CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,
 நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில்  (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக் கொள்ளும். 

பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான  மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று. 
  • பேஸ்புக்கில் நமது கணக்கை ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம்.
  • அதே போல நமது அடையாள பெயரை (user name ie: time line name) எவ்வாறு தமிழ் பெயராக மாற்றுவது என்றும் பார்ப்போம்.

பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?
1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்).
 
2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary ஓபன் ஆகும். அதில் கீழ் நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற லிஸ்ட் ஓபன் ஆகும். அதில் தமிழ் மொழியை தேர்வு செய்து save changes தர வேண்டும். (பார்க்க கீழே உள்ள இரண்டு படங்களையும்)

அவ்வளவு தான். இனி உங்கள் பேஸ்புக் கணக்கு முழுவதும் தமிழ் மொழிக்கு மாறியிருக்கும். (பார்க்க கீழேயுள்ள படம்)
ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசத்தை கீழே உள்ள படங்கள் மூலம் அறிக.






பேஸ்புக்கில் நமது அடையாள பெயரை தமிழுக்கு மாற்றுவது எப்படி?
1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க மேலே முதல் படம்).
 2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் முதலாவதாக name என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களது தற்போதைய பெயர் காட்டும். அதன் வலது பக்கம் edit என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில் first, middle, last, display as என காட்டும். 
 
3. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெயரை தமிழுக்கு மாற்றி, உங்கள் பேஸ்புக் password கொடுத்து save changes க்ளிக் செய்யவும். சுமாராக ஒரு நாளில் உங்களுக்கு விருப்பமான தமிழ் பெயர் பேஸ்புக்கில் மாறியிருக்கும்.

சந்தேகம் இருப்பின் கமென்ட்-இல் கேட்கவும்.

மேலும் வாசிக்க... "பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி?"



மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள்


மதுரை மாநகரின் தொன்மையை நினைவு கூர்ந்து இதன் பெருமையை உணர்ந்து நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வரும் தலைமுறைக்கு ஊட்டும் நோக்குடன் "மாமதுரை போற்றுவோம்" என்ற  விழா மதுரையில் வரும் பிப்ரவரி மாதம் 8, 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது. 

  • மதுரையைப் போற்றுவோம்,
  • தொன்மையைப் போற்றுவோம்,
  • வைகையைப் போற்றுவோம் 
என மூன்று தலைப்பின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.


நிகழ்ச்சிநிரல்:
பிப்.,3 காலை 7 மணிக்கு அரசரடி ரயில்வே மைதானத்தில் "மதுரைக் காகத்தான்' மாரத்தான் ஓட்டம் துவங்கும். பெரியார் பஸ்ஸ்டாண்ட், சிம்மக்கல் வழியாக தமுக்கம் வரை செல்லும் ஓட்டத்தில் 3 பிரிவினர் பங்கேற்பர். அவர்களுக்கு சான்றிதழ்கள், டி ஷர்ட் வழங்கப்படும். பெண்கள், சிறுவர்களுக்கு மீனாட்சி கல்லூரி வரையும், ஆண்களுக்கு ரேஸ்கோர்ஸ் வரையும் நடைபெறும். பிப்., 7ல், கிடாரிப்பட்டி சமணர் குகையில் இருந்து ஜோதி கொண்டு வரப்படும். கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மரீஸ் சர்ச், மீனாட்சி கோயிலில் வரவேற்பு அளிக்கப்படும். 

பிப்., 8ல் விழா துவங்கும். அன்று காலை தமுக்கம் மைதானத்தில் தீபம் ஏற்றப்படும். கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

பிப்.,9ல், "தொன்மையை போற்றுவோம்' என்ற தலைப்பில், தமுக்கம் மைதானத்தில் கருத்தரங்கு, மாலை 3 மணிக்கு மேல், "தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா' என்ற தலைப்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மதுரை கல்லூரியில் இருந்து கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் 9 வாகனங்கள், தெற்குவெளிவீதி, கோரிப்பாளையம் வழியாக தமுக்கம் வந்தடையும். பின், கலைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மூன்றாம் நாளான பிப்.,10ல், "வைகையை போற்றுவோம்' நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஆறு சுத்தம் செய்யப்படுகிறது. வைகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அதன் "முப்பரிமாண மாதிரி' வைக்கப்படும். மாலை 6.30 மணிக்கு வைகை ஆற்றில் மக்கள் தீபம் ஏற்றுவர். 8 மணிக்கு மேல் வானவேடிக்கை, பின், 9.30க்கு தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றப்படும். 

