என்னங்க தலைப்பு ஒரு மார்க்கமா இருக்கா? மதுரையை கோயில்கள் அதிகமா இருக்கறதுனாலே கோயில் நகரம்னு சொல்வாங்களே. கோயில் தானே அதிகமா இருக்கு. அங்க எந்த இடங்கள் காதல் செய்ய ஏற்ற இடங்கள் இருக்குனு யோசிக்கரிங்களா. சென்னை மாதிரி பார்க் பீச், டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் இங்க இல்லைங்க. அந்த மாதிரி இடங்கள் இல்லாததுனால இருக்கற இடங்கள லவ் பண்றாங்க. எனக்கு தெரிஞ்ச சில இடங்கள் இருக்கு அதை பற்றி சொல்லலாம்னு நினைக்கிறேன். (அதுக்காக எனக்கு அனுபவம் இருக்கானு கேட்காதிங்க... அது சீக்ரட்)
லவ் பண்ண முதல் இடமா நான் சூஸ் பண்ணியிருப்பது:
தல்லாகுளம் பக்கத்துல அவுட் போஸ்ட் அருகில் மாநகராட்சி அலுவலகத்துக்கு பின்னாடி இந்த பார்க் இருக்கு. எங்க பாத்தாலும் பச்சை பசேல்னு புல்லு தான் இருக்கு. அங்கங்க உட்கார பெஞ்ச் போட்டிருப்பாங்க. அதை சில ஓல்ட் லவ்வர்ஸ் ஆக்கிரமிச்சிருப்பாங்க. (இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்னு கேட்கக் கூடாது). இந்த பார்க்க நடுவுல வாட்டர் பவுண்டைன் இருக்கு. அதுல பெரும்பாலும் தண்ணியே இருக்காது. இருந்தாலும் லவ்வர்ஸ் அதை சுத்தியே வருவாங்க. என்னைக்காவது தண்ணி வரும் போது நாமளும் நனையலாம்னு போனா இடம் கிடைக்காது.
நாம ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாக்க வேண்டியது தான். சின்ன சின்ன செடிகள், மரங்கள் பக்கத்துல இந்த லவ்வர்ஸ் நெருக்கமா உட்கார்ந்துட்டு என்ன பேசுவாங்கன்னு தெரியாது. ஆனா பேசுங்க...பேசுங்க... பேசிட்டே இருப்பாங்க. நைட் ஒன்பது மணிக்கு எல்லோரையும் வெளியே போக சொல்லி விசில் அடிப்பாங்க செகூரிட்டிகள். அப்ப லைட்டும் ஆப் பன்னிருவாங்க. அதோட அவங்க நேரமும் முடிஞ்சு போயிரும். ஆணும் ஒரு பக்கம், பெண்ணும் ஒரு பக்கம்னு பிரிஞ்சு போயிருவாங்க.
அடுத்த இடமா நாம பாக்க போறது ராஜாஜி பார்க்:
தமுக்கம் மைதானத்துக்கு பக்கத்துல இருக்கு இந்த பார்க். இது அடிப்படையில பார்த்தா சிறுவர்களுக்கான பார்க் தான். ஆனா சிறுவர்களை விட லவ்வர்ஸ் வருகை தான் அதிகம். காலேஜ் கட் அடிச்சுட்டு அவங்க வர்ற இடமே இங்க தான். காலையில அதுங்க காலேஜ் கிளம்பற அவசரத்துல சாப்பிடாம வந்திருவாங்க. அதுக்காக காலை, மதியம்னு சேர்த்து டிபன் எடுத்துட்டு வருவாங்க. காலேஜ்ல அட்டெண்டன்ஸ் கொடுக்கற மாதிரி கொடுத்திட்டு அப்புறம் எஸ்கேப் ஆகி இந்த பார்க்குக்கு வருவாங்க. ஒரு ஓரமா நிழலான இடமா பார்த்து உட்கார்ந்து மணல்ல கோலம் போட்டுட்டே பேசுவாங்க. அப்புறம் அங்க ஐஸ்கிரீம் ரெண்டு வாங்கி கரைஞ்சு போகறது கூட தெரியாம பேசுவாங்க. அப்புறம் கையில வழிஞ்சத யாருக்கும் தெரியாம _ _ _ _ தொடச்சுக்கிருவாங்க. மதியம் வந்திரும். கொண்டு வந்த சாப்பாடை சாப்ட்டுட்டு கையை கோர்துக்கிட்டு அந்த பார்க்கை ரெண்டு ரவுண்டு சுத்தி வந்துட்டு மறுபடியும் காலேஜுக்கு அல்லது ஏதாவது தியேட்டருக்கு போயிருவாங்க. தியேட்டருல என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாத விசயமா?
