CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label ஆதங்கம். Show all posts
Showing posts with label ஆதங்கம். Show all posts


கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!


ஒரு உண்மைச் சம்பவமே இக்கட்டுரை எழுத காரணம்.

கடந்த வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் திடீரென பிரபல மருத்துவமனையில் ஐஸியூ-வில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களால் அந்த மருத்துவமனையே நிறைந்து இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொன்ன செய்தி எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.
மேலும் வாசிக்க... "கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!"



மக்களே! மறுபடியும் வச்சுட்டாங்கையா ஆப்பு...? நம்பி மோசம் போயிட்டோமோ?

இந்த சந்தோஷம் எத்தன நாள்கள் தான் நீடிக்கும் என எண்ணிட்டு இருந்தேன். நான் மட்டுமல்ல, நம்ம தமிழகமே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போச்சு. ஆம், அது இன்னையோட முடிவுக்கு வந்துருச்சு. வெறும் பத்து நாட்கள் தான் இருக்கும் அந்த சந்தோஷம்.
 ஆமாங்க, என்னத்த சொல்ல, போன வாரம் ரொம்ப சந்தோசமா ஒரு பதிவு போட்டேனுங்க. மதுரையில கரண்ட் கட் இல்லைன்னு போட்டிருந்தேன். அந்த பதிவ படிச்சுட்டு நம்ம நண்பர்களும் அவங்க ஊர்லயும் கரண்ட் கட் இல்லைன்னு சொல்லியிருந்தாங்க. மதுரைக்கு மீனாட்சியம்மன் அருள்ன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா காற்றாலை மூலமா ஆயிரம் மெகாவாட்க்கும் மேலாக கரண்ட் கிடச்சதால எல்லா ஊர்லயும் கரண்ட் கட் செய்றத நிறுத்தி மக்களை சந்தோசப்படுத்தினாங்க. 

இன்னைக்கு எல்லாம் போச்சு. இன்னையுல இருந்து மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, சுமார் அஞ்சு மணி நேரம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க. மதியம் 12.00 - 3.00, அப்புறம் 6.30 - 7.30, அப்புறம் 9.30 - 10.15 இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்க. அப்போ காற்றாலை கரண்ட் தீந்துச்சா? இல்ல, மதுரையில அழகர் திருவிழா முடிவுக்கு வர்றதுனால மீனாட்சியம்மன் அருளை நிறுத்திட்டாங்களான்னு தெரியல. மதுரை அல்லாத மற்ற இடத்திலையும் அந்த சந்தோஷம் முடிவுக்கு வந்துருச்சான்னு தெரியல. 

ஆக, மக்கள் சந்தோசமா, நிம்மதியா கரண்ட் காத்தை சுவாசிக்க அரசு விரும்பல போல. சரிங்க, மறுபடியும் ஏதாவது நல்லா பலமா காத்தடிக்குதான்னு பாப்போம், அரசும் இப்ப மாதிரியே நம்மள சந்தோசப்படுத்துறாங்களான்னு பொறுத்திருந்து தான் பார்ப்போமே?????????????????????
மேலும் வாசிக்க... "மக்களே! மறுபடியும் வச்சுட்டாங்கையா ஆப்பு...? நம்பி மோசம் போயிட்டோமோ?"



பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?

      உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. எப்படியும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தே ஆக வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

        நம்ம ஊரு மக்களின் எதிர்ப்பை சந்தித்து பல மாநிலங்களும் வெளிச்சம் பெற போகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கபடலாம். இந்நிலையில் இந்த ஆண்டு நிறைவுறும் ஐந்தாண்டு திட்டத்தின் சாதனைகளை விளக்கி ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுனில்குமார் பேசுகையில் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது என கூறியுள்ளார். ஏன் இந்த பாரபட்சம்? தமிழகத்தில் எட்டு, பத்து மணிநேர மின்வெட்டு இருப்பது அவருக்கு தெரியாதா? இன்னும் சில மாதத்தில் மின்சாரம் தயாரிக்க இருக்கும் மாநிலத்திற்கு சிறிய அளவு கூட மின்சாரம் ஒதுக்க முடியாதா? மத்திய அரசு நினைத்தால் முடியும். ஆனாலும் காங்கிரஸ் எப்போதும் தென்னிந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு கடுகளவு கூட நல்ல திட்டங்கள் செய்யாது. இந்நிலையில் மின்சாரம் கிடைக்குமா? சந்தேகம் தான்.

    தமிழக அரசும் வேறு வழிகளில் முயற்சி செய்ததா எனத் தெரியவில்லை? கூடங்குளத்தை மட்டுமே நம்பி இருப்பது போல தெரிகிறது. இங்கே நமக்கு மின்சாரம் இல்லை என கை விரிக்கும் மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு சுமார் ஐயாயிரம் மெகாவாட் மின்சாரம் உதவி அளிப்பதாக நமது பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு உறுதி தந்திருப்பதாக பாகிஸ்தான் பேப்பரான நியூஸ் டெய்லி செய்தி (தினமலர் செய்தியின் படி) வெளியிட்டுள்ளது. 

        இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவ்வளவு மின்சாரம் எங்கிருந்து தரப்படும்? அந்த மின்சாரத்தில் ஒரு பத்து சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கினால் பல மணிநேரம் மின்வெட்டு கொஞ்சமாவது குறையுமே? ஆக, மின்சாரம் இருந்தும் நமக்கு தராமல் கை விரிகிறது மத்திய அரசு, என நம்பாமல் இருக்க முடிகிறதா? என்ன?
மேலும் வாசிக்க... "பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?"



மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்

மதிப்புமிக்க தமிழக அரசே....
         நலமா இருக்கிங்களா? நீங்க நல்லாத்தான் இருப்பீங்க, என்ன மாதிரி பாமரன்கள் ஏதோ இருக்கோம். இருந்த வேலையும் போச்சு. ஆமாங்க அரசே, உங்கள நம்பி இருந்ததுக்கு என்ன போல நிறைய பேருக்கு வேலை இல்லாம போனதுதான் மிச்சம். இரும்பு பட்டறையில வேல பார்த்துட்டு தான் இருந்தேன். ரெண்டு மூணு மணி நேரம் கரண்ட் கட் ஆனா பரவாயில்லை. நாள் முழுதும் கட் ஆச்சுனா எப்படிங்க அரசே வேலை பாக்க முடியும்? நான் வேல பாத்த கம்பெனிக்காரங்க சின்னதா தொழில் செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்களால கரண்ட் கட் சமாளிக்க முடியல. அங்க என்னை மாதிரி பத்து பேரு வேலை பார்த்திட்டு இருந்தோம். சம்பளம் கொடுத்து கட்டுபடியாகலைன்னு வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. வேற பக்கம் போயி வேல பாக்கலாம்னா அங்கேயும் அதே பிரச்னையை சொல்லி வேலை தர மறுக்குறாங்க. வேற பொழப்பு பொழைக்கலாம்னா என்னோட வறுமை தடுக்குது. 
             எம் பொண்டாட்டியும் மிசின்தறி வேலைக்கு போயிட்டு இருந்தா... அங்கயும் கரண்ட் பிரச்னையை காரணம் காட்டி அவளுக்கும் வேலை போச்சு. எப்பவுமே ஆர்டர் கம்மி, மிசின் ரிப்பேர் அதனால வேலை கம்மியா இருக்குன்னு கேட்டு பழகிப் போன எங்களுக்கு கரண்ட் இல்லை அப்படின்னு முதலாளிக சொல்றது புதுசா இருக்கு. எங்க பொழப்புக்கு எமனா கரண்ட் கட் இருக்கு. வீட்டுல பாதி நேரத்துக்கும் மேல கரண்ட் இல்லை. அத எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம். ஆனா வேலை இல்லையே, எங்க போயி என் கஷ்டத்த சொல்ல. அதான் அரசுக்கு கடிதமா எழுதறேன்.
           மழை இல்லை, ஆத்துல தண்ணி வரல, அதான் கரண்ட் கட் இருக்குதுன்னு இதுநாள் வரை சொல்லிட்டு இருந்திங்க. ஆனா இப்போ அதெல்லாம் சொல்லாம கூடங்குளம் தொறக்கல, அதான் கரண்ட் கட் ஆகுதுன்னு சொல்றிங்க. என்னமோ தொறங்க. எங்கள போல இருக்கறவங்க வேலைக்கு ஒரு வழி சொல்லுங்க. 
சரிங்க அரசே, உங்கள நம்பி ஒட்டு போட்ட எங்கள எப்படியாவது வாழ வழி செய்யுங்க. இந்த கடிதம் என்னைப் போல வேலை இழந்து வாடும் அனைவரின் சார்பில் எழுதியுள்ளேன். நன்றிங்க...

இப்படிக்கு,
தமிழ்ப் பாமரன்.
மேலும் வாசிக்க... "மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்"



பிரதமர் வந்தாரா? கூடங்குளத்துக்கா? இல்ல முல்லைப் பெரியாறுக்கா? மாக்கானின் பார்வை

          நம்ம சாதனை(பேசுவதில்) பிரதமர் மன்மோகன்சிங் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்தார், ரெண்டு நாள் தங்கினார், அப்புறம் திரும்பி போயிட்டார். என்ன பிரதமர் இங்க வந்தாரா? கூடங்குளம் பிரச்சனைக்கா? இல்ல முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கா? அங்க வந்தது மாதிரி தெரியலையேன்னு டவுட் படுறிங்களா? அந்த பிரச்சனைக்காக அவரு வரலைங்க. நம்ம அம்மா கிட்ட பத்துபதினஞ்சு மனுக்கள் வாங்கவும், நம்ம ஐயா கிட்ட பத்துபதினஞ்சு மனுக்கள் வாங்கவும் வந்திருக்காரு. அப்படியே சென்னையில நடக்கற கணக்குல மேதையான ராமானுஜரின் விழாவுக்கு போயிட்டு வந்திருக்காரு. அப்புறமா காரைக்குடியில நடக்கிற பல்கலைகழக விழா, தனியாரு ஆஸ்பத்திரி திறப்பு வுழான்னு ரொம்ப முக்கியமான விழாக்கள் கலந்துகிட்டார். 
       அப்புறமா நம்ம அம்மா அவர சந்திச்சு பேசியிருக்காங்க. அப்படியே நம்ம ஐயாவும் பிரதமர சந்திச்சு பேசியிருக்காங்க. அவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு நாம அவசியம் தெரிஞ்சுக்கனுமா? கண்டிப்பா வேணாம். ஆமா, இப்போ நடக்கிற பிரச்னையை பத்தி பேசியிருப்பாங்கன்னு சொல்றிங்களா? இருக்கலாம். ஆனா அதை நம்ம பிரதமர் காதுல வாங்கியிருப்பார்ன்னு நினைக்கிறீங்களா? அப்படியே காதுல வாங்கினாலும் ஏதாவது வாய தொறந்து பேசுவாரா? அல்லது பேசியிருப்பாரா? சரி, அத பத்தி பேச வேணாம். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியுதவியை சரியா தரல. அதையாவது கொஞ்சம் தர்றேன்னு பேசியிருக்கலாம். விலைவாசிகளை கட்டுப்படுத்தற வழிவகைகளை பத்தி பேசியிருக்கலாம். அத பத்தி எதுவுமே பேசல. 
          அவர் வந்த நோக்கம் ரெண்டு  விழால கலந்துக்கணும். அந்த விழா பத்தி நாலஞ்சு வார்த்தை பேசணும். அப்புறம் போட்டோஸ்க்கு போஸ் தரனும். தமிழ்நாட்டுக்கு ரெண்டு நாள் வந்த அடையாளத்தை பத்திரிகைகளுக்கு காட்டனும். அவ்ளோதான். யாருமில்லாத டீக்கடையில டீ ஆத்துற மாதிரி கூட்டமே இல்லாத விழாவா நடந்திருக்கு இந்தியாவின் பிரதமர் கலந்துகிட்ட விழா. ஒரு ஆர்வத்துல கலந்துக்க வந்தவங்க கிட்டேயும் இன்விடேஷன் இல்லைன்னு அனுமதிக்கலையாம் நம்ம தலைசிறந்த காவல்துறையினர்... அவங்க வேலையை அவங்க சரியா பார்த்திருக்காங்க.
     ஆக, பிரதமர் தமிழ்நாட்டுக்கு ரெண்டுநாள் பயணமாக வந்தார். விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்படின்னு எல்லா பேப்பர்களிலும் கொட்ட எழுத்தில வந்திருச்சு. அது போதும் அவருக்கும், தமிழக காங்கிரஸ்க்கும். முக்கியமா சிதம்பரத்துக்கு இதுவே ரெண்டு மூணு போதும். இத வச்சே தமிழகத்துல காலத்த ஓட்டிருவாரு.....




