வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்றி நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது, அதில் என்ன செய்வது? வலைப்பூவை அமைப்பது எப்படி என நிறைய கேள்விகள் எழும்.
இப்படி வலைப்பூவைப் பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு ஓர் எளிமையான வழிகாட்டுதலை என் அனுபவத்தின் மூலம் இக்கட்டுரைத் தொடர் வழியாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.
வலைப்பூ வசதியை Blogger, Wordpress என்ற இரண்டு தளங்கள் தருகின்றன. இவற்றில் நாம் Blogger மூலம் உள்ள வலைப்பூ பற்றியே பார்க்க போகின்றோம்.
1. Gmail account தேவை. Account துவங்க இங்கு செல்லவும்.
அந்த account மூலமாகவே Blogger தளத்திலும் உள் நுழைய முடியும்.
2. உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
3. மேலே உள்ள படத்தில் title என்ற கட்டத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். "இணையப் பூங்கா" என நான் கொடுத்துள்ளேன்.
4. அடுத்து address என்ற கட்டத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை தரவும். நான் netpoonga என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும்.
குறிப்பு: Title மற்றும் Address-ஐ தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். Title என்பது வலைப்பூவிற்கான தலைப்பு, அதாவது வலைப்பூவின் முகப்பு பகுதியில் மேலே காட்டக்கூடியது. Address என்பது வலைப்பூவிற்கான முகவரி. அதாவது வலைப்பூவின் URL Name. பெரும்பாலும் Title/Address இரண்டிலும் ஒரே பெயர் வரும்படி அமையுங்கள். Title ஒரு பெயர், Address ஒரு பெயர் என வைத்தால் வாசகர்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. Title தமிழில் இருந்தால் Addressஐ ஆங்கில மொழிபெயர்த்தும் வைக்கலாம். அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.
5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.
5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.
குறிப்பு: வலைப்பூவிற்கான டெம்ப்ளேட் அமைக்க இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் ஒரு பத்து இடுகை(post) வரையாவது பிளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை பயன்படுத்திய பின், நமக்கு தேவைப்படும் இணைப்புகளை இணைத்த பின்னர், மற்றைய டெம்ப்ளேட்டை அந்த வலைப்பூவிற்கு அமைப்பது மிக நல்லது.
நண்பர்களே, வலைப்பூ தொடங்கியாச்சு. இனி என்ன செய்வது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போமே!
15 கருத்துரைகள்:
புதியவர்களுக்கு அவசியமான தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை
// அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.//
அவ்வ்வ்வ்வ்... எனக்கு இரண்டும் வேறு வேறு
நல்ல தொடக்கம்... தொடர வாழ்த்துக்கள்...
நல்ல ஆரம்பம் தோழா. தொடருங்கள்.
This is very useful to me, and i can learn more about blog!
Thank you!
சகோ தாமதமான இடுகை இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ள உதவும் நன்றி சகோ. தொடருங்கள்.
அருமையான பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.
என்னை போன்ற புதியவர்களுக்கு மீண்டும் ஒரு ரெப்ரெஅஷ் நன்றி தொடருங்கள்
இனிதே இப் பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோ .
எளிமையான விளக்கம்! அருமையான பதிவு! நன்றி!
நல்ல வேளை நான் முன்னாடியே ஆரம்பிச்சுட்டேன் இல்லாட்டி என் பதிவை படிச்சுதான் பிரபல?! பதிவராகிட்டீங்கன்னு பெருமை அடிச்சுக்குவார் தமிழ்வாசி
அண்ணே நானும் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்வேன் அடுத்த பதிவ போடுங்க புது டெம்ப்ளேட்இலவசமாக பதிவிறக்கம் செய்ய லிங்க் கொடுங்க
உங்கள் தொடர், வலைப்பூ தொடங்க நினைக்கும் புதியவர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டியாய் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்!
புதியவர்களுக்கு நல்ல வழிகாட்டி...
வணக்கம்
நல்ல அறிவுரை இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பயனுள்ள பகிர்வு..