CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு! பாகம் - 2

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
முதல் பாகத்தில்...
அப்ப  ஒரு  நாள்  மேகமா இருந்த அவனை நாசமாக்க ஒரு பெரும் சக்தி வந்தது? அது என்னான்னா....... 
தொடர்ச்சி...
      மேகமா இருந்த சிற்பியை கலைக்க ஒரு பெரும் சக்தி வந்துச்சு, அது என்னான்னா சூறாவளி காத்து தான். மேக கூட்டமா இருந்த சிற்பியை அந்த காத்து சின்னா பின்னாமாக சிதறி கலைத்தது. அப்ப அவன் நெனச்சான், சூரியன் பெரிசுன்னு மாறினோம், அப்புறமா மேகம் தான் பெரிசுன்னு மாறினோம். 
    இப்ப மேகத்தையே கலக்கற இந்த சூறைக் காத்து தான் பெரிசு போல, அப்படின்னு அவன் நெனச்சு மறுபடியும் கடவுளிடம் வேண்டி கடுமையாக தவம் இருக்க ஆரம்பிச்சான். கடவுளும் சிற்பியின் தவத்தில் மயங்கி சிற்பியே உன் தவத்தில் மெச்சினேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் சிற்பியே, என கேட்டார். கடவுளே, மேகம் தான் பெரிசுனு மாறினேன், இப்ப அத விட சூறைக் காத்து தான் பெரிசுன்னு தெரியுது அதனால என்னை சூறைக் காத்தா மாத்திடுங்க என வரம் கேட்டான். கடவுளும் சிற்பியை சூறைக் காத்தா மாத்தினார். அவனும் கேட்ட வரம் கிடைத்த மகிழ்ச்சியில் வலம் வர ஆரம்பிச்சான். 
     அப்ப அவனை ஓர் பெரும் மலை தடுத்தது. அவனால் அந்த மலையை தாண்டி போக முடியாமல் தவித்தான். ஐயோ என்னால் இந்த மலையை தாண்டி போக முடியலையே, அப்போ இந்த காத்தை விட மலை தான் பெரிசு போல அப்படின்னு யோச்க்க ஆரம்பிச்சான். அவனுக்கு காத்தா இருக்க மனசில்லை. பெரிய மலையா மாறணும்னு ஆசை வந்திருச்சு. அவன் கேட்டதை தர கடவள் இருக்காரே... மறுபடியும் கடவுளை வேண்டி கடுமையா தவம் இருக்க ஆரம்பிச்சான். கடவுளும் மனமிரங்கி சிற்பியே உனக்கு என்ன வரம் வேணும் கேள் என கேட்டார். கடவுளே காத்தை விட மலை தான் பெரிசு போல, அதனால என்னை மலையா மாத்திடுங்க என வரம் கேட்டான். கடவுளும் அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். மலையா மாறின சிற்பி பாய்ந்து போகும் நீரோடைகளையும், சந்தோசமா திரியும் விலங்குகளையும் கண்டு ஆனந்த பட்டான். 
     இப்படி சந்தோசமா இருந்த அவனுக்கு ஒரு நாள் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் நடந்திச்சு. லாரி லாரியா ஆளுங்க வந்தாங்க. பெரிய பெரிய மெசின்கள் வந்து இறங்குச்சு. அந்த மலையை குடைஞ்சு பாறைகளை வெட்டி எடுக்க ஆரம்பிச்சாங்க. சிற்பிக்கு மலையா இருந்த நாம தான் பெரிசுன்னு நெனச்சா மலையை வெட்டி எடுக்கற மனுசங்க தான் பெரிசுன்னு நெனச்சான். அப்ப தான் அவன் யோசிச்சான். மனுசனா இருந்த அவன் சூரியனா, மேகமா, காத்தா, மலையா இருக்றதெல்லாம் பெரிசு இல்லை. மனுசனா இருக்கிறது தான் பெரிசுன்னு நெனச்சான். சிற்பி மறுபடியும் தவம் இருக்க ஆரம்பிச்சான். கடவுளும் அவனிடம் வந்தார்.   கடவுளே, நான் பேராசை பட்டு பல நிலைகளில் மாறினேன். 
   ஆனா மனுசனா இருக்கிறது தான் பெரிசுன்னு இப்ப உணர்றேன். அதனால என்னை மனுசனா திரும்ப மாத்திடுங்க என கடவுளை கெஞ்சி வரம் கேட்டான். கடவுளும் அவன் தவத்தில் மனமிரங்கி அவனை திரும்ப மனுசனா மாத்திட்டார். சிற்பியே, நாம் செய்யும் வேலையும் நல்ல மனுசனா இருக்றதும் தான் பெரிசு, புரிஞ்சக்க.. அதிகமா ஆசைப்படாதே, அப்படின்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டார். சிற்பியும் மனுசனா மாறி மக்கள் விரும்புற சிலைகளை செதுக்க ஆரம்பிச்சான். சந்தோசமா வாழ்ந்தான்.
நீதி: செய்யும் தொழிலே தெய்வம். அதிக ஆசை ஆபத்து.
முற்றும்


19 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

thank you!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா பாட்டி கதை சூப்பப்................

