CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



WhatsApp-ஐ கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் இனி!!! குரோம் ப்ரௌசரில் WhatsApp

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,
அதிவேகமாக முன்னேறி வரும் இணைய உலகில் மொபைலின் பங்கு மகத்தானது. ஸ்மார்ட் போன் உலகில் கம்ப்யூட்டர் சார்ந்த எல்லா நுட்பங்களும் நம் கைகளுக்குள் அடங்கி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் மொபைலின் பிளாட்பாரம் தான். அதாவது மொபைலை இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, விண்டோஸ், IOS, ஆப்பிள் போன்றவை போட்டி போட்டுக்கொண்டு நமக்கு தேவையான அனைத்தையும் app என்ற வகையில் தருகிறார்கள்.


அதில் மிக முக்கியமானது WhatsApp ஆகும். மொபைல் எண்களுக்குள் SMS அனுப்பும் முறையை கிட்டத்தட்ட தகர்த்தெறிந்து விட்டது என்றே சொல்லலாம். ஆமாம், ஸ்மார்ட் போனில் WhatsApp-ஐ நிறுவி நமது மொபைல் எண் மூலம் LOGIN செய்தால் போதும். WhatsApp-ஐ நிறுவியுள்ள மொபைல் எண்ணுக்கு செய்திகள், படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் செய்திகள் என பகிரலாம். பல மொபைல் எண்களை குழுக்களாக சேர்த்தும் பகிரலாம்.

இதுவரை ஸ்மார்ட் போனில் மட்டுமே WhatsApp-ஐ பயன்படுத்தி வந்தவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி. ஆம், கம்ப்யூட்டரில் குரோம் ப்ரௌசரில் பயன்படுத்தலாம். எப்படி பயன்படுத்துவது என பார்ப்போமா?

முக்கிய குறிப்பு: WhatsApp உங்களது கம்ப்யூட்டரில் install செய்யும் போதும், இயக்கும் போதும் மொபைலில் இணையம் இணைப்பில் (mobile internet connection must) இருக்க வேண்டும். 
மொபைலிலும் latest WhatsApp version இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

STEP:1
உங்கள் கம்ப்யூட்டரில் குரோம் ப்ரௌசரை திறந்து https://web.whatsapp.com என்ற முகவரிக்குள் செல்ல வேண்டும்.

மேலே படத்தில் உள்ளவாறு scan code-உடன் கூடிய ஒரு பக்கம் ஓபன் ஆகும். 

STEP:2
பின்னர் நமது ஸ்மார்ட் மொபைலில் WhatsApp ஓபன் செய்து வலது பக்கம் மேலே கடைசியில் உள்ள ஐகானை க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு மெனு ஓபன் ஆகும். அதில் WhatsApp Web என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

STEP:3
WhatsApp Web க்ளிக் செய்தால் SCAN Code-ஐ scan செய்ய scaner ஓபன் ஆகும். அதை கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் scan code க்கு முன்பு நேராக வைத்து படத்தில் உள்ளவாறு டிக் மார்க் வந்தவுடன் OK, Got It என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

STEP: 4
OK, Got It கொடுத்தவுடன் கம்ப்யூட்டரில் கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் Allow கொடுத்து, பின்னர் ok, got it தர வேண்டும். 

இதனால் WhatsApp-இல் மெசேஜ் வரும் போதெல்லாம் நமது டெஸ்க்டாப்-இல் notification காட்டும். இதன் மூலம் புதிய மெசேஜ் வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். 


STEP: 5
கம்ப்யூட்டரில் குரோம் ப்ரௌசருடன் WhatsApp  இணைந்தவுடன் கீழே படத்தில் உள்ளவாறு keep your phone connected என வரும்.



 கீழே படத்தில் உள்ளது போல மொபைலில் உள்ள WhatsApp குரோம் ப்ரௌசரில் பயன்பாட்டில் இருக்கும். 

மேற்கண்டவாறு குரோம் ப்ரௌசரில் WhatsApp பயன்படுத்தும் போது உங்களது ஸ்மார்ட்போனில் இணையம் இணைப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

குரோம் ப்ரௌசரில் Web extentionஆகவும் கிடைக்கிறது. 
லிங்க் : Whatsapp Web Extension

தற்சமயம் ஆப்பிள் / IOS ஸ்மார்ட்போனில் WhatsApp பயன்படுத்துபவர்கள் கம்ப்யூட்டரில் / குரோம் ப்ரௌசரில் பயன்படுத்த இயலாது. 