மேலும் வாசிக்க... "பிரதமர் வந்தாரா? கூடங்குளத்துக்கா? இல்ல முல்லைப் பெரியாறுக்கா? மாக்கானின் பார்வை"



வடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா?

         இந்த கொலவெறி பாட்டை பத்தி பதிவு நெறைய போடறாங்க. நானும் கூட ஒரு பதிவு போட்டிருந்தேன். கொலவெறி பத்தி எழுதறத அந்த பதிவோட நிறுத்திக்கலாம்னு தான் நெனச்சேன். ஆனா இந்த கொலவெறி பாட்டை வச்சு நிறைய ரீமிக்ஸ் யூடியூப்ல தினம் தினம் வந்துட்டே இருக்கு. 
        ஆனா வட இந்திய சேனல் ஒண்ணு தனது ஒரு நிகழ்ச்சியில் கலைஞர், ஜெயலலிதா இருவரையும் கார்ட்டூன் வடிவில் கொலவெறி பாட்டை ரீமிக்ஸ் செய்து நக்கலடித்து ஒரு கிளிப்பிங்ஸ் போட்ருக்காங்க. தமிழகத்தின் முதல்வரா இருக்குற, இருந்த இவங்கள இப்படி நக்கலடிக்க வட இந்திய சேனல்களுக்கு நாம என்ன இளப்பமாவா இருக்கோம்?   
     செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல இப்படித்தான் யோசிக்கனுமா? நம்ம தலைவர்களை நாம ஏன் விட்டுத் தரனும்? இவங்க நல்லது பன்றாங்களோ? கெட்டது பன்றாங்களோ? அது விஷயம் இல்லை. இரண்டு கட்சிகளின் மூத்த தலைவர்கள், தமிழகத்தில் பல முறை முதல்வராக இருந்தவங்க, இந்த செய்தி சேனல் இப்படி செய்திருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அதான் இந்த பதிவு எழுது படியா வந்திருச்சு. ஏதோ, சொல்லனும்னு தோனுச்சு, சொல்லிட்டேன்.
அந்த வீடியோ:
THANKS: YOUTUBE

இன்றைய பொன்மொழி:
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.

இன்றைய விடுகதை:
அரையடிப் புல்லிலே
ஏறுவான் இறங்குவான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: அகப்பை
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு


மேலும் வாசிக்க... "வடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா?"



அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

        நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான மற்றும் வேதனையான செய்தி சொல்லப் போறேன். பர்ஸ்ட் மகிழ்ச்சி செய்தியை சொல்லிறேன். விலைவாசி கண்டமேனிக்கு ஏறிப் போச்சு என்னையா மகிழ்ச்சியான செய்தின்னு கேட்க்கறிங்களா? உண்மையிலே மகிழ்ச்சி தான்... 
       ஆமா மறுபடியும் பெட்ரோல் விலை குறையப் போகுதாம். சர்வதேச அளவுல கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கி இருக்றதுனால நம்ம நாட்டு பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை கொஞ்சம் குறைக்கலாம்னு முடிவு செய்திருக்காங்க. போன வருஷம் மதிய அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கி பெட்ரோலிய நிறுவனங்களின் கையில் ஒப்படைத்தது. அது முதல் பெட்ரோல் விலை கிடு கிடுவென உயர்ந்து. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 74 ரூபாய் வரை அதிகரித்ததே வரலாற்று சாதனையாக இருந்தது. அந்த விலையில் இருந்து இரண்டு ரூபாய் குறைத்து வயிற்றில் பாலை (பெட்ரோலை) வார்த்தனர். இந்நிலையில் மேலும் விலையை குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
        அப்படி எவ்வளவு ரூபாய் குறைக்க போறாங்கன்னு தெரியுமா? வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. அந்த ஒரு ரூபாயில் நாம ஒரு கிலோ மீட்டர் கூட அதிகமா போக முடியாது. என்னத்த கொறச்சு?, நாம இப்படியே அவங்க தர்ற அல்வாவுக்கு வாயை தொறந்துகிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு சொட்டு நெய் கூட நம்ம வாயில விழாது. அப்புறம் இப்படி விலையை குறைச்சா ஒரு சாதனையாம். ஆமாங்க கடந்த 2009ம் ஆண்டு இப்படி அடுத்தடுத்து ரெண்டு முறை விலையை குறைச்சாங்களாம். அந்த சாதனையை இந்த வருஷம் சமன் செய்ய போறாங்களாம். எப்படியெல்லாம் சாதனை செயறாங்கப்பா, முடியல...

