இன்றைய இளைஞர்களின் சுதந்திர தினம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்து ஒளிபரப்பியது ஒரு தொலைக்காட்சி. அதைப் பார்த்த அனைவரும், வெட்கித் தலைகுனியும் வகையில் இளைஞர்களின் பதில்கள் அமைந்திருந்தன. இக் காட்சிகள் இன்றைய இளைஞர்களின் எதிர்காலப் பாதை எதை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தையும் பார்த்தவர்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
ஆக.15 சுதந்திர தினம். சுதந்திர தினத்தை (விடுமுறையை) எவ்விதம் மக்களுக்குப் பயனுள்ளதாகக் கொண்டாடுவது என்று ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் மூளையைக் கசக்கிப் பிழிந்து விதவிதமான நிகழ்ச்சிகளைத் தங்களின் நேயர்களுக்காக வழங்கின.
சில சேனல்கள் திரைப்படப் பிரபலங்களிடம் மக்களுக்கான ஆலோனைகளை வரிவரியாகக் கேட்டு ஒளிபரப்பின. சில சேனல்கள், பட்டிமன்றங்களில் சுதந்திரம் குறித்து உரைவீச்சை ஒளிபரப்பின. இந்தச் சேனல்களின் சுதந்திர கொண்டாட்டத்திற்கிடையே, பொதிகை தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சி, இன்றைய இளைய தலைமுறையின் உண்மையான முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர், மாணவர், இளைஞர், வேலைதேடுவோர் என பலரிடமும், மைக்கைக் கொடுத்து கேள்வி எழுப்ப, அவர்கள் ஏதோ விருப்பப் பாடல் கேட்கிறார் என எண்ணிக்கொண்டு, பேச்சுக் கொடுக்க அதன்பின்தான் புரிகிறது. அது விருப்பப் பாடலுக்கான நிகழ்ச்சியல்ல.
சுதந்திர தினம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்யும் நிகழ்ச்சி என்பது. இக்கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் பலரும் மெதுவாக நகர, சிலர் வேறு வழியின்றி தவறாகவே பதில் சொல்ல, நிகழ்ச்சியைப் பார்த்த அனைவருமே நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள்.
கேள்விகள் ஒவ்வொன்றும், குரூப்-1 தேர்வில் கேட்கப்படக்கூடிய கேள்விகள் அல்ல. காந்தியின் முழுப்பெயர் என்ன? சுதந்திரம் என்று கிடைத்தது? சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வாஞ்சிநாதன், பாரதியார் இவர்கள் யார்? பாரதியாரின் பாடல் வரிகள் சிலவற்றை கூறுக, தேசிய கீதத்தை எழுதியவர் யார்? தேசிய கீதத்தின் இரண்டு வரிகளைச் சொல்லுங்கள் என அந்தத் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்குச் சரியான விடையை சிலர்தான் கூறினர். பெரும்பாலான பொறியியல் மாணவர்கள் இதற்கான பதிலைக் கூறவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
முடிவாகப் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர், கேள்விகள் குறித்துச் சரியான பதில் சொல்பவர்களுக்கு காந்தி எழுதிய சத்திய சோதனையைப் பரிசாகக் கொடுக்க வாங்கி வைத்திருந்தோம். அதில் பெருமளவு புத்தகங்கள் எங்களிடமே மிச்சம் உள்ளன என வேதனை தெரிவித்தார்.
உண்மையில், இது இன்றைய இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சத்திய சோதனைதான்.
இன்று நாம் நிம்மதியாக உலா வருகிறோம். உரிமையுடன் பேசுகிறோம். எழுதுகிறோம் என்றால் அதற்கு வித்திட்டவர்கள் அன்றைய சுதந்திரப் போராட்டத் தியாகிகள்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். வரலாறு என்பது தேர்வுகூடத்தில் மதிப்பெண் பெறுவதற்காக படித்த நிகழ்வு என்பதை மாற்றி, அந்த வரலாற்றின் உணர்வையும், உண்மையான வலியையும் ஒவ்வோர் இளைஞனும் உணர்ந்தால்தான், எதிர்கால இந்தியா வளமான இந்தியாவாகத் தொடரும்.
இந்த உணர்வை ஊட்ட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் பெருமளவு உள்ளது. இதைக் கடமையாகச் செய்யாமல், கவனமாகக் கையாண்டால், சுதந்திரம் பெறுவதற்காக வலியை அனுபவித்த தியாகிகள் இன்று நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்.
இதையும் தாண்டி ஊடக பலம் ஊடுருவியுள்ள இன்றைய யுகத்தில் ஊடகங்களும் தங்கள் பங்குக்கு சில மணி நேரமாவது, தொடர்புடைய நிகழ்ச்சிகளை (அதாவது சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாள்களில் அது தொடர்பான நிகழ்ச்சிகள்) ஒளிபரப்பினால் இளம் தலைமுறையினர் புதிய தகவல்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற கேள்விகளை அனைத்துத் தேர்வுகளிலும் இடம்பெறச் செய்தால் அன்றைய வரலாறு இன்றும்
நீடித்திருக்கும்.
