CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-8

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,
பதிவில் படங்களை, வீடியோக்களை எவ்வாறு இணைப்பது என இந்தப் பதிவின் மூலம் பார்போம்.

படங்களை எவ்வாறு இணைப்பது:
1. பதிவிற்கு சம்பந்தமான தேவையான படங்களை இணையத்தில் இருந்தோ, கணினியில் இருந்தோ முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். இணையத்தில் இருந்தால் கணினியில் குறிப்பிட்ட இடத்தில் save செய்து கொள்ளுங்கள்.


2. பதிவில் படத்தை எங்கு இணைக்க வேண்டும் என முடிவு செய்து அங்கு மவுஸ் பாயிண்ட்டை க்ளிக் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
3. பின்னர் link என்பதற்கு அருகில் வலப்பக்கமாக இருக்கும் icon-ஐ க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட விண்டோ ஓபன் ஆகும். 
படத்தை தேர்வு செய்வது எப்படி?

4. படத்தை இணைக்க ஐந்து வழிகள் உள்ளன. 
இதில் நான் அதிகம் பயன்படுத்துவது upload என்ற முறையில் தான். இந்த முறை தான் நமது படத்திற்கு பாதுகாப்பானது. ஏன் என கடைசியில் சொல்கிறேன்.

5. upload என்பதை தேர்வு செய்தால் வலப்பக்கம் choose files என காட்டும். அங்கு க்ளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் நமது கணினியில் நாம் படங்கள் உள்ள இடத்திற்கு சென்று தேவையான படத்தை தேர்வு செய்து ஓகே தர வேண்டும். தேர்வு செய்தால் கீழ்க்கண்டவாறு தேர்வு செய்த படத்துடன் விண்டோ ஓபன் ஆகும். அதில் நாம் தேர்வு செய்த படம் நீல வண்ண கட்டத்தில் இருக்கும். பின்னர் கீழே add select என்பதை க்ளிக் செய்தால் அந்த படம் நமது பதிவு பக்கத்தில் இணைந்து விடும்.

6. படத்தை பதிவில் இணைத்த பின் அந்த படத்தின் மீது க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு தோன்றும். அதில் சில options இருப்பதை பார்க்கலாம்.

7. மேற்கண்ட படத்தில்,
Small 
என்பது படத்தை சிறியதாக காட்டும்.

Medium 
என்பது நடுநிலையான அளவில் படம் காட்டும்.

Large 
என்பது சற்று பெரிய படமாக காட்டும். இப்பதிவில் பெரும்பாலும் இந்த முறையிலேயே படங்கள் தேர்வு செய்துள்ளேன்.

X-Large  
என்பது extra large. பதிவின் பக்க அகலம் என்ன அளவோ அந்த அளவு வரை பெரிதாக படம் காட்டும். இப்பதிவின் முதல் படம் இம்முறையிலேயே தேர்வு செய்துள்ளேன்.

Original size 
என்பது படத்தின் சரியான அளவில் காட்டும். பெரிய அளவு படமாக இருப்பின் இம்முறை தேர்வு செய்தால் பதிவின் பக்க அகலத்தையும் தாண்டி சென்று விடும். எனவே பெரும்பாலும் original size தேர்வு செய்யும் போது கவனமாக இருங்கள்.

Left 
என்பதை தேர்வு செய்தால் படம் பதிவின் இடது பாகமாக காட்டும்.

Center 
என்பது பதிவின் மையத்தில் காட்டும். இப்பதிவில் பெரும்பாலான படங்கள் இம்முறையிலேயே தேர்வு செய்துளேன்.

Right 
என்பது பதிவின் வலது பக்கத்தில் படம் காட்டும்.

Add caption 
என்பது படத்திற்கு பெயரோ, விளக்கமோ படத்தின் கீழே வருமாறு தரக்கூடிய option ஆகும். இப்பதிவின் முதல் படத்தில் கீழே caption கொடுத்துள்ளேன் பாருங்கள்.

Properties 
என்பதை க்ளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் நமக்கு தேவையான விளக்கம் கொடுக்கும் போது,  படத்தில் மீது மவுஸ் பாயின்ட் வைத்தால் நாம் ஏதேனும் விளக்கம் கொடுத்திருந்தால் காட்டும்.  இப்பதிவின் முதல் படத்தின் மீது மவுஸ் பாயிண்ட்டை கொண்டு சென்றால் "உதவிப்படம்" என காட்டும். இதுவே properties ஆகும்.

இதுவரை படத்தை தேர்வு செய்ய upload என்ற முறையை பார்த்தோம். இனி அடுத்துள்ள முறைகளை பாப்போம்.

From this blog:
இம்முறை மூலம் நமது வலைப்பூவில் ஏற்கனவே பகிர்ந்துள்ள படங்களை மீண்டும் தேடி எடுத்து பயன்படுத்தலாம். இம்முறை அதிகம் பயன்படாது. கீழே இணைத்துள்ள படத்தில் சில படங்கள் காட்டுகிறதே, அவை அனைத்தும் இணையப்பூங்கா என்ற வலைப்பூவில் பகிர்ந்த படங்கள் ஆகும்.

From picasa web albums:
கூகிளின் பிக்காஸா என்ற படங்கள் சேமிப்பு தளத்தில் உள்ள படங்களை வலைப்பூவில் பகிர இம்முறை பயன்படுகிறது.நமது மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சல்களில் உள்ள படங்கள் பிகாஸா தளத்தில் ஏற்கனவே இணைந்திருக்கும். எனவே மின்னஞ்சலில் உள்ள படங்களை பகிர இம்முறை பயன்படுகிறது.

