இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது.
ஜி.எஸ்.எல்.வி. ராகெட்டிலிருந்து வெற்றிகரமாகக் கிளம்பிய செயற்கைக் கோள் முதல் கட்டத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது.
ரூ.125 கோடி செலவில் உருவான இந்த செயற்கைக் கோள் 2,130 கிலோ எடை கொண்டது. இது 1999ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸாட் 2 - இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது.
பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதலில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல் நிலையில் திட எரிபொருள் மூலம் எரிக்கப்படும். இரண்டாவது நிலையில் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும்.
3-வது நிலை மிகவும் சிக்கலான ஒன்று. இதில் திரவ ஹைட்ரஜன் மூலம் சக்தி பெறும் கிரயோஜெனிக் எஞ்ஜின் செயலாற்றும். இந்தக் கட்டம்தான் மிகவும் முக்கியமான கட்டமாகும். தோல்வி ஏற்பட்டால் இதில் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது விஞ்ஞானிகள் அறிந்ததே.
ஆனால் இந்த ஜிசாட்- 5பி முதல் நிலையிலேயே தோல்வி தழுவியதுதான் தற்போது இந்திய விண்வெளிக் கழக விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2003ஆம் ஆண்டிலிருந்து 7 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது இதில் 3 முறை தோல்வி ஏற்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டில் இது இரண்டாவது தோல்வியாகும். இதற்கு முன்பு ஜிசாட் - 4 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் விழுந்தது.
2 கருத்துரைகள்:
விடுகதை, பொன்மொழி...?
@philosophy prabhakaran
இணைய தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டதால் விடுகதையும், பொன்மொழியும் வெளியிட முடியவில்லை.. அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்..