அனைவருக்கும் வணக்கம்,
வலைபதிவர்கள், முகநூல், டிவிட்டர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி மகிழ கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நேற்று மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். சந்திப்பு பற்றிய நினைவுகளை இனி சில இடுகைகள் மூலம் உங்களிடம் பகிர்கிறேன்.
நிறைய பதிவர்கள் சங்கமம் பற்றிய பதிவுகள் எழுதுவாங்க. சந்திப்பில் என்னென்ன நடந்துச்சுன்னு எழுதுவாங்க படிச்சுக்காங்க. ஹி..ஹி... நானும் எழுதுவேன், படிப்பேன். இப்போ சந்திப்பில் வந்த யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் ஒண்ணு நான் சொல்லப் போறேன்.
இது யாருன்னு தெரியனுமா? கீழே படிங்க |
ஒரு பத்து மணி இருக்கும் சிபி ரொம்ப வேகமா வந்தார், அப்படியே நம்ம கூட்டத்துல ஐக்கியமாயிட்டார். அப்புறம் தான் வச்சிருந்த கேமராவால போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சாரு. அண்ணே, இன்னைக்கும் உங்க வேலையை சரியா முடிச்சிட்டு வந்திருப்பிங்களே அப்படின்னு கேட்டேன், என்ன வேலை அப்படின்னு கேட்டார். காலையில ஒரு பதிவு போட்டுட்டு வந்திருப்பிங்களே, அத மறக்க மாட்டிங்களே... யோவ், அதெல்லாம் போடாம வருவோமா? அதான்யா நமக்கு வேலை, அப்படின்னு சொல்லிட்டு பயங்கரமா சிரிச்சார். சிபி எப்படி சிரிப்பார்னு மனோகிட்ட கேளுங்க.... நம்ம நக்கீரன், அதாங்க நாய்நக்ஸ் அவர்கிட்ட கேமராவ தந்து போட்டோ எடுப்பா என அன்பா கேட்டார் சிபி, அவரும் போட்டோ எடுக்க கேமராவ வாங்கிட்டு போகஸ் பார்த்தார். அப்புறம் என்ன நெனச்சார்னு தெரியல நாய்நக்ஸ் கேமராவ நாலு தடவ சுத்தி சுத்தி பார்த்தார். என்னய்யா இப்படி பாக்குற என சிபி கேட்க, அவரோ கேமரால சார்ஜ் இல்லையே சிபி எப்படி போட்டோ எடுக்கிறது? என சொல்ல நம்ம சிபி ரொம்பவே ஷாக் ஆயிட்டார். அப்புறம் சமாளிச்சுட்டு பேட்டரி சார்ஜ் போடணும் போல, மொபைல் கடைக்கு போகனும்னு சொல்லிட்டு நக்ஸ் கூட வெளியே போனாரு. மொபைல் கடைக்காரன் சார்ஜ் போட கரண்டை ஓசியாவா தருவான்? நிகழ்ச்சி அப்போ ஆரம்பிக்கல. நானும் நம்ம தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்தும் வெளியே கடைக்கு போனோம் டீ சாப்பிட... ஹி..ஹி..
இவருதான் தமிழ்பெரன்ட்ஸ் சம்பத்குமார் |
அப்போ சம்பத் சொன்னார், அது சிபி மாதிரி தெரியுதே அப்படின்னு, ஆமாங்க கேமரா சார்ஜ் தீந்து போச்சு. அதான் சார்ஜ் போட வந்திருக்கார். அதுக்கு எதுக்குங்க மெடிக்கல் ஷாப்ல நிக்கிறாரு? அங்க எப்படி சார்ஜ் போட முடியும்? என கேள்வி மேல கேள்வி கேட்டாரு. சிபி பக்கத்துல போறதுக்குள்ள கடையை விட்டு வெளியே வந்துட்டார். அண்ணே இங்க என்ன வாங்குனிங்க அப்படின்னு கேட்டோம். ஓ... அதுவா, கேமரா பேட்டரி வாங்கினேன் அப்படின்னு சொன்னார். (ஆனா மெடிக்கல் ஷாப்ல என்ன வாங்கினார்னு சத்தியமா தெரியலைங்க)சரிங்கன்னே நீங்க சொன்னா சரியாதான இருக்கும். அப்படியே உங்கள போட்டோ எடுக்கணும் ஒரு போஸ் தாங்க அப்படின்னு சொன்னதும், இருய்யா கண்ணாடி போட்டுக்கறேன், அப்புறம் மனோ பய திட்டுவானு சொல்லிட்டே கண்ணாடி போட்டுகிட்டார். அவர போட்டோ எடுத்திட்டு எல்லோரும் உள்ள வந்தோம். அப்புறம் ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆச்சு... அத பத்தி அடுத்த பாகங்கள்ல பார்க்கலாம்.
சிபி தான்... மெடிக்கல்ஷாப் முன் |
அப்புறம் நம்ம நாய்நக்ஸ் செமையா பல்பு வாங்குனார். அது என்னான்னா மனோ, விக்கி, மாணவன் சிலம்பு, நிரூபன் என நாலு பேரும் என் மொபைல்ல பேச போறாங்க அத மைக் முன்னாடி எல்லோருக்கும் கேட்கிற மாதிரி செய்ய போறேன்னு சொல்லிட்டு இருந்தார். செய்யுங்க நல்ல முயற்சிதான்னு சொல்லிட்டு இருந்தோம். நிகழ்ச்சி நடந்துட்டு இருந்துச்சு. நாய்நக்ஸ் அப்பஅப்ப சொல்லிட்டே இருந்தார், நாலு பெரும் பேச போறாங்க அப்படின்னு... கொஞ்ச நேரம் ஆச்சு. திடீர்னு மேடையில ஹலோ... ஹலோ... அப்படின்னு நக்ஸ் சொல்லிட்டு இருந்தார். அப்புறம் மைக்கல மனோ லைன்ல வரார். உங்க கிட்ட பேச போறார்னு சொல்லிட்டு மறுபடியும் ஹலோ.. ஹலோ... நான் நக்கீரன் பேசறேன்... பேசுங்க மனோ...உங்களுக்காக எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...பேசுங்க மனோ அப்படின்னு சொல்லிட்டு இருந்தார். ஹாலே அமைதியா பார்த்துட்டு இருந்துச்சு அவர... இப்படியே ஒரு மூணு நிமிஷம் ஆச்சு. மனோ பேசுற மாதிரி தெரியல. எல்லோரும் உங்க பேச்சை கேட்கணும்னு ஆர்வமா இருக்காங்க? ஹலோ.... மனோ.... லைன்ல இருக்கிங்களா அப்படின்னு கேட்டுட்டே இருந்தார். திடீர்னு, நான் நல்லா இருக்கேன், நீங்க பேசறது கேட்குது அப்படின்னு சொன்னார். அந்தப்பக்கமும் ஹலோ நக்கீரன் எப்படி இருக்கீங்க, விழா எப்படி போகுதுன்னு ஒரு பேச்சு குரல் கேட்டுச்சு. ரைட்டு, மனோ பேசுறார் போல அப்படின்னு ஆர்வமா இருந்தோம். என்ன நெனச்சாரோ நக்கீரன் மைக்ல சாரிங்க இது மனோ இல்ல. தப்பா மாணவன் வலைப்பதிவு சிலம்பு அப்படின்னு சொன்னாரு பாருங்க, போன் மாறி அவருக்கு போயிருச்சு அப்படின்னு மைக்ல வழிஞ்சார். எல்லோரும் அவர ஒரு கொலை வெறியில பார்த்தாங்க. பாவங்க நக்கீரன் செம பல்பு வாங்குனார் மேடையில....
நான், சிபி, நாய்நக்ஸ் நக்கீரன் |
கொஞ்ச நேரம் யாருகிட்டயும் பேசாம அமைதியா இருந்தார். லைன்ன இவரு மாத்தி போட்டுட்டு,மனோ இப்படி செய்துட்டாரே முப்பது ரூவா போச்சே அப்படின்னு மனுஷன் பொலம்பி தள்ளிட்டாருங்க... ஹி..ஹி... செம காமெடி தான் போங்க நாய்நக்ஸ் நக்கீரன் கிட்ட....
இன்னும் வரும்...
பிற்சேர்க்கை:
ஏன் எனது பதிவின் லிங்க்ஐ சேர்க்கவில்லை என நாலு முறை போன் போட்டு மிரட்டினார் நாய்நக்ஸ் நக்கீரன். அவரின் மிரட்டல் கெஞ்சலுக்காக அவரது பெயரில் இணைப்பு தந்துட்டேன்... ஹி..ஹி..
46 கருத்துரைகள்:
Lol
lolll
Nan phone pannathu
MANO -ku than
net work probm
ஏலேய் மனோ, அந்த அரிவாளை எடு லேய், பய புள்லய ஒரே வெட்டா வெட்டிடலாம்
நக்கீரன் 30 ரூபாய் போச்சேன்னு புலம்புனது செம காமெடி
வர முடியவில்லை என்று நினைத்து வருத்தப்படுகிறேன். ஆனால், உங்கள் பதிவைப் பார்த்து கொஞ்சம் சந்தோசம். தொடருங்க... நன்றி நண்பா!
