நேற்றிலிருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாயிடுச்சு. 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு தோல்வியடைந்து வெளியேறிய இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சாதிக்க காத்திருக்கிறது.
இப்போதைய இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சரி, துடிப்பு மிக்க இளைஞர்களை கொண்ட அணியாக உள்ளது.
ஒரு நாள் தொடரில் இரண்டாமிடத்திலும், டெஸ்ட் தொடரில் முதலிடத்திலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தர வரிசையை பெற்று கோப்பையை வெல்லக் கூடிய அணியாக உள்ளது (எல்லாம் ஒரு நம்பிக்கை தானுங்க).
இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியினரைப் பற்றி இரண்டு, மூன்று வரிகள் உங்களுக்காக.
சச்சின்:
இந்தியாவின் ஒரே மாஸ்டர் பேட்ஸ் மேன் இவர் தான். இவர் களத்தில் இருந்தாலே போதும், மற்ற வீரர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவர் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தால் எதிரணியினர் அவ்வளவு தான்.
ஷேவாக்:
ஆஸ்த்ரியலிய அணி அஞ்சும் ஒரே வீரர் இவர் தான். முதல் பந்தையே எல்லை கோட்டுக்கு அனுப்ப வேண்டும் என துடிப்பவர். ஒவ்வொரு பந்தையும் நன்றாக அடித்து ஆடக்கூடிய மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர். இவர் களத்தில் இருந்தால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கிலி தான். இந்திய அணியின் ரன்கள் மளமள என உயரும். இவர் பகுதி நேர சுழல்பந்து வீச்சாளராகவும் எதிரணியை கலக்குவார்.
காம்பிர்:
இவர் சிறந்த இடது கை ஆட்டக்காரர். இவர் களத்தில் நின்று விளையாட ஆரம்பித்தால் அணியின் ரன் ரேட் பற்றி கவலை இல்லை. பந்துக்கு பந்து ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தும் நிலையான பேட்ஸ் மேன்.
ஹோலி:
ஜுனியர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி ஜூனியர் உலக கோப்பையை பெற்றுத் தந்த இளம் வீரர். அந்த தகுதியே சீனியர் அணிக்கு வரக் காரணம். 20 /20 கிரிக்கெட்டிலும் தனி முத்திரை படைத்தவர். இவர் ஒரு நாள், டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று விளையாடும் இவர் மிகச் சிறந்த பீல்டர்.
ரைனா:
அணியில் மூன்றாம் நிலை முதல் ஏழாம் நிலை வரை எந்த இடத்திலும் அதிரடியாக ஆடக்கூடிய ஆட்டக்காரர் ரைனா. இவர் களத்தில் நின்றால் பந்துகள் எல்லை கோட்டை கட்டிப் பிடிக்கும். கிரீசில் நின்று பின்னங் காலை சற்று தூக்கி சிக்ஸர் அடிக்கும் ஷாட்டுகளில் கை தேர்ந்தவர். இவரும் பகுதி நேர பந்துவீச்சாளராக விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர்.
தோனி:
இந்திய அணியின் வெற்றிக் காப்டின். பெரும்பாலும் தாசை வெல்லக்கூடிய ராசி இவருக்கு உண்டு. அணியை திறம்பட வழி நடத்துவதிலும், பந்து வீச்சாளர்களை சரியாக உபயோகிக்கும் திறமை படைத்தவர். இவர் களத்தில் பந்தை வெட்டி விட்டு ஆடும் ஆட்டம் நன்றாக இருக்கும்.
யுவராஜ் சிங்:
இவருக்கு உடல் தகுதியும், பார்மும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இருந்தாலும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதை இவர் சரியாக பயன்படுத்தி அணிக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் என அழைக்கப்படுபவர். ஒரு காலத்தில் இவர் அரை சதம் அடித்தால் இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி பெரும் என்ற ராசி இவருக்கு இருந்தது. இப்போதும் இந்த ராசி வொர்கவுட் ஆகுமா?
யூசுப் பதான்:
குறுகிய காலத்தில் அசுர வளர்சியடைந்தவர். இவர் களத்தில் காட்டும் அதிரடி இருக்கே, ஒன்னொன்னும் பேரிடி. வேகம், சுழல் என எந்த பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்யும் திறமை படைத்தவர். இவரிடம் சிக்கும் பந்துகள் நான்கும், ஆறுமாக சிதறும். பகுதி நேர பந்து வீச்சாளர்.
ஹர்பஜன்:
அருமையான சுழல் பந்து வேசாளர் மட்டுமல்ல, பின்வரிசையில் இறங்கி ஆடும் அருமையான அதிரடி ஆட்டக்காரர். இவரின் தொஸ்ராவுக்கு எதிரணி சரண்டர் தான். இவர் விக்கெட் வேட்டை நடத்தினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் தான். தோனியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்..
ஜாகிர் கான்:
அணியில் நீண்ட காலமாக விளையாடும் சிறந்த வேகப் பந்து வேசாளர். இவரின் ஸ்டம்ப்பை தகர்க்கும் படி வீசும் பந்துகள் எதிரணியினரை அச்சப்படுத்தும். ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்காமல் கட்டுக் கோப்பாக பந்து வீசுபவர். பந்து வீச்சில் மட்டுமல்ல, மட்டை வீச்சிலும் திறமை வாய்ந்தவர். எதிரணியின் துவக்கத்தை விரைவில் அவுட் ஆக்கும் நல்ல பவுலர்.
