உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இந்தியாவுக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. முதல ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை பந்து வீச்சில் புரட்டி எடுத்தது இந்தியா. 138 ரன்களுக்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா யூசுப், அஸ்வின், நெஹ்ரா வின் ஆட்டத்தால் கொஞ்சம் கௌரவவமான ஸ்கோர் எடுக்க முடிந்தது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அனிடின் துவக்கம் மிக அருமையாக அமைந்தது. ஆனால் அதற்க்கேலாம் ஆப்பு வைக்க இந்தியா சுழல் பந்து வீச்சை கையில் எடுத்தது. இதற்க்கு நல்ல பலன் கிடைத்தது. சும்மா சுழல் மன்னர்கள் சுழலில் மிரட்ட 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாவ்லா, ஹர்பஜன், அஸ்வின் கூட்டணி சிறப்பாக பந்து வீசி நடப்பு சாம்பியனை சிதறடித்தது. இந்த ஆட்டத்தின் மூலம் உலக கோப்பை ஆட்டத்தில் தனது பந்து வீச்சை நிருபித்தது இந்தியா.
ஆனால் பேட்டிங் கவலை அளிக்க கூடியதாக இருந்தது. ஏனெனில் முழுசா 50 ஓவர் கூட இந்தியா விளையாடவில்லை. இப்படி ஆடுன்னா , எப்படி காலிறுதி சுற்றுக்கு போக முடியும்.
வச்சாங்கையா ஆப்புன்னு கவலைப்பட்டுக் கொண்டிருந்த இந்தியர்களை நேற்று நடந்த இந்தியா - நியுசிலாந்து ஆட்டம் நம்பிக்கை அளித்த ஆட்டமாக இருந்தது. துவக்கம் தான் சரியாக அமைய வில்லை. சச்சின், சேவாக் விரைவாக அவுட் ஆக, அட பேட்டிங்ல வச்சாங்கையா ஆப்பு நெனச்ச நேரத்தில், விராட், காம்பிர் ஜோடி நம்பிக்கை அளிக்கும் விதமா சூப்பெரா விளையாடுனாங்க. க்ஹோலி அவுட் ஆக, வந்தார் நம்ம கேப்டன் தோணி. காம்பிர், தோணி ஜோடி நியுசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது.
சதம் அடிக்க நெருங்கிய காம்பிர் 89 ரன்னில் அவுட் ஆக தோணியுடன் இணைந்தார் ரைனா. அவரும் சிக்ஸ், போருமா அடிக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறியது. அதோடு தொனியும் அதிரடியை காட்டினார். நிதானமாக அரை சதத்தை கடந்த தோணி பின்னர், களத்தில் சூறாவளியாக சுழன்றார். அவரும் சிக்ஸ், போருமா அடிக்க 64 பந்தில் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் (11 FOUR , 3 SIX ) அடித்து மிகப் பெரிய ஸ்கோருக்கு(360) அடித்தளமாக இருந்தார்.
பின்னர் ஆடிய நியுசிலாந்து துவக்கம் சிறப்பாக அமைந்தது. இந்திய வேக பந்து வீச்சாளர்களை, சிதறடித்தது நியுசிலாந்து. இந்திய வேக பந்து வீச்சு திருப்திகரமா இல்லை . ஏனெனில் வேகப்பந்து வீச்சின் சராசரி 7 ரன்கள். ஆனால் சாவ்லா, ஹர்பஜன், அஸ்வின், யுவராஜ் கூட்டணிசுழலில் ஜாலம் காட்டினர். இதனால் நியுசிலாந்து அணியினர் விரைவாக விக்கெட்டுகள் இழந்து 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியிலும் சுழல் பந்து வீச்சு திருப்தியாக இருந்தது.
மட்டை வீச்சிலும் திறமையை நிருபித்தது இந்தியா. இதே போன்ற சிறந்த ஆட்டத்தை உலக கோப்பை தொடரில் காட்டினால் கோப்பை நமக்கு தான்.
14 கருத்துரைகள்:
சுடச்சுட பின்னூட்டம்...
கவலையே வேண்டாம்... நிச்சயம் தொடரும்...
அன்பின் பிரகாஷ்
நாம் வெல்வோம் - நிச்சயம் நாம் வெல்வோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
முயற்சி திருவினையாக்கும் ஹி ஹி வேற என்னத்த சொல்லமுடியும்!
Prakash!! All is well :))
chak de INDIA>>>
பார்ப்போம் என்ன நடக்க போகுதுன்னு
தொடரட்டும் இந்திய அணியின் வெற்றிகள்...
பகிர்வுக்கு நன்றிகள்..
நல்ல பதிவு பிரகாஷ்! இந்தியா கண்டிப்பாய் வெற்றி பெறும்
பயிற்சி ஆட்டம் சிறப்பாகவே இருந்தது
இன்னைக்கு நம்ப பதிவு
சத்யம் ஓனர் மனைவி எனக்கு எழுதிய கடிதம்
http://speedsays.blogspot.com/2011/02/blog-post_18.html
ஓரளவுக்கு இந்த முறை நம்பலாம்....
என்னங்க மிக அருமையா “தமிழ்வாசி”ன்னு தலைப்பு வச்சியிருக்கிங்க .... அருமையா தமிழ்ல எழுதுறிங்க.....
அந்த தலைப்பை கம்பீரமா தமிழில் வைக்ககூடாதா?
எல்லோரும் எதிர் பார்ப்போட இருக்கோம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
@சி.கருணாகரசு////என்னங்க மிக அருமையா “தமிழ்வாசி”ன்னு தலைப்பு வச்சியிருக்கிங்க .... அருமையா தமிழ்ல எழுதுறிங்க.....
அந்த தலைப்பை கம்பீரமா தமிழில் வைக்ககூடாதா?/////
மிக விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். நன்றி