அடுத்த இடமா நாம் பாக்க போறது ஹவாவேலி:
இந்த இடம் மதுரை டூ நத்தம் ரோட்டில் சுமார் பதினைஞ்சு கிலோமீட்டர் தொலைவில் இருக்கு. மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் உள்ளே தள்ளி இருக்கு. இது பைக்குல சுத்தற லவ்வர்சுக்கு ஏற்ற இடம். அங்க சுத்தி பாக்கற மாதிரியான இடங்கள் இல்லை. ஒரே ஒரு ஹோட்டல் இருக்கு. ஆர்டர் பண்ணிட்டு பேசிட்டே இருக்க வேண்டியது தான். எதிர் பார்க்கும் நேரத்தை விட கொஞ்சம் லேட்டா தான் கொண்டு வருவாங்க. அப்படியே சாப்டுட்டு பைக்கை விரட்டுனா மதுரையில் நிக்கலாம். அங்க மினி கார் ரேஸ் இருக்கு. இப்ப இருக்கானு தெரியல.
அடுத்த இடமா நாம் பாக்க போறது தெப்பக்குளம்:
இது குடும்பத்தோட வர்றவங்க இடம். ஈவ்னிங் செமயா களை கட்டிரும் இந்த இடம். அந்த தெப்பக்குளத்தை சுத்தி வந்தாலே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கும். ஆமாங்க எப்படியும் ரெண்டு கிலோமீட்டருக்கு குறையாத சுற்றளவு உடையது. அந்த குளத்தை சுத்திலும் ஏகப்பட்ட கையேந்திபவன்கள் இருக்கு. சூடா இட்லி வாங்கிட்டு படியில உட்கார்ந்து பேசிட்டே சாப்பிடலாம். ஒவ்வொரு கடையிலும் விதவிதமா டிபன்கள் வாங்கி ஓரமா நின்னு லவ் செய்யலாம். நைட்டு பத்து மணி வரைக்கும் கடைகள் இருக்கும். தம்பதிகள் வாரத்துல ஒரு நாள் வீட்டு சமையலுக்கு லீவ் கொடுத்திட்டு இங்க வந்து சாப்பிட்டுட்டே காதல் செய்யலாம்.
அடுத்த இடமா நாம் பாக்க போறது அதிசயம் தீம் பார்க்:
மதுரையில் இருந்து திண்டுக்கல் ரோட்டில் பரவை முனியம்மா சொந்த ஊரான பரவைக்கு பக்கத்தில் இந்த தீம் பார்க் இருக்கு. தீம் பார்க்குல என்னென்ன இருக்கும்னு சொல்லனும்னு அவசியம் இல்லை. எல்லா விளையாட்டும் தண்ணி கலந்த விளையாட்டா இருக்கும். காதலர்கள் தண்ணீரில் விளையாடி பொழுதை கழிக்கும் இடம் இது. காலையில வந்தோம்னா சாயிந்தரம் வரை நல்ல டைம் பாஸ் ஆகும் இந்த அதிசயம் தீம் பார்க்கில்.
