நம்ம சாதனை(பேசுவதில்) பிரதமர் மன்மோகன்சிங் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்தார், ரெண்டு நாள் தங்கினார், அப்புறம் திரும்பி போயிட்டார். என்ன பிரதமர் இங்க வந்தாரா? கூடங்குளம் பிரச்சனைக்கா? இல்ல முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கா? அங்க வந்தது மாதிரி தெரியலையேன்னு டவுட் படுறிங்களா? அந்த பிரச்சனைக்காக அவரு வரலைங்க. நம்ம அம்மா கிட்ட பத்துபதினஞ்சு மனுக்கள் வாங்கவும், நம்ம ஐயா கிட்ட பத்துபதினஞ்சு மனுக்கள் வாங்கவும் வந்திருக்காரு. அப்படியே சென்னையில நடக்கற கணக்குல மேதையான ராமானுஜரின் விழாவுக்கு போயிட்டு வந்திருக்காரு. அப்புறமா காரைக்குடியில நடக்கிற பல்கலைகழக விழா, தனியாரு ஆஸ்பத்திரி திறப்பு வுழான்னு ரொம்ப முக்கியமான விழாக்கள் கலந்துகிட்டார்.
அப்புறமா நம்ம அம்மா அவர சந்திச்சு பேசியிருக்காங்க. அப்படியே நம்ம ஐயாவும் பிரதமர சந்திச்சு பேசியிருக்காங்க. அவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு நாம அவசியம் தெரிஞ்சுக்கனுமா? கண்டிப்பா வேணாம். ஆமா, இப்போ நடக்கிற பிரச்னையை பத்தி பேசியிருப்பாங்கன்னு சொல்றிங்களா? இருக்கலாம். ஆனா அதை நம்ம பிரதமர் காதுல வாங்கியிருப்பார்ன்னு நினைக்கிறீங்களா? அப்படியே காதுல வாங்கினாலும் ஏதாவது வாய தொறந்து பேசுவாரா? அல்லது பேசியிருப்பாரா? சரி, அத பத்தி பேச வேணாம். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியுதவியை சரியா தரல. அதையாவது கொஞ்சம் தர்றேன்னு பேசியிருக்கலாம். விலைவாசிகளை கட்டுப்படுத்தற வழிவகைகளை பத்தி பேசியிருக்கலாம். அத பத்தி எதுவுமே பேசல.
அவர் வந்த நோக்கம் ரெண்டு விழால கலந்துக்கணும். அந்த விழா பத்தி நாலஞ்சு வார்த்தை பேசணும். அப்புறம் போட்டோஸ்க்கு போஸ் தரனும். தமிழ்நாட்டுக்கு ரெண்டு நாள் வந்த அடையாளத்தை பத்திரிகைகளுக்கு காட்டனும். அவ்ளோதான். யாருமில்லாத டீக்கடையில டீ ஆத்துற மாதிரி கூட்டமே இல்லாத விழாவா நடந்திருக்கு இந்தியாவின் பிரதமர் கலந்துகிட்ட விழா. ஒரு ஆர்வத்துல கலந்துக்க வந்தவங்க கிட்டேயும் இன்விடேஷன் இல்லைன்னு அனுமதிக்கலையாம் நம்ம தலைசிறந்த காவல்துறையினர்... அவங்க வேலையை அவங்க சரியா பார்த்திருக்காங்க.
ஆக, பிரதமர் தமிழ்நாட்டுக்கு ரெண்டுநாள் பயணமாக வந்தார். விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்படின்னு எல்லா பேப்பர்களிலும் கொட்ட எழுத்தில வந்திருச்சு. அது போதும் அவருக்கும், தமிழக காங்கிரஸ்க்கும். முக்கியமா சிதம்பரத்துக்கு இதுவே ரெண்டு மூணு போதும். இத வச்சே தமிழகத்துல காலத்த ஓட்டிருவாரு.....
20 கருத்துரைகள்:
மொத மாக்கான்
அரசியல் பகிர்வு .சத்தியமாய் நான் இதைப் படிக்கவில்லை சகோ .அதனால் பகிர்வுக்கு நன்றி கூறி எஸ்கேப் ஆகிட்டேன் .புத்தாண்டு பகிர்வு உங்கள் தளத்தில் களை கட்டட்டும் .வாழ்த்துக்கள் சகோ .