இப்போ வேதனையான செய்தி:


  மின்சார கட்டணம் கூட போகுதுன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்களே அதோட சேர்ந்து சின்ன பூச்சாண்டியும் காட்ட போறாங்க.  அதாவது ஏற்கனவே மின்சார வாரியம் மின்சார பயனீட்டு அளவுக்கு ரேட்டை உயர்த்தி ஒரு மாதிரியை மக்கள் மத்தியில் சர்வே மாதிரி பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்கள்ல. அந்த ரேட்டே இப்போ இருக்கிற அளவை விட ரெண்டு மடங்கு அதிகமா ஒரு யூனிட்க்கு அதிகமாயிருச்சு. அதே போல கொறஞ்சபட்ச மாதாந்திர கட்டணமும் ரெண்டு மடங்கா அதிகரிக்க போறாங்களாம். அதாவது நாப்பது ரூபாயில் இருந்து, நூத்திபத்து ரூபாயாக ஏத்த போறாங்க.
         அது என்னான்னா நாம கரண்ட் யூஸ் பண்ணினாலும் இல்லைனாலும், மினிமம் அமௌன்ட் மாசா மாசம் கட்டனுமாம். அந்த அமௌன்ட்டும் அதிகமாயிருச்சு. இப்போ சொல்லுங்க ஒரு நாளைக்கு அஞ்சாறு மணிநேரம் கரண்ட் இருக்கிறது இல்லை. இப்போ ரேட்டும் அதிகமாயிருச்சுன்னா நாம கரன்ட்டை சிக்கனமா பயன்படுத்தறோம்னு சொல்லி ஆதிகாலத்துக்கு போகாம இருந்தா சரி தான்...

இன்றைய பொன்மொழி:
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!

இன்றைய விடுகதை:
செடியில் விளையாத பஞ்சு
தறியில் நூற்காத நூல்
கையில் தொடாத துணி. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: குடம்
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0



மேலும் வாசிக்க... "அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?"



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை


ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.  


       சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது. 

   எப்படி எலி கிடைக்கிறது?
    மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க. 

சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

என்ன நண்பர்களே! கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க...

டிஸ்கி: இந்த செய்தி திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவம்.
மீள்பதிவு.
பொன்மொழி, விடுகதை அடுத்த இடுகையில்...

மேலும் வாசிக்க... "சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை"



ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்

நண்பர்களே,
      இந்த தலைப்பில் ஒரு சிறு தகவல் எழுத வேண்டும் என்ற யோசனை கடந்த வாரம் எனக்குள் உதித்தது.  இரண்டு விபத்துகளை நான் கேள்விப்பட்டது தான் அதற்கு காரணம்.
     கடந்த வாரம் தினமலரில் ஒரு விபத்து செய்தி படித்தேன். ஒரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு நண்பர்கள் பயணம் செய்கையில் வாகனத்தின் ஹேன்ட்பாரில் ஷேர் ஆட்டோவின் சைடு கம்பி மாட்டியதில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி நடு ரோட்டில் அந்த நண்பர்கள் விபத்துக்குள்ளானார்கள். அதில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவரின் தலையில் பின்னால் வந்த ஒரு பேருந்தின் சக்கரம் ஏறி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த செய்தி படித்தவுடன் என் மனம் கலங்கியது. ஏனெனில் எவனோ ஒருத்தன் செய்த தவறால் ஒரு அப்பாவி பலியாவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அதோடு இந்த விபத்தை செய்தியாக போட்ட தினமலரில் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என்பதை அடைப்பு குறிக்குள் குறிப்பிட்டு இருந்தார்கள். ஏன் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்றால், ஹெல்மெட் இல்லாமல் விபத்தில் உயிரிழந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தின் ஆதாரத்துக்காக இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழப்போர் ஹெல்மெட் அணிந்திருந்தாரா இல்லையா என குறிப்பிடுகிறார்கள். 
      மதுரையில் இந்த ஷேர் ஆட்டோக்களின் அராஜகம் ரொம்ப ஓவரா இருக்கு. முறையான உரிமம் இல்லாமை, விதிகளை மீறல், அதிக வேகம், அதிக பயணிகள், ஆடும் சீட்கள், அனுபவமில்லா ஓட்டுனர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் ஷேர் ஆட்டோவின் ஸ்பெஷலே நினைத்த இடத்தில ஏறலாம், இறங்கலாம். இந்த காரணத்தினாலேயே ஷேர் ஆட்டோவை விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள்.  ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் ரோட்டை பார்த்து ஓட்டுவதை விட, சாலையோரத்தை பார்த்தே ஓட்டுகிறார்கள். யாராவது கை காட்டுகிறார்களா, ஷேர் ஆட்டோவை அழைக்கிறார்களா என பார்த்துக் கொண்டே ஓட்டுகிறார்கள். இந்த ஷேர் ஆட்டோக்கள் பெருக்கத்திற்கு அரசு டவுன்பஸ்களும் மறைமுகமாக உதவுகிறது. அது எப்படியெனில் இப்போது ஒரு சில பஸ்ஸை தவிர அனைத்து பஸ்களும் எல்எஸ்எஸ், எக்ஸ்ப்ரஸ், என ஒரு போர்டையும் போட்டு அதிக காசையும் வசூல் செய்து கொண்டு சில நிறுத்தங்கள் மட்டுமே நிற்கும் வகையில் இயக்கப்படுகிறது. இதனாலேயே அந்த பஸ்கள் நிற்காத இடங்களுக்காக ஷேர் ஆட்டோக்கள் முளைக்கின்றன. அதுவும் எண்ணிலடங்கா எண்ணிக்கையில். எல்லா ஊரிலும் இந்த ஷேர் ஆட்டோக்கள் இருக்கின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களை ஒரு முறைப்படுத்தி பயணிகள் எண்ணிக்கையில் கவனம் கொண்டு அனுபவமுள்ள ஓட்டுனர்களை வைத்து இயக்கினால் ஷேர் ஆட்டோக்களின் பயணம் பாதுகாப்பான பயணமாக இருக்கும். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
        கடந்த வார இறுதியில் ஒரு விபத்து மதுரை அருகே நடந்தது. மகனும், தந்தையும் அவர்களின் இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு போய்விட்டு தங்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்றது சிறிய சாலை. ஒரு திருப்பம் அருகே ஒரு நான்கு சக்கர வாகனம் தாறுமாறாக வந்து கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டார்கள். அப்படியும் நான்கு சக்கர வாகனம் அவர்களின் மேல் மோதி விபத்தை உண்டாக்கியது. இதில் வாகனம் ஓட்டி வந்த மகன் ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையில் அடிபடாமல் காலில் எலும்பு முறிவோடு உயிர் தப்பினார். ஆனால் பின்னால் உட்கார்ந்திருந்த தந்தை ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இறந்து விட்டார். இந்த விபத்திற்கு காரணம் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் நல்ல குடி போதையில் இருந்திருக்கிறார்கள். இதனாலேயே அந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. 
     ஹெல்மெட் அணிந்திருந்தால் தலைக்காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஏனெனில் தலைக்காயம் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பது இயலாமல் போகிறது. எனவே இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் ஹெல்மெட் அணிதல் மிக அவசியம். ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் தலைக் காயம் இன்றி தப்பி விடும். அதோடு சாதா ஹெல்மெட் அணியாமல் தரமான ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் வாங்கி அணியவும். நமது தலைக்கு ஏற்ற சரியான அளவு பார்த்து ஹெல்மெட் வாங்க வேண்டும். லூசாக இருந்தால் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறைந்து விடும். ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே விபத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணம் முழுமையாக கிடைக்கும். ஹெல்மெட் இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்பதையும் கவனத்தில் கொள்க.
       ஆக நண்பர்களே, ஷேர் ஆட்டோக்கள் பெருகி விட்ட காரணத்தால் நாம் தான் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர் தவறாமல் ஹெல்மெட் அணியுங்கள். 
படங்கள் கூகிள் தேடல் வழியில் பெறப்பட்டது

இன்றைய பொன்மொழி:
ஒரு காசு பேணின் இரு காசு சேரும்!

இன்றைய விடுகதை:
டாக்டர் வந்தாரு
சட்டையை கழட்டினாரு
கேணிக்குள் குதிச்சாரு. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: பச்சைக்கிளி
முந்தைய விடுகதைக்கான இடுகை: 
மேலும் வாசிக்க... "ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்"



ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?

எச்சரிக்கை:
      இத பத்தி அது, இதுன்னு என்னமோ ஒளறி கொட்டியிருக்கேன். படிச்சா கண்டிப்பா அது வரும். அதனால படிக்கணுமான்னு கொஞ்சம் யோசனை பண்ணிக்கங்க. சரி, படிச்சதுக்கு அப்புறம் அது வந்துச்சுன்னா அதுக்கு நீங்க தான் பொறுப்பு. ஆமா சொல்லிப்புட்டேன்.

     "இத" யாரு கண்டுபிடிச்சா? "இத' வச்சு எத்தன பேரு பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க. இதனால அது, இதுன்னு எவ்வளவோ தேவையில்லாம செலவும் ஆகுது. அதுவும் அதுக்கு இது இல்லையினா அது யாருக்கும் தெரியாது. அப்படி யாருக்காச்சும் அது தெரிஞ்சிருச்சுனா அதை விட மாட்டாங்க. அது பின்னாடியே போவாங்க. அப்படியே அதுக்கு இதுவும் போடணும், அதுவும் போடணும். ஏன்னா அது இல்லையினா அதுல தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அதுல முன்னாடி வராது. அப்படி முன்னாடி வரணும்னா அது நிறைய வேணும். அப்படியே முன்னாடி வந்தாலும், அதனால வந்துச்சா இல்ல இதனால வந்துச்சான்னு ஆராய்ச்சி செய்ய அது இதுன்னு நிறைய மொளச்சிரும். அப்படி அது, இதுன்னு மொளச்சதுக்கு  அது வெடிக்கிற மாதிரி வெடிக்க மட்டுமே தெரியும். ஆனா அது கசக்கும்னு அதுக்கு தெரிஞ்சாலும் கண்டுக்காது. குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் அதோட கசப்பு பிடிக்கும்.  நிறைய பேருக்கு அது பிடிக்காம போகும். அப்படியே அத பாத்தாலும் அதை ஒதுக்கி தூக்கி போட்ருவாங்க. அப்படி தூக்கி போடறது ஏன் மொளைக்கணும்? மொளைக்காம இருக்கலாமேன்னு நாம நெனச்சாலும் அதுக்குன்னு ஒரு இது இருக்றதுனால அது வருது. அதோட இதை அடக்கணும்னா அதை கண்டுக்காம இருக்கணும். அது ஆரம்பத்துல ஓரளவு சரியாத்தான் இருக்கும்னு தோணும். ஆனா அது சொல்றத நாம நல்லா ஆராய்ஞ்சு பார்த்தோம்னா அதுல அப்படி ஒன்னும் இல்லை. அது அதோட விதிப்படி சரியாத்தான் இருக்குன்னு நமக்கு தெரியவரும். அப்படியும் அது அதிகமா வெடிச்சா அதுல கருகிப் போயிரும். அப்ப அதை யாருமே விரும்ப மாட்டாங்க. 
     என்னங்க, எச்சரிக்கையை மீறி படிச்சிங்களா? ஒண்ணுமே புரியலைன்னு ரெண்டு மூணு தடவ வேற படிச்சிங்களா? அப்ப அது கன்பார்ம், ஹி.... ஹி....


