டிஸ்கி: நண்பர்களே, கீழ்க்கண்ட உரையாடல் முற்றிலும் கற்பனையே, பெரிய பீப்பா, சின்ன பீப்பா பெயர்களும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.
முந்தைய அரட்டையின் தொடர்ச்சி....
முந்தைய அரட்டையின் தொடர்ச்சி....
பெரிய பீப்பா: ஒரிசா மாநிலம் இருக்குல. அங்க பிரசவம் நேரத்துல லேடிஸ்க்கும் லீவு விடுற மாதிரி அவங்க கணவருக்கும் லீவு தராங்களாம்.
சின்ன பீப்பா: ஆ... அப்படியா? நல்ல விசயமா இருக்கே. எவ்ளோ நாள் லீவாம்?
பெரிய பீப்பா: கணவருக்கு எப்பவும் மூணு மாசந்தான் லீவு விடுவாங்களாம். இப்போ அதை டபுள் மடங்கா மாத்திட்டாங்க...
சின்ன பீப்பா: அட... அப்போ ஆறு மாசம் லீவா? அந்த ஊரு பொண்ணுங்க ரொம்ப கொடுத்து வச்ச பொண்ணுங்க... கணவன்களும் பொண்டாட்டிக்கு ரொம்ப ஹெல்ப்பா இருப்பாங்க...
பெரிய பீப்பா: இங்க நம்ம ஊர்ல அப்படி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். லேடிஸ் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பையும் நல்லா தேத்தலாம்.
சின்ன பீப்பா: ஆமாக்கா, அம்மா தானே ஆட்சி செய்றாங்க? இந்த மாதிரி ஏதாவது செஞ்சா லேடிஸ் ஓட்டு எப்பவும் அவங்களுக்கு கெடக்கும்.. ஆனா செய்யணுமே?
பெரிய பீப்பா: ஏண்டி, எம் புருசன் கொஞ்ச நாளா மொபைல் ஹெட் போன் மேல ரொம்ப பாசமா இருகாருடி...
சின்ன பீப்பா: ஆமாக்கா, அம்மா தானே ஆட்சி செய்றாங்க? இந்த மாதிரி ஏதாவது செஞ்சா லேடிஸ் ஓட்டு எப்பவும் அவங்களுக்கு கெடக்கும்.. ஆனா செய்யணுமே?
பெரிய பீப்பா: ஏண்டி, எம் புருசன் கொஞ்ச நாளா மொபைல் ஹெட் போன் மேல ரொம்ப பாசமா இருகாருடி...
சின்ன பீப்பா: என்னாச்சுக்கா? ஹெட் போன்ல பாசமா இருக்குற அளவுக்கு அதுல என்ன இருக்கு?...
பெரிய பீப்பா: இந்த தனுஷ் ஒரு பாட்டு பாடியிருகார்ல... அந்த கொலவெறி டி பாட்டு... அதாண்டி அத எந்த நேரமும் மொபைல்ல போட்டுட்டு காதுல ஹெட் போனை மாட்டிக்கிருறார்.
சின்ன பீப்பா: ஹா ஹா ஹா..... உம் புருசன் மட்டும் அப்படி இல்ல... உலகத்துல பல பேரு இப்படிதான் கொலவெறி பாட்டு மேல பைத்தியமா இருக்காங்க... அதனால உன் புருசன் ஒன்னும் அந்த பாட்டுக்கு விதிவிலக்கு இல்லை.
பெரிய பீப்பா: ம்ஹும் என்ன செய்றது? தனுஷ் கொலவெறின்னு பாடுறார்... அங்க ஒஸ்தில சிம்பு வாடி.. வாடி... வாடி...கியுட் பொண்டாட்டின்னு பாடுறார்... என்ன பாட்டு எழுதறாங்களோ?
சின்ன பீப்பா: ஹா ஹா ஹா ஹா ஹா ஹ்ஹா ஹ்ஹா ஹஹா ஹா .......
பெரிய பீப்பா: அடியே ஏண்டி இப்படி விழுந்து விழுந்து சிரிக்கற?
