CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg



மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இவ்விழா உலக புகழ் பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரளாக வருவது உண்டு.  கடந்த 7-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. 14-ந் தேதி மீனாட்சிக்கு பட்டாபிஷேக மும், 15-ந்தேதி திக் விஜயமும், நேற்று முன்தினம் (16-ந்தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   சித்திரை திருவிழாக்களில் முத்திரை பதிக்கும் விழாவாக கருதப்படுவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இதற்கான விழா அழகர் கோவிலில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று மாலை சுவாமி கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் சென்றார்.
பின்னர் 16-ந்தேதியன்று அதிர்வேட்டு முழங்க, மேளதாளத்துடன் அழகர், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அன்று மாலை திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொண்டப்பநாயக்கன் மண்டபம், பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி ஆகிய மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.   நேற்று அதிகாலை 2 மணி அளவில் மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடச்சனேந்தல் வந்தார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு மூன்று மாவடிக்கு (எங்கள் பகுதிக்கு - லிங்க் பார்க்க) காலை 6.30 மணிக்கு வந்தார். அங்கு கள்ளழகருக்கு எதிர் சேவை நடந்தது.

அங்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு அவரை வரவேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், மாரியம்மன் கோவில், ஆயுதப்படை குடியிருப்பு, மாரியம்மன் கோவில், அம்பலக்கார மண்டபம் வந்தடைந்தார்.  அதன்பிறகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனது.
பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.   பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கருப்பணசாமி திருக்கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி, ரூ.1 1/2 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். காலை சரியாக 6.46 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடி நின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தீபாராதனை காட்டி கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டனர்.
பின்னர் அங்கிருந்து ராம ராயர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அங்கபிரதட்சண நிகழ்ச்சி நடந்த பின் இரவு 1 மணிக்கு வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.   நாளை (19-ந்தேதி) காலை 5 மணிக்கு வண்டியூரில் இருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படுகிறார். காலை 10 மணிக்கு மண்டூக முனி வருக்கு சாபம் தீர்த்து காட்சி யளிக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அனுமார் கோவிலுக்கு வருகிறார். 3 மணிக்கு அங்கப் பிரதட்சணம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் ராமராய மண்டபத்திற்கு கள்ளழகர் வருகிறார். அங்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
20-ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். மறுநாள் 21-ந் தேதி பூப்பல்லக்கில் புறப்பட்டு மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்று மாவடி மறவர் மண்டபத்தில் எழுந் தருளுகிறார். 22-ந்தேதி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர்கோவிலுக்கு சென்றடைகிறார். 23-ந்தேதி சுவாமிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கள்ளழகர் வைகையில் இறங்கும் காட்சி: நன்றி: media tv


27 கருத்துரைகள்:

செங்கோவி said... Best Blogger Tips

இன்றும் பிரசாதம் எனக்கே!

செங்கோவி said... Best Blogger Tips

//அண்ணே! இவ்வளவு நேரம் இந்தப் பதிவை படிச்சிட்டு ஏதோ ஒரு காரணத்துக்காக கருத்து சொல்ல வந்த நீங்க அப்படியே மேலுள்ள ஓட்டு பட்டைகளை கிளிக் செய்ய ரொம்ப நேரம் ஆகாதுங்க.// இது உங்களுக்கும் பொருந்தும்..ஓட்டுப் போடுங்க..முத ஓட்டு என்னுது!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி

இன்றும் பிரசாதம் எனக்கே

எடுத்துக்கங்க...அழகர் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு

ரேவா said... Best Blogger Tips

இன்னைக்கு வைகை ஆத்துல தண்ணி கூட நெறய இருந்ததுல நண்பா... நானும் மீடியா டிவி ல தான் பாத்தேன்

Prabashkaran Welcomes said... Best Blogger Tips

இம் அழகர் தரிசனம் கோடி நன்மை வாழ்த்துக்கள்

Ram said... Best Blogger Tips

மக்கா அதெப்படி டைம புட்டு புட்டு வக்கிறீங்க..
ஒரு வேலை அறநிலைத்துறையில வேலையா.?? இல்ல ரொம்ப தெய்வ பக்தியோ?? ஹி ஹி.. இல்ல கேப்டன் ரசிகனா.?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நான் போட்ட கமெண்ட்ஸ்'சை காணோமே.....???