இன்றைய பொன்மொழி:
கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்

இன்றைய விடுகதை:
ஒலைப்பூ நிறத்தாள்
ஓர் அடி வளர்த்தாள்
கோட்டையேறிப் பார்த்தாள்
குத்துப்பட்டுச் செத்தாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: நுங்கு
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே: 
மேலும் வாசிக்க... "ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?"



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!

        மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.  

    இந்த பஸ் ஸ்டாண்டு ஆரம்பிக்ரதுக்கு முன்னாடி வெறும் குப்பை மேடு தான்.... அப்புறமா இடங்களை வளைச்சு போட்டு பஸ் ஸ்டாண்டு கட்டி, ISO 9001 சான்றிதழ் வேற வாங்கியாச்சு. பஸ் ஸ்டாண்டு வந்ததுக்கு அப்புறம் அதை சுத்தி உள்ள இடங்களின் விலை மலையென ஏறி விட்டது. ஆமாங்க, ஒரு சென்ட் ரேட் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபது லட்சம் வரை விலை போகுது. எடத்தை பத்தி நாம ஏன் பேசிக்கிட்டு? அதெல்லாம் பண முதலாளிகள் பேசுற பேச்சு. இப்ப நம்மளுக்கு அந்த டாபிக் வேண்டாம். நாம பஸ் ஸ்டாண்டுக்கு வருவோம்.
      பஸ் ஸ்டாண்டுக்கு மொத்தம் மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு பஸ் உள்ள போற வழி. இன்னொன்னு பஸ் வெளியே போற வழி. இன்னொன்னு நடுவுல அழகா ரவுண்டா பயணிகள் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. எப்பவுமே பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கும். பஸ் ஸ்டாண்ட சுத்தி காம்பௌண்ட் சுவர் கட்டியிருக்காங்க. அங்கிட்டு வெறும் குப்பை மேடு தாங்க. ஏதோ, இப்ப ஒரு வருஷ காலமா குப்ப நாத்தம் அடிக்கிறது இல்லை. எப்படியோ சுத்தம் பண்ணிட்டாங்க.. ஆனா அதுக்கு பதிலா பஸ் ஸ்டாண்டு கட்டுன காலத்துல இருந்து ஒரே ஒரு நாத்தம் மட்டும் மாறவே இல்லை. கரக்ட் நீங்க நெனச்சது, வேறென்ன நாத்தமா இருந்துர போகுது? எல்லாம் மூச்சா நாத்தம் தான். 
     நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு. நம்மாளுக அதை யூஸ் பண்ண மாட்டாங்க. திறந்த வெளி தான். குடலை புரட்டும் அந்த நாத்தத்தில், நம்மாளுக அந்த நாத்தமே பிடிக்காத மாதிரி மூக்கை பொத்திட்டு அதே இடத்துல போய் மூச்சா அடிப்பானுக பாருங்க, அவிங்க மேல கோவம் கோவமா வரும். அவன் நிக்ரதுக்கு கூட அங்க இடம் இருக்காது, ஒரே ஈரமா இருக்கும்.  இந்த நாத்தத்துக்கு மத்தில பூக்கடை, பழக்கடை, பங் கடை, டீக்கடை ன்னு நம்மாளுக மொச்சிக்கிட்டு இருப்பாங்க. அதென்னமோ தெரியலைங்க, இங்க இருக்கற பூக்கடையில நூறு எண்ணிக்கை மல்லிகை பூ எப்பவுமே அஞ்சு ரூவா தாங்க. விலை கூடவே கூடாது. 

     டவுன் பஸ் நிக்கற இடத்துக்கு பக்கத்துல தமிழ்நாடு தேயிலை கழகம் நடத்துற டீக்கடை இருக்கு. ஏதோ, டான் டீ ன்னு போடறான்.  டீ நல்லா டேஸ்டா இருக்கும்.  இங்க ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரெண்டு ரூபாய்க்கு விக்கிறாங்க. பிளாட்பாரத்துல நிக்க கூட இடம் இல்லாம கடைகளா இருக்கும். கடைய கட்டடத்துக்கு உள்ள வைங்கன்னா வெளில வச்சிருக்காங்க. மக்கள் நடந்து போனா டீயோ, வடையோ சாப்பிடுறவங்களை தட்டி விடாம போக முடியாது. அவ்வளவு ஆக்கிரமிச்சு இருப்பாங்க. நைட் நேரத்துல திடீர்னு டிபன் கடைகள் பிளாட்பாரத்தில் முளச்சிடும். உட்கார நல்ல டேபிள் சேர் கூட இருக்காது. அவிங்க சொல்றது தான் ரேட்டு. பஸ்கள் விடுற புகை, மற்றும் எல்லா தூசியும் அந்த நைட் நேரத்துல டிபன் மேல விழுகரது நம்ம கண்ணுக்கு தெரியவே தெரியாது. சாம்பாருன்னு பேருல ஊத்துவாங்க பாருங்க கடலை மாவு தண்ணிய, அய்யோ சாப்பிட சகிக்காது. அவிங்க விக்கற கூல்ரிங்க்ஸ், வாட்டர், பிஸ்கட் போன்ற எல்லா பொருட்களின் விலையும் எம் அர் பி ரேட்டை விட ரெண்டு ரூவா அதிகமா தான் இருக்கும். அவிங்க கிட்ட நியாயம் பேசினோம் வச்சுக்கங்க, நம்மள அநியாயமா காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவாங்க. 
        என்னடா, தலைப்புல ரெண்டு டாஸ்மாக் கடைன்னு போட்டுட்டு அத பத்தி ஒண்ணுமே சொல்லலைன்னு நீங்க கத்தறது என் காதுல விழுது. இப்ப உங்கள அங்க தான் கூட்டிட்டு போறேன்.

        மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு ரெண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகள் இருக்கு, பஸ் வெளியேற பக்கமா, பூ மார்கெட் எதுத்த மாதிரி ஒரு கடை. பஸ் உள்ளே போற பக்கமா, வரவேற்பு ஆர்ச் பக்கத்துல ஒரு கடை. ரெண்டு கடையும் காலையில இருந்து இரவு வரை செம கூட்டமா இருக்கும். பஸ் பயணிகள், டிரைவர், கண்டக்டர் கூட்டமா இருக்கும். பூ மார்க்கெட் பக்கத்துல பார் அளவு சின்னது. நைட் நேரத்துல பார்ல இடம் இல்லாம வெளியில நின்னு தண்ணி அடிப்பாங்க. எல்லோர் கையிலும் பெரிய பை ஒண்ணு தொங்கிக்கிட்டு இருக்கும். ஆமாங்க, எல்லோருமே பயணிகள் தான். நாமெல்லாம் ஊருக்கு சீக்கிரமா போக முடியுமான்னு பார்ப்போம். ஆனா அவிங்க நல்லா மப்பு போட்டுட்டு ஊருக்கு போவாங்க. 
      அடுத்ததா ஆர்ச் பக்கத்துல இருக்குற கடையில் பார் ரொம்ப பெரிசு. சரக்கு வாங்கிட்டு நம்மாளுக உள்ளே போனாங்கனா நல்லா மப்பு ஏத்திட்டு தான் வருவாங்க. எந்த நேரமும் கூட்டம் களை கட்டி இருக்கும். பார்ல ஸ்நாக்ஸ் ரேட் அதிகமா இருக்ரதுனால நம்மாளுக சரக்கை மட்டும் வாங்கிக்கிட்டு அந்த ஆர்ச் மறைவில நின்னுட்டு குடிப்பாங்க. கடைக்கு முன்னாடி சின்ன சின்ன தள்ளு வண்டியில பிரியாணி, சிக்கன், மட்டன் விப்பாங்க. அந்த கடைகளும் நல்லா கூட்டமா இருக்கும்.இப்போ ஏதோ பிரச்சினையில அந்த கடை இடம் மாறிருச்சு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி. மாட்டுதாவனில இருந்து சர்வேயர் காலனி போற வழில ஒரு சுடு காடு இருக்கு. அதுக்கு பக்கத்துல மாத்திட்டாங்க. சுடு காட்டுக்கும், கடைக்கும் சுமாரா நூறு அடி தூரம் தான் இருக்கும்.  சைட் டிஷ்சா பொன வாடைய பிடிச்சுக்கிட்டு தண்ணியடிக்க வேண்டியது தான். இன்னும் இங்க கடைக்கு பக்கத்துல தள்ளு வண்டி உணவு கடைகள் முளைக்கல. சீக்கரமா வந்துடும்னு நம்பிக்கையில தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க. சரிங்க இதோட உங்கள அறுக்ரத முடிச்சுக்கறேன். 

டிஸ்கி: 
       நான் தினந்தோறும் வேலைக்கு சென்று வரும் போது இவைகளை பார்த்து வருவதன் பாதிப்பே மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு பற்றியும், டாஸ்மாக் கடைகளை பற்றியும் இந்த பதிவு எழுதுவதற்கான காரணம். அவ்வளவே!


இந்த பதிவுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லிங்கோ....
மீள்பதிவு



மேலும் வாசிக்க... "மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!"



வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?

நண்பர்களே,
இன்று  காலை மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகில் உள்ள சாலை சந்திப்பில் ஒரு நண்பருக்காக சிறிதுநேரம் காத்திருந்தேன். காலை நேரமாதலால் வாகனங்கள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்திருந்தது. மாட்டுதாவனியில் இருந்து மேலூர் வழியாக நேரே செல்லும் சாலையும், வலது புறமாக ராமேஸ்வரம், சிவகங்கை வழியாக செல்லும் சாலையும் செல்கிறது. 

        இந்த சந்திப்பில் வலது புறமாக திரும்பும் வாகனங்கள் பெரும்பாலும் சாலை விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு திரும்பி சென்றது. நான் நின்ற சுமார் பதினைந்து நிமிடங்களில் சென்ற வாகனங்கள் பெரும்பாலும் தவறான வழியிலேயே சென்றது. 

    அந்த எதிர் பக்கத்தில் இருந்து திரும்பும் வாகனங்களுக்கு பெரும் சிக்கல்களாக இருந்தது. வாகன ஓட்டிகளே சாலை விதிகளை மதித்து விதிகளை மீறாமல் சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். உங்கள் பயணம் இனிதே இருக்கும்.


