CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts


பந்தி நாகரீகம் தெரியுமா?


முன் குறிப்பு:
ஒரு பதிவரின் பதிவில் கருத்துரை மட்டுறுத்தல் இருந்தும் நான் பகிர்ந்த கருத்துரைகள் அந்தப் பதிவரால் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கையில் கீழ்க்கண்ட கதை சற்று சுருக்கமாக அங்கே கருத்துரையில் பதிந்திருந்தேன். ஆனால் கருத்துரையில் வெளியிடப்படவில்லை. ஆபாசமாகவோ, நா கூசும் வார்த்தைகளோ, இல்லாமல் இருந்தும் வெளியிடப்படாமல், மாறாக மட்டுறுத்தல் மூலம் எனது கருத்துரை நீக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய காரணம் "சைவம் சாப்பிடும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த சைவ/அசைவ கருத்துரையை வெளியிட விருப்பம் இல்லை" என்பதாகும். ஆகையால் எனது கருத்துரை அன்றே வெளியாகி இருந்தால் இப்போது இந்தப் பதிவுக்கு அவசியமே இருந்திருக்காது. இப்போது இந்த தகவலைக் கூற காரணம், எனது இந்தப் பதிவை ஒருவர் பதிவுலகில் அநியாயம் என்ற தலைப்பில் பதிவாக பகிர்ந்ததே காரணம். சரி, வாங்க பந்தி கதைக்கு போகலாம்.
*************
ஒரு ஊர்ல மக்கள் பெருமையாய் போற்றும்படி, காசி என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதோடு, அவர்களுக்கு தமது வீட்டில், நிலத்தில் வேலையும் கொடுத்து வந்தார். அவர்களும் ஆர்வமுடன் வேலைகளை செய்து அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, முதலாளிக்கும் நற்பெயரை வாங்கித் தந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி விருந்து வைத்து நன்முறையில் உபசரிப்பார். மக்களும் வயிறார உண்டு திருப்தியாக காசியை போற்றி புகழ்ந்து செல்வார்கள். 

மேலும் வாசிக்க... "பந்தி நாகரீகம் தெரியுமா?"



பஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்!

வணக்கம் வலை நண்பர்களே,

ரொம்ப மோசம் நான்....

அப்படி என்ன மோசம் போயிட்டேன்னு நெனக்கறிங்களா? 
மேலும் வாசிக்க... "பஸ்ல சுத்தியலும், உயிருக்கு உயிரான இணைய இணைப்பும் - லென்ஸ் ரவுண்ட்!"



கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!


ஒரு உண்மைச் சம்பவமே இக்கட்டுரை எழுத காரணம்.

கடந்த வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் திடீரென பிரபல மருத்துவமனையில் ஐஸியூ-வில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களால் அந்த மருத்துவமனையே நிறைந்து இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொன்ன செய்தி எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.
மேலும் வாசிக்க... "கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!"



எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!


       நண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா? கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.
மேலும் வாசிக்க... "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!"



நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!


கரன்ட்டுக்கும் லீவ் முடிஞ்சிருச்சு:
ஆமாங்க, ஸ்கூல் பசங்கள எக்ஸாம்க்கு கூட படிக்க முடியாம கரண்ட் கட் ரொம்ப இருந்துச்சு. சுமாரா பத்து மணிநேர வரை... கரண்ட் கட். அதுலயும்  நைட்டுல அடிக்கடி போயிட்டு இருந்துச்சுல. பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டதும் கரண்ட் கட்டுக்கும் லீவ் விட்டுட்டாங்க. அதுக்கு காரணம் காற்றாலை மின்சாரம் தேவையான அளவுல கெடச்சதுனால கரண்ட் கட் ஆகறது இல்லைன்னு அரசு அறிக்கை சொல்லுச்சு. இப்ப ஸ்கூல் ஆரம்பிச்சுருச்சு. கரண்ட் கட்டும் ஆரம்பிச்சுருச்சு.

நித்யானந்தரின் விதிமுறை மீறல்?
 நம்ம  நித்தி மதுரை ஆதீனமா ஆனாலும் ஆனாரு. பிரச்சனை மேல பிரச்சனை தான். இப்ப என்ன பிரச்சனைன்னா, அவர கடவுளா பாவித்து பூஜை செய்யணுமாம். அபிஷேகம் செய்யணுமாம். அப்புறமா பகவத்கீதை உபதேசம் செய்வாராம். இப்படி அவரை மையமா வச்சு என்னனமோ செஞ்சுட்டு இருக்காரு. இவரு செய்றத மடாதிபதியும் கண்டுக்க மாட்டிங்கறாரு, என்ன செய்றது????

தமிழக செயலைக் கண்டு கேரளா வியப்பு:
கேரளா வியப்புக்கு காரணம் என்னான்னா, பெரியார் அணையில ஏகப்பட்ட ஓட்டைகள் செக் பண்றதுக்காக கேரளா போட்டாங்கல! அந்த ஓட்டைகளை அடைக்க கோர்ட் அனுமதி தந்தத யூஸ் பண்ணி நம்ம பொதுப்பணித்துறை நுட்ப வல்லுனர்கள் செம ஸ்ட்ராங்கா ஓட்டையை அடைச்சுகிட்டு இருக்காங்க. அதாவது சிமென்ட், கான்கிரீட் கலைவையை அதிக அழுத்த கம்ப்ரசெரில் அதி வேகத்துல அந்த ஒட்டைக்குள்ள விடுறதுனால சைடுல ஏதாவது சின்ன சின்ன ஓட்டைகள் இருந்தாலும் அடைச்சுக்கிருமாம். இதனால அணை இன்னும் ஸ்ட்ராங்கா மாறிரும். இதனால அணை பலவீனமா இருக்குன்னு கேரளாவால சொல்ல முடியாது.

நடிகை அஞ்சலிக்கு  இம்சை:
நம்ம கலகல அஞ்சலிக்கு நம்ம ரசிகர்கள் போன்ல மணிக்கணக்கா பேசுராங்கலாம். ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இப்படி பேசுறத அஞ்சலி இம்சையா எடுத்துக்கறாங்க. என்ன காரணம்னா, பேசுற எல்லாரும் லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுராங்கலாம். அம்மணிக்கு அது பிடிக்கலையாம். சினிமான்னு வந்துட்டா ரசிகர்கள் அன்பு வேணும் அம்மிணி. ஹி..ஹி... அம்மிணி போனை ஆப் பண்ணாம இருந்தா எல்லா பயபுள்ளைகளும் வழியத்தானே செய்வாங்க. யாராச்சும் அஞ்சலி நம்பர் கொடுங்கப்பா?
மேலும் வாசிக்க... "நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!"



ஜவ்மிட்டாய் வாங்கலியோ ஜவ்மிட்டாய்

ஜவ்மிட்டாய், நாம சிறு வயதில் பார்த்த மிட்டாய். இப்போ இந்த மிட்டாய் எங்க இருக்குன்னே தெரியாத அளவுக்கு அழிஞ்சு போச்சு. நீளமான மூங்கில் கொம்பில் அதன் உச்சியில் ஒரு அழகான பொம்மை கையில் சிங்க்ச்சாவை தட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருக்கும். அந்த பொம்மைக்கு அடியில் இருந்து ஜவ்மிட்டாய் அந்த மூங்கில் கொம்பில் சுத்தி வச்சிருப்பாங்க. 

