CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
கிரிக்கெட் உலகில் இன்றைய சர்ச்சையில் சிக்கி நிற்கும் விஷயம் நடுவர் முடிவு மேல் முறையீட்டு நடைமுறை (யுடிஆர்எஸ்) ஆகும். இதுகுறித்து தற்போது ஒரு சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது.


    தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் விவாதிக்கப்படவிருந்த இரண்டு பிரச்சனைகளில் ஒன்றில் சமரசத் தீர்வு கிடைத்துள்ளது. மற்றொன்று சுழற்சி முறையில் ஐசிசி தலைவரை நியமிப்பது ஆகும். யுடிஆர்எஸ் முறை அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இனிமேல் அமலில் இருக்கும். ஆனால், அதில் ஒருநிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. 
   இம் முறையில் இரண்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஹாட் ஸ்பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண்டு நுட்பங்களில் ஹாட் ஸ்பாட் மட்டும் பயன்படுத்தப்படும். ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தில் கறுப்பு வெள்ளை படத்தில் பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதைக் காண முடியும். இதற்கு தெர்மல் இமே ஜிங் என்று பெயர். இதில் ஒலி தொழில்நுட்பமும் உண்டு. பந்து மட்டையில் பட்டவுடன் ஏற்படும் ஒலியைக் கூறும் சவுண்ட் தொழில் நுட்பமும் பொருத்தப்படும். பந்தை சரியான முறையில் பிடித்தனரா? பந்து மட்டையில் அல்லது கையுறையில் பட்டுச் சென்றதா? என்பதை இம்முறைகளில் கண்டறியலாம். ஹாக்ஸ் ஐ மற்றொரு தொழில் நுட்பமாகும். இது தற்போதைக்கு நடைமுறைக்கு வராது. பந்தின் போக்கை அதனுடைய சுழற்சி, வேகம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்க இது பயன்படும். வீசப்பட்டு அடிக்கத் தவறிய பந்து ஆடுபவரின் காலால் அல்லது உடலின் அங்கமொன்றால் தடுக்கப்படாவிட்டால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்கும் என்ப தைத் தீர்மானிக்க இது உதவும். ஆனால், இது தற்போதைக்கு பயன்படுத்தப்படமாட்டாது. எனவே, எல்பிடபிள்யு (டயே) பற்றி தீர்மானிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது. மனிதனின் கண்ணும் மூளையும் மட்டும் இதைத் தீர்மானிக்கும். 
         அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ஸ் பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண் டும் நடைமுறையில் இருந்தது. இவ்விரண்டையும் உள்ளடக்கிய யுடிஆர்எஸ் முறையை இந்தியா ஆடும் போட்டிகளில் பயன் படுத்த மறுத்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக் கெட் வாரியம் மிகப்பெரும் நிதியை வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தொழில்நுட்பத்தை மறுத்ததால் பெரும் சர்ச்சை உருவானது. ஐசிசி மாநாட்டில் இந்தியாவை தனிமைப்படுத்தி, தேவைப்பட்டால் தோற்கடித்தாவது யுடிஆர்எஸ் முறையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் பாய்காட் வேண்டுகோள் விடுத்தார். 
    இம்முறை நூறு விழுக்காடு கூர்மையானதும் முழுமையானதும் அல்ல என்று இந்திய கிரிக் கெட் வாரியம் கூறிவந்தது. ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் இருந் தால் யுடிஆர்எஸ் முறையை ஏற் றுக் கொள்ளலாம் என்று டெண்டுல்கர் கூறினார். தோனியும் யுடி ஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மற்ற டெஸ்ட் நாடுகள் இம்முறைக்கு ஆதரவு தந்ததால் இந்தியா தனது எதிர்ப்பை ஹாக்ஸ் ஐ வேண்டியதில்லை என்ற நிபந்தனையுடன் விலக்கிக் கொண்டது. ஐசிசி உறுப்பு நாடுகளில் நிதி வல்லரசை பகைத்துக் கொள்ள விரும்பாத ஐசிசி இதை ஏற்றுக் கொண்டது.

