.
------------------------------------------------------------------------------
       
வாழ்கை வண்ணமயமாக இருக்க வேண்டாமா? இந்த கேள்வியை ஒரு தேடியந்திரத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான்.ஆனால் டூப்லட் ஒன்றும் வழக்கமான தேடியந்திரம் இல்லை.அதனால் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வியக்க வைக்கிறது இந்த தேடியந்திரம். கேள்வியோடு நிற்கவில்லை. வாழ்கையை வண்ணமயமாக்க இது வழிகாட்டவும் செய்கிறது. வண்ணமயம் என்று டூப்லெட் குறிப்பிடுவது வாய்ப்புகளை.அதாவது மாற்று வாய்ப்புகளை. 

உலகின் எதற்கும் மாற்றுகளை முன் வைப்பது தான் இதன் சேவை. மாற்றுகளுக்கான தேடியந்திரம் என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் டூப்லெட்டில் எந்த தலைப்பை அடித்தாலும் அதற்கான மாற்று வாய்ப்புகளை தேடித்தருகிறது. மற்ற தேடியந்திரங்களில் குறிச்சொல்லை அடித்ததும் தேடல் முடிவுகளின் பட்டியல் வருவது போல டூப்லெட்டில் குறிச்சொல்லை அடித்ததுமே அதற்கான மாற்றுகள் வந்து நிற்கின்றன.சாப்ட்வேரில் துவங்கி கார்கள்,மருத்துவம்,கப்புரிமை குறிகள்,திரைப்படங்கள்,கலைஞர்கள்,தத்துவம் என எதைப்பற்றி வேண்டுமானாலும் தேடுங்கள்,மாற்று வாய்ப்புகளை காட்டுகிறோம் என்கிறது டூப்லெட்.

ஒரே மாதிரியான பாட்டை கேட்டு கேட்டு அலுத்து போய் வேறு வகையான பாடல் தேவை என்றாலும் சரி,இல்லை பிரபலமாக இருக்கும் விண்டோசுக்கு மாற்று இருக்கிறதா என அறிய விரும்பினாலும் சரி டூப்லெட் மாற்று வழி காட்டுகிறது. ஆனால் எல்லாவற்றுக்குமே மாற்று வாய்ப்புகள் வந்து நிற்கும் என்று சொல்ல முடியாது.பல விஷயங்களுக்கு பதில் கேட்டால டூப்லெட் கையை விரிக்கிறது.இந்த குறையை டூப்லெட்டே நன்கு உணர்ந்திருக்கிறது.இப்போது தான் துவங்கப்பட்டுள்ள சேவை என்பதால் எல்லாவற்றிற்கும் மாற்று காட்ட முடியவில்லை;

எனவே சிலவற்றுக்கு முடிவுகள் வரவிட்டால் கோபிக்காதீர்கள் என கெஞ்சும் டூப்லெட் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் இவற்றுக்கும் மாற்றுகளை தேடித்தருகிறோம் என்கிறது. அது மட்டுமல்ல;இது போன்ற தருணங்களில்,மன்னிக்கவும் மாற்று கைவசம் இல்லை,உங்களுக்கு தகுந்த மாற்று தெரிந்தால் பரிந்துரைக்கவும் என்றும் கேட்டுக்கொள்கிறது. மாற்று தேடும் போது உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று சொல்லப்படுவது முரணானது என்றாலும் பலதரப்பட்ட இணையவாசிகளின் பங்களிப்பால் மாற்று பட்டியல் பரந்து விரிய வாய்ப்பிருக்கிறது.

