CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஓய்வு பெற்றார் கங்குலி

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
          அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
         
           ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் கைவிடப்பட்டதை அடுத்து கங்குலி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த அக்டோபர் 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு பெற்றார். அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி விளையாடி வந்தார். மேற்கு வங்க அணிக்காகவும் களம் இறங்கினார். 
           இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். ஆனால் இதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக விளங்கியவர் கங்குலி. 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவரது தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 


              மொத்தம் 49 டெஸ்ட் ஆட்டங்களுக்கு தலைமை வகித்த அவர், 21 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். 2008-ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் அவர் களம் இறங்கினார். முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் எடுத்த அவர், அடுத்த இன்னிங்ஸில் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.                 முன்னதாக 1992-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினார். 1996-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் முதல் முறையாக அறிமுகமானார். தனது முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்து அசத்தினார்.  100-க்கும் மேலான டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள 7 இந்திய வீரர்களில் கங்குலியும் ஒருவர், 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 7 வீரர்கள் பட்டியலிலும் கங்குலி இடம் பெற்றுள்ளார்.  

                         இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் (11,363) குவித்தவர் கங்குலி.  மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,212 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 239 ரன்கள் எடுத்துள்ளார். 311 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்று 11,363 ரன்கள் எடுத்துள்ள அவர், 22 சதங்களையும், 72 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்ச ரன் 183. ஒருநாள் ஆட்டத்தில் மொத்தம் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இன்றைய பொன்மொழி:
உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

இன்றைய விடுகதை:
அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன? 

முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை: 
பூசணிக்காய் பூசணிக்கொடி   

முந்திய விடுகதைக்கு  பதிவை பார்க்க:   மனைவியும் ஆம்லெட்டும்
 


3 கருத்துரைகள்:

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

கங்குலிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

Speed Master said... Best Blogger Tips

ஒரு திறமையான வீரர்
இந்திய அணியின் இன்றைய நிலைக்கு அஸ்திவாரம் இவர்தான்

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - என்றிருந்தாலும் ஓய்வு பெற வேண்டியவர் தான் . ஆனாலும் ..... யாருமே ஏலத்தில் எடுக்க வில்லையே - துரதிர்ஷ்டம் தான்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1