இளைஞர்களின் சுதந்திரம் - தினமணி
41 கருத்துரைகள்:
உண்மையிலேயே சத்திய சோதனை தான் நண்பா!
கேக்கவே ஒரு மாதிரி இருக்குறது...
நானும் மக்கள் தொலைக்காட்சியில் கொஞ்சம் சேட்டை கொஞ்சம் அரட்டை பார்த்து நொந்து போனேன்!
நிகழ்ச்சி நடத்தும் அண்ணாச்சி கேட்ட கேள்வி-இது எத்தனையனாவது சுதந்திர தினம் என்பது தான்-
அவர் கேட்டது பெரும்பாலும் இளைங்கர்களையும்,மாணவர்களையும் தான் 20,80,90 ங்கறான்ங்க.
ஒரே கடுப்பு தான் போங்க!
இதையும் தாண்டி ஊடக பலம் ஊடுருவியுள்ள இன்றைய யுகத்தில் ஊடகங்களும் தங்கள் பங்குக்கு சில மணி நேரமாவது, தொடர்புடைய நிகழ்ச்சிகளை (அதாவது சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாள்களில் அது தொடர்பான நிகழ்ச்சிகள்) ஒளிபரப்பினால் இளம் தலைமுறையினர் புதிய தகவல்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.///
நல்லா சொல்லுங்க நண்பா!ஊடகங்களுக்கு உரைக்கும்படி!கொஞ்சமாவது டி.ஆர்.பி பற்றி கவலைப்படாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினால் பரவாயில்லை!
என்னங்க பண்றது.. இளைஞர்களுக்கு இதையெல்லாம் தெரிஞ்சுக்கிறதை விட ரொம்ப முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு போல..
தமிழ் மணம் 3
யோசிக்க வேண்டிய விஷயம் தான்
அந்த நாளில் ஒளிபரப்பாகும் சினிமா பாட்டு ,காமடி ,முக்கியமா நாடக நடிகர்கள் சேர்ந்து கலாய்க்கும் நிகழ்ச்சி தானே ஒளிபரப்புகிறார்கள் .
நீங்கள் சொல்வது போல் இது போன்ற நாட்களில் குறைந்த நேரமாவது முக்கியமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் சரித்திரம் மறக்காமல் இருக்கும் .
இது போன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பினால்
தமக்கு வருமானம் குறையும் என்று என்னும் சேனல்கள் பிரபலங்களை வைத்தே இது மாதிரியான தகவல்களை சொல்ல சொல்லலாமே
என்னமோ போங்க இது போன்ற நிகழ்வுகளை எண்ணி வேதனை தான் பட வேண்டியிருக்கு .
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அந்த குறிப்பிட்ட நாட்களில்
அந்த தினங்களின் முக்கியத்துவத்தை
ஒளி பரப்புவது தான் சரியா
இருக்கும்
யோசிக்க வேண்டிய விஷயம் தான் மச்சி..
//அதில் பெருமளவு புத்தகங்கள் எங்களிடமே மிச்சம் உள்ளன என வேதனை தெரிவித்தார்.//
வேதனை தரக்கூடிய விஷயம் :(
வலி தெரியாட்டி அருமை தெரியாது
இதுக்குதான் இந்த மாதிரி நாட்களில் டி.வீ பார்க்ககூடாது ////
கூத்தாடிகளைப் பற்றி கேட்டால் சரியாக சொல்லியிருப்பார்கள்.
மாப்ள பிளாக் வந்தவுடன் தான் ஞாபகம் வருது நேத்து நீ சொன்னது இன்னைக்கு முடிச்சுடறேன்.
அநியாயமா இருக்கே?
எல்லாம் மனப்பாட கேசு, படிக்கிற காலத்துல எதையாவது வெளங்கி படிச்சாத்தானே?
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
வேதனை தரக்கூடிய விஷயம்
உண்மை தான் நண்பா..வெட்கப்பட வேண்டியது நாம் மட்டுமல்ல இந்த சமூகமும் தான். ஒருவர் தப்பு பண்ணினால் அது அவரை மட்டுமே குறிக்கும்... பல பேருக்கு பதில் தெரியாமல் இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அந்த தவறுக்கான பங்கு பள்ளிகளையும், ஆசிரியர்களையும், அரசையும் ,ஏன் இந்த சமூகத்திற்க்கே உரியது..பதிவிற்கு நன்றி
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
சினிமாவும், சினிமா சார்ந்த விஷயங்கள் தான் உலகம் என்று இன்றைய தமிழ் இளைஞர்கள் திசை மாறி விட்டதன் விளைவைத்தான் இது காட்டுகிறது.
