CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts


மரமும்..மனிதனும்....



உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்...
மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்...
மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள
செயல்களைச் செய்யாவிடில்
பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்!
மேலும் வாசிக்க... "மரமும்..மனிதனும்...."



குடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை



ஊரும் ஏசியது... வீடும் ஏசியது...
என்னை, குடிகாரன் என்று..
குடித்துவிட்டு சாக்கடையோரம்
வீழ்ந்திருப்பேன்..!

எடுத்த வாந்தி எத்தனையோ?
தொலைந்த பணம் கணக்கில் இல்லை
சென்ற செல்போன்கள் கிடைக்கவில்லை
எடுத்த மகான்கள்
எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்..!

பொண்டாட்டி கம்மல்
இப்போ மார்வாடிக் கடையில்
போட்ட தாலியும்
சேர்த்தே அவனிடம்
வீட்டுக்கு நிதானமா
போயி பத்துவருஷமாச்சு...!

தினம் தினம் குடிச்சே
வீட்டுப் படியில பாதம் வைப்பேன்...
துணைக்கு வருவான் இன்னொரு குடிகாரன்....
கண்ணில் படும் காரிகையிடம்
உதிர்க்கும் உளரல் வார்த்தை
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்..!

எனக்குள் ஒரு நாள் உதயம்...
திடீர்ன்னு எண்ணிப்பார்த்தேன்
கூட வந்த குடிகாரன்
கடைசி வரை வருவானா..?

குடியை விட்டேன்,
வீட்டிலும் மன்னிப்பு கேட்டேன்...!

சிலநாள் கழித்தும் என்னை ஊரே ஏசியது.....
குடிகாரன் திரும்ப ஆரம்பிச்சுட்டானே என்று...!

 நான் மயக்கமுற்று விழுந்தது கிடந்தது
எனக்கு வந்த ரத்த அழுத்தத்தினால்
என்பதை எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்த..!

இன்றைய பொன்மொழி:
நம்பிக்கையை விடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு! 

இன்றைய விடுகதை:
பதைக்கிறாள்; குதிக்கிறாள்;
பக்குவம் ஆகிறாள்; பந்திக்கு போகிறாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
    விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
    மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முல்லைப்பெரியாறும், தமிழக அரசியல்கட்சிகளும் இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: அம்மிக்குழவி.



மேலும் வாசிக்க... "குடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை"



அந்த ஒரு நிமிடம் !!!


நான் அவளைப் பார்த்த முதல் நிமிடம்
அவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்
ஐயகோ! என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்
ஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.
அடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்
எனக்குள் என் அம்மா சொன்னாள்,
ஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே!மகனே!!

repost
மேலும் வாசிக்க... "அந்த ஒரு நிமிடம் !!!"



நீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட்டிக் கொள்ள?

 அன்பே! நான் உன் அன்புக்காக மயங்குகிறேன்
அடிப்பாவி, நீயோ என் பணத்திற்காக மயங்குகிறாய்
ஆனாலும், நான் உன் மனதை மாற்றுவேன்,
ஏனெனில் உன்னை அவ்வளவு நேசித்து விட்டேன் பெண்ணே!

*************************************

மயங்கினேன் உன்னுடைய அழகில்,
இன்னும் மயங்கினேன் உன்னுடைய தங்கையின் பேச்சில்,
இன்னும் இன்னும் மயங்கினேன் உன்னுடைய அக்காவின் உபசரிப்பில்,
ஐயோ! யாரை நான் கைப்பிடிக்க?

****************************************************

பேருந்தில் ஏறினேன், என்னவள் இருக்கிறாள் என்பதால்
அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன், அவள் தந்தை அருகில் இருந்ததால்
மாலையில் அவளிடமிருந்து கைபேசி அழைப்பு
வீட்டுக்கு அம்மா, அப்பாவோட வாங்க மாப்ளே என்றார் அவளின் அப்பா!

***************************************************

உன்னிடம் பேசுவதை தவிர்த்தேன்
உன்னைப் பார்ப்பதை தவிர்த்தேன்
உன்னிடம் பழகுவதையும் நிறுத்தினேன்
நீ வேண்டாமென்று, ஆனாலும்
ஏதோ, ஒன்று என்னை ஈர்க்கிறதடி பெண்ணே!

**********************************************************
இன்றைய மற்றொரு பதிவு: 

அழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்



கொசுறு: இது மீள்பதிவாக மலர்ந்துள்ளது.
மேலும் வாசிக்க... "நீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட்டிக் கொள்ள?"



அட யாருங்க இந்த பொண்ணு? அவசியம் தெரிஞ்சுக்கனுமா?

இனிய நண்பர்களே....
  போன வாரம் பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி... அப்படிங்கற கவிதை போட்டிருந்தேன். அதுல மேலே படத்தில் இருக்குற பொண்ணு படம் இணைச்சிருந்தேன். நான் எழுதிய கவிதையை பாராட்டி வந்த கமென்ட்டை விட அந்த பொண்ணை ஜொள்ளு விட்டு வந்த கமெண்ட்டுகள் அதிகம். அதில்லாம சாட்லயும் யாரு அந்த பொண்ணு என கேட்டு நண்பர்கள் ஜொள்ளு விட்டாங்க. நானும் கூகிள் சர்ச்சில் தேடி அழகா இருக்குதுன்னு பேரு ஊரு கூட பாக்காம பதிவுல போட்டுட்டேன். ஜொள்ளிய நண்பர்களுக்கு பதில் சொல்ல முடியாம தினறிட்டேன். இப்ப தேடி அந்த பொண்ணை பத்தி கொஞ்சம் டீடெயில் போட்டிருக்கேன். 
       பொண்ணு பேரு ஷீனா ஷகாபடி ( sheena shahabadi). ஹிந்தியில் Teree Sang என்ற படத்தில் முதலில் அறிமுகமாகியுள்ளார். அடுத்து Fast Forward என்ற ஹிந்தி படத்திலும், Bindaas என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
இன்னும் அந்த பொண்ணை பத்தி மேலும் விவரங்கள் தெரிஞ்சுக்கனும்னா இங்க கிளிக் பண்ணுங்க. 
இவரின் facebook url கீழே:
இது அவரின் முகவரியா அல்லது fake ஆ என தெரியவில்லை.

இங்க இருக்கற ரெண்டு வீடியோ வை பாக்க மறந்துராதிங்க...

பிந்தாஸ் படத்தின் பாடல் காட்சி 
நண்பர்களே பொண்ணு யாருன்னு தெரிஞ்சிருச்சா? ம்ஹும்... எப்படியெல்லாம் நம்மாளுகளுக்கு விளக்கம் தர வேண்டியதா இருக்கு? அடேய், இதுக்கு ஒரு பதிவா தேத்தியிருக்கியான்னு யாரும் அடிக்க வராதிங்க. எல்லாம் ஒரு சேவை தான்... ஹீ...ஹீ...
மேலும் வாசிக்க... "அட யாருங்க இந்த பொண்ணு? அவசியம் தெரிஞ்சுக்கனுமா?"



பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...


அடர்கூந்தலிலும், தோளிலும் தவழும்
மல்லிகையின் மனமும்....

சட்டென திரும்பி பார்க்கும் 
தாவணி உடுப்பும்....

சூரிய ஒளியில் பட்டுத் தெறிக்கும் 
வைர மூக்குத்தியும்....

நீ வரும் நேரத்தைக் காட்டும் 
கொலுசின் ஓசையும்....

நீண்ட கூந்தலில் பின்னி பிணைக்கப்பட்ட 
ஆடும் குஞ்சமும்....

உன் தோழிகளிடம் பேசும் போது 
காட்டும் முக பாவனைகளும்....

என்னை என்னவோ செய்கிறதடி...
பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...


*********************************


அறிவிப்பு:
நாளை முதல் நம் தமிழ்வாசியில் ஒரு தொழில்நுட்ப தொடர் வர இருக்கிறது. எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரத்தை கொடுங்கள்.

மேலும் வாசிக்க... "பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி..."



விடியல் வருமா - கவிதை


வாழ்க்கை என்பது சில நாள் துக்கம்
சில நாள் மகிழ்ச்சி - ஆனால்
சிலரின் வாழ்க்கையில்
சோகம் மட்டுமே - ஆனாலும்
இருட்டில் இருக்கும்
எண்ணற்றோர்க்கு - ஒருநாள் 
விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன்
நானும் - என் வாழ்நாளில்...!
மேலும் வாசிக்க... "விடியல் வருமா - கவிதை"



நண்பனையும், எதிரியையும் நேசி!


நண்பனையும் நேசி
எதிரியை அதைவிட
அதிகமாக நேசி 
நண்பன் வெற்றிக்கு துணையாக நிற்பான்
எதிரி வெற்றிக்கு காரணமாக இருப்பான்
மேலும் வாசிக்க... "நண்பனையும், எதிரியையும் நேசி!"



வைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு

கவிஞர் வைரமுத்து தன் அம்மாவை பற்றி முதன் முதலாக எழுதிய கவிதை வரிகளை அவரே வாசித்து காட்டுகிறார். அந்த வரிகள் உங்களுக்காக இங்கே ஒலி இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த கவிதை வரிகளை உங்கள் தாயாரிடம் போட்டு காட்டுங்களேன். மிகவும் அருமையான வரிகள்.
மேலும் வாசிக்க... "வைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாசிக்கும் வீடியோ இணைப்பு"



காதலின் ஆசை

காதல் தோல்வி விரக்தியால் 
என் உயிரை மாய்த்த பின்னரும்
என் இதயம் துடிப்பது மட்டும்
நிற்க கூடாது என ஆசைப்படுகிறேன்
ஆம், அவளை என் இதயத்தில் குடி வைத்துள்ளேன்!
மேலும் வாசிக்க... "காதலின் ஆசை"



அந்த ஒரு நிமிடம் - (கவிதை)


நான் அவளைப் பார்த்த முதல் நிமிடம்
அவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்
ஐயகோ! என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்
ஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.
அடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்
எனக்குள் என் அம்மா சொன்னாள்,
ஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே!மகனே!!


மேலும் வாசிக்க... "அந்த ஒரு நிமிடம் - (கவிதை)"



என்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா?!



**********************************************************************************

ஆசிரியர் : உன் பேர் என்ன? மாணவன் : எனக்கு அப்பா பேரையே வச்சுட்டாங்க சார் ஆசிரியர் : சரி, உன் அ‌ப்பா பேர் என்ன?
 மாணவன் : அதான் சொன்னேனே எ‌ன் பே‌ர் தா‌ன் எ‌‌ங்க அ‌ப்பா பேரு‌ம்.

**********************************************************************************
சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்? ஒரு 2 மணி நேரம் ஒடும்! அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!

**********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்! முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்? உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

********************************************************************************

தலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா? கவனிக்கலையே! "என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்"

********************************************************************************

தலைவர்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேங்காய் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், மறந்துடாதீங்க தேங்காய் சின்னம்... தொண்டர்: தலைவரே! நம் சின்னம் தேங்கய் இல்லை! தலைவர்: எனவே... தேங்காய் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

*********************************************************************************

ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு? கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!

*********************************************************************************
மேலும் வாசிக்க... "என்னது தேர்தல் முடிவுகள் அதுக்குள்ள வந்திடுச்சா?!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1