வகுப்புக்கு சென்று படித்தால் தான் வரும் என்றெல்லாம் இல்லை
சிலவகை எளிய வழி முறைகள் மூலமும் நாமும் எளிதாக
வேகமாக தட்டச்சு செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித் தான்
இந்தப் பதிவு.
ஆன்லைன் மூலம் தட்டச்சு படிக்கலாம் என்று சொல்லி எத்தனையோ
இணையதளங்கள் வந்தாலும் சற்று வித்தியாசமாகவும் புதுமையாகவும்
வார்த்தை விளையாட்டு மூலமும் நாம் எளிதாக தட்டச்சு படிக்கலாம்.
கணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்ற எண்ணம்
உள்ள யாரும் இந்த தளத்தைப்பயன்படுத்தி வேகமாக தட்டச்சு
செய்யலாம் என்ற கொள்கையுடன் வலம் வருகிறது.
வெவ்வெறு வகையான பயிற்ச்சிகள் எந்த மொழியை வேண்டுமானலும்
எளிதாக தட்டச்சு செய்து பழகலாம் ( தமிழ் மொழி இல்லை).
வேடிக்கையும் வித்தியாசமாகவும் தட்டச்சு பழகலாம் குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் புரிந்து தட்டச்சு
செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தட்டச்சு பலைகையில்
விரல்களை எப்படி வைக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து
அத்தனையும் சிறப்பாக சொல்லிக்கொடுக்கின்றனர். சில நாட்கள்
முழுமையாக பயன்படுத்தினால் நாமும் தட்டச்சு செய்வதில்
வல்லவர்களாக மாறலாம்.
இணையதள முகவரி : http://www.sense-lang.org
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - தம்ழி இல்லையா - பயன் படுத்திப் பார்க்கலாம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா