CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label கிரிக்கெட் செய்திகள். Show all posts
Showing posts with label கிரிக்கெட் செய்திகள். Show all posts


தென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...

        தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்  சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றில் ஒரு வெற்றியுடன் தோல்வியை தழுவியது, அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறு போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நான்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

image courtesy: TOI
மேலும் வாசிக்க... "தென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா..."



IPL T20 Cricket 2013 - Match Shedule

ஐபில் IPL -T20 2013 நேற்று முதல்(03/04/2013) கோலாகலமாக ஆரம்பித்து உள்ளது. எந்தெந்த அணியினர் எங்கு, எப்போது, யாருடன் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியல் கீழே.
மேலும் வாசிக்க... "IPL T20 Cricket 2013 - Match Shedule"



கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க

      இன்றைய தினத்தில் கிரிக்கெட் உலகில் நமது வீரர்கள் (ஆண்கள்) உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள்.

    ஆனால் இந்திய கிரிக்கெட்டில்  பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம்.  இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். என்னவென்று அறிந்து கொள்ள வாசியுங்கள்.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட்இண்டிஸ் அணிக் கெதிராக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நமது பெண்கள் அணியின் திருஷ் காமினி முருகேசன் என்ற வீரர் ஓர் வரலாறு படைத்துள்ளார்.
 துவக்க வீரராக களமிறங்கி நூறு ரன்கள் அடித்து பெண்கள் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச் சாதனை படைத்த இவருக்கு நமது அரசும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் போதிய பாராட்டோ, பரிசோ அறிவிக்கவில்லை என ஒரு தின பத்திரிக்கையில்  வாசித்த போது நாம் எந்த அளவு பெண்கள் கிரிக்கெட் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பது தெரிய வருகிறது.

திருஷ் காமினி பற்றி:
சென்னையில் வாழும் இவர், தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். தனது 16 வயதில் ஆசிய கோப்பை (2006) தொடரில் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் சிறந்த "ஜூனியர்' வீராங்கனை (2007-08), சிறந்த "சீனியர்' வீராங்கனை (2009-10) விருதுகளை வென்றுள்ளார். 

உலக கோப்பை போட்டியில் முதல் சதம் அடித்து வரலாறு படைத்த திருஷ் காமினி அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிப்போம் நண்பர்களே.

திருஷ் காமினி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க... "கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க"



கிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை

கிரிக்கெட் உலகில் இன்றைய சர்ச்சையில் சிக்கி நிற்கும் விஷயம் நடுவர் முடிவு மேல் முறையீட்டு நடைமுறை (யுடிஆர்எஸ்) ஆகும். இதுகுறித்து தற்போது ஒரு சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது.


    தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் விவாதிக்கப்படவிருந்த இரண்டு பிரச்சனைகளில் ஒன்றில் சமரசத் தீர்வு கிடைத்துள்ளது. மற்றொன்று சுழற்சி முறையில் ஐசிசி தலைவரை நியமிப்பது ஆகும். யுடிஆர்எஸ் முறை அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இனிமேல் அமலில் இருக்கும். ஆனால், அதில் ஒருநிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. 
   இம் முறையில் இரண்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஹாட் ஸ்பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண்டு நுட்பங்களில் ஹாட் ஸ்பாட் மட்டும் பயன்படுத்தப்படும். ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தில் கறுப்பு வெள்ளை படத்தில் பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதைக் காண முடியும். இதற்கு தெர்மல் இமே ஜிங் என்று பெயர். இதில் ஒலி தொழில்நுட்பமும் உண்டு. பந்து மட்டையில் பட்டவுடன் ஏற்படும் ஒலியைக் கூறும் சவுண்ட் தொழில் நுட்பமும் பொருத்தப்படும். பந்தை சரியான முறையில் பிடித்தனரா? பந்து மட்டையில் அல்லது கையுறையில் பட்டுச் சென்றதா? என்பதை இம்முறைகளில் கண்டறியலாம். ஹாக்ஸ் ஐ மற்றொரு தொழில் நுட்பமாகும். இது தற்போதைக்கு நடைமுறைக்கு வராது. பந்தின் போக்கை அதனுடைய சுழற்சி, வேகம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்க இது பயன்படும். வீசப்பட்டு அடிக்கத் தவறிய பந்து ஆடுபவரின் காலால் அல்லது உடலின் அங்கமொன்றால் தடுக்கப்படாவிட்டால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்கும் என்ப தைத் தீர்மானிக்க இது உதவும். ஆனால், இது தற்போதைக்கு பயன்படுத்தப்படமாட்டாது. எனவே, எல்பிடபிள்யு (டயே) பற்றி தீர்மானிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது. மனிதனின் கண்ணும் மூளையும் மட்டும் இதைத் தீர்மானிக்கும். 
         அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ஸ் பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண் டும் நடைமுறையில் இருந்தது. இவ்விரண்டையும் உள்ளடக்கிய யுடிஆர்எஸ் முறையை இந்தியா ஆடும் போட்டிகளில் பயன் படுத்த மறுத்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக் கெட் வாரியம் மிகப்பெரும் நிதியை வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தொழில்நுட்பத்தை மறுத்ததால் பெரும் சர்ச்சை உருவானது. ஐசிசி மாநாட்டில் இந்தியாவை தனிமைப்படுத்தி, தேவைப்பட்டால் தோற்கடித்தாவது யுடிஆர்எஸ் முறையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் பாய்காட் வேண்டுகோள் விடுத்தார். 
    இம்முறை நூறு விழுக்காடு கூர்மையானதும் முழுமையானதும் அல்ல என்று இந்திய கிரிக் கெட் வாரியம் கூறிவந்தது. ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் இருந் தால் யுடிஆர்எஸ் முறையை ஏற் றுக் கொள்ளலாம் என்று டெண்டுல்கர் கூறினார். தோனியும் யுடி ஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மற்ற டெஸ்ட் நாடுகள் இம்முறைக்கு ஆதரவு தந்ததால் இந்தியா தனது எதிர்ப்பை ஹாக்ஸ் ஐ வேண்டியதில்லை என்ற நிபந்தனையுடன் விலக்கிக் கொண்டது. ஐசிசி உறுப்பு நாடுகளில் நிதி வல்லரசை பகைத்துக் கொள்ள விரும்பாத ஐசிசி இதை ஏற்றுக் கொண்டது.

    ஹாட்ஸ்பாட், ஸ்னிக்கோ மீட்டர் ஆகிய இரண்டையும் பயன்படுத்த நாளொன்றுக்கு 57 ஆயி ரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவின் தயக்கத்துக்கு இது காரணமாக இருக்க முடி யாது. மிகவும் நெருக்கடியில் இருக் கும் இலங்கை கூட யுடிஆர்எஸ் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு கேள்வி நியாயமானது. இம்முறையின் செயல்பாட்டால் தவறான முடிவு கள் இருக்காது என்பது உறுதி யென்றால், மேல்முறையீட்டுக்கு வரம்பு தேவையா? என்ற கேள்வியை இந்தியா எழுப்புகிறது. 
      கடந்த டிசம்பரில் இந்திய வாரியப் பொருளாளர் என்.சீனிவாசனும், இந்திய கிரிக்கெட் வாரிய நடுவர் துணைக்குழு இயக்குநரும், ஐசிசியின் எலைட் நடுவர் குழு நடுவராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராகவனும் ஆஸ்திரேலியா சென்றனர். ஆஷஸ் தொடரில் பயன்பட்ட யுடிஆர்எஸ் முறையை நேரில் கண்டறிந்தனர். யுடிஆர்எஸ் நடை முறையை இருவரும் நம்ப மறுத்தனர். ஐசிசி அளித்த தகவல் குறிப்புகளும் இருவரையும் நம்ப வைக்கவில்லை. எனவே, இந்தியா யுடிஆர்எஸ் முறையை தொடர்ந்து எதிர்த்தது. 
    உலகக் கோப்பையில் கிடைத்த அனுபவம் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களையும், வாரியத்தையும் இந்நிலைபாட்டில் மீண்டும் உறுதியுடன் நிற்கவைத்தன. இந்தியாவும், இங்கிலாந்தும் மோதிய போட்டியில் இயான் பெல் எல்பி டபிள்யு முறையீட்டில் தப்பினார். ஆடுகளத்தில் 2.5 மீ. தொலைவுக்கு பெல் முன்னேறிச் சென்றதால் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று யுடி ஆர்எஸ் முறையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தோனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
    2008ல் இலங்கை தொடரில் யுடிஆர்எஸ் பயன்பட்டது. டெண்டுல்கர் நிருபர்களிடம் எதிர்ப்பைக் கூறினார். வீரர்களும், மற்றவர்களும் இம்முறையில் உள்ள குறைகளை வாரியத்திடம் கூறினர். அதற்குப்பின் இந்திய நிலைபாடு குறித்து உள் விவாதங்கள் நடைபெறவில்லை. இந்திய நிலைபாடு மாறவும் இல்லை. 
     மேற்கிந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக மூன்று தீர்ப்புகள் அமைந்தன. மூன்றும் நடுவர் ஹார்ப்பர் அளித்த தீர்ப்புகள் ஆகும். இந்தியா யுடிஆர்எஸ் முறையை ஏற்றிருந்தால் இம்மூன்றும் இந்தி யாவுக்கு பெரிதும் உதவியிருக்கும். சில தீர்ப்புகள் மேற்கிந்தியாவுக்கு சாதகமாக அமைந்தன. யுடிஆர்எஸ் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதனுடைய செயல் பாட்டுக்கும் சில வரையறைகள் உண்டு. ஆனாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்க முடியாது. யுடிஆர்எஸ் முடிவுகள் 95 விழுக்காடு நிறைவாக இருக்கும். மனித நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதால் தவறின் அளவுமிகக் குறைவாகவே இருக்கும். இது நடை முறைக்கு வந்தால் நடுவர் திறமையற்றவர் அல்லது ஒருசார் புடையவர் என்று கூற முடியாது. 
    தற்போதாவது இந்தியா யுடி ஆர்எஸ் முறையை சில சமரசத்துக்குட்பட்டு ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி: தீக்கதிர்
மேலும் வாசிக்க... "கிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை"



CSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்

         ஐபிஎல் 4வது சீசன் தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அனிருதா ஸ்ரீகாந்த் 64 ரன் விளாசினார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது.

            தொடக்க வீரர்களாக முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் களமிறங்கினர்.

மேலும் வாசிக்க... "CSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்"



வெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை! (வீடியோ)

           
   பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோணி சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்த, அவருக்கு அந்த சமயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். யுவராஜ் வெற்றி பெற்று விட்டோம் என கத்திக் கொண்டு உற்சாகத்தில் துள்ளிக் கொண்டு வந்த போது தான், தோனிக்கு ஸ்டம்பை எடுக்க வேண்டும் என தோன்றியதாம்.

மேலும் வாசிக்க... "வெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை! (வீடியோ)"



நடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்கள்

முதல்ல இதப் படிங்க:  
        
       உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர் பணியாற்றி வரும் இலங்கை நடுவர் அசோக டிசில்வாவின் நடுவர் பொறுப்பிற்கான திறமைகள் மீது கேப்டன்களுக்கு கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் தற்போது டிசில்வாவின் தீர்ப்பின் மீது விமர்சனம் வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.




மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அயர்லாந்து ஆட்டத்தின் போது அயர்லாந்து வீரர் கேரி வில்சனுக்கு நடுவர் அசோக டிஸில்வா அவுட் கொடுத்தது பற்றி விமர்சனம் செய்ததற்காக அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்டிற்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வாசிக்க... "நடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்கள்"



இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ


இந்தியா  பந்துவீச்சு:
 பெங்களூரில் இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் ஜாகிர் கான் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக அயர்லாந்து அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்தே இதே மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு புரட்டிப் போட்டு புல்டோசர் ஏற்றி காலி செய்து அசத்தியது அயர்லாந்து. இதனால் இன்றைய போட்டியில் அந்த அணியை இந்தியா சற்று முன் ஜாக்கிரதையுடனேயே சந்தித்தது.
மேலும் வாசிக்க... "இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ"



இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

      

       நேற்றிலிருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாயிடுச்சு. 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு தோல்வியடைந்து வெளியேறிய இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சாதிக்க காத்திருக்கிறது. 

      இப்போதைய இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சரி, துடிப்பு மிக்க இளைஞர்களை கொண்ட அணியாக உள்ளது.
ஒரு நாள் தொடரில் இரண்டாமிடத்திலும், டெஸ்ட் தொடரில் முதலிடத்திலும் கடந்த ஒரு வருடத்திற்கும்  மேலாக தர வரிசையை பெற்று கோப்பையை வெல்லக் கூடிய அணியாக உள்ளது (எல்லாம் ஒரு நம்பிக்கை தானுங்க).

         இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியினரைப் பற்றி இரண்டு, மூன்று வரிகள் உங்களுக்காக.
மேலும் வாசிக்க... "இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!"



பயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடருமா தோணி?

        
       உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இந்தியாவுக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. முதல ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை பந்து வீச்சில் புரட்டி எடுத்தது இந்தியா. 138   ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுகளை  இழந்த இந்தியா  யூசுப், அஸ்வின், நெஹ்ரா வின் ஆட்டத்தால் கொஞ்சம் கௌரவவமான ஸ்கோர் எடுக்க முடிந்தது.
மேலும் வாசிக்க... "பயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடருமா தோணி?"



