ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும் போது இவன் சென்றிருக்க வேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்.. மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும்
காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".
இவன் அடுத்தபடியாக கேட்டான்,, ஒரு பெரிய எருமைமாடு என்னை துரத்துச்சுப்பா.. வடிவேலு போல ஸ்பீடை
குறைக்காம வந்துகிட்டு இருக்கேன்.. அதுவும் விடாம துரத்துது.. இடையில் ரெண்டு மூணு தடைவை வழுக்கி கீழே கூட விழுந்துட்டேன்.. நல்லவேளை தப்பிச்சேன்..
ஏயப்பா.. கில்லாடிதாண்டா நீ..! நானா இருந்தா அந்த மாட்டைப்
பார்த்ததும் பயத்தில கழிஞ்சிருப்பேன்..!
நானும்தாண்டா.. நான் வழுக்கி விழுந்தது எப்படின்னு நினைச்சே..?
காட்டு ஆமை: நீ கூப்பிட்ட அந்த படத்துக்கு என்னால வர முடியாது?
கிராம ஆமை: ஏன்?
காட்டு ஆமை: அது தான் "நாட்டாமை" ஆச்சே...
"ஏண்டா...பொய் சொன்ன?" "இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு" என மகனை அடி அடியேன அடித்தார் தந்தை.
"இனி மேலும் பொய் சொல்வேன் அப்பா" என்று அழுதுகொண்டே சொன்னான் மகன்.
தந்தை திகைத்து போய், "ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் ஏண்டா இப்படி சொல்ற?" என்றார்.
பையன் சொன்னான், "இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சொன்னால் அது பொய் தானே அப்பா"
காதலி: நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம், இல்லையேல் தற்கொலை தான்..
காதலன்: (மனசுக்குள்) ம்க்ஹும், எனக்கு ரெண்டுமே ஒன்னு தான்.
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவி: அது கொசு இல்லா காலம் சார்!
ஆசிரியர்: அக்கால ஆட்சி முறைக்கும், இக்கால ஆட்சி முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மாணவி: அக்கால ஆட்சிமுறை "கல்வெட்டு" ஆட்சி. இக்கால ஆட்சிமுறை "கட்-அவுட்" ஆட்சி.
ராமு: உன் காதலி உனக்கு மோதிரம் பரிசாக கொடுத்தாளே! என்ன சொல்லி கொடுத்தா?
சோமு: நாலு கை மாறி வந்த ராசியான மோதிரம் என சொல்லி கொடுத்தாள்.
ராமு: டேய்...நான் டி வி இல தெரின்சேண்டா.
சோமு: எப்ப, எத்தன மணிக்கு?
ராமு: நேத்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு...
சோமு: அப்ப தான் கரண்ட் இல்லையேடா..
ராமு: அப்பத்தான் டி.வி. கண்ணாடியில தெரிஞ்சேன்.
ஆசிரியர்: தண்ணியில என்ன இருக்கு? சொல்லு பார்ப்போம்.
மாணவன்: குடிக்கிற தண்ணியிலயா, இல்ல போடற தண்ணியிலயா?
அரசியல்வாதி: மாணவர்களே! நீங்க யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்.
மாணவர்கள்: ஏன்?
அரசியல்வாதி: நாங்கள் யாரவது படிப்பில் ஈடுபடுகிறோமா?
சமையல்காரர்: உங்க வீட்டில் நான் சமைக்கனும்னா ஒரு கண்டிசன்?
வீட்டுக்காரர்: என்ன கண்டிசன் சொல்லு.
சமையல்காரர்: இங்க வீட்டுல என்னை சாப்பிட சொல்லக்கூடாது.
ராமு: ஏண்டா, சோகமா இருக்க?
சோமு: என் பொண்டாட்டி கார் டிரைவரோட ஓடிப் போய்ட்டா.