Top Commenter · 26 years ஓல்ட்// இது சிபி பேருக்கு பக்கத்துல இருக்குது. என்னா அர்த்தம்? 26 வருஷமா ஓல்ட்டாவே இருக்கிறார்னு அர்த்தமா?
சங்கமம் நடந்த இடத்துக்கு வர்றது தியேட்டர் ல படம் பார்க்கிறது மாதிரி. பதிவுகள் பார்க்கிறது DVD ல பார்க்கிறது மாதிரி. நினைச்சப்போ பார்த்துக்கலாம் வழக்கம் போல வம்பு பண்ணி எழுதி இருக்கீங்க
Mano-nale bulb thanya
ஹா ஹா ஹா
பிரிக்க முடியாதது சிபியும் கண்ணாடியும் அப்படிதானே ......எங்க தலைவர கலாய்ச்சதுக்கு நன்றி...உங்க பதிவு அடுத்த பாகம் எப்போ...
ஹா ஹா ஹா...
இன்னும் நெறைய பல்பு இருக்கோ?
அருமையா இருந்துருக்கும் போல ஹாஹா!
வணக்கம் மச்சி,
சௌக்கியமா?
ஆமா இந்தாளு மெடிக்கல் சாப்பில ஏதாவது கில்மா படம் கிடைக்கும் என்று போயிருப்பாரோ......
அவ்வ்வ்
நானும் எதிர்பார்த்திட்டு இருந்தேன் நாய் நக்ஸ் அண்ணர் மெசேஜ் போடுவாருன்னு..
அப்புறமா காணலை! தூங்கி எந்திரிச்சிட்டேன்! பார்த்தா சிபி சந்திப்பு முடிஞ்சதா பதிவே போட்டு கலக்கிட்டாரு.
அதென்ன நீங்கெல்லாம் பேட்ஜ் மாட்டியிருக்கீங்க அவரு மட்டும் மாட்டாம இருக்காரு?
ஹா ஹா....
ஆமா சிபி அண்ணாச்சி அப்பிடி என்னதான் வாங்கினார்?
குட் நல்லா கலாய்ச்சி இருக்கீங்க..
வழக்கம் போல அசத்தல் ..
இதுல ஹைலைட்டே அண்ணன் நக்கீரன் வாங்குன பல்புதான்
கடைசியா மனோ அண்ணாச்சிய கேட்டா நக்கீரர் என்க்கு போனே பண்ணலன்னு சொல்லிட்டார்
நம்ம நக்கீரன் வழிஞ்சது நல்ல காமெடியா இருந்துச்சு..
ஆனா சிபி கடைசிவரைக்கும் வாங்குனத சொல்லவே இல்ல பார்த்தீங்களா...
அடப்பாவிகளா, பதிவர் சந்திப்புல பல்பு வாங்கி என் பேரை போட்டு உருட்டிட்டாங்களே...
மெடிக்கல் கடையில இந்த நாயி என்ன வாங்கினான்னு எனக்கு தெரியுமே ஹி ஹி...
சிபி அண்ணே கண்ணாடி போட்டோ சூப்பர்டா அண்ணே...!!!
ஏம்பா எல்லாரும் பதிவா போட்டு வராதவங்களுக்கு பொறாஅமையை உண்டு பண்ணுறீங்க
ஒ மாணவன்'க்கு போனை போட்டுட்டு என் பேரை சொல்லிட்டாரா...??? மாணவன், மனோ ஒரே ஸ்லாங்கா இருப்பதால் அண்ணன் கன்பியூஸ் ஆகிட்டாரு போல, முப்பது ரூவா போனதுக்கு மூவாயிரம் புலம்பல் ஹா ஹா ஹா ஹா செம சிரிப்பு...!!!
நல்ல நகைச்சுவை விருந்து தான்.
தொடர்ந்து எழுதுங்க. vgk
சி.பி.செந்தில்குமார் said...
ஏலேய் மனோ, அந்த அரிவாளை எடு லேய், பய புள்லய ஒரே வெட்டா வெட்டிடலாம்//
முதல்ல உன்னை வெட்டனும்லேய் அப்புறம் மற்றவிங்களை பார்க்கலாம் ஹி ஹி...
சிபி மெடிக்கல் ஷாப்ல....பேட்டரிதாங்க வாங்கினாரு...வேற போகையில வாங்கிட்டு பேயிருப்பாரு...வேற என்ன மட்டன் சாப்பிட்டாருல்ல ஜீரணத்துக்கு மாத்திரை வாங்கிட்டு போயிருப்பாரு...சார் நாய்நக்ஸ் லிங்க இவரும் தரலை நீங்க பிரபல பதிவர் ஆகமுடியாது போல.....
நம்ம வலையில் பதிவர் சந்திப்பு அனுபவம்
நல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு
அனுபவம் புதுமை..
நன்றாக இருக்கு காமெடி.தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம்.
பல்பு வாங்கினாரா.. எதுக்காக வாங்கினார்... எந்த வாட்ஸ் பல்பு... ஏன் பல்பு சிதம்பரதுல கிடைக்காதா அதுக்கு எதுக்கு ஈரோடு போய் வாங்கணும்... ஒண்ணுமே புரியல மச்சி...
ஹா......ஹா.......
மெடிகல் ஷாப்ல அண்ணன் பலூன் வாங்கி இருப்பார், அவருக்கு அதுல வெள்ளாடுறதுன்னா ரொம்ப புடிக்குமாம்..........!
அண்ணன் இருட்டுக்குள்ளேயும் கண்ணாடி போட்டிருக்காரே, எக்ஸ்ரே கண்ணாடியா இருக்குமோ?
நாய் நக்ஸ் கலக்கிட்டாருய்யா.......
பதிவு நகைச் சுவையாக உள்ளது
நன்றி!
சகோ!
சங்கம் அமைப்பது பற்றி
ஏதேனும் ஆய்வு செய்தீர்களா?
புலவர் சா இராமாநுசம்
அருமையான சங்கமம் வாழ்த்துக்கள் நண்பா!
சந்திப்பு அனைவருக்கும் நல்ல ஒரு அனுபவத்தை அளித்திருக்கும்... தங்களின் அனுபவபதிவுகள் வராதவர்களுக்கு அடுத்த சந்திப்பை தவற விடக்கூடாது என்ற எண்ணத்தை விதைத்துவிடும்...
பகிர்வுக்கு நன்றி... நண்பா...
மச்சி, இன்னும் எத்தனைப் பதிவு தேத்துவ?
வணக்கம்,பிரகாஷ்!பதிவர் சந்திப்பு ஆரம்பமே அமர்க்களம்.(இன்னும் மெலியல போல?)
பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.
வேடந்தாங்கல்-
மச்சி, இன்னும் எத்தனைப் பதிவு தேத்துவ?
ஹி ஹி...
அட.... ஆமாங்க... மனோ, மாணவன் போன் பேசின காமெடிய என் பதிவுல சொல்ல மறந்துட்டேன். நீங்க சூப்பரா சொல்லிட்டீங்க...
அனைவரையும் பார்த்தேன்.அனால் பேசத் தயக்கம்.மன்னிக்கவும்.பதிவு அருமை.
பதிவர் சந்திப்பு நல்லா வே எஞ்சாய் பண்ணி இருக்கீங்க எனக்கு கூட ஒருமுறையாவது இதுபோல பதிவர் சந்திப்பில் கல்ந்து நிறைய பதிவர்களை சந்திக்க ஆசைதான் பிப்ரவரி 20 டு 24 மதுரை வரேன். அப்ப ஒரு ஏற்பாடு பண்ணிடு.
/// தமிழ்வாசி பிரகாஷ் said...
செந்திலு..... அடுத்தம் பதிவு இருக்கா? இல்லையா?
சங்கவி முன்னின்று அனைவரையும் வரவேற்பதில் இருந்து, உபசரிப்பது வரை முன்னின்று செய்தார்....
வாசிக்க:
ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்... ///
வணக்கம் பிரகாஷ். இனிமேல் நான் உங்கள் பதிவுக்கு வந்து அட்டன்டென்ஸ் கொடுத்து விடுகிறேன்.
உடனே வாங்க அடுத்த பதிவு போட்டு அது நம்ம நாய் நக்ஸ் பற்றி தான்.
நம்ம சிபி அண்ணனை பற்றி ரொம்ப 'முக்கியமான' மேட்டர சொல்லிடிங்களே?
பதிவர் சங்கமத்தில் சங்கமிக்க முடியவில்லை என்கிற வருத்தம் உங்கள் பதிவைப் பார்த்தவுடன் மேலோங்குகிறது..
அடுத்து நடந்தால் தெரிவியுங்க!