இந்த தொடர் பதிவை எழுத கோர்த்து விட்ட "கவிதை வீதி" சௌந்தர், "மாய உலகம்" ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.
1) நான் விரும்பும் மூன்று விஷயங்கள்...?
அப்பா, அம்மாவோட பாசம்...
மனைவியோட அன்பும், அனுசரணையும்...
நான் பார்க்கிற வேலை...
2) நான் விரும்பாத மூன்று விஷயங்கள்?
நைட் ஷிப்ட் வேலை பிடிக்காதுங்க, ஆனாலும் தவிர்க்க முடியாதது.
மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் அடக்குமுறை (தீவிரவாதம்)
தேவைக்கு அதிகமாக பேசுபவர்களை (பந்தா பார்ட்டிகள்)
3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்?
அய்யோ நேரமாச்சே... சரியான நேரத்துக்கு சென்று விடுவோமா?
உலகில் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ?
வேலையில் கமிட்மன்ட் கொடுத்திட்டு முடிக்காமல் இருக்கும் போது...
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
இந்த தொடர் பதிவு ஏன் எழுதணும்?
இலக்கியமா ஓடு...ஓடு....
என்ன வாழ்க்கையடா இது... இப்படி சொல்லி ஏன் வெறுக்கணும்?
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
கம்ப்யுட்டர் மானிடர்,
நேரம், டெம்பரேச்சர் காட்டுகிற கடிகாரம்
ஆபீசில், என் ப்ளாகிற்கு(blog) பதிவு எழுதிய பேப்பர்கள்.
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
எல்லோரும் தான் சொல்றாங்களே... வேறென்ன ஜோக்ஸ் பிட்டுகள்
அரசியல்வாதியான கேப்டன் படத்தில் நடித்தால் காமெடி தான்.
குழந்தைகளின் சேட்டை.
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
வேறென்ன செய்றேன்... இந்த பதிவுக்காக டைப் பண்ணிட்டு இருக்கேன்.
கூகுளில சாட்டிங் போயிட்டு இருக்கு
நண்பர்கள் பதிவுக்கு கமென்ட்டுகிறேன்.
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அட நம்ம பிரகாஷ் இவ்ளோ செய்திருக்கானா? மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
ஒரு முறையேனும் குடும்பத்தோட வெளிநாடு போகணும்.
எலோருக்கும் இருக்கற ஆசை தான்... நிறைய பணம் சேர்க்கணும்.
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
கண்டிப்பா இந்த பதிவை எழுதி முடிச்சிருவேன். டோன்ட் வொர்ரி
ஓரளவு வசதியா இருக்கணும். கண்டிப்பா முடியும் .
எந்த வேலை செஞ்சாலும் கரெக்டா செய்யணும். கண்டிப்பா முடியும்.
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
வேறென்ன கெட்ட செய்திகள் தான்...
ஏன், எதுக்கு, எப்படி? கேட்கலாம். ஆனா அடிக்கடி கேட்கக்கூடாது.
உங்க சம்பளம் எவ்வளவு?
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
என் வேலைக்கு சம்பந்தமான CNC ப்ரோகிராம்ஸ்.
கம்ப்யுட்டர் ஹார்டுவேர்
எப்படித்தான் இவ்ளோ கருத்தோட பதிவு எழுதராங்களோ?
12) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?
ரஜினியின் "பாட்ஷா"
நம்பியாரின் "நெஞ்சம் மறப்பதில்லை"
அஜித்தின் "தீனா"
13) நான் விரும்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
உன்னைப் பார்த்த பின்பு தான்.... (காதல் மன்னன்)
என்னைத் தாலாட்ட வருவாளா.... (காதலுக்கு மரியாதை)
வசீகரா... என் நெஞ்சினில்... (மின்னலே)
14) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?
பணியாரம்
பிரியாணி வகைகள்
ஆப்பம் தேங்காய்பால்
15) இப்பதிவை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?
லீலைகளுக்கு நடுவில் இதற்காக நேரம் கிடைக்குமா? "செங்கோவி"
எழுதுவார் என்ற நம்பிக்கையில், விக்கியுலகம் "விக்கி"
தொழில்நுட்பங்களுக்கு லீவ் கொடுங்க, வந்தேமாதரம் "சசி"
40 கருத்துரைகள்:
எனக்கு 3 நம்பரே பிடிக்காது... எப்படில்லாம் எஸ்கேப் ஆகவேண்டியிருக்கு ஹீ ஹீ
நெறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க மாப்ள...என்னைய வேற டைப்ப சொல்லி இருக்கீங்க போட்ருவோம் ஹிஹி!
முத்தான மூன்றுகள் பகிர்வுக்கு நன்றி பாஸ் ...
சசி எஸ் ஆக விடப்படாது..
நான் எழுதுனதை விட நல்லா இருக்கு பிரகாஷ் வாழ்த்துக்கள்
//சசிகுமார் said...
எனக்கு 3 நம்பரே பிடிக்காது... எப்படில்லாம் எஸ்கேப் ஆகவேண்டியிருக்கு ஹீ ஹீ //
வேணுமின்னா உங்க ராசி நம்பர் படி எழுதுங்க பாஸு ஆனா ஒரு கண்டிஷன் 3 க்கு கீழே இருக்ககூடாது..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
மனந்திறந்த யதார்த்தமான பதில்க்ள்
ரசித்துப்படித்தேன்
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்
@சசிகுமார்
எனக்கு 3 நம்பரே பிடிக்காது... எப்படில்லாம் எஸ்கேப் ஆகவேண்டியிருக்கு ஹீ ஹீ>>>>
ஏன் பிடிக்காதுன்னு எழுதுங்க...