From your phone:
இம்முறையில் படங்களை பகிர நீங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் மொபைல் வைத்திருக்க வேண்டும். அதில் கூகிள் தரும் ஒரு அப்ளிகேசனை டவுன்லோட் செய்து அதன் மூலம் மொபைலில் உள்ள படங்களை வலைப்பூவில் படங்களை பகிரலாம்.
From your webcam:
உங்கள் கம்ப்யூட்டர்ரில் வெப்கேம் இருந்தால் அதன் மூலம் படங்கள் எடுத்து வலைப்பூவில் இணைக்க இம்முறை பயன்படுகிறது. 

From a URL:
இணையத்தில் உள்ள படங்களை கம்ப்யூட்டர்ரில் சேமிக்காமல் அதன் முகவரியை காப்பி செய்து ப்ளாக்கரில் படங்களை இணைக்கும் பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். பார்க்க படம்

இத்துடன் பதிவில் படங்களை இணைக்கும் முறைகள் முடிந்தது. 

மேலே கணினியில் இருந்து படங்களை இணைக்கும் முறை Upload method தான் பாதுகாப்பானது என சொல்லியிருந்தேன். அதற்கு காரணம், மற்ற முறைகளில், (From this blog, From picasa web albums, From a URL)   படங்களை இணைத்தால், பிற்காலத்தில் அதன் ஒரிஜினல் படம் அழிந்து விட்டால் நமது பதிவிலும் அப்படம் இருக்காது, அழிந்து விடும்.  எனவே upload முறையை பயன்படுத்துங்கள்.

பதிவில் வீடியோவை எப்படி இணைப்பது?
 பதிவு எழுதும் பக்கத்தில் link என்ற icon-க்கு வலப்பக்கமாக இரண்டாவதாக இருக்கும் icon-க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட விண்டோ ஓபன் ஆகும்.

இதிலும் வீடியோவை இணைக்க பலமுறைகள் இருக்கின்றன. 
Upload 
 என்ற முறையில் நமது கம்ப்யூட்டரில் உள்ள வீடியோவை பதிவில் இணைக்கலாம்.

From Youtube:
இம்முறையில் வீடியோவை தேட ஒரு தேடுதல் பெட்டி உள்ளது. அதில் நமக்கு தேவையான வீடியோவின் குறிச்சொல்லை கொடுத்தால், அது சம்பந்தமான நிறைய வீடியோக்கள் வரிசையாக தோன்றும். அதில் நமக்கு தேவையான வீடியோவை தேர்ந்தெடுத்து பதிவில் இணைக்கலாம்.

My Youtube Videos:
இம்முறையில் வீடியோவை இணைக்க நாம் youtube-இல் ஒரு கணக்கு  துவங்கி அதில் நமது வீடியோக்களை இணைத்திருக்க வேண்டும். 
மேற்கண்ட படத்தில் எனது youtube முகவரியில் இருந்து வீடியோக்களை தேர்வு செய்துள்ளேன். 
எனது youtube முகவரி: http://www.youtube.com/user/prakashintube 
பதிவில் நேரடியாக கம்ப்யூட்டரில் இருந்து upload முறையில் வீடியோவை பதிவில் இணைப்பதை விட, youtube-இல் பதிவேற்றி பயன்படுத்துங்கள். ஏனெனில் வீடியோவை பதிவேற்றும் நேரம் (video upload time) youtube-இல் தான் குறைவு. மேலும் youtube வீடியோக்களை சேமிக்கும் இடமாகவும் இருக்கிறது. மேலும் youtube வீடியோக்களை எங்கும் எப்படியும் பயன்படுத்தலாம்.

நான் youtube மூலம் இணைத்துள்ள வீடியோ பதிவுகளின் இணைப்பு கீழே:
மங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு
மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ

மேலும் வீடியோவை இணைக்க From your phone, From your webcam என்ற இரண்டு options உள்ளது. பெரும்பாலும் அவை பயன்படுத்தப்படுவது இல்லை.

நண்பர்களே, இதுவரை வலைப்பூவில் பதிவு எழுதுதல், வார்த்தை/வாக்கியங்களை (format change) மாற்றம் செய்தல், லிங்க் கொடுத்தல், படங்கள், வீடியோக்கள் இணைத்தல்  பற்றி பார்த்தோம். அடுத்த பாகத்தில் பதிவை எப்படி வலைப்பூவில் வெளியிடுதல் (publish) என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.


7 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

படத்தை இணைக்க இதுவரை முதல் முறையை தான் தொடர்கிறேன்... விளக்கத்திற்கு மிக்க நன்றி...

சேவை தொடர வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

ஹேய்... சூப்பர்...

சீனு said... Best Blogger Tips

முதல் முறை வீடியோ இணைக்கும் பொழுது நான் சற்று திணறித் தான் போனேன்... நல்ல பதிவு

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

இதுவரை வீடியோ இணைத்தது இல்லை! நேரம் கிடைக்கும் போது முய்ற்சித்து பார்க்கிறேன்! நல்ல பயனுள்ள தொகுப்பு! நன்றி! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

பயனுள்ள பகிர்வு... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பூ விழி said... Best Blogger Tips

நன்றி விளக்கமான விவரத்திற்கு
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

அபி said... Best Blogger Tips

tamil vasi, inteli pondra vasathiyai amaipathu epadi

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1