பெரிய பீப்பா: அடியே... சின்ன பீப்பா? சின்ன பீப்பா? அடியே..... சீக்கிரமா போனை எடுடி.... எத்தன தடவ தான் இவளுக்கு போன் பண்றது?....
(அட, மேக்கப் பண்ண கூட விட மாட்டிங்கறாங்க.... இத்தன கால் யார் பண்றது? ச்சே... லிப்ஸ்டிக் கொஞ்சம் ஓவரா போட்டுட்டேன், தொடைக்க கூட விடாம போன் அலறுதே.....) இப்படி முனங்கிக் கொண்டே போனை எடுக்கிறாள் சின்ன பீப்பா.
சின்ன பீப்பா: ஹலோ..... யாருங்க இத்தன தடவ போன் போடறது? கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம? ஹலோ.... ஹலோ...
பெரிய பீப்பா: அடியே நான்தான் பெரிய பீப்பா பேசறேன். எங்கடி போயிட்ட? எத்தன போன் போடறது உனக்கு?
சின்ன பீப்பா: அக்கா, நீங்களா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். சொல்லுங்கக்கா என்ன விஷயம்?
பெரிய பீப்பா: ஒண்ணுமில்லடி, பொங்கல் வருதுல, அதான் கொஞ்சம் மினுமினுப்பை கூட்டணும்? நல்ல பியூட்டி பார்லர் எதுன்னு சொல்லு... ஹெர்பல் அயிட்டமா இருக்கணும்....
சின்ன பீப்பா: அக்கா, உங்களுக்கு சொல்லாமலா? இங்க என் வீட்டுக்கு பக்கத்துல ஒரு அக்கா பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. எல்லாமே ஹெர்பல் தான்....கெமிக்கல் இல்லை, ரொம்ப அழகா த்ரெட்டிங், பேசியல், மசாஜ் என எல்லாமே சூப்பரா செய்வாங்க. ரேட்டும் ரொம்ப அதிகமா இருக்காது.
பெரிய பீப்பா: அப்படியாடி... உன் வீட்டுக்கு வந்தும் ரொம்ப நாளாச்சு. சரிடி, அவங்க கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி வையி...
சின்ன பீப்பா: சரிக்கா... வாங்கிட்டு சொல்றேன்.... நாளைக்கா, நாளான்னைக்கா,
பெரிய பீப்பா: அடியே, பொங்கல் நெருங்குது, நாளைக்கு, நாளைன்னைக்கான்னு கேட்டுட்டு இருக்க. இன்னைக்கு அப்பாயின்மென்ட் வாங்குடி.
சின்ன பீப்பா: அக்கா, கூட்டம் ரொம்ப அதிகமா வரும், இன்னைக்கு புல் ஆயிரும், நானே முதல் நாள் புக் பண்ணிட்டு தான் போவேன். அதனால நாளைக்கே வாங்கிடுறேன்...
பெரிய பீப்பா: சரிடி, நீ நல்லா இருக்கும்னு சொல்ற, அதனால அங்க வரேன்...
(அடுத்த நாள் சின்ன பீப்பா வீட்டில்)
சின்ன பீப்பா: அக்கா வாங்க, எப்படி இருக்கீங்க? வாங்க மொதல்ல சாப்பிடலாம். சாப்டுட்டே பேசலாம்.
பெரிய பீப்பா: அடியே என்னடி டிஷ் செஞ்சு வச்சிருக்கே?
சின்ன பீப்பா: அது என்னானா? ஆலு பரோட்டாவும், ஆலப்பி கறியும் செஞ்சிருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும் அக்கா.
பெரிய பீப்பா: என்னடி? என்னமோ ஆலு, ஆலாப்பின்னு சொல்ற? ஒண்ணுமே புரியல... நல்லா இருக்குமா?
சின்ன பீப்பா: பயப்படாதிங்க, நல்லா இருக்கும் அக்கா.... என் பிள்ளைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.. அவருக்கும் ரொம்ப இஷ்டம் தான்... கொஞ்சம்டேஸ்ட் பண்ணி பாருங்க... பிடிச்சிருந்தா சாப்பிடுங்க. இல்லைனா சப்பாத்தி குருமா செஞ்சு தாறேன்.
(பெரிய பீப்பா கொஞ்சமா எடுத்து டேஸ்ட் செய்து பாக்கிறாள். அப்படியே டேஸ்ட் பாக்கிறேன் என்றே ஒரு முழு ஆலு பரோட்டாவையும் சாப்பிட்டு விட்டாள்)
பெரிய பீப்பா: அடியே! ரொம்ப டேஸ்டா இருக்குடி... இன்னும் வையிடி, நாக்கு சப்புக் கொட்டுது.
சின்ன பீப்பா: அக்கா, இந்தாங்கக்கா... எல்லாமே உங்களுக்கு தான்... நல்லா சாப்பிடுங்க.
பெரிய பீப்பா: உனக்கு "ஐ" த்ரெட்டிங் நல்லா பண்ணியிருக்காங்க. அங்க தான் நாம போறோமா?
சின்ன பீப்பா: ஆமாக்கா, நல்லா பண்ணி விடுவாங்க. கவலைபடாதிங்க.
பெரிய பீப்பா: ஏண்டி, வெலவாசி ஏறிட்டே போகுதே? எப்படிடி சாரி, சுடி வாங்கற? காசு ரொம்ப செலவாகுமே..
சின்ன பீப்பா: அக்கா, அதுக்கு தான் ஒரு ஐடியா என் கணவர் சொல்லிக் கொடுத்தார். அவரோட யோசனை படி நாங்க மொத்தமா சாரி, சுடி கிளாத்ஸ் எடுத்து சேல்ஸ் பண்றோம்ல. ஆரம்பிச்சு ரெண்டு மாசத்துக்குள்ளே எப்படியும் சுமாரா முப்பது சாரிஸ் வித்திருப்பேன்.
பெரிய பீப்பா: அடிஎஈஏய்.... நல்ல ஐடியாவா இருக்கே... நாமளும் காசு சம்பாரிச்ச மாதிரி இருக்கும், நமக்கும் ரேட் கம்மியா எடுத்த மாதிரியும் இருக்குமே. நானும் என் புருசன் கிட்ட சொல்லி எங்க ஏரியாவுல விக்க ட்ரை பண்றேன். தாங்க்ஸ்டி ஐடியாவுக்கு...
சின்ன பீப்பா: தேங்க்ஸ்ல்லாம் வேணாம்க்கா... எனக்கு தெரிஞ்ச டிப்ஸ் சொல்றேன். நீங்களும் சேல்ஸ் பண்ண ஆரம்பிங்க.
பெரிய பீப்பா: சரி.. ஸ்டார்ட் பண்ணிட்டு சொல்றேன். பொங்கலுக்கு ரெண்டு நாள் தான் இருக்கு.... எல்லா பொங்கல் சாமானும் வாங்கியாச்சா?
சின்ன பீப்பா: எல்லாம் வாங்கியாச்சு, மஞ்ச கிழங்கு, கரும்பு மட்டும் வாங்க வேண்டியது பாக்கி... அதெல்லாம் அவரு பாத்துக்கிருவார்.
பெரிய பீப்பா: நானும் இனிமே தான் எல்லாமே வாங்கணும். ஏண்டி, போன பொங்கலுக்கு ஐயா ரேசன்ல பொங்கல் சாமான்கள் தந்த மாதிரி இந்தம்மா ஏதும் தராங்களா?
சின்ன பீப்பா: அட போங்கக்கா... ஐயா போங்க சாமான் தந்தாலும் தந்தாரு... தமிழ்நாட்டுல பாதி பேரு வீட்டுல பொங்கல் பச்ச கலர்ல இருந்துச்சு. வேற வழியிலாம திங்க வேண்டியதா போச்சு. வேனாவே வேனாம்க்கா இவங்க தர்ற இலவசம்?
பெரிய பீப்பா: ஆமாண்டி, என் வீட்டுல கூட பச்சையா தான் இருந்துச்சு. வேனாம்டி இவங்க தர்ற இலவசம்.... கடையில நல்ல சரக்கா வாங்கி செஞ்சுரலாம்.
சின்ன பீப்பா: நண்பன் படத்துல விஜய்க்கு ஒரு பைட்டும் இல்லையாமே, பாவம் அவர் ரசிகர்கள்?
பெரிய பீப்பா: விடுடி, படம் நல்லா இருக்குல.... விஜய்க்கு பைட்டு, மாஸ் சீன், பிட்டு ஜோக்ஸ்ன்னு இல்லாம ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் வந்திருக்கு... அது பொறுக்கலியா உனக்கு.