@விக்கியுலகம்
டைப் பன்னிருங்க விக்கி.
@கந்தசாமி.
ஓகே கந்தசாமி
@சி.பி.செந்தில்குமார்
சசி எஸ் ஆக விடப்படாது..>>>
நாம விட்ருவோமா?
@ஜ.ரா.ரமேஷ் பாபு
அப்படியா... நன்றி பாஸ்
அருமை.
நல்ல அருமையான பதிவு.
நியாயமான ஆசைகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அருமையான கருத்துக்கள் நண்பரே .
நன்றி பகிர்வுக்கு
முக்காம முக்கிய விசயங்களை போட்டுட்டீங்களே.... இந்த பதிவுல உங்ககிட்ட புடிச்சதே.. கேட்க விரும்பாத மூன்று விசயங்கள் தான்......
//10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
வேறென்ன கெட்ட செய்திகள் தான்...
ஏன், எதுக்கு, எப்படி? கேட்கலாம். ஆனா அடிக்கடி கேட்கக்கூடாது.
உங்க சம்பளம் எவ்வளவு? //
ஒரு பேடு நியூஸ்- கலக்குரீங்க...
ஆமா பாஸூ ஏன் இப்படி கேசுவலா இருக்கீங்க..எப்படி உங்களால மட்டும் இப்படி கேசுவலா இருக்க முடியுது ...எதுக்காக இப்படியெல்லாம்..
ஆமா வேல வேலங்குறீங்களே உங்க சம்பளம் எவ்வளவு?
// நான் பயப்படும் மூன்று விஷயங்கள்?
உலகில் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ?//
மனோவும் சிபியும் நண்பர்கள் ஆனாலும் ஆகலாம்.
//2) நான் விரும்பாத மூன்று விஷயங்கள்?
நைட் ஷிப்ட் வேலை பிடிக்காதுங்க, ஆனாலும் தவிர்க்க முடியாதது.// அப்டியா?..அப்டியா?...அப்டியாஆஆஆஅ?
//15) இப்பதிவை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?
லீலைகளுக்கு நடுவில் இதற்காக நேரம் கிடைக்குமா? "செங்கோவி"//
யோவ், என்னை ஏன்யா கோர்த்து விட்டீங்க? ஐ ஆம் பிஸி..லீலை எழுதவே டைம் இல்லாம அலையுறேன்..
பதிவர் கொட்டைப்புளியை விட்டா வேற ஆளில்லாம இருந்த எனக்கு உங்க அழைப்பு ஆறுதலைக் கொடுக்குது பாஸ்.
வணக்கம் மச்சி, வித்தியாசமான முறையில் மூன்று விடயங்களை வெவ்வேறு ரசனையின் வடிவமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
பிரகாஷ்....
உண்மையில் யதார்த்தமாகவும் அழகாகவும் பதில் சொல்லியிருக்கிறீர்கள்...
தங்களின் மனசு மற்றும் சுபாவத்தை அறிய இந்த தகவல்களே போதும்ன்னு தோனுது...
வாழ்த்துக்கள்...
////////
சசிகுமார் said...
எனக்கு 3 நம்பரே பிடிக்காது... எப்படில்லாம் எஸ்கேப் ஆகவேண்டியிருக்கு ஹீ ஹீ//////
அப்ப அடுத்தது சசிதான்...
நன்று !
பகிர்வுக்கு நன்றி பாஸ் ...
ok.ok.ok.
முத்தான 3 க்கள் அனைத்தும் அருமை. ஆமாம் மதுரை மல்லியின் வாசனையை ஏன் பிடித்ததில் விட்டுட்டீங்க?.
உங்க மூன்று விசயம் எல்லாம் நல்லா இருக்குது.......
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
உங்க 14 வது கேளிவி பதிலுக்காக இந்தப் பரிசு பிரகாஸ்...
http://www.youtube.com/watch?v=-I8hDd7W1gA&feature=player_embedded#at=78
நண்பரே ஒரு கடமையை முடிச்சிடீங்க..
முத்தான மூன்றுகள்...
ராத்ரி ஷிஃப்ட் பிடிக்காதா - பலே பலே - அப்படித்தான் இருக்கணும் - தங்ஸ் இன்ஸ்ட்ரக்ஷனா
வியட்னாம்'காரன் வசமா மாட்னான் ராஸ்கல்.....
மணி மணியா மூன்று......!!!
//அட நம்ம பிரகாஷ் இவ்ளோ செய்திருக்கானா? மற்றவர்கள் சொல்ல வேண்டும்.//கண்டிப்பா சொல்ல்வாங்க பிரகாஷ்..
மாப்பிள நீங்க ரசித்த படங்கள பார்த்தா.. உங்கள அப்பா கஸ்டப்பட்டு படிக்க வைச்சார்.. நீங்க அவருடைய எதிர்பார்ப்ப நிறைவேற்றவில்லைன்னு காட்டானுக்கு படுகிறது நீங்க ஆமான்னா.. நான் பாரீசில உள்ள வினாயகர் கோவிலுக்கு முன்ன இருந்து.. ஜோசியம் சொல்லலாம்ன்னு இருக்கிறேன்.. பதில் வேனும் மாப்பு பதில்..
காட்டான் குழ போட்டான்..
அழகான மூன்று விடைகள்
பணியாரம்
பிரியாணி வகைகள்
ஆப்பம் தேங்காய்பால்// ithu than touch :D
super prakashunga karpanai unga sitela parakkura kuruvi pola....ennatha solla..superrrrrrrrrrrrr
நல்ல பதிவு . பிளாக்கில் டெக்னாலஜி மாற்றங்கள் அருமை