இதுவரை பதிவர் என அறியப்பட்டிருந்த கோவை ஆவி இயக்குனராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து, அவரின் ஆவி டாக்கீஸ் பேனரில் ஆவியின் குழுவினரின் முதல் முயற்சியாக இன்று வெளிவந்திருக்கும் குறும்படம் "காதல் போயின் காதல்"
கதை என்ன?
உயிருக்குயிராக காதலிக்கும் இருவரில் காதலி தன் பெற்றோரின் கட்டாயத்தால் "ப்ராக்டிக்கல்ல புரிஞ்சுக்கோ" என காதலனிடம் கல்யாண பத்திரிக்கையை கொடுத்ததோடு பிரிகிறார்கள். அவர்கள் எதிர்காலம் என்னவாயிற்று? அவர்கள் சந்தித்தார்களா? என்ற கேள்விகளுக்கு பதிலை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஷைனிங் ஸ்டார் சீனு:
இந்தப்படத்தில் பதிவர் சீனு நடிக்கிறார் என தெரிந்ததுமே பதிவர்கள் வட்டத்தில் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது. படம் வெளியாவதற்கு முன்னமே ஷைனிங் ஸ்டார் பட்டம் கொடுத்து அவரைக் கொண்டாடினார்கள். படத்தில் சீனுவிற்கு இரண்டு கெட்டப். ஒன்று காதலிக்கும் ஸ்மார்ட் பாயாகவும், காதலில் தோற்ற தாடி பாயாகவும் வருகிறார். ஸ்மார்ட் பாய் கெட்டப்பில் நடிக்க ஸ்கோப் இல்லாவிட்டாலும், தாடி கெட்டப்பில் எதார்த்தமாக நடித்துள்ளார். நண்பர்களிடம் தான் வைத்துள்ள பையை பத்திரமாக மீட்பதும், அவள் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து வைத்து காதலி தன்னுடன் இல்லாவிட்டாலும் அவளது நியாபகங்களாக பொருட்களை வைத்திருப்பதும் என காதலை மறக்காத காதலனாக வாழ்ந்துள்ளார்.
மதுவந்தி:
படத்தில் நாயகியாக, காதலியாக வருகிறார் மதுவந்தி. இவரை மையப்படுத்தியே படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் காதல் நாட்களில் பூங்காவில் காபி ஆர்டர் செய்யும் போதும் சரி, காதலனிடம் கல்யாணப் பத்திரிக்கை தரும் போதும் மிக எதார்த்தமாக நடித்துள்ளார்.
நிகழ காலத்தில் தன் பையனுக்கு காரில் அடிபட்டு விட்டதோ என பதறும் காட்சியிலும், முன்னாள் காதலனுடன் காபி சாப்பிடும் காட்சிகளிலும், கடைசியில் கண் கலங்கும் காட்சியிலும் நடிப்பில் சீனுவை ஓவர்டேக் செய்கிறார். இதனால் சீனு ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு மதுவந்திக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
ரக்சித் சரவணன்:
பதிவர் ஸ்கூல் பையன் சரவணனின் மகன் ரக்சித். படத்தில் பந்து விளையாடிக் கொண்டே கார் வருவது தெரியாமல் காருக்கு குறுக்கே செல்கிறான், அவனைக் காப்பாற்றும் சீனுவை கண்டு மதுவந்தி முன்னாள் காதலன் என அறிந்து காபி சாப்பிட அழைக்கிறாள். அங்கே குட்டிப் பையன் ரக்சித் பேப்பர் கப்பல் செய்யும் காட்சிகளில் இயல்பாய் நடித்துள்ளான்.
இயக்குனர் ஆவி:
கடந்த சில நாட்களுக்கு முன்னமே "வற்றாநதி" புகழ் கார்த்திக் புகழேந்தியின் குரலின் பின்னணியில் டீசர் வெளியானது. அதில் படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை கொண்டு வந்தது இவரின் முதல் வெற்றி. இந்தப்படத்திற்காக இவரின் பங்கு பெரும்பான்மையானது என்பது படத்தின் டைட்டில் கார்டு பார்த்து அறிந்து கொள்ளலாம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் அழகாக செதுக்கியுள்ளார். இறுதியில் "சித்தி அல்ல அம்மா என சொல்லுடா" என்ற ட்விஸ்ட் வைத்து படத்தை முடித்துள்ளார்.
