சரி இன்று சிரிக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது. அதுதான் இந்த நகைச்சுவைகள்.
பூகம்பம்
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
நீதிமன்றத்தில்...
நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆண்: ஏன் செய்து கொள் மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.
.............................................................................
நாயா உழைக்கிறேன்
ஆமாம் அதுக்கு என்ன இப்போ?
இல்ல நம்ம வீட்டு வாசல்ல நாய் வண்டி வந்திருக்கு அதான் கேட்டேன்.
சில கணவன் மனைவியர் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாமலேயே தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்.
***
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!
***
மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க...
கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும்.
***
வீட்டுக்காரர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.
***
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - ம்ம்ம் - சிரிக்கலாம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா