சுமார் 5000கிமீ தூரம் பாய்ந்து பக்கத்து நாடுகளை தாக்கும் வகையில் நவீன ரக அக்னி - 5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிக்கரமாக முடித்துள்ளது. இந்த ரக ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை சீனாவின் எந்த பகுதிகளிலும் தாக்கலாம். அந்த அளவு தூரமாக பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணை நேற்று காலை ஒடிசா மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டது. திட்டமிட்டபடி இலக்கை தாக்கி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
AGNI-V |
இந்த வகை அதிநவீன ஏவுகணை மூலமாக நவீன ஏவுகணைகள் வைத்திருக்கும் உலக பெரும் நாடுகளான அமேரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா நாடுகளுடன் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் ஒரு டன்னுக்கும் அதிகமாக ஆயுதங்களை தாங்கிச் சென்று அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்தியாவிடம் குறைந்த தூரமே தாக்கும் வகையில் ஏவுகணைகளே இருந்தது. இந்த நவீன அக்னி-5 மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில், உதாரணத்திற்கு பக்கத்தில் உள்ள சீனாவின் எந்த பகுதிகளையும் துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வகையான சோதனைகள் நடத்தப்பட இருப்பதாகவும், அவை முடித்து இன்னும் இரண்டு ஆண்டுக்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த அக்னி-5 ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் நம்மால் அதி நவீன ரக ஏவுகணைகளும் தயாரிக்க முடியும் என உலகிற்கு அறிய வைத்துள்ளோம் என்பதில் ஒரு இந்தியனாக பெருமை கொள்ளுங்கள் நண்பர்களே! ஜெய்கிந்த்!!
13 கருத்துரைகள்:
தாங்கள் கீழ்காணும் இடுகையை படித்தால் என் கருத்தை சொல்லியிருக்கிறேன் ..
http://nadikavithai.blogspot.in/2012/04/v.html
வணக்கம்ங்க... நல்லது கெட்டத சொல்லிட்டு அப்புடியே எஸ்கேப்பு ஆகாம, இன்டலி, யுடான்ஸ், தமிழ்10 இன்னும் மத்த ஓட்டுகளையும் மறக்காம போடுங்க... அப்பத்தான் உங்களுக்கும் நான் மறக்க மாட்டேன்... ரைட்டா?
நீங்க இப்பிடி எல்லாம் சொல்லிறிங்க முன்ன பின்ன எங்கட பக்கம் வந்தனிங்களா?hahahahaha இந்திய ஏவுகணை ஆய்வாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்திய ராணுவத்திற்கு இது ஒரு மைல் கல்.வெல்டன் இந்தியா.இந்நேரம் சீனாவுக்கு பீதி கிளம்பியிருக்கும்.நல்ல தகவல் பிரகாஷ்..
வணக்கம் பிரகாஷ்!இந்த ஏவுகணையால இலங்கையத் தாக்க முடியாதே????எனிவே,வாழ்த்துக்கள் இந்திய விஞ்ஞானிகளுக்கு!
இந்த ஏவுகணை உண்மையில் எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்று சீன வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள் ..!
வந்தே மாதரம்
வணக்கம் பிரகாஷ்!இந்த ஏவுகணையால இலங்கையத் தாக்க முடியாதே????எனிவே,வாழ்த்துக்கள் இந்திய விஞ்ஞானிகளுக்கு!////
என்ன யோகா சார் இப்படி சொல்லிட்டீங்க மஹிந்தா எங்க அன்னைக்கு சித்தப்பு! மன்'க்கு பெரியப்பு!வேனும்னா தமிழர் வாழும் பகுதியில போடுறோம்.....
ஒரு இந்தியனாக பெருமை கொள்ளுங்கள் நண்பர்களே// நிச்சயமாக அறிய தகவல் நல்ல பகிர்வு .
நானும் ஒரு இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
வீடு சுரேஸ்குமார் said... Best Blogger Tips [Reply To This Comment]
வணக்கம் பிரகாஷ்!இந்த ஏவுகணையால இலங்கையத் தாக்க முடியாதே????எனிவே,வாழ்த்துக்கள் இந்திய விஞ்ஞானிகளுக்கு!////
என்ன யோகா சார் இப்படி சொல்லிட்டீங்க மஹிந்தா எங்க அன்னைக்கு சித்தப்பு! மன்'க்கு பெரியப்பு!வேனும்னா தமிழர் வாழும் பகுதியில போடுறோம்..... /////அதானே பாத்தேன்!இப்ப மூணு வருஷமா(2006-2009) போட்டவங்க இனிமே போடாம விட்டுடப் போறாங்களேன்னு??????
ஜெய்கிந்த்....
உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது
ஒரு நொடி பெருமிதம்;மறுநொடி வேதனை. இதுவே இந்தியா!
ஏவுகணைகள் தயாரிப்பது தற்காப்பிற்கே..
ஒவ்வொரு நாடும் தனது எதிரியைத் தாக்கும் வகையிலான தூரத்திற்குத் தயாரிக்கிறன.
அமெரிக்காவிற்கு ஈரான்
ரஷ்யாவிற்கு அமெரிக்கா
பாகிஸ்தானிற்கு இந்தியா (700 கி.மீ)
இந்தியாவிற்கோ சீனா (5000 கி.மீ)