    ஹாட்ஸ்பாட், ஸ்னிக்கோ மீட்டர் ஆகிய இரண்டையும் பயன்படுத்த நாளொன்றுக்கு 57 ஆயி ரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவின் தயக்கத்துக்கு இது காரணமாக இருக்க முடி யாது. மிகவும் நெருக்கடியில் இருக் கும் இலங்கை கூட யுடிஆர்எஸ் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு கேள்வி நியாயமானது. இம்முறையின் செயல்பாட்டால் தவறான முடிவு கள் இருக்காது என்பது உறுதி யென்றால், மேல்முறையீட்டுக்கு வரம்பு தேவையா? என்ற கேள்வியை இந்தியா எழுப்புகிறது. 
      கடந்த டிசம்பரில் இந்திய வாரியப் பொருளாளர் என்.சீனிவாசனும், இந்திய கிரிக்கெட் வாரிய நடுவர் துணைக்குழு இயக்குநரும், ஐசிசியின் எலைட் நடுவர் குழு நடுவராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராகவனும் ஆஸ்திரேலியா சென்றனர். ஆஷஸ் தொடரில் பயன்பட்ட யுடிஆர்எஸ் முறையை நேரில் கண்டறிந்தனர். யுடிஆர்எஸ் நடை முறையை இருவரும் நம்ப மறுத்தனர். ஐசிசி அளித்த தகவல் குறிப்புகளும் இருவரையும் நம்ப வைக்கவில்லை. எனவே, இந்தியா யுடிஆர்எஸ் முறையை தொடர்ந்து எதிர்த்தது. 
    உலகக் கோப்பையில் கிடைத்த அனுபவம் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களையும், வாரியத்தையும் இந்நிலைபாட்டில் மீண்டும் உறுதியுடன் நிற்கவைத்தன. இந்தியாவும், இங்கிலாந்தும் மோதிய போட்டியில் இயான் பெல் எல்பி டபிள்யு முறையீட்டில் தப்பினார். ஆடுகளத்தில் 2.5 மீ. தொலைவுக்கு பெல் முன்னேறிச் சென்றதால் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று யுடி ஆர்எஸ் முறையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தோனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
    2008ல் இலங்கை தொடரில் யுடிஆர்எஸ் பயன்பட்டது. டெண்டுல்கர் நிருபர்களிடம் எதிர்ப்பைக் கூறினார். வீரர்களும், மற்றவர்களும் இம்முறையில் உள்ள குறைகளை வாரியத்திடம் கூறினர். அதற்குப்பின் இந்திய நிலைபாடு குறித்து உள் விவாதங்கள் நடைபெறவில்லை. இந்திய நிலைபாடு மாறவும் இல்லை. 
     மேற்கிந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக மூன்று தீர்ப்புகள் அமைந்தன. மூன்றும் நடுவர் ஹார்ப்பர் அளித்த தீர்ப்புகள் ஆகும். இந்தியா யுடிஆர்எஸ் முறையை ஏற்றிருந்தால் இம்மூன்றும் இந்தி யாவுக்கு பெரிதும் உதவியிருக்கும். சில தீர்ப்புகள் மேற்கிந்தியாவுக்கு சாதகமாக அமைந்தன. யுடிஆர்எஸ் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதனுடைய செயல் பாட்டுக்கும் சில வரையறைகள் உண்டு. ஆனாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்க முடியாது. யுடிஆர்எஸ் முடிவுகள் 95 விழுக்காடு நிறைவாக இருக்கும். மனித நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதால் தவறின் அளவுமிகக் குறைவாகவே இருக்கும். இது நடை முறைக்கு வந்தால் நடுவர் திறமையற்றவர் அல்லது ஒருசார் புடையவர் என்று கூற முடியாது. 
    தற்போதாவது இந்தியா யுடி ஆர்எஸ் முறையை சில சமரசத்துக்குட்பட்டு ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி: தீக்கதிர்


15 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

yoov.. யோவ் பிரகாஷ்.. பிளாக் பேக் ட்ராப்பில் மல்லிகைப்பூ எதுக்குய்யா? ராஸ்கல்ல்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பயபுள்ள கொஞ்ச நாளா சீரியஸ் பதிவா போடுதே.. திருந்திடுச்சோ?