அடுத்த இடமா நாம் பாக்க போறது பெல் ஹோட்டல்:
சிம்மக்கல் அருகே தமிழ் சங்கம் ரோட்டில் இந்த ஹோட்டல் இருக்கு. தம்பதிகளும், லவ்வர்சும் வந்து சாப்பிடக் கூடிய இடம். உணவு வகைகள் ருசியா இருக்கும். ரேட் கொஞ்சம் காஸ்ட்லி தான், அதனால காதலும் காஸ்ட்லியா இருக்கும். ஏ சி ரூம்ல உட்கார்ந்து ஸ்டார்ட்அப் சூப்பிலிருந்து பினிஷிங் ஐஸ்கிரீம் வரை காதல் செஞ்சுட்டே சாப்பிடலாம். இங்க ஏ சிக்கு தனி ரேட். சாப்பிட்ட அயிட்டங்களுக்கு தனி ரேட். அதனால தான் சொன்னேன். மதுரை லவ்வர்சுக்கு இது கொஞ்சம் காஸ்ட்லி தான்.
சில காதலர்களுக்கு பைக்கில் சுத்தறது ரொம்ப பிடிக்கும். அவங்களுக்குன்னே சில ரூட்டுகள் இருக்கு. பெரியாரில் பைக்கை ஸ்டார்ட் பண்ணினா கோரிப்பாளையம், புதூர் வழியா அழகர்கோவில் ஆர்ச் வரை ஒரு ரவுண்டு போகலாம். கோயிலுக்கு முன்னாடி ஒரு ஆர்ச் இருக்கு. அதை சுத்தி வர்ரதுக்காகவே பைக்கில போவாங்க. அப்புறம் திருபரங்குன்றம், காளவாசல், அண்ணாநகர் என பைக்கில் ஒரு ரவுண்டு வரலாம்.
நண்பர்களே! ஒவ்வொரு இடமா உங்களுக்கு சுத்தி காமிச்சு இப்போ நான் களைச்சுப்போயிட்டேன். இதோட போதும். இன்னும் சினிமா தியேட்டர், திருமலை நாயக்கர் மஹால், மதுரையை சுத்தி உள்ள இடங்கள், தமுக்கம் பொருட்காட்சி போடக்கூடிய நாட்கள் என சொல்லிக்கிட்டே போகலாம்.
43 கருத்துரைகள்:
அடப்பாவி
கிரேட்! அப்படியே, மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் பக்கம் , ஒரு கல்வெட்டுல எழுதி வச்சுட்டீங்கனா ....மதுரைக்கு வரவங்க படிச்சு தெரிஞ்சுக்கிட்டு வாழ்த்திட்டு போவாங்க.... ஹி,ஹி,ஹி,ஹி....
நீ சுத்தின இடத்தையெல்லாம் அப்படியே ஜனங்களுக்கும் கத்துக்கொடுக்கிறியா...
எதுக்கும் தெரிஞ்சி வச்சிப்போம்...
வீட்ல பொண்டாட்டி இல்லையினா இங்கெல்லாம் போய் சுத்த தோணுதா ராஸ்கல்...
பிச்சிபுடுவேன்..பிச்சி..
சித்ரா அக்கா ஐடியா நன்னா இருக்கே..
சூப்பர். நானும் மதுரைக்காரன் தான்
ஒரு முக்கியமான இடத்தை விட்டுட்டுடீங்களே
அடபாவி உருப்படுற வழியை பாருய்யா ஹி ஹி....
இடங்கள் நல்லாய் இருக்கே, ஆனா நமக்கு பப்பிளிக்காய் காதல் செய்ய சரிவராதுங்கோ ஹிஹி
மதுரை மல்லிக்கு எவ்வளவு ஃபேமஸோ
அவ்வளவு வைகையும் ஃபேமஸ் தானே
ஏன் அதுபத்தி ஒன்னுமே சொல்லலே.