சின்ன பீப்பா: ம்ஹும்.... சரி..சரி... விஜய் பத்தி பெசுனாலே உங்களுக்கு பொங்கிருமே..... எல்லாம் டைரக்டர் சங்கர் கைவண்ணம்...
பெரிய பீப்பா: ஏண்டி பிளவுஸ் கை ரொம்ப குட்டையா வச்சிருக்க?
சின்ன பீப்பா: என் கை கொஞ்சம் பூசினாப்புல இருக்குல. அதான் குட்டைக் கை வச்ச பிளவுஸ் போட்டா நல்லா இருக்கும். பியூட்டி பார்லர் அக்கா தான் சொனாங்க.
பெரிய பீப்பா: அப்போ எனக்கு பிளவுஸ் கை எப்படி வச்சா நல்லா இருக்கும்டி?
சின்ன பீப்பா: உங்க கை கொஞ்சம் குண்டா இருக்குல. அதனால நீங்களும் குட்டைக்கை வைக்கலாம். ஆனா, உங்க வீட்டுக்காரர் திட்டாம இருந்தா சரிதான். ஆனா நீங்க டைட்டா வைகாம கொஞ்சம் லூசா வைக்கணும். அப்போ தான் பாக்க அழகா இருக்கும்.
பெரிய பீப்பா: அடியே பியூட்டி பார்லர் போற நேரமாச்சு. இப்படியே நாம கதை பேசிட்டு இருந்தோம்னா பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும்.
சின்ன பீப்பா: ஆமாக்கா, நானும் டைம் பாக்க மறந்துட்டேன். வாங்க அக்கா போலாம்....
(இரண்டு பெரும் பியூட்டி பார்லர் போகிறார்கள். அவர்கள் இருவரும் சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.)
.
16 கருத்துரைகள்:
//(பெரிய பீப்பா கொஞ்சமா எடுத்து டேஸ்ட் செய்து பாக்கிறாள். அப்படியே டேஸ்ட் பாக்கிறேன் என்றே ஒரு முழு ஆலு பரோட்டாவையும் சாப்பிட்டு விட்டாள்)//
பெரிய பீப்ப்ப்ப்ப்ப்பா போல.ஹிஹிஹி
//அட போங்கக்கா... ஐயா போங்க சாமான் தந்தாலும் தந்தாரு... தமிழ்நாட்டுல பாதி பேரு வீட்டுல பொங்கல் பச்ச கலர்ல இருந்துச்சு.//
பச்சை கலரு ஜிங்குச்சா....பொங்கலோ?
//ம்ஹும்.... சரி..சரி... விஜய் பத்தி பெசுனாலே உங்களுக்கு பொங்கிருமே..... எல்லாம் டைரக்டர் சங்கர் கைவண்ணம்...//
அனில் பிடிக்காத சங்கத் தலைவர் பிரகாஸ் வாழ்க!
//(இரண்டு பெரும் பியூட்டி பார்லர் போகிறார்கள். அவர்கள் இருவரும் சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.)//
அப்ப இனி யாருக்கும் அவங்களை அடையாளம் தெரியாது...ஹஹ
பொங்கல் வாழத்துகள்...
என் இனிய நண்பர் பிரகாஷீக்கு என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். (அரட்டை நல்லாவே இருந்துச்சு)
வணக்கம் பிரகாஷ்!தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாழ்த்துக்கள்,உங்களுக்கும்,உங்கள் குடும்ப உறுப்பினர்கள்,மற்றும் தொப்புள்கொடி உறவுகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்!சின்ன பீப்பா,பெரிய பீப்பா பியூட்டிபார்லர் உரையாடல் அருமை!வாழ்த்துக்கள்!!!!
இன்னும் பீப்பாதானா?
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பியூட்டி பார்லர் போயிட்டாங்களா?
மேக்-அப் போட்டு முடிச்சு அவிங்க
எப்ப வர்றது?
அதுவரையிலும் என் வலைக்கு வாங்க!
என் வலையில்:
ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
:)
:)
:)
யார் எந்த பிளவுஸ் போட்டா எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
//(இரண்டு பெரும் பியூட்டி பார்லர் போகிறார்கள். அவர்கள் இருவரும் சார்பில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.)//
உங்களுக்கும் எனது
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
அரட்டை நன்று!
என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
அரட்டை நன்று..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
வேடிக்கையான உரையாடல் ...
பொங்கல் வாழ்த்துகள் ..
வரும் நாளெல்லாம் இனிக்கட்டும்
எல்லோருக்கும். வாழ்க வளர்க.