அதோடு நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிப்பது இணையத்தின் தனிச்சிறப்பல்லவா? மேலும் சோதித்து பார்க்கும் நோக்கத்தோடு இந்த தேடியந்திரத்தை பயன்படுத்த முயல்பவர்கள் தங்களுக்கு தெரிந்த மாற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு சோதித்து பார்க்கும் போது இந்த சேவை சுவையாகவே இருக்கிறது. விண்டோசுக்கு மாற்று என்று கேட்டால் மேக்,லைனக்ஸ்,ஆப்பில்,உபுன்டு என பெரிய பட்டியலை தருகிறது.ஒபாமாவுக்கு மாற்று என்றால் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட மெக்கெயினில் ஆரம்பித்து புஷ்,கிளிண்டன்,மெடிவிடேவ்,ஹிலாரி உள்ளிட்டோர் பெயரை பட்டியலிடுகிறது. பிரிட்னிக்கு மாற்றாக கிறிஸ்டினா,ஜெசிகா ,மடோனா,பெயர்களை முன் வைக்கிறது.எம்பி3 க்கு மாற்றாக இபாட்,எம்பி4 என பட்டியலிடுகிறது.ஐபாடுக்கு மாற்றாக ஜூன் பெயரை முதலில் சொல்கிறது. நல்ல தேடியதிரத்துக்கு அழகு பிராந்தியத்தன்ம் கொண்டிருக்க வேண்டும்.டூப்லெட் இந்த விஷயத்திலும் அசத்துகிறது. 

இந்தியா தொடர்பான தேடல்களை புரிந்து கொண்டு பதில் அழகாக சொல்கிறது.சச்சினுக்கு மாற்றாக லாரவையும் திராவிட்டையும் சொல்வதோடு விஜய்க்கு மாற்று அஜித் என்கிறது. எம்ஜிஆர்க்கு மாற்று எம் ஆர் ராதா என்றும் சிவாஜி என்றும் சொல்கிறது. சிவாஜிக்கு மாற்று கேட்டால் தசாவதாரம் என்கிறது.தமிழுக்கு மாற்றாக இந்தி,வடமொழி,தெலுங்கு என்கிறது. ஆனால் தாகூருக்கும்,பாரதிக்கும் மாற்று கேட்டால் முழிக்கிறது. மொத்ததில் புதுமையான சுவாரஸ்யமான தேடியந்திரம் தான்.
மேலும் வாசிக்க... "புதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து பாருங்களேன்!!!"



தாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்: போட்டோ எடுத்து டாக்டர் சாதனை

லண்டனை சேர்ந்த லூயிஸ் என்ற கர்ப்பிணி பெண் தனது கணவர் சாம்ஹென்றியுடன் பேராசிரியர் ஸ்டூவர்ட் கேம்பெல் என்பவரிடம் “ஸ்கேன்” பரசோதனைக்கு வந்தார்.
இவர் லண்டனில் உள்ள பிரபலகிங்ஸ் கல்லூரியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ துறையின் தலைவ ராக பணியாற்றியவர்.
இவர் லூயிஸ் வயிற்றில் வளரும் கருவை “ஸ்கேன்” மூலம் பரிசோதித்தார். அப்போது கருவில் இருந்த குழந்தை அழகாக சிரித்தது. இதைப் பார்த்த டாக்டர் கேம்பல் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அது 17 வாரமே ஆன கருவாகும்.
உடனே அக்காட்சியை அவர் போட்டோ எடுத்தார். இதற்கு முன்பு “ஸ்கேன்” செய்த குழந்தைகளிடம் இருந்து அவர் சிரிப்பை பார்க்கவில்லை. மாறாக 18 மற்றும் 19 வார குழந்தை களின் அழுகையுடன் கூடிய முகத்தை பார்த்து இருக்கிறார்.
இந்த போட்டோவை 3டி மற்றும் 4டி வசதியுள்ள “ஸ்கேனர்” மூலம் அவர் எடுத்து சாதனை படைத்துள்ளார். தான் எடுத்த போட்டோவை குழந்தையின் பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்பை 22 வாரங்களுக்கு பிறகுதான் பார்க்க முடியும். ஆனால் நான் 5 வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். இது ஒரு சாதனையாகும் என தெரிவித்தார்.
மேலும் வாசிக்க... "தாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்: போட்டோ எடுத்து டாக்டர் சாதனை"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1