J.P Josephine Baba said... Best Blogger Tips

நல்ல பதிவு தமிழ் வாசி வாழ்த்துக்கள். சிபி போன்றவர்களுக்கு மல்லிகை பூ பார்த்தால் வாசிக்க இயலாது அதனால் பூ படத்தை மாற்றி ஏதும் அரிவாள் கத்தி படம் போடுங்க!பய-பக்தியுடன் வாசித்து கருத்து பகிர்ந்து போவார்கள்!

கூடல் பாலா said... Best Blogger Tips

முன்னாடி கிரிக்கெட் அம்பையரா இருந்தீங்களா ?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

oh.. idhula ivvalavu vishayam irukkaa?

செங்கோவி said... Best Blogger Tips

கிரிக்கெட்டா..அய்யய்யோ நமக்கு ஒன்னும் புரியாதே..மல்லிப்பூ நல்லா இருக்கு பாஸ்..ம்..ம்.

சசிகுமார் said... Best Blogger Tips

தொழில் நுட்பம் அவசியமான ஒன்று தான் இதன் மூலம் சில தவறான முடிவுகளை தவிர்க்கலாம்.

rajamelaiyur said... Best Blogger Tips

Very detailed post. . .thanks

Unknown said... Best Blogger Tips

மல்லி மல்லி குண்டு மல்லி கிரிகெட்ட அசத்துதுங்க!

சாகம்பரி said... Best Blogger Tips

UTRS முறை Hawk-eyeயை பயன்படுத்துகிறது. போர் முனையில் எதிரியின் ஏவுகணை செல்லும் திசையையும் வேகத்தையும் இரண்டு வேறுபட்ட கோணத்தில் வைக்கப்பட்ட கேமேராக்கள் மூலம் கவனித்து அது தாக்கும் இடத்தை கணித்து பாதி வழியிலேயே அதனை சந்தித்து எதிர்த்து அழிக்கும் பாட்ரியாட் ஏவுகணையின் தொழில் நுட்பம் இது. பந்து செல்லும் திசை, வேகம் கொண்டு, முழுக்க கணக்கிடுகளால் செய்யப்படும் முறை. இப்படித்தான் நடந்திருக்கும் என்று guess செய்வதை எப்படி முடிவாக சொல்லமுடியும்? இதுதான் சரியென்றால் அம்பயர்கள் திறமையில்லாதவர்களா? என்ற தோனியின் கேள்வி சரியானதே.

சாகம்பரி said... Best Blogger Tips

Hawk-eye என்பது பருந்தின் செயல்பாட்டில் இருந்து கண்டுபிடித்த டெக்னிக் ஆகும். வானில் வட்டமடிக்கும் போது தரையிலிருக்கும் இரை செல்லும் திசை, அது நகரும் வேகம் ஆகியவற்றை வெவ்வேறு கோணங்களில் கணித்து , சரியான இடத்தில் அதனை மீட் செய்து தூக்கிவிடும். சில சமயம் தப்பிய இரைகளும் உண்டு.

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

கிரிக்கெட் பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said... Best Blogger Tips

ஆனாலும் இந்திய சபை தன் மூக்கை இந்த விசயத்தில் உடைத்து விட்டது தானே

Anonymous said... Best Blogger Tips

என்னை பொறுத்த வரை இந்த முறை நல்லது தான்

cheena (சீனா) said... Best Blogger Tips

எப்படிய்ய்யா இவ்வளவு தகவல் தேடிப்பிடிச்சுப் பதிவு போடறே ! உழைப்பின் அருமை முடிவில் தான் தெரியும் - இல்லையா -அரிய தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1