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

போட்டோல்லாம் அழகா இருக்கு மக்கா....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ரேவா
///இன்னைக்கு வைகை ஆத்துல தண்ணி கூட நெறய இருந்ததுல நண்பா... நானும் மீடியா டிவி ல தான் பாத்தேன்//

அமாம் ரேவா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Prabashkaran Welcomes
///இம் அழகர் தரிசனம் கோடி நன்மை வாழ்த்துக்கள்///

ஆமாம் நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்
////மக்கா அதெப்படி டைம புட்டு புட்டு வக்கிறீங்க..
ஒரு வேலை அறநிலைத்துறையில வேலையா.?? இல்ல ரொம்ப தெய்வ பக்தியோ?? ஹி ஹி.. இல்ல கேப்டன் ரசிகனா.?///

ஹி..ஹி...மதுரைக்காரன்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
///நான் போட்ட கமெண்ட்ஸ்'சை காணோமே.....???///

ஹா...ஹா...இப்படி கூட கமெண்ட்ஸ் போடலாமா?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
///போட்டோல்லாம் அழகா இருக்கு மக்கா....///
தாங்க்ஸ் மனோ

Unknown said... Best Blogger Tips

பக்தி பரவசம்..

Unknown said... Best Blogger Tips

மதுரைக்கான வீடியோ பகிர்வுக்கு மிக்க நன்றிகள் தமிழ்வாசி...

Unknown said... Best Blogger Tips

ஓட்டுப்பட்டைகள் ஏதும் காணவில்லையே?

சாகம்பரி said... Best Blogger Tips

ஆற்றில் இறங்கியபின் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறும், அழகராக வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சுவார்கள் அது ஆண்களுக்கான உற்சாகமான நேரம். . நேரப்படி அட்டவணை தந்தற்கு நன்றி. கண்ணுக்கு சிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் அழகரை பிடிக்க இந்த பதிவு உதவி செய்யும்.

Unknown said... Best Blogger Tips

ரைட்டு

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

வீடியோ பகிர்வுக்கு மிக்க நன்றிகள் நண்பா..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

அசத்தல் பதிவு.

Pavi said... Best Blogger Tips

காட்சிகள் அருமை . நேரே சென்று பார்த்த அனுபவமாக இருந்தது

ஆனந்தி.. said... Best Blogger Tips

ஓ..பிரகாஷ் நீங்க மூன்று மாவடியா...நாங்கள் கோச்சடை பக்கம்...இந்த பக்கம் சாமி வராது...;((((

Unknown said... Best Blogger Tips

இணைக்கு நடக்குற தசாவதார நிகழ்ச்சியையும் எடுத்து போட்டுடுங்க

நிரூபன் said... Best Blogger Tips

ஒரு நேரடி வர்ணனையினை கேட்பது போன்ற உணர்வினை உங்கள் பதிவு தருகிறது. விழா அறிமுகத்தையே வர்ணனை போல அழகாக தொகுத்துள்ளீர்கள். நன்றிகள் சகோ.

maruthu said... Best Blogger Tips

சின்னாலபட்டியரே ! மிக்க நன்றி !. அழகர் தரிசனம் !

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

நல்லாவே இருக்கு வர்ணனையும் காணொளியும் - வாழ்க வளமுடன் - மதுரக்கார பதிவர்கள் எண்ணிக்கை ஒண்ணு கூடிடிச்சா - நட்புடன் சீனா

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

நல்லாவே இருக்கு வர்ணனையும் காணொளியும் - வாழ்க வளமுடன் - மதுரக்கார பதிவர்கள் எண்ணிக்கை ஒண்ணு கூடிடிச்சா - நட்புடன் சீனா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1