லண்டனை சேர்ந்த லூயிஸ் என்ற கர்ப்பிணி பெண் தனது கணவர் சாம்ஹென்றியுடன் பேராசிரியர் ஸ்டூவர்ட் கேம்பெல் என்பவரிடம் “ஸ்கேன்” பரசோதனைக்கு வந்தார்.
இவர் லண்டனில் உள்ள பிரபலகிங்ஸ் கல்லூரியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ துறையின் தலைவ ராக பணியாற்றியவர்.
இவர் லூயிஸ் வயிற்றில் வளரும் கருவை “ஸ்கேன்” மூலம் பரிசோதித்தார். அப்போது கருவில் இருந்த குழந்தை அழகாக சிரித்தது. இதைப் பார்த்த டாக்டர் கேம்பல் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அது 17 வாரமே ஆன கருவாகும்.
உடனே அக்காட்சியை அவர் போட்டோ எடுத்தார். இதற்கு முன்பு “ஸ்கேன்” செய்த குழந்தைகளிடம் இருந்து அவர் சிரிப்பை பார்க்கவில்லை. மாறாக 18 மற்றும் 19 வார குழந்தை களின் அழுகையுடன் கூடிய முகத்தை பார்த்து இருக்கிறார்.
இந்த போட்டோவை 3டி மற்றும் 4டி வசதியுள்ள “ஸ்கேனர்” மூலம் அவர் எடுத்து சாதனை படைத்துள்ளார். தான் எடுத்த போட்டோவை குழந்தையின் பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்பை 22 வாரங்களுக்கு பிறகுதான் பார்க்க முடியும். ஆனால் நான் 5 வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். இது ஒரு சாதனையாகும் என தெரிவித்தார்.
2 கருத்துரைகள்:
சாதனை தகவல்!
so happy to read this.