ஜவ்மிட்டாய் பொம்மை
பையன்களுக்கு வாட்ச் டிசைனும். பொண்ணுங்களுக்கு நெக்லஸ் டிசைனும் ஜவ்மிட்டாயில் செஞ்சு தருவாங்க. இப்ப மதுரையில நடந்த சித்திரை திருவிழாவில ஜவ்மிட்டாய் வித்துட்டு வந்தாரு ஒரு பெரியவர். சின்னப் பசங்களுக்கு அதைப் பார்த்ததும் ஆச்சர்யங்கள். ஒரு பொம்மையில் இருந்து மிட்டாய் டிசைன் செஞ்சு தர்றாங்களே என ஆச்சர்யப்பட்டார்கள். அந்த ஜவ்மிட்டாய் விற்பவர் இனி அடுத்த திருவிழாவுல தான் பாக்க முடியும் இந்த ஜவ்மிட்டாய், பசங்களே, வாங்கிக்கங்க என கூவி கூவி விற்பனை செய்தார். 

ஜவ்மிட்டாயில் நெக்லஸ்
வாட்ச் அஞ்சு ரூபாய் எனவும், நெக்லஸ் பத்து ரூபாய் எனவும் விலை வச்சிருந்தார். அண்ணன் பசங்களுக்கு வாங்கி தந்ததும் ரொம்ப ஆர்வமா சாப்பிட்டாங்க. டிபரன்ட் டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னாங்க பசங்க. நீங்களும் ஜவ்மிட்டாய் பொம்மையை பார்த்துக்கங்க.
மேலும் வாசிக்க... "ஜவ்மிட்டாய் வாங்கலியோ ஜவ்மிட்டாய்"



மொய்க்கு மொய் அவசியமா?

        மொய்க்கு மொய், இது பதிவுலகத்துக்கான மொய்க்கு மொய், அதாவது பதிலுக்கு பதில் கமென்ட் போடுவது, ஓட்டு போடுவது, ஓட்டு போட்டதை தனியா ஒரு கமென்ட் போட்டு சொல்வது, என்ற வகையான மொய்க்கு மொய் பத்தி இந்த பதிவுல நான் சொல்ல வரல. நெஜமாலுமே விஷேசதுக்காக வர்ற மொய்க்கு மொய் பத்தி கொஞ்சமா சொல்ல போறேன்.
        ஒரு பங்ஷன்காக  இன்விடேஷன் ஊரெல்லாம் வைப்ப்போம். ஊரைக் கூட்டி பங்ஷன் வைக்கார்யா என நாலு பேரு நல்ல விதமா சொன்னா ஓகே தான். ஆனா இப்போ சில பங்ஷன்கள் வெறும் காசை பிடுங்கவே நடக்குது. மத்தவங்க விஷேசத்துக்கு மொய்க்கு மேல மொய் செஞ்சு சோர்ந்து போயிருப்பாங்க. பின்ன இவங்களால விசேஷமே வைக்க சான்ஸ் இருக்காது. அதனால மொய் வரவை எதிர்பாக்க முடியாது. 

          அதாவது ஒரு பையன் மட்டுமே இருக்கான்னு வைங்க, சின்ன வயசுல காது குத்து விழா மட்டுமே வைக்க முடியும். அதுல மொய் வாங்கிரலாம். அதுக்கப்புறம் அவங்க வீட்டுல அவனுக்கு கல்யாணம் வரை எந்த விசேஷமும் வைக்க முடியாது. வீடு, கீடு கட்டுனா கிரகப்பிரவேசம் வைக்கலாம். அதுவும் இன்னைக்கு இருக்குற விலை வாசியில் அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். 

