ஊரும் ஏசியது... வீடும் ஏசியது...
என்னை, குடிகாரன் என்று..
குடித்துவிட்டு சாக்கடையோரம்
வீழ்ந்திருப்பேன்..!
எடுத்த வாந்தி எத்தனையோ?
தொலைந்த பணம் கணக்கில் இல்லை
சென்ற செல்போன்கள் கிடைக்கவில்லை
எடுத்த மகான்கள்
எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்..!
பொண்டாட்டி கம்மல்
இப்போ மார்வாடிக் கடையில்
போட்ட தாலியும்
சேர்த்தே அவனிடம்
வீட்டுக்கு நிதானமா
போயி பத்துவருஷமாச்சு...!
தினம் தினம் குடிச்சே
வீட்டுப் படியில பாதம் வைப்பேன்...
துணைக்கு வருவான் இன்னொரு குடிகாரன்....
கண்ணில் படும் காரிகையிடம்
உதிர்க்கும் உளரல் வார்த்தை
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்..!
எனக்குள் ஒரு நாள் உதயம்...
திடீர்ன்னு எண்ணிப்பார்த்தேன்
கூட வந்த குடிகாரன்
கடைசி வரை வருவானா..?
குடியை விட்டேன்,
வீட்டிலும் மன்னிப்பு கேட்டேன்...!
சிலநாள் கழித்தும் என்னை ஊரே ஏசியது.....
குடிகாரன் திரும்ப ஆரம்பிச்சுட்டானே என்று...!
நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!
இன்றைய பொன்மொழி:
நம்பிக்கையை விடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு!
இன்றைய விடுகதை:
பதைக்கிறாள்; குதிக்கிறாள்;
பக்குவம் ஆகிறாள்; பந்திக்கு போகிறாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
29 கருத்துரைகள்:
குடிகாரன் என்ற பெயர் இறந்த பினும் மாறாது.......
அருமையா இருக்கு
அன்பின் பிரகாஷ் - நல்ல சிந்தனை - குடி ஒழியாது - நாம் தான் ஒழிவோம் - என்ன செய்வது ...... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வணக்கம் நண்பரே..
குடிகாரர்கள் திருந்த நினைத்தாலும் இந்த சமூகம் திருந்தவிடாது போல..
அருமை வாழ்த்துக்கள்
நண்பா... ஒரு பள்ளிக்கூட வாத்தியார் ஷுகர் குறைவினால் மயக்கமாகி விழுந்துவிட, அவர் விழுந்த இடம் டாஸ்மாக்கின் அருகி்ல் என்பதால் குடிகாரன் என நினைத்து எவரும் கண்டு கொள்ளாமல் செல்ல, அவரிடம் படித்த மாணவர் ஒருவர் இவரைக் கண்டு பதறி, உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் என் நண்பர் கூறியது. நல்ல சிந்தனை விதையை விதைத்த உங்கள் கவிதை இதை நினைவுபடுத்தியது. பிரமாதம்!
உண்மைதான்..!குடிப்பவர்களால் ரோட்டில் மயங்கிகிடக்கும் ஒருவரை கூட
குடிகாரன் என நினைத்து யாரும் உதவுவதில்லை.
குடியைப் பற்றி கவிதை..சிறப்பு
நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!
>>
புரியாதவங்களுக்கு புரிய வச்சு லாபமில்லை.
சபாஷ்! நச் கவிதை!
ஆமா குடிகாரன் பேச்சை யாருமே நம்ப மாட்டாங்கதான் அவன் உண்மையே சொன்னாலும்.
பலே அருமையான கவிதை.
Nice....
:)
:)
:)
வணக்கம்,பிரகாஷ்!அருமையான விழிப்புணர்வுக் கவிதை!வாழ்த்துக்கள்.(சி.பி.கலாய்ச்சிருக்காரு.ஒரு கை பாக்கவேணாம்?)
/நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!
//
நல்ல திருப்பம்
குடிக்கும் பதிவர்கள் கவனத்தில் கொள்ளவும்
நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!//
அடடடடா அருமையா இருக்கு, அவரை உடனே ஆஸ்பிட்டல் கொண்டு போங்கய்யா...!!!
திருந்தியமைக்கு வாழ்த்துக்கள்...!!!
//நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!//
நல்ல பெயர் எடுப்பது மிக கஷ்டம்
காலத்திற்கேற்ற கவிதை.. ஒவ்வொருவரியும் அருமை........
உங்க கருத்த சொல்லுங்க
காதல் - காதல் - காதல்
என்ன இருந்தாலும் அனுபவத்தை இவ்ளோ அழகா எழுதி இருக்கியே மச்சி நீ கிரேட் டா....
அதனாலேதான் சொல்றேன்..
சூதானமா நடந்துக்கங்க தம்பி...
மச்சி எப்படி இப்படியெல்லாம்?
சில நாட்கள் மது அடிமைகள் மறுவாழ்வு குழுவில் பணியாற்றி இருக்கிறேன்..நிறைய பேர் திருந்த முற்பட்டு வாழ தொடங்கும் போது சமூகம் அவர்களை இப்படித்தான் மீண்டும் குடிகாரர்களாக மாற்றுகிறது என்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன்..அருமையான பதிவு தோழரே...வாழ்த்துக்கள்...
இந்த பதிவு குடிகாரர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல..திருந்தும் கொஞ்ச பேரை சமுதாயம் ஏற்க வேண்டும் என்பதற்காக..
..தங்களின் வருகையை எதிர்நோக்கி என் வலையில்....அவள் அதுவாம்...!...
அருமை ,இறுதியில் நச் என்று இருந்தது நண்பரே
சூப்பர்.,
அந்த அனுபவம் நிறைய இருக்கு,இங்கே பாண்டிச்சேரியில நிறைய பேரு இப்படித்தான் விழுந்து கிடைப்பாங்க,இதனால யாரவது முடியாம,அடி பட்டு விழுந்து கிடந்தாங்கன்னா கூட உதவி கிடைக்காது.வருத்தமான விஷயம்.
நல்லதொரு கவிதை.கெட்டவன் திருந்தினாலும் சமூகம் எப்பவும் ஒரேமனநிலையில்தான் பார்க்கிறது.குடிகாரனுக்கும் இந்தக் கதிதான் !
அருமை யான கவிதை
குடிகாரனின் நிலையைத் தெளிவாக்கியுள்ளீர்
போற்றத் தக்க முயற்சி!
புலவர் சா இராமாநுசம்
அருமையான கவிதை...
ஒருவனைப் பற்றி மக்களுக்குப் படிந்து விட்ட எண்ணங்களை மாற்றுவது மிக கடினம்.
குடிகாரன் மட்டுமில்ல பாஸ்.. இப்பல்லாம் யார் விழுந்தாலும் கண்டுக்கிறதில்லை மக்கள்..