வணக்கம் நன்பா'ஸ்,
அப்பாடா, இன்னைக்கு பதிவு போட முடியுமான்னு தெரியாமலே ஒரு பதிவு போட்டாச்சு. ஹே ஹே ஹே.....
எப்படி இருக்கீங்க? வேலையெல்லாம் எப்படி போகுது? ஏதோ போகுதுன்னு சாக்கு போக்கு சொல்லாதிங்க பாஸ். பாக்குற வேலைய சந்தோசமா பாருங்க. அப்புறம் என்னை பத்தி கேட்கறிங்களா? ஏதோ இருக்கேனுங்க.... அப்புறம் ஒரு விஷயம்? இன்னைக்கு என்ன மேட்டரை பதிவா எழுதலாம்னு காலையில இருந்து மண்டைய போட்டு பிச்சு பாத்துட்டேன். ஒரு மேட்டரும் சிக்க மாட்டிங்குது. இப்படி வரட்சியாயிருச்சே இன்னைக்கு... இப்படி எப்பவுமே இருந்தது இல்ல... டெய்லி பேப்பர் படிக்றதும் கொறஞ்சு போச்சு. அதனால நாட்டு நடப்பும் சரியா தெரியல. டிவி பாக்க வேண்டியது தானே அப்படின்னு கேட்கறிங்களா? டிவி பார்த்தா கம்ப்யுட்டர் யூஸ் பண்ண முடியாது.
என்னய்யா டிவிக்கும் கம்ப்யுட்டர்க்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு கேட்கறிங்களா? ஆமாங்க. என் கம்ப்யுட்டர்ல தான் டிவி இருக்கு. அதுக்காக டிவி கார்ட் போட்டிருக்கேன். சரி அப்படியும் நெட் யூஸ் பண்ணாம டிவியில ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு பார்த்தா கேபிள் கட் ஆயிருச்சு. ஆக டிவியும் சதி பண்ணிருச்சு. என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்ப என் மொபைல் அலறுச்சு.... யாரு நம்மள கூப்பிடறதுன்னு பார்த்தா என் அண்ணன் தான். குழந்தைக்கு பெர்த் சர்டிபிகேட் வாங்கணும். தாலுகா ஆபீஸ் எங்க இருக்குன்னு தெரியாது. நீ வந்தா தேடி கண்டுபிச்சு போயிரலாம் அப்படின்னு அன்பா கூப்பிட்டாரு. ஏன்னா என்கிட்டே வண்டி இருக்கு. அதனால தான். ரைட்டு, இன்னைக்கு மண்டையில மசாலா தான் இல்லை. அவருக்காச்சும் ஹெல்ப் பண்ணலாம்னு சரி வாண்ணா, போயிட்டு வரலாம் அப்படின்னு சொன்னேன். தாலுகா ஆபீசை தேடி வண்டியில கிளம்பினோம். புதூர்ல ஆபீஸ் இருக்குன்னு சொன்னாங்க குழந்தை பிறந்த ஆஸ்பத்திரியில. அதனால அங்க போயி பாக்கலாம்னு சொன்னார். ரைட்டுன்னு புதூர் வண்டிய விட்டேன். நம்ம வீட்டுல இருந்து பக்கம் தான். அஞ்சு நிமிசத்துல போயிட்டோம். அங்க விசாரிச்சு ஆபீஸை தேடி கண்டுபிடிச்சோம். ஆனா பூட்டி இருந்துச்சு. பக்கத்துல விசாரிச்சா ஆபிசர் வர லேட் ஆகும்னு சொன்னாங்க. அப்புறமா என் அண்ணன் இருக்குற ஏரியாவுக்கு அந்த ஆபீஸ் இல்லைன்னு அந்த கடைக்காரர் சொன்னார். அப்புறம் அய்யர்பங்களா பக்கதுல இருக்குன்னு சொன்னார்.
அப்புறம் அங்க இருந்து பத்து நிமிஷம் அய்யர்பங்களா போயிட்டோம். அங்க பஸ்ஸ்டாப்பு பக்கத்துல ஒரு கடையில விசாரிச்சோம். அவரு இன்னும் கொஞ்சம் தள்ளி போனா பெட்ரோல் பங்க் பக்கத்துல ஓர் ஆபீஸ் இருக்கு. அங்க போயி பாருங்க அப்படின்னு சொன்னார். அவரு சொன்ன இடத்துக்கு வண்டிய விட்டேன். அவரு சொன்ன இடத்துல ஒரு அஞ்சு நிமிஷம் தேடி ஆபீஸை கண்டு பிடிச்சோம். அங்க எங்க ஏரியாவ கேட்டதும் இந்த ஆபீஸ்ல இல்லைங்க, வேற ஆபீஸ்ல இருக்கு அப்படின்னு இன்னொரு அட்ரஸ் தந்தார். நல்ல வேளை அதுவும் அங்க இருந்து பக்கத்துல தான். அந்த ஆபீஸை தேடி கண்டுபிடிச்சு போனோம். அங்க இருந்த பியூன் எங்க கிட்ட இருந்த பெர்த் சர்டிபிகேட் அப்ப்ளிகேசனை பார்த்துட்டு இது இங்க தான் இருக்கு அப்படின்னு எடுத்து காட்டினார். எங்களுக்கு ஹேப்பியா இருந்துச்சு. அப்புறம் சர்டிபிகேட் பதிஞ்சு வர ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க. அதுக்கு பீஸ் இருநூறு ரூவா ஆகும்னு சொன்னாங்க. அவங்க கேட்ட பீஸை தந்திட்டு ஒரு வாரம் கழிச்சு வர்றோம்னு கிளம்பிட்டோம்.