    இதே ஒரு பொண்ணு இருக்குன்னு வைங்க, காது குத்து, பெரியவளானதுக்கு ஒரு விழா. சடங்கு, அப்புறமா கல்யாணம்ன்னு வைப்பாங்க. ஓரளவு மொய் வாங்கலாம். ஆனா, அதுவும் அந்த பொண்ணு கல்யாணத்துக்கு நகை, சீர்வரிசை சேர்க்கறதுக்கே போயிரும். கல்யாணத்துக்கும் பெருசா அமௌன்ட் எதிர்பாக்க முடியாது. ஏன்னா, முந்தின விசேஷத்துக்கு மொய் வந்ததுனால கல்யாணத்துக்கு ஓரளவு மட்டுமே எதிர்பாக்க முடியும். 
       சரி, இப்போ என்ன சொல்ல வரேன்னா இந்த மாதிரி குடும்ப விசேஷங்கள் வச்சு மொய் கனிசமா வாங்க முடியாத ஆட்கள் புதுப்புது ட்ரெண்ட் கண்டுபிடிச்சிருக்காங்க. பையனுக்கு காது குத்து விழான்னு பத்திரிகை வச்சு அழைப்பாங்க. ஆனா, பங்க்சனுக்கு போயி பார்த்தா பையனுக்கு இருபது வயசுக்கு மேல இருக்கும். காதும் குத்தியிருக்க மாட்டாங்க, அட, மொட்டை கூட போட்டிருக்க மாட்டாங்க. நாமளும் பொறுக்க முடியாம ஏங்க, காது குத்து விழான்னு சொன்னிங்க, காதே குத்தலன்னு கேட்டா, அவிங்க ஹி..ஹி... ஒரு பையன் வச்சிருக்கோம். மொய் வாங்க காது குத்து விழான்னு பத்திரிகை அடிச்சுட்டோம். வேற ஒண்ணுமில்லைங்க, நல்லா சாப்பிட்டு மொய் செஞ்சுட்டு போயிருங்கன்னு சொல்வாங்க பாருங்க. ம்ஹும்... வேறவழி நாம மொய்க்கு மொய் வச்சுட்டு வர வேண்டியதுதான்.
        அப்புறமா ஏதாவது கோயில் பேரை போட்டு கிடா வெட்டு அழைப்புன்னே பத்திரிகை ஊர் ஊரா தருவாங்க. பத்திரிகை வச்சும் போகலைன்னா மதிப்பு இல்லையில. அதனால அங்கேயும் போயி நல்லா நான்வெஜ் சாப்டுட்டு மொய் வச்சுட்டு வர வேண்டியது தான்.
 
      போன மாசம் எனக்கு ஒரு காது குத்து விழா பத்திரிகை வந்துச்சுங்க. எப்படியும் எட்டு பக்கம் இருக்கும். பக்கத்து வீட்டுக்காங்க பேரெல்லாம் போட்டிருந்தாங்க. மாமன், மச்சான், என உறவு முறைகளில் போட முடியாத பேர்களை வரவேற்பாளர்கள் லிஸ்டில் சேர்த்திருந்தாங்க. அந்த பத்திரிக்கையில கடைசி பக்கம் ஒரு வரி போட்டிருந்தாங்க. ரொம்பவே டச்சிங் வரி அது. 
பின்குறிப்பு: 2003க்கு பின் உள்ள உங்கள் மொய் நோட்டை தயவுசெய்து பார்க்கவும்.
இதாங்க அந்த வரி. படிச்சுட்டு மிரண்டு போயிட்டேன். அந்த ஆளுங்க 2003இல் கடைசியா விசேசம் வச்சிருந்திருப்பாங்க போல. அதான் இன்னைக்கு 2012 வரை நிறைய மொய் செஞ்சு ஓஞ்சு போயி போட்ட காசை வசூல் பண்ண இப்படி யோசனை பண்ணியிருக்காங்க. அந்த காது குத்து விழாவுக்கு போயி ஏமாந்து வந்தேனுங்க. கறி சோறுன்னு நெனச்சு போனா சாம்பார் சாப்பாடு போட்டு மொய் வாங்கிட்டாங்க. அவ்வ்வ்வ்வ்....
     ஆக, இப்படி மொய் வாங்க எத்தனையோ ட்ரெண்ட்களை சொல்லிட்டே போகலாமுங்க. மக்கள் புதுசுபுதுசா யோசிச்சு பத்திரிக்கை அடிச்சு மொய் வாங்கிடுவாங்க... அதாவது மொய்க்கு மொய் வாங்கியே தீரனும்கறது மட்டுமே அவங்க குறிக்கோள்.
மேலும் வாசிக்க... "மொய்க்கு மொய் அவசியமா?"



சீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி!

          சுமார் 5000கிமீ தூரம் பாய்ந்து பக்கத்து நாடுகளை தாக்கும் வகையில் நவீன ரக அக்னி - 5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிக்கரமாக முடித்துள்ளது. இந்த ரக ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை சீனாவின் எந்த பகுதிகளிலும் தாக்கலாம். அந்த அளவு தூரமாக பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணை நேற்று காலை ஒடிசா மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டது. திட்டமிட்டபடி இலக்கை தாக்கி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
AGNI-V
இந்த வகை அதிநவீன ஏவுகணை மூலமாக நவீன ஏவுகணைகள் வைத்திருக்கும் உலக பெரும் நாடுகளான அமேரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா நாடுகளுடன் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் ஒரு டன்னுக்கும் அதிகமாக ஆயுதங்களை தாங்கிச் சென்று அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் இந்தியாவிடம் குறைந்த தூரமே தாக்கும் வகையில் ஏவுகணைகளே இருந்தது. இந்த நவீன அக்னி-5 மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில், உதாரணத்திற்கு பக்கத்தில் உள்ள சீனாவின் எந்த பகுதிகளையும் துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வகையான சோதனைகள் நடத்தப்பட இருப்பதாகவும், அவை முடித்து இன்னும் இரண்டு ஆண்டுக்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த அக்னி-5 ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் நம்மால் அதி நவீன ரக ஏவுகணைகளும் தயாரிக்க முடியும் என உலகிற்கு அறிய வைத்துள்ளோம் என்பதில் ஒரு இந்தியனாக பெருமை கொள்ளுங்கள் நண்பர்களே!  ஜெய்கிந்த்!!
மேலும் வாசிக்க... "சீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி!"



பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?

      உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. எப்படியும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தே ஆக வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

        நம்ம ஊரு மக்களின் எதிர்ப்பை சந்தித்து பல மாநிலங்களும் வெளிச்சம் பெற போகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கபடலாம். இந்நிலையில் இந்த ஆண்டு நிறைவுறும் ஐந்தாண்டு திட்டத்தின் சாதனைகளை விளக்கி ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுனில்குமார் பேசுகையில் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது என கூறியுள்ளார். ஏன் இந்த பாரபட்சம்? தமிழகத்தில் எட்டு, பத்து மணிநேர மின்வெட்டு இருப்பது அவருக்கு தெரியாதா? இன்னும் சில மாதத்தில் மின்சாரம் தயாரிக்க இருக்கும் மாநிலத்திற்கு சிறிய அளவு கூட மின்சாரம் ஒதுக்க முடியாதா? மத்திய அரசு நினைத்தால் முடியும். ஆனாலும் காங்கிரஸ் எப்போதும் தென்னிந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு கடுகளவு கூட நல்ல திட்டங்கள் செய்யாது. இந்நிலையில் மின்சாரம் கிடைக்குமா? சந்தேகம் தான்.

    தமிழக அரசும் வேறு வழிகளில் முயற்சி செய்ததா எனத் தெரியவில்லை? கூடங்குளத்தை மட்டுமே நம்பி இருப்பது போல தெரிகிறது. இங்கே நமக்கு மின்சாரம் இல்லை என கை விரிக்கும் மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு சுமார் ஐயாயிரம் மெகாவாட் மின்சாரம் உதவி அளிப்பதாக நமது பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு உறுதி தந்திருப்பதாக பாகிஸ்தான் பேப்பரான நியூஸ் டெய்லி செய்தி (தினமலர் செய்தியின் படி) வெளியிட்டுள்ளது. 

        இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவ்வளவு மின்சாரம் எங்கிருந்து தரப்படும்? அந்த மின்சாரத்தில் ஒரு பத்து சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கினால் பல மணிநேரம் மின்வெட்டு கொஞ்சமாவது குறையுமே? ஆக, மின்சாரம் இருந்தும் நமக்கு தராமல் கை விரிகிறது மத்திய அரசு, என நம்பாமல் இருக்க முடிகிறதா? என்ன?
மேலும் வாசிக்க... "பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?"



