நெட்ல சர்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன், அப்ப சில கடி ஜோக்ஸ் பார்த்தேன், அதுல சிலவற்றை உங்களுக்காக பதிவா போட்டிருக்கேன், முடிஞ்சா சிரிங்க! சிரிக்க முடியலைன்னா எம்மேல கோவப்படாதீங்க!
- நாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,
even MISSED கால் கூட பண்ண முடியாது !
- கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா
ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
- என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது.
- பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுபாங்க... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?!
- தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்... ஆனா ...இருமல் மருந்து சாப்பிட்டா
இருமல் வராது!
- சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும், ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட்டால் விபரிதமா ஆயிடும் !!!
- 'Hand wash'ன்ன கை கழுவறது , 'Face wash'ன்ன முகம் கழுவறது , அப்போ
'brain wash' ன்ன பிரைன கழுவறதா?
- "விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"
- "ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"
- "சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."
- தலைவர் வீட்டு காலிங் பெல்லை கவனிச்சியா? என்னவாம்?
அமுக்கினால் தலைவர் வாழ்க - ன்னு சத்தம் போடுது!!
- நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
நாட்டாமை : என்றா ???
பசுபதி : அதான் என்ரோம்ல …
நாட்டாமை : என்றா ???
பசுபதி : அதான் என்ரோம்ல …
- மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்க அம்மாவை வர வழசிடட்டுமா…
பேசாம ஒன் தங்கையே வரவழச்சுடு.
என்னங்க... சிரிப்பு வந்துச்சா? இல்ல கோவம் வந்துச்சா?
இன்றைய பொன்மொழி:வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
இன்றைய விடுகதை:நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?
விடை அடுத்த பதிவில்....
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?விடை: பொம்மை.
3 கருத்துரைகள்:
ஐயோ நீங்க கடிச்ச கடில வலிக்குது எஜமான் வலிக்குது...
நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?
catwalk ?
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...