ஓய்வு பெற்றார் கங்குலி

          அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
         
           ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் கைவிடப்பட்டதை அடுத்து கங்குலி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த அக்டோபர் 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு பெற்றார். அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கங்குலி விளையாடி வந்தார். மேற்கு வங்க அணிக்காகவும் களம் இறங்கினார். 
மேலும் வாசிக்க... "ஓய்வு பெற்றார் கங்குலி"



உலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.


உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை அறிவித்துள்ளது.தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.ராகுல் திராவிட், இர்பான் பதான் ஆகியோருக்கு உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை.
மேலும் வாசிக்க... "உலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி."



IPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்

 
      4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடை பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

       ஒவ்வொரு அணியும் கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக 4 பேரை வைத்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்தது. அணிகள் வைத்துக் கொள்ளும் வீரர்களை கடந்து 8ம் திகதிக்கு முன் முடிவு செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மட்டும் ஏற்கனவே விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளன.
மேலும் வாசிக்க... "IPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்"



3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO


இந்தியா-நியூசிலாந்து இடையே மூன்று டெஸ்ட்டுகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெடுகளையும்  இழந்து 193ரன்கள் எடுத்தது.

ஸ்கோர் போர்டு:

விடியோ பாருங்கள்:
மேலும் வாசிக்க... "3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO"



சூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.  டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹசியும், முரளி விஜயும் களமிறங்கினர். ஹசி 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முரளி விஜய் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஹாஸ்டிங்ஸின் பந்து வீச்சில் கெய்னியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 10 ரன்களுக்கும், கேப்டன் தோனி 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.÷20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.  163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய விக்டோரியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஃபிஞ்ச்சும், ஹோட்ஜும் களமிறங்கினர். ÷ஃபிஞ்ச் அபாரமாக ஆடி 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். ஹசி 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 162 ரன்களுக்கு விக்டோரியா அணி ஆல் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் டிராவானது. இதையடுத்து சூப்பர் ஒவர் வழங்கப்பட்டது.
சூப்பர் ஓவர்: முதலில் விக்டோரியா அணி பேட் செய்தது. சென்னையின் அணி சார்பில் அஸ்வின் பந்து வீசினார். 6 பந்துகளில் அந்த அணி 23 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் ஹசி 3 சிக்ஸர்களை விளாசினார்.÷இதையடுத்து பேட் செய்த சென்னை அணியால் 13 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து விக்டோரியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மேலும் வாசிக்க... "சூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி"



பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம்

     இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை படைத்த கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.  இதற்கான வீடியோ ஆதாரம் போலீசில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்துகின்றனர். சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது.




இப்போட்டியில் 3&1 என்ற  கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முடிந்த கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 225 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து  அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 102 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராட் & ஸ்டூவர்ட் ஜோடி 332 சேர்த்து உலக சாதனை படைத்தது. இந்த ஒரு போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால், தொடரை சமன் செய்திருக்க முடியும். ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இங்கிலாந்தின் Ôநியூஸ் ஆப் வேல்டுÕ பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. முகமது அமீர், முகமது ஆசிப் இருவரை  நோ&பால், வொய்டாக பந்து வீசுமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த சூதாட்டக்காரர் மசார் அஜித் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக அவர்களுக்கு ^1.15 கோடி பணம் கொடுத்துள்ளார். இந்த சூதாட்டத்தில் கேப்டன் சல்மான் பட்,  விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் உட்பட 7 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட தரகர் மசார் மஜித்தை லண்டனில் கைது செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 வீரர்கள் பற்றி தீவிர  விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூதாட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த தரகர்களும் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரத்தை மஜித் கொடுத்துள்ளார். இந்த பிரச்னையில் மேலும் பல தரகர்களுக்கு தொடர்பு இருக்கலாம்  என்று போலீசார் கருதுகின்றனர்.பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் போலீசார் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது, வீரர்கள் சூதாட்டத்தில்ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, வீரர்களின் லேப் டாப், செல்போன், பணம் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரனை நடத்தப்பட் டதை அணி மேலாளர் யாவர் சயீத் உறுதி செய்துள்ளார்.

சூதாட்டம் நடந்த விதம் டி.வி.யில் ஒளிபரப்பு



லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம் எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோ ஆதராத்தை தனியார் தொலைக்காட்சிகள் நேற்று இரவு போட்டி போட்டு வெளியிட்டன. சூதாட்ட தரகர் மசார் மஜித், கட்டு கட்டாக பணத்தை வைத்திருப்பது, வீரர்களை சந்தித்து பேசுவது, கேப்டன் சல்மான் பட்டுடன் சேர்ந்து புகைப்படத்தில் இருப்பது போன்ற காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.
மேலும் வாசிக்க... "பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1