வணக்கம் வலை நண்பர்களே,
வலைப்பூ
ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை
இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முந்தைய நான்கு பாகங்களை தவற
விட்டவர்கள் இங்கே கிளிக்கவும்.
வலைப்பூ டாஸ்போர்டில் settings பகுதியில் basic, post and comments ஆகியவைகளை பற்றி ஏற்கனவே பார்த்தோம். இனி பார்க்க போவது..
Mobile and Email:
மேலே படத்தில் mobile, email ஆகியவை ரொம்ப முக்கியமில்லை. நானும் உபயோகப்படுத்தியதும் இல்லை.
அடுத்து email பகுதியில் comment notification email பகுதியில் உங்கள் email முகவரியை தரவும். ஏனெனில், உங்கள் வலைப்பூவுக்கு கருத்து இடும் போது அந்த கருத்து உங்கள் email முகவரிக்கு வந்து சேரும். இதனால், உங்கள் வலைப்பூவை ஓபன் செய்யாமலே, email மூலம் உங்களுக்கு வந்துள்ள கருத்துகளை பார்க்கலாம்.
இதனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வலைப்பூவின் பழைய, முந்தைய பதிவுகளுக்கு யாரேனும் கருத்து இட்டிருந்தால் இந்த மெயில் மூலம் எளிதாக கண்டறியலாம். இதனால் அவர்களுக்கு உடனுக்குடனே பதில் சொல்ல வசதியாக இருக்கும்.
Language and formatting:
இங்கு language என்ற பகுதியில் நிறைய மொழிகள் இருக்கும். இந்திய மொழிகளும் இருக்கும் தமிழ் உட்பட, நான் தேர்வு செய்திருப்பது ஆங்கிலம். நீங்கள் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
enable transliteration என்பதில் படத்தில் உள்ளது போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Formatting:
இப்பகுதியில் நேரம், தேதி பற்றி setting செய்ய வேண்டும்.
Time zone-இல் இந்தியாவில் இருபவர்கள் இந்திய நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அயல்நாட்டில் இருப்பவர்கள் அவர்களது நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Date header என்பது வலைப்பூவில் ஒவ்வொரு பதிவும் வெளியிட்ட தேதியை காட்டும். இதில் பல formats உள்ளன. உங்களுக்கு பிடித்த format-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். நான் தேர்வு செய்துள்ளவற்றை மேலே படத்தில் பாருங்கள்.
timestamp format-இல் பல options உள்ளது. உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். இவை பதிவிட்ட நேரத்தை காட்டும். நான் தேதி மட்டுமே தேர்வு செய்துள்ளேன்.
comment timestamp format-இல் கருத்துரை இட்ட நேரம் தேதி ஆகியவற்றை காட்டும். இதிலும் பல options உள்ளது. உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து setting பகுதியில் other பற்றி பாப்போம்.
மேலே படத்தில் blog tools என்பது மிக முக்கியமானது,
இவற்றில் வலைப்பூவை download செய்யவும், upload செய்யவும், நீக்கவும் வசதிகள் உள்ளன.
Import blog:
இதன் மூலம் ஒரு வலைப்பூவை தரவிறக்கம் செய்து வைத்திருந்தால், உங்கள் வலைப்பூவுடன் இணைத்துக் கொள்ளலாம். அதாவது வலைப்பூ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு நீங்கியிருந்தால், இணைத்துக் கொள்ளலாம்.
Export blog:
இதன் மூலம் உங்கள் வலைப்பூவை தரவிறக்கம்/download செய்யலாம். இதனால் உங்கள் வலைப்பூவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ, சில பதிவுகள் அழிந்து போனாலோ, எளிதாக மீட்க முடியும்.
ஏற்கனவே வலைப்பூ வைத்திருப்பவர்கள் இப்பதிவை படித்த உடன் கண்டிப்பாக தரவிறக்கம் செய்து உங்கள் வலைப்பூவை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
Delete blog:
இதன் மூலம் ஒரு வலைப்பூவை முற்றிலுமாக நீக்க முடியும். வலைப்பூ நமது எண்ணங்களை எழுத்துகளாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
Site feed:
இதுவும் மிக முக்கியமானது தான்.
இதில் நமது வலைப்பூவுக்கான feed பற்றி setting செய்ய வேண்டும். நமது வலைப்பூ திரட்டிகள், மின்னஞ்சல் மூலம் பகிர இந்த setting பயன்படுகிறது.
Allow blog feed என்பதில் நாலைந்து options உள்ளது. அதில் full, until jump break, short, none, custom என உள்ளது.
இவற்றில் full, until jump break என்பவைகளை தேர்வு செய்யலாம். நான் தேர்வு செய்துள்ளது custom. அதில் என்னென்ன settings என்பதை படத்தில் பாருங்கள். பெரும்பாலும் வலைப்பூ ஆரம்பித்த உடன் default settings சரியாக இருக்கும். மாற்றம் அவசியம் இருக்காது.
இத்துடன், டாஸ்போர்ட்-இல் உள்ள settings பகுதி முடிவடைகிறது.
ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்.
இதுவரை பார்த்த பகுதிகளில் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும், உங்கள் வலைப்பூவில் settings சரியாக அமைக்கப்படாமல் சில சந்தேகங்கள் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளுங்கள்.
10 கருத்துரைகள்:
விரிவான விளக்கம்... நன்றி...
அருமையான தொடர், எல்லாத்தையும் சேர்த்து ஈ-புக்கா போட்டு உங்க ப்ளாக்ல லிங் கொடுத்து வைங்க.....!
பலவிஷயங்கள் தெரியாமலேயே
பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன் எனத்
தங்கள் பதிவைத் தொடர புரிகிறது
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
எனக்கு தெரியாத விசயங்களும் இதில் இருக்கின்றன... மிக அருமையான தொடர் ....
@திண்டுக்கல் தனபாலன்
விரிவான விளக்கம்... நன்றி...//
முதல் கருத்துக்கு நன்றி சார்...
@பன்னிக்குட்டி ராம்சாமி
அருமையான தொடர், எல்லாத்தையும் சேர்த்து ஈ-புக்கா போட்டு உங்க ப்ளாக்ல லிங் கொடுத்து வைங்க.....! ///
அண்ணே, யோசனைக்கு நன்றி...
அதற்கான முயற்சி எடுக்கின்றேன்.
@Ramani S
பலவிஷயங்கள் தெரியாமலேயே
பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன் எனத்
தங்கள் பதிவைத் தொடர புரிகிறது///
ஆம்... ஐயா... தெரியாத விஷயங்கள் இன்னும் இருகின்றன...
கண்டிப்பாக தொடருங்கள்.
@சீனு
எனக்கு தெரியாத விசயங்களும் இதில் இருக்கின்றன... மிக அருமையான தொடர் .... //
சீனு.. உனக்கு தெரியாத விசயங்களும் இருக்கா!!!!!
மச்சி... ? சூப்பர் தொடர் ..