சின்ன பீப்பா: என் புருசன் இப்ப கொஞ்ச நாளா இந்தப் பாட்டு தான் பாடுறார். என்னை சுத்தி சுத்தி வர்றப்ப இந்த பாட்டு தான் அவருக்கு பேவரிட்... அத நெனச்சேன்,,, சிரிப்பு வந்திருச்சு... ஹா ஹா ஹா ஹாஹ்ஹ்ஹா
பெரிய பீப்பா: அடியே உன் பயங்கர சிரிப்பை நிறுத்து... பக்கத்துல எல்லோரும் ஒரு மாதிரியா பாக்கறாங்க....
சின்ன பீப்பா: சரி சரி நிறுத்தறேன்.... அக்கா உங்க ஏரியா பக்கம் ரெண்டு மூணு நாளுக்கு முன்னாடி வந்தேன். பொலியுசண் ரொம்ப அதிகமா இருக்கு.... எப்படியக்கா நீங்க அந்த பக்கம் எப்பவும் போயிட்டு வறீங்க?
பெரிய பீப்பா: அந்த பக்கம் உனக்கு என்னடி வேல?
சின்ன பீப்பா: அதுவா.... பைபாஸ் ரோட்டுல இருக்குற அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டலுக்கு பேமிலியோட லஞ்ச்க்கு வந்தோம். அப்ப அரசடி வழியா வந்தோம். அந்த அரசரடியில இருந்து காளவாசல் சிக்னல் வர ரொம்ப அழுக்கா தூசியா இருந்துச்சு. எனக்கு இருமலே வந்திருச்சு.
பெரிய பீப்பா: என்னடி செய்றது? யாரும் அத கவனிக்க மாட்டிங்கறாங்க.... கொஞ்ச நாளா ரோட்டுக்கு நடுவுல தடுப்பு கம்பி வேற கட்டிட்டாங்க... அதுல இருந்து தூசியும் அதிகமாயிருச்சு, டிராபிக்கும் அதிகமாயிருச்சு....
சின்ன பீப்பா: இப்ப மழை வேற வந்துட்டு போயிருச்சா... எல்லா பக்கமும் ரோடு குண்டும் குழியுமா தான் இருக்கு. இப்படி இருக்குற ரோட்டுல இந்த பொண்ணுக ரொம்ப தான் அலப்பறை செயராளுக?
பெரிய பீப்பா: என்னடி, பொண்ணுக என்ன அலப்பறை செய்றாங்க?
சின்ன பீப்பா: வண்டி ஓட்டிட்டு போறப்ப கைக்கு முழுசா கிளவுஸ் போட்டுகறாங்க..
பெரிய பீப்பா: அது நல்லது தானே... கையில தூசி படாம சருமம் பாதிக்காம இருக்கும்ல...
சின்ன பீப்பா: அதெல்லாம் சரி தான்... ஆனா துப்பட்டா மூலமா முகத்தை புல்லா சுத்திக்கிட்டு கண்ணை மட்டும் தெரியுற மாதிரி முகமூடி போறாங்களே... இதுல பாதி துப்பட்டா காத்துல தான் பறக்குது....
பெரிய பீப்பா: ஆமா முகத்தை பாதுகாக்கனும்ல.... பியூட்டி பார்லர் போயி ஆயிரம் ஆயிரமா செலவு செஞ்சது வீணா போயிரும்ல...
சின்ன பீப்பா: அதுக்காக துப்பட்டா போடக் கூடாதுல.... நல்ல ஹெல்மெட் வாங்கி தலையில மாட்ட வேண்டியது தானே... தலைக்கும் பாதுகாப்பு.... முகத்துக்கும் பாதுகாப்பா இருக்குமே...
பெரிய பீப்பா: ஆமாண்டி... நீ சொல்ற பாயின்ட்டும் சரி தான்.... ஹெல்மெட் தான் எப்பவுமே பாதுகாப்பானது. எங்க தெருவுலயும் ஒரு பொண்ணு துப்பட்டா முகமூடி தான் போட்டுட்டு வேலைக்கு போகும். அவ கிட்ட சொல்லணும்.
(மழை தூர ஆரம்பித்ததால்.... அவர்கள் அரட்டையை முடித்து கொண்டு கொண்டு வந்த டிபன் எல்லோருக்கும் பகிர்ந்து சாப்பிட்டு அவங்க வீட்டுக்கு நடையை கட்டினார்கள்...)