உங்கள் சமூக அக்கறைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..
அப்ப நாடு எங்க போயிகிட்டு இருக்கு பாருங்க...
சரியான கவலையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு அடிப்படையான சில விஷயங்கள்கூடத் தெரிந்திருப்பதில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம். அவர்கள் சிந்தனையெல்லாம் உருப்படாத விஷயங்கள்மீதுதான் படிந்திருக்கிறது. இதற்கெல்லாம் நாம் வெறும் மீடியாக்களை மட்டும் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. தினசரி நல்ல பத்திரிகைகளையும் நல்ல புத்தகங்களையும் படிக்கலாம். சின்னச் சின்ன புத்தகங்கள் பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்குமெல்லாம் கிடைக்கிறது. டாஸ்மாக் தேடிச்சென்று உபயோகிப்பவர்களுக்கு புத்தகங்களையோ பத்திரிகைகளையோ தேடிச்செல்ல முடிவதில்லையே ஏன்?
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
பகிர்வுக்கு நன்றி தல!!!
கேட்கவே கஷ்டமாத் தான் இருக்கு நண்பா.
பொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - //
ஆகா...நம்ம தமிழ்வாசியும் டபுள் மீனிங் தொடங்கிட்டாரா என்று பார்த்தால்...
இப்படியோர் பதிவினை, எம் மனச்சாட்சிகளை நோக்கிப் பகிர்ந்திருக்காரே.
சுதந்திர தினம், குடியரசி தினம், போன்ற நாட்களில் பலபேருக்கு ஞாபகம் வருவது தொலைக்காட்சியில் புத்தம் புதிய படமும், புது நிகழ்ச்சி தான்; இப்படி இருந்தால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் அப்படிதான் வளரும்.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு நட்டுபற்றை சொல்லி வளர்த்தால் அவன் இளைஞனாகும் போது தேசபக்தியோடு, தேசத்துக்காக போராடுவான்.
நல்ல பகிர்வு நண்பா..நன்றி..
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...
நண்பரே!
இது என்னைப் பொறுத்த
வரை வியப்புக்கு உரியதல்ல,
அவர்கள் சரியாக சொல்லி
இருந்தால்தான் நாடு என்றோ
உருபட்டு இருக்குமே!
வருத்தம்+ கேட்கவே அவமானமாக இருக்கிறது. நீங்கள் தந்திருக்கும் யோசனைகளை பின்பற்றினால் மிகவும் நலம். நல்ல பகிர்வு
இதுபோல் சொன்னால் வயதான் புலம்பல் என்று எங்களைச் சொல்லுவார்கள். நீங்கள் சொல்லுங்கள் நல்லது.
இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்
உண்மை என்றுமே கசப்பானதாக இருக்கும்.....பகிர்வுக்கு நன்றி!
சமூக நலனில் அக்கறைக் கொண்ட பதிவு. இன்றைய ஊடகங்களும் திரை நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு அன்றைய தினத்தின் மகத்துவத்தை அற்றுப் போகச் செய்கின்றனர். இன்னமு பொதிகை கவர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தராது கருத்துக்களுக்கு முன்னுரிமை தருவது மகிழ்வைத் தருகின்றது.
என்னங்க நீங்க... இப்படியெல்லாம் கேள்வி கேட்ட நாம எப்படிங்க பதில் சொல்றது...
நமீதாவின் முதல் படம் என்ன?
ரஜினியின் ரானா நாயகி யார்?
பிரபுதேவா-நயன் கல்யாணம் எப்போ?
இப்படி நல்ல கேள்விகளா கேட்டிருந்தா சத்திய சோதனைக்கு சோதனை வந்திருக்காது...
வருத்தமான விஷயம்
நண்பரே,
இன்று பல ஊடகங்கள் மக்கள் அனைவரையும் முட்டாளாகக் காட்ட எத்தனையோ முயற்சிகள் எடுக்கிறன. அவர்களில் சில சரியான விடை
சொல்பவர்களைக் காட்டுவதே இல்லை!! (அப்படி காட்டினால் யார் பார்ப்பார்கள்??)
பொதிகை என்று சொல்வதால் சற்று யோசிக்க வேண்டி உள்ளது..
இதற்கு முக்கிய காரணம் பலரும் நாட்டுப் பற்றை ஊட்டாமல், வெளிநாட்டுப்பற்றை ஊற்றி வளர்க்கப்படுவது தான்!!
பல பள்ளிகளில் வரலாறு முடிந்த கதையாகவே கற்பிக்கப்படுகிறது..
அவற்றைப் படிப்பதால், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு எந்த பலனும் இல்லை என்பதே பல பெற்றோரின் கருத்து.
மேலும், பாடங்களைப் புரிந்து எழுதுபவர்களை விட வாந்தியெடுப்பவர்களுக்கே அதிக மதிப்பெண்கள் கிடைக்கிறன..