3000பேர் அமரும் அரங்கில் 250பேர் - எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் போல அவ்வ்வ்வ்வ்
அவ்வ் அப்ப போட்டோ எடுக்கத்தான் வந்தாரா? ஐயாவும் அம்மாவும் என்ன கதைச்சிருப்பினம் என்று சொல்லவே இல்லையே பாஸ்
எது இவரு வந்தாரா எங்க எப்போ!
அவர் வந்த நோக்கம் ரெண்டு விழால கலந்துக்கணும். அந்த விழா பத்தி நாலஞ்சு வார்த்தை பேசணும். அப்புறம் போட்டோஸ்க்கு போஸ் தரனும். தமிழ்நாட்டுக்கு ரெண்டு நாள் வந்த அடையாளத்தை பத்திரிகைகளுக்கு காட்டனும்.
>>
பிரதமரின் வருகையின் முக்கியத்துவம் இவ்வளவ்தானா? இந்தியா முன்னேறிடுமோ?
பிரதமர் வந்தாராராராரா?எப்ப...?எங்க......?சரி வந்தா வந்துட்டு போகட்டும்....!!!
Aadura rama....
Aadura rama.....
ஹா ஹா ஹா...
பிரதமர் வந்து, சென்னையில ட்ராபிக் தான் பலன்.. வேற ஒன்னும் இல்லை..
வழக்கம் போல சில மணிநேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து போலீசார் அவங்க விசுவாசத்தை காட்டி விட்டார்கள்...
பிரதமர் வந்தாராம்..எதுக்கு வந்தார்ன்னு நிறைய பேருக்கு தெரியலையாம்..
அன்போடு அழைக்கிறேன்..
நாட்கள் போதவில்லை
//////இத வச்சே தமிழகத்துல காலத்த ஓட்டிருவாரு.....///////
இவ்வளவு காலமும் பரம்பரை பரம்பரையா அரசியல்வாதிகள் செய்தத இவரும் செய்தார்...
தொடர்ந்து நம்ப தமிழர்கள் முட்டாள்களா??
ஆனால் பல தமிழர்கள் நம்புகின்றனர்...
இன்று என் பதிவு;;; கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2
எதோ பெயருக்கு வந்து சிங்கி அடிச்சுட்டு போயாச்சு அம்புட்டுதான், இவர் இங்கே வந்ததால் ஒரு நன்மையையும் கிடையாது என்பதே சத்தியம்...!!!
நேத்து ஒரே டிராப்பிக் ஜாம்.... ஆமா யாரு வந்தது....
தமிழ்நாட்டு பயணம் வர்றார்ருன்னு தான சொன்னோம்.பிரச்சினையை பத்தி பேச வர்ரோம்னு சொன்னமா?
நாட்டின் பிரதமர் வந்து போனதை இப்படி "எதுக்கு வந்தாரு?" என்று விமர்சிக்கும் அளவு நடந்து முடிந்திருக்கிறது அவரது வருகை...
இதற்கு அவர் தன்னோட டூப்பை அனுப்பி இருக்கலாம்!!
அது ஒண்ணுமில்லைங்க பாஸ் தமிழ்நாட்டு போட்டோகிராபர்கள் எல்லாம் நல்லா ஸ்டில்போட்டொ எடுப்பாங்களாம் அதனால பாஸ்போர்ட் சைஸ் ரெண்டு எடுத்துட்டு போக வந்திருப்பார் போல...
http://vethakannan.blogspot.com/2011/12/4.html
வணக்கம்,பிரகாஷ்!அப்புடியே,ஈழத் தமிழர் முகாமிலேருந்தும் யாரும் மூணு நாளைக்கு வெளியே போகக்கூடா துன்னும் தடா போட்டுட்டாங்க, நம்ம காவல்துறை!மூணு நாள் பொளைப்பும் போச்சு!
வணக்கம் மச்சி,
நல்லா இருக்கிறீங்களா?
இலங்கை இந்தியாவில இருக்கிற அரசியல்வாதிகளுக்கு இள ரத்தம் பாய்ச்சனும்.
அப்போ தான் நாடு உருப்படும்,
நாட்டில எத்தனையோ முக்கியமான சம்பவங்கள் இடம் பெறுகிறது,. மக்கள் வாழ்க்கை தொடர்பான போராட்டங்கள் நடக்குது. அதை விடுத்து அம்மாவையும், ஐயாவையும் சந்தித்து விட்டு போறது.
ஹே...ஹே...
ரொம்ப ஓவரா இல்ல! இதுகள் எல்லாம் எப்போ தான் திருந்த போகுதுகளோ?