நிறைகள்:
படத்தில் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. சீனு, மதுவந்தி, ரக்சித், கார் ஓட்டுனராக வரும் குடந்தை சரவணன், காபி அங்கிளாக வரும் துளசிதரன் என அனைவரும் இயல்பாய் நடித்துள்ளார்கள். பொது இடங்களில் குப்பை போடாதீர் என அவ்வப்போது கார்டு வருவதும் நன்று. படத்தின் முடிவை பார்வையாளனிடம் விட்டுவிடுவதும் நன்று.
குறைகள்:
படத்தின் முதல் காட்சியில் நண்பர்களின் நடிப்பு சற்று செயற்கையாக இருக்கிறது. கொஞ்சம் பீலிங்கான காட்சிகளில் பின்னணி இசை இருந்திருக்கலாம். படத்தில் ஒலி அளவு சற்று குறைவாக உள்ளது. ஸ்பீக்கரில் வால்யூம் சற்று அதிகமாக வைக்க வேண்டியுள்ளது.
க்ளைமாக்ஸ்:
இன்றைய பெரும்பாலான தோல்விக் காதல்கள் இப்படிப்பட்ட புரிதலில் வாழ்ந்து கொண்டிருகிறது என எதார்த்தமாய் சொல்லியிருப்பதே "காதல் போயின் காதல்"
காதல் போயின் காதல் - டீசர் - பார்க்க:
காதல் போயின் காதல் - குறும்படம் - பார்க்க:
16 கருத்துரைகள்:
செஞ்சனா செஞ்சனான்னு கேட்டுப்புட்டே எல்லா சோலியவும் முடிச்சிட்டியேய்யா... அங்கங்க நீ சொல்லிருக்கற வரிகளச் சேத்தாலே படத்தப் பாக்காமலே கதைய தெரிஞ்சுக்கலாம். ஹா... ஹா... ஹா... (அதனால என்ன... படம்தான் வெளியிட்டாச்சே) ஆவி அண்ட் டீமை பாராட்டிருக்கறதப் பாக்கறப்ப மகிழ்ச்சியாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு. மனம் நிறைந்த நன்றி.
ஷைனிங் ஸ்டார் ரசிகர் மன்றத்தை உருவாக்கி தலைவனான நீயே அதைக் கலைச்சிரலாமான்னு கேக்கறத வன்மையாக் கண்டிக்கறேன். எங்க மதுவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சா நான்தான் தலைவன்றதயும் இங்க பதிவு பண்ணிக்கறேன். ஆமா.... (ஷைனிங்ஸ்டாரோட தீவிர ரசிக வெறியன் ஒருத்தன் சேலத்துலருந்து கொலவெறியோட உம்மேல பாய வருவான். தயாரா இரும். ஹி... ஹி... ஹி...)
@பால கணேஷ்
அங்கங்க நீ சொல்லிருக்கற வரிகளச் சேத்தாலே படத்தப் பாக்காமலே கதைய தெரிஞ்சுக்கலாம். ஹா... ஹா... ஹா...///
பதிவுல லிங்க் தந்திருக்கோம்ல...
@பால கணேஷ்
(ஷைனிங்ஸ்டாரோட தீவிர ரசிக வெறியன் ஒருத்தன் சேலத்துலருந்து கொலவெறியோட உம்மேல பாய வருவான். தயாரா இரும். ஹி... ஹி... ஹி...)///
அவன் மதுவந்திக்கு ஆரம்பிச்சிருக்கற விஷயம் தெரிஞ்சா எதாச்சும் பதவி கொடுங்கன்னு கியூவுல நிப்பான்...
// சீனு ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு மதுவந்திக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா என எண்ணிக் கொண்டிருக்கிறேன். // சந்தையிலே இருக்கும் மீன் கருவாடாகலாம் . ஆனால் , கருவாடு என்றும் மீனாக முடியாது . எங்களுக்கு கொள்கைதான் முக்கியம்
கட்சித்தலைமையிடம் தனிக்கட்சி துவங்குவது குறித்து எதுவுமே ாலோசிக்காமல் , தனியாக கட்சி தாவும் பிரகாஷ் அண்ணனை வன்மையாக கண்டிக்கிறோம் . இவரின் விஷமத்தனமான பேச்சினைக்கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியோ , மரணமோ அடையத்தேவையில்லை .
நம் தலைவரை நம்மில் யார்வேண்டுமானாலும் கலாய்க்கலாம் . ஆனால் அந்த கட்சியில் நடக்குமா ?
நம் தலைவரின் மெயில் ஐடி, போன் நம்பர் உட்பட அனைத்தும் நமக்கு கிடைக்கும் . அங்கே கிடைக்குமா ?