ஓ, ஓ ,ஒ நீங்க சொல்லவந்தெதே வெர விஷயம் நானொருத்தி புரியாம என்னம்மோ கேட்டுட்டு இருக்கேனே. சே.
அதிசயம்//
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச தீம்பார்க்........ நேரம் போறதே தெரியாது... திண்டுக்கல்க்கு போனா கண்டிப்பா இந்த பக்கம் வண்டி நிக்கும். இல்லைன்னா நிக்க வைப்ப்போம் :)
லவர்ஸ்ன்னு இல்லாம எல்லாரும் பாக்க கூடிய இடம் தான் :)
எத்தன மணீக்கு செக்யூரிட்டு வெறட்டுவாங்குற வரைக்கும் எல்லா டீடெயிலும் தெரியுதெ...?? எப்படி சகோ?
'லவ்'லி
அண்ணே எல்லா எடத்தையும் சொல்லிட்டீங்க, அப்படியே லவ் பண்றதுக்கு ஏதாவது பொண்ணும் பாத்துக் கொடுத்திட்டீங்கன்னா புண்ணியமா போகும்...!
சூப்பர் பதிவு ப்ரகாஷ், அப்பிடியே மதுரையை கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க.
முடியல
Sir
You have adopted a novel way of taking your readers on a tour of your city to unheard of places. I thought Maduri means just the temple. On reading your post, I have come to know it means more.
I need this information from you. Can you also please tell me whether Madurai has mansion type accomodation for bachelors for stay of about 6 months as in Chennai, on monthly rental basis ? If not, any other type of accom on monthly basis for short stay for a single male ?
அட அலை மோதும் லவ்வர்ஸ்க்கு எடத்த காட்டிக்கொடுத்துட்டீங்களே பாஸூ ஹாட்ஸ் ஆப்
சுத்திக்காட்ட கட்டணம் உண்டா?அல்லது இலவச சேவையா?
அருமையான இடங்கள்
லவ்வரவங்க லவ்வுங்கோ !!!!!!!!!!!
மாப்ள....நல்ல வழிகாட்டி நீர்தான்....பாத்துய்யா உன்ன அடுத்த கைதுக்கு ச்சே கைடுக்கு கூட்டிட்டு போயிடப்போறாங்க.,,,ஹிஹி!
தூங்கா நகரம் மதுரைக்கு வித்தியாசமான அறிமுகம்.
பெல் ஹோட்டல் நேரில் இருப்பதை விட போட்டோ வில அற்புதமா இருக்குது. ஒரு ஜனவரி 1 ஆம் தேதி நானும் சிலரும் அங்கே சாப்பிடப் போனோம். ஒரு இளம் ஜோடி ஓரமான சீட்டில் உட்கார்ந்து நாங்க வந்ததில் இருந்து போறது வரை சண்டைன்னா சண்டை உங்க வீட்டு சண்டை எங்க வீட்டு சண்டை இல்லை மதுரை மாநகர சண்டை. இப்படியும் இருக்கிறார்கள் காதலர்கள்!
பழசெல்லாம் கிளறி விட்டுடீங்க நண்பா..
நாங்க எல்லாம் விளக்குத்தூண் ல இருந்து தெற்குவாசல் வரை இருக்குற ஏரியாவ தான் யூஸ் பண்ணிக்குவோம் ஏன்னா அங்க தான் சாயந்தரம் ஆனா கூட்டமா இருக்கும் நிறையா சந்துல லைட் இருக்காது...
லவ் பண்றதுக்கு இல்ல நண்பா தம் அடிக்க... ஹா ஹா ஹா
இடமெல்லாம் ரெடி காதலிக்கு என்ன பண்றது?
தம்பிக்கு வெளியூரா...
காதல் பூங்காவான நம்ம பல்கலை நகர விட்டுட்டீங்களே....