கடம்பவன குயில் said... Best Blogger Tips

//நீதி: செய்யும் தொழிலே தெய்வம். அதிக ஆசை ஆபத்து//

நவீன புத்தர். போதனை நல்லா இருந்துச்சுங்க. ஆனால் பிரிக்க முடியாதது-மனிதமனமும் ஆசையும்.

கடம்பவன குயில் said... Best Blogger Tips

//நீதி: செய்யும் தொழிலே தெய்வம். அதிக ஆசை ஆபத்து//

நவீன புத்தர். போதனை நல்லா இருந்துச்சுங்க. ஆனால் பிரிக்க முடியாதது-மனிதமனமும் ஆசையும்.

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

கதையுடன் கூறிய நீதி அருமை. பாராட்டுக்கள்.

சசிகுமார் said... Best Blogger Tips

//நீதி: செய்யும் தொழிலே தெய்வம். அதிக ஆசை ஆபத்து.///

இந்த ஒரு வரியா சொல்றதுக்கு எண்கள ரெண்டு நாளா சுத்த விட்டுட்டியே ஹி ஹி மாப்ள கதை சூப்பர்.

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

இன்னைக்கும் பாட்டி கதையா?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

நல்ல சொல்லரீங்கடா நீதி..

நிரூபன் said... Best Blogger Tips

தினந் தோறும் கண் விழித்திருந்து, ப்ளாக்கில் கமெண்ட்டு போடும் பிரகாஷை தூங்க வைக்கப் பாட்டி சொன்ன கதையின் இரண்டாம் பாகமா..

இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said... Best Blogger Tips

தினந் தோறும் கண் விழித்திருந்து, ப்ளாக்கில் கமெண்ட்டு போடும் பிரகாஷை தூங்க வைக்கப் பாட்டி சொன்ன கதையின் இரண்டாம் பாகமா..

இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said... Best Blogger Tips

வாழ்க்கையில் எவற்றையும் அளவோடு தான் ஆசைப்படனும் என்பதை கதையில் வரும் சிற்பி எனும் கதா பாத்திரம் மூலம் நீதியாகப் பாட்டி சொல்லியிருக்கிறார்...

பிரகாஷ் அதனை எழுதி வலையேற்றியிருக்கிறார்.

ஆனால் பந்தி பிரித்து எழுதினால் இன்னும் கலக்கலாக அமைந்திருக்கும்.

சாகம்பரி said... Best Blogger Tips

அதென்ன எல்லா பாட்டிக்களுமே கடவுளை ரேசன் கடைக்காரர்போல் இல்லாமல் டிபர்மெண்ட் ஸ்டோர்காரர் மாதிரி வேண்டியதெல்லாம் தருவதாக சொல்கிறார்கள். Good story

செங்கோவி said... Best Blogger Tips

//நல்ல மனுசனா இருக்றதும் தான் பெரிசு, புரிஞ்சக்க.. அதிகமா ஆசைப்படாதே//பாஸ், என் அறிவுக்கண்ணைத் திறந்துட்டீங்க..மிக்க நன்றி.

M.R said... Best Blogger Tips

இக்கரைக்கு அக்கறை பச்சை ,அக்கறைக்கு இக்கறை பச்சை .

நமக்குன்னு உள்ள தொழிலை சிறப்பா செய்தாலே மேன்மை அடையலாம்

பதிவு அருமை நண்பரே


thulithuliyaai.blogspot.com

vidivelli said... Best Blogger Tips

pathivukku vaalththukkal.....
mudichchiddiyal kathaiyai....
nanri

cheena (சீனா) said... Best Blogger Tips

செய்யும் தொழிலே தெய்வம் - இது தான் நீதி - உண்மையும் கூட . பாட்டி வாழ்க ! நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா

ஷர்புதீன் said... Best Blogger Tips

பாட்டி கதையா? :-) aluthuduven!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>>முற்றும்


அப்பாடா ஹி ஹி

Anonymous said... Best Blogger Tips

நல்ல நீதி பாஸ் ..

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1