அப்பாடா, இன்னைக்கு பதிவு போட முடியுமான்னு தெரியாமலே ஒரு பதிவு போட்டாச்சு. ஹே ஹே ஹே.....
27 கருத்துரைகள்:
இன்னைக்கு சனிக்கெழம தானே, அருவாளுக்கு வேல இருக்காதுன்னு நம்பி எங்கயோ வச்சி போட்டன்.
இப்ப வேல வந்திருக்குது. அருவாளத் தான் காணோம்!
@சத்ரியன்
நான் அருவா தாரேன்
ஏலேய், என் மண்டையை காய வச்சிடியலே
யாருலேய் இங்கே அருவாள் பற்றி பேசுறது...?
பதிவை படிச்சுட்டு கண்ணுல தண்ணியா கொட்டுது மக்கா ஹி ஹி..!!!
அப்பிடியே அழகிரி அண்ணன் வீட்டு பக்கம் போயிருக்கலாம் இல்ல...?
///என் கம்ப்யுட்டர்ல தான் டிவி இருக்கு. அதுக்காக டிவி கார்ட் போட்டிருக்கேன். ////
அட போங்கப்பா நம்மளுக்கு கணணி போடவே நெரம் கிடைக்குதில்லே... அதுக்குள்ள நீங்க வேற...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
உஸ் அப்பா...முடியல..இப்ப்வே கண்ண கட்டுதே..
ஒய் திஸ் கொலவெறி..
ஹா...ஹா..ஹா...
எப்போதுமே மேலோட்டமா படிச்சுட்டு போய்ருவேன்.. பாப்ப தூங்குறா இன்னைக்காவது எல்லாம் படிப்போம்னு வந்தா செம ப்ளேடா இருக்கு.. எம்பொண்ணுக்கும் இப்படிதா அங்க இங்கனு அலஞ்சு திரிஞ்சு கடைசியா கோச்சடைல வாங்கினோம்.. 500ரூபா கறந்துட்டாய்ங்க..
கழுத்துல ரத்தம் வந்துருச்சு இப்போ ஆஸ்பிடலுக்கு போய்க்கிட்டு இருக்கேன் பா .........
இன்னைக்கு மண்டையில மசாலா தான் இல்லை.// இன்னைக்கு மட்டுமா மச்சி #டவுட்டு..
மச்சான் நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தான்..
டேய் சசி எங்கடாப் போன? இந்த அநியாத்தை வந்து பார்றா..
இது யாரு பிளாக்கு புதுசா...இருக்கு...வழி மாறி வந்துட்டன் போல பிளாக் ஓனர் ஸாரிங்க
அண்ணே டயரிய காப்பி பேஸ்ட் பண்ணிட்டிங்களோ.
ம்..ம்..ம்...ம்....என்ன செய்ய எல்லாம் நம்ம விதி!
பாத்தியா பிரகாஷ் பதிவு எழுத நாமெல்லாம் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு மூளையை யூஸ் பன்ரோம். உனக்கு இன்னிக்கி செமையா மேட்டர் மாட்டிகிச்சு.
ரைட்டு.
உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய் பங்காளி...
ஊரைச்சுத்திட்டு பொழுதுபோக்கினயாக்கும்!!
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஏதோ கொஞ்சம் கெடைச்ச கேப்-புல நல்லதா நாலு பதிவு படிக்கலாம்னு ஆரம்பிச்சா...
மொதல்ல கெடைச்சது இதுதான்....
ம்ம்ம்ம்... வெளங்கிரும் இன்னிக்கு...
//////////அப்பாடா, இன்னைக்கு பதிவு போட முடியுமான்னு தெரியாமலே ஒரு பதிவு போட்டாச்சு. ஹே ஹே ஹே...../////////
நல்லா இருக்கும்.... ஃபிளாக்கை உங்க டைரியாவே மாத்தீட்டீங்களா??? நல்ல பதிவு.....
இன்று என் பதிவு....இதுதான் யாழ்ப்பாணம்... சீ...வெட்ககேடு
இதுக்கு என்ன கமன்ட் போடலாம்? எதுவுமே மண்டையில வர மாட்டேங்குதே... யோசிக்க முடியல... அப்படி ஏதாவது கருத்து வந்தால் கமன்ட் போடறேன்.. இப்போதைக்கு இரவு வணக்கங்கோ
அவ்வ்... நான் கமெண்ட் போடல்ல
ஓட்டு மட்டும்தான் போட்டேன்
நல்ல பதிவு.
தனியார் மருத்துவ மனைகளில் அவர்களே பதிந்து சான்றிதழ் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.
வாழ்த்துகள் பிரகாஷ்.
அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!
எப்படியோ பதிவு போட்டுட்டீங்க!!!