மாமதுரை சிறப்பு ஏற்பாடுகள்:
விழாவைப் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த  அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டை ஆகிய இடங்களில் 3டி – முப்பரிமாண காட்சி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலவாசல் கோட்டையின் மிச்சமுள்ள பகுதியில் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.  விளக்குத்தூண் அருகில் பழந்தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப் பிடித்து வீரன் ஒருவர் அடக்கும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.  பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளியே கிளம்பும் யானையின் சிற்பக்காட்சி பழங்காநத்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

  
வைகையைப் போற்றுவோம்:
 3-ம் நாள் நிகழ்வான வைகையை போற்றுவோம் விழாவிற்கான பணி தற்போது வைகை ஆற்றில் நடைபெற்று வருகிறது. 

இங்கு வைகை ஆறு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எந்த வழியாக மதுரைக்கு வருகிறது, எப்படி கடலில் போய் சேருகிறது என்பதை மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும், விளக்கும் வகையிலான முப்பரிமாண (3-டி) வடிவமைப்புகள் ஏற்பாடு செய்யும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

மதுரை மக்கள், மாணவ, மாணவிகள் வைகை ஆற்றை பற்றிய முழுமையான செய்திகளை அறிந்து கொள்ளவும், தொன்மை வாய்ந்த இந்த வைகை ஆற்றை காப்பாற்றவும், பேணி பாதுகாக்கவும், இந்நிகழ்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும். வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் மரக்கன்றுகளை நடவும், தொடர்ந்து கன்றுகளை பராமரிக்கவும், லயன்ஸ் கிளப் பொறுப்பேற்றுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று கவனித்து வருகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்விழா மூலம் மதுரையின் புகழ் திக்கெங்கும் பரவவும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பு: படங்கள், செய்திகள் பல இணைய தளங்களில் இருந்து சேகரித்து பகிரப்பட்டுள்ளது
மேலும் வாசிக்க... "மாமதுரையை போற்றுவோம்; மதுரை புகழ் பரப்புவோம்! மாமதுரை விழா விவரங்கள்"



கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க

      இன்றைய தினத்தில் கிரிக்கெட் உலகில் நமது வீரர்கள் (ஆண்கள்) உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள்.

    ஆனால் இந்திய கிரிக்கெட்டில்  பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம்.  இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். என்னவென்று அறிந்து கொள்ள வாசியுங்கள்.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட்இண்டிஸ் அணிக் கெதிராக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நமது பெண்கள் அணியின் திருஷ் காமினி முருகேசன் என்ற வீரர் ஓர் வரலாறு படைத்துள்ளார்.
 துவக்க வீரராக களமிறங்கி நூறு ரன்கள் அடித்து பெண்கள் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச் சாதனை படைத்த இவருக்கு நமது அரசும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் போதிய பாராட்டோ, பரிசோ அறிவிக்கவில்லை என ஒரு தின பத்திரிக்கையில்  வாசித்த போது நாம் எந்த அளவு பெண்கள் கிரிக்கெட் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பது தெரிய வருகிறது.

திருஷ் காமினி பற்றி:
சென்னையில் வாழும் இவர், தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். தனது 16 வயதில் ஆசிய கோப்பை (2006) தொடரில் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் சிறந்த "ஜூனியர்' வீராங்கனை (2007-08), சிறந்த "சீனியர்' வீராங்கனை (2009-10) விருதுகளை வென்றுள்ளார். 

உலக கோப்பை போட்டியில் முதல் சதம் அடித்து வரலாறு படைத்த திருஷ் காமினி அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிப்போம் நண்பர்களே.

திருஷ் காமினி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க... "கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண். வாழ்த்தலாம் வாங்க"



மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - புகைப்படங்கள்

    மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொழுதுபோக்கு மற்றும் கல்விக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இங்கு SVN நிறுவனத்தால் இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பங்கள், காய்கறி சிற்பங்கள் என புதுமையாக கண்காட்சியை அலங்கரித்து இருந்தார்கள். சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
LMV ROCKET



ARYABHATA




கரும்பால் உருவாக்கப்பட்ட ஈபிள் டவர்

மணலால் உருவாக்கப்பட்ட சிற்பம்

பூசணி காயில் மீன் வடிவம் செதுக்கப்படுகிறது

பறவை வடிவம்

மிளகாய் மற்றும் கத்தரிக்காயில்



கொழையாடு பாடம் செய்யப்பட்டுள்ளது

மலை உடும்பு


சிறுத்தை தோல்


மேலும் வாசிக்க... "மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - புகைப்படங்கள்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1