    அந்த சந்திப்புக்கு அருகே போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் பூட்டியே இருக்கும்.காவல்துறை நண்பர்களே, சாலை விதிகளை மீறும் வாகனங்களை சிறை பிடியுங்கள். இல்லையேல் பெரும் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
படங்கள்: என் மொபைல் மூலம்...

பின் குறிப்பு: 
எல்லோரும் என்ன மொபைல் என கேட்கறாங்களே? MICROMAX Q7 தானுங்கோ...





மேலும் வாசிக்க... "வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?"



பொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா?

டிஸ்கி: 
வீட்டு உபயோக பொருட்காட்சின்னு ஊர் ஊருக்கு போடறாங்களே, அங்க நடக்கற வியாபாரம் பத்திதான் சொல்றேன்.

     "ஐயாமாரே... அம்மாமாரே... அண்ணமாரே... அக்காமாரே... தங்கச்சிமாரே.... எல்லோரும் இங்க ஓடி வாங்க... இத வாங்குனா அது பிரீ, அது வாங்கினா இது பிரீன்னு கூவி கூவி கூப்பிடுவாங்க. அத கேட்டு ஒரு ஸ்டால் பக்கமா ஒதுங்கிட்டோம்னு வைங்க? இங்க ஒங்க எல்லாத்துக்கும் இலவசமா ஒண்ணு தர போறோம். ஆனா அதுக்கு முன்னாடி இத பாருங்க... எப்பிடி வேலை செய்யுதுன்னு.... நீங்க உருட்டி நடுவுல வச்சா போதும், தேய்க்க வேணாம், வட்டமா வரலையினு கவலைப்பட வேணாம். நீங்க எதிர்பாக்கிற மாதிரி வட்டமா புசுபுசுன்னு சூடா ஆவி பறக்க வரும்".  இப்படி சொல்லித்தான் சப்பாத்தி மேக்கர் விப்பாங்க. இப்பவே புக் பண்ணினா டிஸ்கவுண்ட் இருக்கு. இன்னைக்கு மட்டும் தான் இந்த ஆபர். உங்க வீட்டு அட்ரெஸ் கொடுத்திட்டு போங்க. உங்க வீட்டுக்கு வந்து உங்க சப்பாத்தி மாவிலேயே செஞ்சு காட்டறோம், உங்களுக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்கங்கனு" சொல்வாங்க. இப்படி ஆச வார்த்தைகள் சொல்லி நம்மள எப்படியாவது வாங்கற நெலமைக்கு கொண்டு வந்திருவாங்க. கொஞ்சம் ஏமாந்தாலும் நம்ம காசு அங்கேயே அம்பேல் தான். சுதாரிச்சோம்னா காச பத்திரப்படுதிக்கலாம். அப்புறம் இலவசமா என்ன தருவாங்கனு கேட்கறிங்களா? வேறேன்னா, அவங்க சுட்ட சப்பாத்தி கொஞ்சூண்டு பிச்சு கொடுப்பாங்க. நாம வாயில வச்சதும் மறுபடியும் கேன்வாஸ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. அந்த பொருளை நான் வாங்க வேணாம்னு சொல்லல. நாம இந்த பொருள் தான் வாங்கனும்னு திட்டமிட்டு இருந்தோம்னா, அந்த பொருளை பற்றி ஓரளவு முன்கூட்டியே விசாரிச்சு வச்சிருப்போம். அப்போ நமக்குள்ள ஒரு ஐடியா வந்திருக்கும். எந்த கம்பெனி வாங்கினா நல்லா இருக்கும்? விலைகளையும் விசாரிச்சு ஒரு முடிவுக்கு வந்திருப்போம். 

       அப்புறம் மசாலா பொருட்கள் விக்கிற இடத்துக்கு போனா, ஒரு டப்பால நாலஞ்சு மசாலா பாக்கெட்கள் போட்டு வச்சுட்டு நூறு ரூபான்னு விப்பாங்க. அதுமட்டும் இல்லாம, ரெண்டு வெரைட்டி வாங்கினா இவ்ளோ டிஸ்கவுண்ட், அவ்ளோ டிஸ்கவுண்ட் அப்படின்னு சொல்வாங்க. அந்த பாக்கெட்களை பார்த்தா ரெகுலரா கடையில் விக்கிற பாக்கெட் மாதிரியே இருக்காது. பொருட்காட்சி இடத்துல விக்கிறதுக்குனே பாக்கெட் பண்ணுன மாதிரி இருக்கும். அதில்லாம அந்த பிராண்டில் நமக்கு அறிமுகமில்லாத பொருட்களும் இருக்கும். உதாரணமா, நமக்கு அறிமுகமான மஞ்சள் தூள், சாம்பார் பொடி போன்ற மசாலா பொடிகளுக்கு மத்தியில் ஊறுகாய், பருப்பு வகைகளும் இருக்கும். இந்த பொருட்களை வெளிச்சந்தையில் பார்க்கவே முடியாது. 
       இந்த மாதிரி நிறைய வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சியில் ஸ்டால் போட்டு விப்பாங்க. ஸ்டால் கடைகளை டெமோவாக பயன்படுத்தலாம். அவர்களுக்கு விற்பனையை விட விளம்பரமே முக்கிய நோக்கம் ஆகும்.  நாம அங்க வாங்காம வெளிக் கடைகளில் நம்பிக்கையுடன் வாங்கலாம். பொருட்களும் தரமா இருக்கும். பல மாடல்கள் பார்த்து செலக்ட் பண்ணலாம். கடைகளில் நேரடியாக வாங்குவதால் பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் ஈசியாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நண்பர்களே, இங்கே நான் பகிர்ந்திருப்பது என் தனிப்பட்ட கருத்தே.....
மேலும் வாசிக்க... "பொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1