நெஹ்ரா:
இவரும் அணியில் நீண்ட காலமாக விளையாடுபவர். இவரின் இன்ஸ்விங் பந்துகள் எதிரணியினரை அவுட் ஆக்கும் வகையில் இருக்கும். அணிக்கு வருவதும், போவதுமாக இருக்கும் இவர் ரன்கள் அதிகம் கொடுப்பதை கட்டுப்படுத்தினால் நல்லது.
அஸ்வின்:
20 /20 போட்டிகளில் அடையாளம் காணப்பட்ட சிறந்த சுழல் பந்து வீச்சாளர். தோனியின் நம்பிக்கைக்கு உரியவர். இவர் ஒவ்வொரு பந்தையும் வித விதமாக வீசும் திறமை வாய்ந்தவர். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்க வேண்டுமெனில் இந்த தொடரில் சாதித்தால் மட்டுமே முடியும்.
சாவ்லா:
கடந்த இரு வருடங்களாக அணியில் இடம் கிடைக்காத இவருக்கு இந்த தொடரில் விளையாடுவது ஒரு அதிர்ஷ்டம் தான். இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதால் அணியில் இடம் கிடைத்தது.
ஸ்ரீசாந்த்:
களத்தில் இவரின் ஆக்ரோசமே இவருக்கு பலமும், பலவீனமும் ஆகும். ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும். ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்தினால் மிகவும் நல்லது. இவரின் பவுன்சர்கள் எதிரணியை அச்சப்படுத்தக் கூடியது.
முனாப் படேல்:
இவரும் அருமையான வேகப்பந்து வீச்சாளர். விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர்.
ஒவ்வொரு வீரரை பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லியுள்ளேன்.
இன்றைய பொன்மொழி:அனைவருமே தலைவர்கள் என்றால், தொண்டர்கள் யாராக இருக்க முடியும்?
இன்றைய விடுகதை:அரியக்குடி பெரியாத்தாஅவளே கெட்டிக்காரிபால் கொடுக்காமல் பிள்ளை வளர்ப்பவர்பலே கெட்டிக்காரி. அவள் யார்?
15 கருத்துரைகள்:
பலம் என்னைக்கும் பலவீனமடையாமல் "கப்" போட வரணும்...
அணி உணர்வுடன் விளையாடி கோப்பையை வெல்லட்டும்.
நல்ல அலசல்.
பலம் பலவீனம் பற்றிய தொகுப்பு அருமை...இப்போது இந்தியர்களின் ஒரே எதிர்பார்ப்பு கோப்பையை வெல்லவேண்டும்...நம்புவோம் வெற்றி நமதே என்று.
தற்போதைய உலககோப்பை விளையாடும் அணிகளில் பலம் மிக்க அணியாக கருதபடுவது இந்திய அணிதான் பலதினோடு அதிர்ஷ்டமும் கைகூடவேண்டும் கோப்பையை வெல்ல
வெற்றி பெறுவோம் - திறமை இருக்கிறது - ம்ம்ம்ம்ம் - நல்லதொரு அலசல் பிரகாஷ்
நல்லதொரு அலசல்...
பகிர்வுக்கு நன்றி
யதார்த்தமா சொல்லி இருக்கீங்க ஆனா இன்னும் நமக்கு பொவ்ளிங் வீக்கு தானுங்க ஹி ஹி!
அஷ்வின் இந்திய 20 /20 உலக கோப்பையில் ஆடவில்லை
பெரும்பாலும் தாசை வெல்லக்கூடிய ராசி இவருக்கு உண்டு.///ENNA BOSS COMEDY PANRINGA NETHU(19 FEB11)TOSS LOSS THAN DHONI KU MATCH WIN PANRA LUCK IRUKKU AANA TOSS WIN PANRA LUCK ILLA
அருமையான அலசல் நண்பா ! அப்படியே நம்ம ஏரியாவுக்கும் வாங்க!!
@கமெண்ட் மட்டும் போடுறவன்
///அஷ்வின் இந்திய 20 /20 உலக கோப்பையில் ஆடவில்லை////
IPL CRICKET MATCH சரி தானே.
@shabi
///பெரும்பாலும் தாசை வெல்லக்கூடிய ராசி இவருக்கு உண்டு.///ENNA BOSS COMEDY PANRINGA NETHU(19 FEB11)TOSS LOSS THAN DHONI KU MATCH WIN PANRA LUCK IRUKKU AANA TOSS WIN PANRA LUCK ILLA///
நண்பா..இந்த பதிவு சென்ற வாரமே எழுதியது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்று தான் வெளியிட முடிந்தது. நேற்றைய மேட்ச் பற்றி எழுதியிருந்தால் இப்பதிவின் நோக்கம் மாறிவிடும். பழைய மட்ச்சுகளை பாருங்கள். தோணி அதிகபட்சமாக டாஸ் வின் பண்ணியிருப்பார்.
தற்போதைய உலககோப்பை விளையாடும் அணிகளில் பலம் மிக்க அணியாக கருதபடுவது இந்திய அணிதான் பலதினோடு அதிர்ஷ்டமும் கைகூடவேண்டும் கோப்பையை வெல்ல
http://usetamil.net
CHAKDE INDIA....
m m வாழ்த்துவோம்