CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கம்ப்யூட்டரில் ஸ்கிரீன்ஷாட் படம் எடுக்க எளிதான மென்பொருள் PICPICK!!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

வணக்கம் வலை நண்பர்களே,

நம்மில் பலரும் தங்கள் அலுவலக வேலைகளுக்காகவும், இணையதள பதிவுகளுக்காகவும், புகைப்படமாக மாற்றவும் இன்னும் பல தேவைகளுக்காக கம்ப்யூட்டரில் இணைய தளங்களில் உள்ள செய்திகள், படங்கள் போன்றவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுக்க அவசியம் ஏற்படுகிறது.

ஸ்கிரீன்ஷாட் எடுக்க பலருக்கும் தெரிந்த ஒரே வழி PRINT SCREEN கொடுத்து PAINT software மூலமா edit செஞ்சு பயன்படுத்துவிங்க. ஆனால் screenshot எடுக்க பல softwares இருக்கு. மேலும் browser extensions, addon உள்ளது. ஆனால் நான் கடந்த சில வருடங்களா ஒரு எளிமையான, இலவச software பயன்படுத்தறேன். அதைப் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.


Picpick என்ற இலவச software பயன்படுத்த எளிமையாக உள்ளது.




STEP - 1
இந்த மென்பொருளின் அதிகாரப்பூர்வ டவுன்லோட் பக்கத்திற்கு சென்று Free version-ஐ டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

டவுன்லோட் செய்ய: http://www.picpick.org/en/download_free


STEP - 2
உங்கள் டெஸ்க்டாப்பில் picpick icon-ஐ க்ளிக் செய்தால் PICPICK WINDOW ஓபன் ஆகும். அதோடு உங்கள் TASKBAR-இல் PICPICK ICON ஒன்றும் காட்டும்.


STEP - 3
TASKBARஇல் காட்டும் ICON-ஐ க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போன்ற TOOLBAR MENU ஓபன் ஆகும். இந்த MENU-வை எப்போதும் ஓபன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 


ஏனெனில் நீங்கள் கம்ப்யூட்டரில் எந்த வேலை பார்த்தாலும் இந்த MENU ஒரு ஓரமாக காட்டிக் கொண்டே இருக்கும். நீங்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் போது அடுத்த வினாடியே இந்த MENU மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிடலாம்.



இதில் சில வகையான ஸ்கிரீன்ஷாட் வசதிகள் உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

FULL SCREEN SCREENSHOT:
நம் கம்ப்யூட்டர் மானிட்டர் ஸ்கிரீனை முழுமையாக ஸ்கிரீன்ஷாட் எடுக்க FULL-SCREEN வசதி பயன்படுகிறது. மேலும் விபரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


WINDOW CONTROL:
கம்ப்யூட்டரில் சிலர் வேகமாக வேலை செய்ய பல WINDOWS ஓபன் செஞ்சு வச்சிருப்பிங்க. அதுல ஒரு WINDOW-வை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டி வரும். அப்போது இந்த வசதி மூலம் குறிப்பிட்ட WINDOW-வை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். மேலும் விபரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


SCROLLING WINDOW:
நமக்கு தேவையான ஒரு இணையதளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் அந்த பக்கம் நீளமாக இருந்தால் SCROLL செஞ்சு பார்ப்போம். அப்படி அதன் மொத்த நீளத்தையும் அதாவது மேலிருந்து கீழே வரை உள்ள பக்கத்தை ஒரே படமாக ஸ்கிரீன்ஷாட் எடுக்க இந்த வசதி பயன்படுகிறது. மேலும் விபரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


REGION:
இணைய தளத்திலோ, அல்லது ஒரு படத்திலோ குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க வேண்டி இருந்தால் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். பெரும்பாலான ஸ்கிரீன்ஷாட்-க்கு இந்த வசதியை பயன்படுத்தலாம். கம்ப்யூட்டர் ஸ்கிரீன் முழுமையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அப்புறம் CROP செய்து எடிட் செய்ய தேவையில்லை. மேலும் விபரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

FIXED REGION:
இதுவும் குறிப்பிட்ட தேவைப்படும் பகுதியை ஸ்கிரீன்ஷாட் எடுக்கப் பயன்படுகிறது. ஆனால் ஸ்கிரீன்ஷாட் பட அளவை (IMAGE PIXEL) முடிவு செய்து அதன் பின் ஸ்கிரீன்ஷாட் எடுக்க பயன்படுகிறது. மேலும் விபரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

FREE HAND:
கம்ப்யூட்டரில் PAINT SOFTWARE-இல் பென்சில் டூல் மூலமா கோடு வரைவோமே.. அது போல தான் இந்த ஸ்கிரீன்ஷாட் டூல் பயன்படுத்த வேண்டும். நமக்கு தேவைப்படும் பகுதியை மட்டும் கோடு போட்டு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்ளலாம். மேலும் விபரமாக அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இதுவரை வீடியோ மூலம் PICPICK SCREEN CAPTURE SOFTWARE மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் வசதிகளை அறிந்து கொண்டீர்கள். 

அடுத்து PICPICK EDITOR-இல் உள்ள சில பயனுள்ள வசதிகளை கீழே உள்ள இரண்டு வீடியோக்கள் மூலம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 





மேலே உள்ள எட்டு வீடியோவையும் ஒரே லிஸ்டில் பார்க்க கீழே உள்ள link-ஐ கிளிக்கவும்...

HOTKEYS:
ஸ்கிரீன்ஷாட் எடுக்க HOTKEYS வசதியும் உள்ளது. HOTKEY எப்படி அமைப்பது என்பதை கீழே படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதையும் கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

நண்பர்களே,
இதுவரை picpick screen capture software பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஏதேனும் சந்தேகங்கள், விளக்கம் தேவையெனில் admin@tamilvaasi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

மேலே உள்ள எட்டு வீடியோவையும் ஒரே லிஸ்டில் பார்க்க கீழே உள்ள link-ஐ கிளிக்கவும்...

Lable:
picpick, picpick screenshot, picpick screen capture, பிக்பிக் ஸ்கிரீன்ஷாட், தொழில்நுட்பம், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி?,


7 கருத்துரைகள்:

பால கணேஷ் said... Best Blogger Tips

Super software... i used printscreen option till date. this seems much much more better than that. thanks.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு மக்கா நன்றி...!

தனிமரம் said... Best Blogger Tips

பயனுள்ள பகிர்வு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips

நான் பெரும்பாலும் windows snipping tool பயன்படுத்துகிறேன். அதை விட இதில் அதிக வசதிகள் உள்ளது.ஸ்க்ரோலிங் விண்டோ capture பயன்பாடு சிறப்பாக உள்ளதை அறிய முடிகிறது. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

இதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்... விளக்கங்களுக்கு நன்றி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... Best Blogger Tips

நல்லதொரு தகவல்!

பகிர்வுக்கு நன்றி!

சிம்புள் said... Best Blogger Tips

அருமையான மென்பொருள், படத்தின் தரம் நன்றாக உள்ளது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1