அரசியலுக்கு போகிறாராம் நடிகர் விஜய். அதுவும் அ தி மு க பிரச்சார பீரங்கியாகப் போறாராம். இதுக்கு காரணம் அவரின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தது தான் காரணமாம். வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த விஜய்க்கு இந்த தொடர் தோல்விக்கு காரணம் தி மு க கட்சியின் உள்குத்து தான் காரணம், என ஜெயலலிதா மதுரை மீட்டிங்கில் பேசினார். இதை விஜய்யே ஜெயலலிதாவிடம் சொன்னாராம்.
ஏங்க, தெரியாமத்தான் கேட்கிறேன், நடிச்ச படங்கள் தோல்வியடைஞ்சா புது கட்சி ஆரம்பிக்கணும் அல்லது ஏதாவது பெரிய கட்சியில் ஒட்டிக்கனும்முன்னு ஏதாவது தலையெழுத்தா? ஏங்க, தோல்விக்கு என்ன காரனம்முன்னு உட்கார்ந்து யோசிச்சாலே போதுங்க, புதுசா நம்பிக்கை வரும், அதோட முந்திய படங்களில் என்னென்ன தப்பு பண்ணியிருக்கோம் என யோசிச்சாலே அடுத்த படம் வெற்றி தாங்க. நடிகர் திலகம் சிவாஜிக்கு வரிசையா பன்னிரண்டு படங்கள் தோல்வியா அமைஞ்சது. அவர் அப்பவே சோர்ந்து போய் நடிக்காம விட்டிருந்தா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...
அப்புறம்மா விஜய் தேர்ந்தெடுக்கிற கதைகளைப் பாருங்க, ஒரே மாதிரியா இருக்கும், என்ன ஒவ்வொரு படத்திலும் கதையை தவிர மத்த எல்லாமே மாத்தியிருப்பாரு, அப்புறம் விக்ரம், அஜித், சூர்யா மாதிரி நடிப்பில்லையாவது கெட்டப்பை மாத்துவாரா, அதுவும் இல்ல? ஏங்க காமடி நடிகர் வடிவேலு கூட ஒவ்வொரு படத்திற்கும் விதவிதமான கெட்டப்பில் நடிக்கிறாரு.
ரிஸ்க் சண்டையில மட்டும் தான் இருக்கும், அதையும் கிராபிக்ஸ் செஞ்சு சூப்பர் பைட்டரா காமிச்சிக்கிருவார். அப்புறமா இவரு படத்துல விஜய் ஹீரோவா அல்லது காமேடியனான்னே தெரியாது, அந்த அளவுக்கு காமடி நடிகரோட போட்டி போட்டு நடிப்பாரு.
அவர் அரசியலுக்கு வருவதற்கு காரணம் அவரோட தந்தையும், ரசிகர்களுமே காரனமுன்னு சொல்லறாங்க. அவர் அரசியலுக்கு வந்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், ஏன்னா? அப்பத்தானே ரசிகர்களுக்கு பதவியும் தேடி வரும், அதோட நிறைய பணமும் சம்பாதிக்கலாம், ஏரியா தாதாவாக ஆயிறலாம்.
இவரு அரசியலுக்கு வரணுமுன்னு யார் அழுகிறா? தமிழ்நாட்டு பெண்களிடம் கேட்டுப் பாருங்க? கண்டிப்பா நல்ல நடிகரா இருந்தாலே போதுமுன்னு சொல்லுவாங்க.
இன்னும் நம்ம மூத்த நடிகர்களைப் பாருங்க, அரசியல்ல சேர்ந்து நல்ல நிலைமைக்கு வந்திருக்காங்களா? இல்லவே இல்ல, சும்மா, நான் அந்தக் கட்சிக்காரன், இந்தக் கட்சிக்காரன் என சொல்லுவாங்க, அதுவும் தேர்தல் சமயத்துலதான். சூப்பர் ஸ்டார் ரஜினி சாரும் சில வருசங்களுக்கு முன்னாடி அப்படித்தான் இருந்தாரு. இப்ப அரசியலைப் பத்தி புரிஞ்சிக்கிட்டு அமைதியாய் இருக்காரு. நடிகர் கமலைப் பாருங்க, அவர் எப்படியாவது ஆஸ்கார் விருது வாங்கணும் என்ற குறிக்கோளோட நடிக்கிறாரு.
ஒவ்வொரு நடிகர்களும் ஏதாவது குறிக்கோளுடன் தான் நடிக்கிறாங்க, நடிக்கிற ஒவ்வொரு படமும் ஜெயிக்கனுமுன்னு வெறியோட இருக்காங்க. விஜய்க்கு அந்த வெறி இருக்கா? இல்ல அடங்கிப் போச்சா?
சரிங்க, விஜய் புது கட்சி ஆரம்பிக்கிராறுன்னா, எதுக்குங்க அ தி மு க- கட்சியோட கூட்டணி வைக்கணும்? ஏன், தே மு தி க - விஜய காந்த் கூட கூட்டணி வைக்கலாமே? இருவரும் இணைந்து செந்தூரப்பாண்டி படத்துல நடிச்சாங்களே! அவரே கட்சி ஆரம்பிச்சு சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகியும், கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாம திணறிக்கிட்டு இருக்காரு. மக்கள்கிட்ட கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்காரு.
விஜய் என்ன செயரார்ன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றைய பொன்மொழி: மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
இன்றைய விடுகதை:விடை அடுத்த பதிவில்....
குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:----------------
காய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டால் காவற்காரப்பையன் கோபத்திற்கு வருவான்.
அவன் யார்?
விடை: தேன்கூடு
8 கருத்துரைகள்:
நல்லா சொன்னீங்க... ஆனா நீங்க உண்மையிலேயே விஜய் ரசிகர் தானா...
@philosophy prabhakaran
நான் விஜய் ரசிகர் இல்லைங்க. அவரை நல்ல நடிகராக பாக்கத்தான் எனக்கு விருப்பம்,
நல்ல பதிவு தலைவா.. ஆனால் எங்கே கேட்கபோகுது விஜய் அவர்களுக்கு..
பார்ப்போம் வேடிக்கையை....
@அரசன்
வருகைக்கு நன்றி...
விஜய் யாருன்னு தமிழ் மக்களுக்கே மறந்து போச்சு...
அதனால தானோ என்னவோ அரசியல மூக்கை நுழைகிறார் போல...
@ஜெரின்//// விஜய் யாருன்னு தமிழ் மக்களுக்கே மறந்து போச்சு...
அதனால தானோ என்னவோ அரசியல மூக்கை நுழைகிறார் போல.../////
எதுக்கு அரசியலுக்கு போறாருன்னு எனக்கும் டவுட்டு தான்...
///நான் விஜய் ரசிகர் இல்லைங்க. அவரை நல்ல நடிகராக பாக்கத்தான் எனக்கு விருப்பம்////
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதாமே உண்மையா..???
//நடிகர் கமலைப் பாருங்க, அவர் எப்படியாவது ஆஸ்கார் விருது வாங்கணும் என்ற குறிக்கோளோட நடிக்கிறாரு. // ஹா...ஹா...ஹா... ஒண்ணுமில்லை சும்மா சிப்பு வந்துச்சு.. சிப்பு! ஹா..ஹா..ஹா..