இந்த பாகம் முற்றும்...
அடுத்த அரட்டை விரைவில்.....
23 கருத்துரைகள்:
முதல் ரசிகன்..
ஹா..ஹா..ஹா..
//அதுக்காக துப்பட்டா போடக் கூடாதுல.... நல்ல ஹெல்மெட் வாங்கி தலையில மாட்ட வேண்டியது தானே... தலைக்கும் பாதுகாப்பு.... முகத்துக்கும் பாதுகாப்பா இருக்குமே...//
ஆமா இது மாதிரி பண்ணுரவங்க அலப்பரை தாங்க முடியல..
அப்புறமா லீவு கேட்டிருக்கீங்க..
அம்மா ஆலோசனை பண்ணிட்டிருக்காங்களாம்
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரிங்க மாதிரி கண்ணைத் தவிர மத்ததையெல்லாம் மூடிட்டு பொண்ணுங்க வர்றதைப் பாக்க சிரிப்பாதான் இருக்கு. பிரசவத்துக்கு ஆண்களுக்கு 3 மாசம் லீவா? ஊர் சுத்தாம பொண்டாட்டிய கவனிச்சுக்கிட்டா சரிதான்... சுவாரஸ்யமமான இந்த அரட்டை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Thagaval....thagavalgal......
Thanks.....
அரட்டை நல்லா இருக்கு... துப்பட்டா விஷயம் பொண்ணுங்க கவனிக்க வேண்டிய ஒன்னுதான்...........
ஏம்பா இந்த பதிவுல நீங்க சொல்ற ரெண்டு பேரு..நாட்டை ஆளும் அன்புச்சகோதரிங்க இல்லையே..ஹிஹி!
படித்து விட்டு வீட்டில் எல்லோருமே சிரித்தோம். நன்றி நண்பா!
அருமையாக அலசி கொண்டிருக்கிறீர்கள், ஊடால விக்கி அண்ணன் கோத்து விடறார்; பாத்து சூதானமா நடந்துக்குங்க நண்பா
@விக்கியுலகம்
மாம் நீங்க தமிழ்வாசிய சிறைவாசியாக்கிடாதிங்க...ஹஹ
சுவாரஸ்யமமான அரட்டை
@விக்கியுலகம்
ஏம்பா இந்த பதிவுல நீங்க சொல்ற ரெண்டு பேரு..நாட்டை ஆளும் அன்புச்சகோதரிங்க இல்லையே..ஹிஹி!///
மாம்ஸ், வொய் திஸ் கொலவெறி?
மச்சி மகளிர் சங்கங்கள் இருக்கு ஜாக்குரத்தை..
//ஒரிசா மாநிலம் இருக்குல. அங்க பிரசவம் நேரத்துல லேடிஸ்க்கும் லீவு விடுற மாதிரி அவங்க கணவருக்கும் லீவு தராங்களாம்.//
வேணாம் பாஸ் ஆணியே புடுங்க வேணாம்...,..பாவம்...
என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!
லேடிஸ் முகமுடி போட்டுட்டு போறதில உனக்கு ஏன்ப்பா இவ்வளவு சந்தோசம்...
நல்லாயிருக்கு. அடுத்த அரட்டையை ஒரே பதிவில் முடியுமாறு போடுங்க.
வணக்கம், பீப்பாக்கள் எப்படி இருக்காங்க....?
/// சி.பி.செந்தில்குமார் said...
லேடிஸ் முகமுடி போட்டுட்டு போறதில உனக்கு ஏன்ப்பா இவ்வளவு சந்தோசம்...////
அண்ணே பதட்டப்படாதீங்க, துப்பட்டாவால மூஞ்சிய மட்டும்தான் கவர் பண்றாங்களாம்...
செம அரட்டை!
கடைசியில செம பன்ச்!கலக்குங்க!
வணக்கம் பாஸ்,..
அருமையான ஒரு வட்டார மொழி நடையூடாக துப்பட்டாவிற்கே அர்த்தம் கற்பித்திருக்கிறீங்களே.
கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!....
நல்ல அரட்டை கச்சேரி..