ஜெய்ஹிண்ட்புரத்திலையும் பண்லாம்...ஆனா வெட்டிருவாங்க...ஏனா நம்ம முறைப்பொண்ணுங்க..நாலு இருக்கு அங்க..ஹ்மம்ம்மம்ம்ம்ம்..
@Reverie
நண்பா... நான் இடங்களாக (place) தொகுக்க விரும்பி சில இடங்களை சொல்லவில்லை.
தெப்பக்குளம் தவிர எல்லாம் எனக்குப் புதிது!
திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோயில் , திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் அப்புறம் யானை மலை இது எல்லாம் விட்டுடீங்களே.
அருமையான அத்யாவஸ்யமான தகவல்கள். உடனே மதுரைக்கு ஜோடியாக வரணும் போல எல்லோருக்கும் ஒரு கிக் ஏற்படுத்தியுள்ளீர்கள். நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
உங்களுடைய அனுபவ கட்டுரை மிக அருமை. ரொம்ப தான் மெனக்”கெட்டிருக்கீங்க”.காரியம் நடந்ததா இல்லையா??????????.
@MANASAALI
திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோயில் , திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் அப்புறம் யானை மலை இது எல்லாம் விட்டுடீங்களே.>>>>
நான் கோவில்களை தவிர்த்து விட்டேன் நண்பா...
புரிந்தது நண்பரே...இருந்தாலும் நாம படிச்ச பல்கலைகழகத்தில் நம்மை சுத்தி அதனை பேரும் காதல் பறவைகளா திரிந்ததைப்பார்த்த ஏக்கம் தான்...
மதுரை தூசியும் குப்பையும் நாற்றவுமாக தான் இருந்தது. இப்போது காதலர் தேசமாக்கி விட்டார்களோ? கணவருடன் வரலாம் தானே தமிழ்!
ரெம்ப முக்கியமான இடங்க தானையா நானும் மதுரைக்கு வந்திருக்கேன் இந்த் இடங்களுக்கும் போயிருக்கேன்.. இப்பிடியெல்லாம் யோசித்து பார்கல மாப்பிள..
காட்டான் குழ போட்டான்..
ஓஹோ..இதெல்லாம் தமிழ்வாசி சுத்துன இடங்களா?
சென்னை மாதிரி பார்க் பீச், டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் இங்க இல்லைங்க.//
ஆகா..அனுபவம் பேசுகிறதே...
இதெல்லாம் நீங்க சுத்திய இடங்காளா மச்சி,
நல்லதோர் பதிவு, மதுரைக்கு வந்தால்....நீங்கள் பட்டியலிட்டுள்ள விடயங்களோடு,
விளக்கமளிக்காது விட்டுள்ள
‘கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு....பாடலில் வரும் நாயக்கர் மஹாலையும் பார்க்க வேண்டும் எனும் ஆவலினை உங்கள் பதிவு ஏற்படுத்தியுள்ளது.
எல்லா இடமும் பாத்தாச்சு.
சிறந்ததுனா ராஜாஜி பார்க் தான்.
காதலர்களுக்கு ரொம்ம்ம்ம்ப உபயோகமான தகவல்.
உங்களோட அனுபவ இடங்கள பகிர்ந்து கிட்டதுக்கு நன்றி ,...
Dear Sir
Pl refer to my earlier mge here. I am glad to inform that we have got accomodation in University Hostel itself. My daughter has joined MA Malayalam course in MKU.
Initially we were facing difficulty with them. Later on, they themselves called us. It appears someone has read it from here. I posted similar requests in many sites esp. those written by Madurai citizens like you.
We are very grateful to you.
Thank you very much Sir.
சுத்துரதுக்கு இடம் இருக்கு. ஆனா லவ்வர் இல்லயே பாஸ்...
சுத்துரதுக்கு இடம் இருக்கு. ஆனா லவ்வர் இல்லயே பாஸ்...