வருங்காலத்தில் நம் தலைவர் பிரதமர் ஆனால் (ஆனால் !) நமக்கெல்லாம் ஆளுக்கொரு துறையை ஒதுக்கி சேவை செய்யவிடுவார் .
ஆயிரம்தான் இருந்தாலும் நம் தலைவருக்கு எப்போது வேண்டுமானாலும் போன் செய்யலாம் அவர் அதை எடுக்கமாட்டார் என்பது ஒருவிஷ
ம் எனினும் , எடுத்தால் நமக்கெல்லாம் தரவரிசை அடிப்படையில் 10 முதல் 50ரூ வரை ரீசார்ஜ் செய்துவிடுவார் . இம்மாதிராயன ஒரு தங்கத்தலைவன் , பிளாட்டின மன்னன் , மனித வைரம் வேறு யாருக்கு தலைவனாய் இருக்கமுடியும் .
ஷைனிங் ஸ்டார் வாழ்க ! ஷைனிங்கின் ஒளியைக்குன்ற முயற்சி செய்த பிரகாஷ் அண்ணனை கட்சியை விட்டும் , கழகத்தை விட்டும் , ரசிகர் மன்றத்தை விட்டும் , ஏன் தமிழ்நாட்டை விட்டே ஒதுக்கிவைக்குமாறு நாங்கள் அரசுக்கு ஆனையிடுகிறோம் .
வாழ்த்துக்கள்
தம +1
காலையில் 5.45க்கெல்லாம் ஃபேஸ் புக் ஓபன் பண்ணி சீனு கொடுத்த லிங்கில் போனிலேயே படம் பார்த்து அசந்து போனேன்! விமர்சனம்தான் உடனடியாக எழுத முடியவில்லை! மொத்தத்தில் ஆவி பாஸ் இந்த படத்தை எடுத்து அசத்திவிட்டார். எல்லோருமே சிறப்பாக தங்கள் பங்களிப்பை அளித்திருந்தார்கள்! சிறப்பான விமர்சனம்! நன்றி!
//படத்தின் முதல் காட்சியில் நண்பர்களின் நடிப்பு சற்று செயற்கையாக இருக்கிறது. கொஞ்சம் பீலிங்கான காட்சிகளில் பின்னணி இசை இருந்திருக்கலாம். படத்தில் ஒலி அளவு சற்று குறைவாக உள்ளது. ஸ்பீக்கரில் வால்யூம் சற்று அதிகமாக வைக்க வேண்டியுள்ளது.//
இதுதான்யா வேணும்கிறது.... ஆஹா ஓஹோன்னு புகழாமல் குறைகளையும் சுட்டிக்காட்டியது...
சூப்பர்...
சுப்பர் விமர்சனம்.. வெளிப்படையான பொதுப்படையான பார்வை.. குறைகள் இல்லாமல் இல்லை... ஆவிக்கும் சரி அவரோடு பணிபுரிந்த நமக்கும் சரி மிகபெரிய அனுபவம்... ஒரு படம் இயக்குவது அவ்வளவு எழுதல்ல என்பதை உணர்ந்து கொண்டோம்...
வாத்தியார் சொன்னது போல் எல்லாவற்றையுமே சொல்லி விட்டீர்கள்... இருந்தாலும் ரசிக்க வைக்கும் சின்ன சின்ன காட்சிகள் உள்ளன...
குறும்படம் பார்த்தேன், யதார்த்தமாக இருந்தது. இப்படத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
படத்தைவிட பதிவு ரொம்ப பெரிதா இருக்கே.. :-) பட்.. உங்களையும் விமர்சனம் எழுத வைத்தவர்களுக்கு மிக்க நன்றி. பதிவர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லோருடைய பங்கும் சிறப்பாக உள்ளது. முதல் பிரசவம் .கொஞ்சம் வலி இருக்கும். அடுத்துத்து இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஆவி,சீனு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
படத்தைவிட பதிவு ரொம்ப பெரிதா இருக்கே.. :-) பட்.. உங்களையும் விமர்சனம் எழுத வைத்தவர்களுக்கு மிக்க நன்றி. பதிவர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லோருடைய பங்கும் சிறப்பாக உள்ளது. முதல் பிரசவம் .கொஞ்சம் வலி இருக்கும். அடுத்துத்து இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஆவி,சீனு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
விமர்சனப் பார்வை நன்று.
படம் மனசுக்குள் ஒரு ஃபீலிங்கா இருக்குய்யா...
அன்புள்ள தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு வணக்கம்! அன்பின் சீனா மற்றும் உங்கள் பொறுப்பில் இருக்கும் வலைச்சரத்தில், இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்று (07.06.15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/7.html