குட்டி போட்டு பால் தருவதால், வௌவால் பறவை இனத்தில் சேர்க்க முடியாது. வவ்வாலுக்கு கண் உண்டு. இருந்தாலும் அதற்கு கண் பார்வைத் திறன் தேவையில்லை. வௌவால் "சவுண்டு ரேஞ்சிங்" என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை உணர முடியும்.
வௌவாலின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சைக்கிள் அளவில் ஒலி உண்டாகிறது. இந்த சத்தத்தை நம்மால் உணர முடியாது. இவை சத்தத்தை சின்ன சின்ன துடிப்பலைகளாக வெளிப்படுத்தும்.
ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் தான். 17 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசத்தை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப சாமார்த்தியமாக பறக்கிறது வௌவால்.
இன்றைய பொன்மொழி:
பிறருக்கு தொண்டு செய்வதால் எவர் உடல் அழிவடைகிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்!
இன்றைய விடுகதை:
இலையுண்டு; கிளையில்லை;
பூ உண்டு; காய் இல்லை. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
20 கருத்துரைகள்:
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி.
சார், வவ்வால் அசைவம் சாப்பிடுமா? உதாரணமாக மீன் சாப்பிடுமா?
வௌவாலைப் பற்றிய பல நல்ல தகவல்கள் தந்ததற்கு நன்றி.
வவ்வால் பத்தி நிறைய தெரிந்து கொண்டோம்... நன்றி...சூர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு
நல்ல தகவல்கள்.. குட்
அட எனக்கு தெரியாத புது தகவல்கள் நன்றி மக்கா...!!!
பொன்மொழி சூப்பர்ப்...!!!
அறியாத தகவ்ல்கள். அறிந்துக் கொண்டேன். நன்றி சகோ
அமர்க்களம்! அட்டகாசம்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
அறியாத தகவ்ல்கள்.அறிந்துக் கொண்டேன்.நன்றி,பிரகாஷ்!!!
நல்ல பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.
NANRI....
நல்லதோர் தகவல் பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
அருமையான தகவல் நண்பா
Wish you many more happy returns of the day bro
Wish u happy birthday sago
நல்ல தகவல்.. வாவேற்கிறோம்..
Vaval kutti ennaa sapidum?
Vaval kutti ennaa sapidum?