17 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

ஸ்மார்ட்போனை இனி வீட்டில் தொடக்கூடாது...!

Geetha said... Best Blogger Tips

ஆஹா நல்ல விசயமா இருக்கே ..உடனே இணைத்திடுறேன்..

கவிஞர்.த.ரூபன் said... Best Blogger Tips

வணக்கம்
தகவலுக்கு நன்றி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மெக்னேஷ் திருமுருகன் said... Best Blogger Tips

அண்ணே 1 நான் ஸ்மார்ட்போன் யூஸ் பன்றதில்ல . அதுக்குப்பதிலா BLUESTACK இன்ஸ்டால் பண்ணி , யூஸ் பன்னேன் . பிரச்சனை என்னனா , BLUE STACK சரியா வேலை செய்ய 4 GB RAM வேனும் . என்கிட்ட இருக்கறதோ 2 GB தான் . அதுனால BLUESTACK ம் எனக்கு செட் ஆகல . இந்த 2 விஷயங்களத்தவிர வேறு எதுனா வழி இருக்கா? வாட்ஸ்ப் உபயோகிக்க ?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்

ஸ்மார்ட்போனை இனி வீட்டில் தொடக்கூடாது...!///

ஆமா... வீட்டுல கணினில பயன்படுத்தலாம்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Geetha M
ஆஹா நல்ல விசயமா இருக்கே ..உடனே இணைத்திடுறேன்..//

இணைப்பதும் எளிது தான்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ரூபன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரூபன்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@megneash k thirumurugan

நானும் bluestack பயன்படுத்தி பார்த்தேன். சில லிங்க் ஸ்பாம் ஆக சென்று கொண்டே இருந்தது..
அப்படியும் இன்ஸ்டால் செய்கையில் கணினி மெமரி மற்றும் ரேம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்..
க்ரோம் வாட்ஸ்அப் முறை உபயோகிக்க மிக எளிதானது.. என்ன ஒன்று மொபைலிலும் இணையம் இணைப்பில் இருக்க வேண்டும்.

UmayalGayathri said... Best Blogger Tips

நல்ல தகவல்.முயற்சிக்கிறேன் சகோ நன்றி. என் தளத்திற்கும் நேரம் இருப்பின் வாருங்கள்.

எம்.ஞானசேகரன் said... Best Blogger Tips

பயனுள்ள தகவல் நண்பரே.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

நன்றி மச்சி....

ஆனா ஆன்ட்ராய்டுல வேலை செய்யாதா..?

aavee said... Best Blogger Tips

நன்றி நண்பா

aavee said... Best Blogger Tips

நன்றி நண்பா

ராஜி said... Best Blogger Tips

பேப்பர்ல படிச்சேன். இவ்வளவு தெளிவா இல்ல. இப்போ புரிஞ்சுட்டுது. எல்லாம் சரி, என்கிட்ட ஸ்மார்ட் போன் இல்லியே:-( என்ன செய்யலாம்?! அக்காக்கு பொங்கல் சீர் செய்யலைன்னுஎன். ஒரு போ ன் வாங்கி பார்சல் பண்ணிடு பிரகாஷ்.

RajalakshmiParamasivam said... Best Blogger Tips

iPad இல் whatsApp இன்ஸ்டால் செய்ய முடியுமா? அது எப்படி என்று சொல்வீர்களா?

yathavan64@gmail.com said... Best Blogger Tips



வணக்கம்!

இன்றைய வலைச்சரம் வலைப் பூவில்
தங்களது பதிவு சிறந்த பதிவாக தேர்வானமைக்கு
குழலின்னிசையின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(உறுப்பினராக தாங்கள் இணைந்து, குழலின்னிசையை தொடர வேண்டுகிறேன்! நன்றி!)

(நண்பரே!
பில்கேட்சுக்கே பிஸ்கட்டா? என்று எண்ணி,
என்னை தூள் பிஸ்கெட்டாக்கி விடாதீர்கள் பிளீஸ்!)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips

திரு திண்டுக்கல் தனபாலன் மூலமாக தங்களின் தளத்திற்கு இங்கு வந்து முறையை அறிந்துகொண்டேன். நன்றி.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1