ராமு: இதுக்கு தான் கவலையா இருக்கியா? வேற கார் டிரைவரை வச்சுக்கற வேண்டியது தானே!
"குடிகாரர்கள் எல்லோரும் தலைவர் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காங்களே? எதுக்கு?"
தலைவர் கிட்ட சரக்கு இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க, அதான்...
28 கருத்துரைகள்:
ஹா..ஹா..ஹ...ஹா..
ஜோக்கெல்லாம் நல்லாவே இருக்கு பிரகாஷ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கும்மாங்குத்து ஹே ஹே ஹே ஹே ஹே....
நல்லா சிரிக்க வைச்சிட்டீங்க :)
நன்றி பிரகாஷ் !
http://karadipommai.blogspot.com/
கடி ஜோக் ஆக இருந்தாலும் நல்ல இருக்கு
எல்லாமே நல்லாதாங்க இருக்கு
எப்படிப்பா.. ஆளாளுக்கு இப்படி கலக்குறீங்க...
GOOD JOKES
ஏன் யாருமே லேடி டிரைவரை வச்சுக்க மாட்டேங்கிறாங்க...
மாப்ள ஜோக்கெல்லாம் நல்லா இருக்குயா.....என்ன இப்படி ஆரம்பிச்சிட்ட ஹிஹி!
@!* வேடந்தாங்கல் - கருன் *! ஹா...ஹா..ஹா...
@cheena (சீனா) வருகைக்கு நன்றி
@MANO நாஞ்சில் மனோ குத்து....குத்து...கும்மாங்குத்து.
@Lali
வருகைக்கு நன்றி லல்லி.
@செங்கோவி
பயபுள்ளைக்கு நெனப்ப பாரு.....ஆசையா பாரு...
@விக்கி உலகம்மாப்ள ஜோக்கெல்லாம் நல்லா இருக்குயா.....என்ன இப்படி ஆரம்பிச்சிட்ட ஹிஹி!
>>>>
எல்லோரும் சிரிக்க தான் மாம்ஸ்
எல்லா ஜோக்குமே சிரிக்கமுடிந்தது.
நல்ல கதை சகோ. பேருந்து என்பதை பேர்ந்து என்று எழுதி அர்த்தத்தை மாற்றிவிட்டீர்கள் ! கவனிக்க... !!!
@இக்பால் செல்வன் மாற்றி விட்டேன் இக்பால்
அருமை
அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை........
kalakkal joks
நல்ல காமடி அண்ணேவெளுத்து வாங்கிட்டிங்க
nice
சந்தைக்கு புதுசு...
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_28.html
\\பையன் சொன்னான், "இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சொன்னால் அது பொய் தானே அப்பா"\\ ரொம்ப புத்திசாலிப் பையானா இருப்பான் போலிருக்கே, இப்படிப் பட்ட பையனை அந்த ஆள் எதுக்கு அடிச்சானோ!!
\\காதலி: நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம், இல்லையேல் தற்கொலை தான்..
காதலன்: (மனசுக்குள்) ம்க்ஹும், எனக்கு ரெண்டுமே ஒன்னு தான்.\\ இது கலயாணத்துக்கு அப்புறம் தானே புரியும்!!
\\தலைவர் கிட்ட சரக்கு இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க, அதான்...\\ அதைத்தான் தலைவர் டாஸ்மாக்கில் விற்கிறாரே! வேணுமின்னா தேர்தல் சமயத்தில் ஊத்துவாறு, தீர்த்தமா நினைச்சு குடிச்சிட்டு ஓட்டை அவருக்கே போட்டுவிடுங்க குடிமகன்களே!!
பேபி சிற்றிங் என்றால், குழந்தைக்கு கீழேயா இருக்கிறது;-)))
ஹா...ஹா...
ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"//
இது செம கடி...ஹி...ஹி..
/////கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?////
அட நம்ம ஊரில் இதை நுளம்பு என்று சொல்லுவோமுங்க செம காமடி...