நல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா!?

தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றத்துக்கு அப்புறமா பஸ் டிக்கட் ரேட் அதிகரிச்சது நம்மளுக்கு இப்போ பழகிப் போன விஷயம். பழைய ரேட்டுல இருந்து சுமாரா ஒன்னரை மடங்கு கூடியிருக்கு. இதனால அதிக தூரம் போற விரைவு எக்ஸ்பிரஸ் பஸ்களில், உதாரணத்துக்கு சென்னை டூ மதுரைன்னு எடுத்துகிட்டா மதுரைக்கு பத்து டிக்கெட்டும், திருச்சிக்கு ஒரு பத்து டிக்கெட்டும் ஏறும். ஆனா சென்னைக்கும் திருச்சிக்கும் இடையில விழுப்புரம், செங்கல பட்டு, என இடையில இருக்குற ஊர்களுக்கு ஆட்கள் ஏறுறது இல்லை. அதுக்கு என்ன காரனம்னா அந்த ஊர்களுக்கு போற சாதாரண அரசு பஸ்களின் ரேட் விரைவு பஸ்களின் ரேட்டை விட கம்மி. அதனால அந்த இடையில இருக்குற ஊர்களுக்கு கிலோ மீட்டருக்கான ரேட்டை ஒரு முக்கிய ஆபிசர் குறைச்சார். அதனால சாதாரண அரசு பஸ்களின் ரேட்டும், விரைவு பஸ்களின் ரேட்டும் கிட்டத்தட்ட ஒரே அளவா இருந்துச்சு. அதனால மக்களும் விரைவு பஸ்சில் ஓரளவு ஏறினாங்க. சரிங்க, இது நல்ல விஷயம் தானே, என்ன சொல்ல வரேன்னு கேட்கறிங்களா? ரேட் குறைக்காத வரைக்கும் அந்த ஆபீசர் நல்லா தான் இருந்தார். ரேட்டை குறைச்சதுக்கப்புறம் அவருக்கு ஆப்பு வச்சுட்டாங்க. ஆமாங்க, அதுக்கு காரணமா சங்கரன்கோவில் தேர்தலை சொல்லி இருக்காங்க அரசு தரப்பு. அதாவது தேர்தலுக்காக ரேட் கொறச்சிருகாங்கன்னு சிலர் பேசியதே காரணமாம். இப்போ அந்த ஆபீசர் வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு மாத்திட்டாங்க.
********************************
இங்க போன ஆட்சியில பஸ்ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி போன்ற சில முக்கியமான இடத்துல தற்போதைய முக்கிய அரசியல்வாதி இலவச  டாய்லெட்களை கட்டி விட்டாரு. நவீன முறையில காசு வாங்காம இலவசமா மக்கள் யூஸ் பண்ற மாதிரி இருந்துச்சு.  டாய்லெட்டை சுத்தம் செய்ய ஆட்களும் இருந்தாங்க. அடிக்கடி சுத்தம் செஞ்சு டாய்லெட் அசிங்கமா இல்லாம பார்த்துட்டாங்க. அப்புறமா காலப்போக்கில ஆட்சி மாறுச்சு. அந்த டாய்லெட் நிலைமையும் மாறுச்சு. கொஞ்ச நாளா பூட்டு போட்டிருந்தாங்க. இப்ப திடீர்னு தொறந்து டாய்லெட் முன்னாடி கல்லா கட்டி ஒருத்தர் திடீர்னு வந்திருக்காரு. பிரீ யூஸா (free use) இருந்தது இப்போ பே யூஸா (pay use) மாறியிருச்சு. யார என்ன சொல்றது? நல்லதுக்கும் காலம் இல்லையான்னு டவுட் வருது?
மேலும் வாசிக்க... "நல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா!?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1