CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
       
        முகநூல் (facebook) என்ற சமூக இணையதளத்தில் துவங்கப்படும் பயனர் கணக்குகளில், புற்றீசல் போல போலியான முகநூல் கணக்குகளும் (fake id) நிறைய உருவாக்கபடுகிறது. சமூகத்தில் குறிப்பாக பெண்களை ஏமாற்றவும், வக்கிரமாக உரையாடவும், அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பிடுங்கவும், மொத்ததுல தீய எண்ணங்களுடன் எதிர்மறை போக்கை உண்டாக்கவே போலி கணக்குகள் தொடங்கப்படுகிறது. அநேகமாக ஓட்டு மொத்த முகநூல் கணக்கில் சுமார் 20%-30% வரையான கணக்குகள் போலியானவை என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்பது வேதனைக் குறிய விஷயம். 

இந்த போலியான கணக்குகள் அனைத்துமே தீய (சைபர் குற்றங்கள் சார்ந்த) நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. மக்களை ஒரு வைரஸ் தாக்குதல் ஆட்கொள்வது போல முகநூல் கணக்குளை போலியான முகநூல் தாக்குகிறது. ஏனெனில் இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. பெரும்பாலும் பெண்களை நோக்கியே, பெண்கள் பெயரில் பெண்களின் சுயவிவரங்கள் அடங்கிய போலியான கணக்குகள் துவங்கப்படுகிறது.

போலியான முகநூல் கணக்குகளை கண்டறிந்து நீக்குவது என்பது முகநூல் அமைப்பாளர்களால் இயலாத காரியம் என்பது மிக சோகமான விசயமே. போலியான கணக்குகளால் தனி நபர் மற்றும் நிறுவனங்களின் முகநூல் கணக்குகள் முடங்கி போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

போலி பயனர் கணக்குகள் இணைவது எப்படி?
உங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து அதிகப்படியான நட்பு அழைப்புகள் வரலாம். சில நாட்களில் வெளிநாட்டிலிருந்து இருந்து நிறைய நட்பு அழைப்புகள் வரும். அதை நாம் ஏற்றுக் கொண்டால் இணைவது போலி கணக்காகவும் இருக்கலாம்.

வைரஸ் இணைந்த இணையதள சுட்டிகளை உங்களது முகநூல் பக்கத்தில் பதியலாம். அதன் மூலம் உங்கள் கணக்கினுள் நுழைய முயற்சிக்கலாம். இதனால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம். போலியான கணக்குகளால் முடக்கப்பட்ட உங்கள் கணக்கினுள் நீங்கள் உரிய கடவுச்சொல்லை கொடுத்து நுழைய முற்படும் போது உங்களது கணக்கில் உள்ள சில நண்பர்களின் புகைப்படங்களை காட்டி அவர்களை அடையாளம் காட்டச் சொல்லும். இவ்வாறு வந்தால் உங்கள் கணக்கு சில போலி நபர்கள் நுழைந்துள்ளார்கள் அல்லது நுழைய முற்பட்டுள்ளார்கள் என அறியலாம். இவ்வாறான புகைப்படச் சோதனை என் நண்பர் ஒருவரின் முகநூல் கணக்கிற்கு வந்தது. அவரால் எவ்வளவு முயன்றும் அந்த கணக்கை மீட்க முடியவில்லை. முடிவில் புதிய பெயரில் வேறு கணக்கை துவக்கினார் என்பது தனிக்கதை.

போலி கணக்குகள் மீது புகார் அளித்தாலும் அவை உருவாவதை நம்மால் தடுக்கவும் இயலாது. ஆனால் போலியான கணக்குகள் எப்படி இருக்கும்? அவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா என்பதை வரும் பத்திகளில் பார்ப்போம். இதனால் போலி கணக்குகளை ஓரளவு கண்டறியா விட்டாலும், நமது கணக்கை பாதுகாக்கவும், போலி கணக்குகள் பற்றி புகார் அளிக்கவும் நம்மால் முடியும்.

போலியான முகநூல் கணக்கை கண்டறிய நான்கு வழிகள்:

1. சுயவிவர புகைப்படம்:
உங்களது முகநூல் நண்பர்கள் பட்டியலில் சில கணக்குகள் போலியானவை என உங்களால் யூகம் செய்ய முடிகிறதா? உடனே அந்த கணக்கினுள் சுயவிவர பகுதியில் நுழைந்து அங்கு பகிரப்பட்டுள்ள சுயவிவர படத்தை கவனியுங்கள். அந்த படம் இணைய தளத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம். பெரும்பாலான புகைப்படங்கள் இணையத்திலிருந்தே தரவிறக்கப்படிகின்றன. ஆகையால் எங்கிருந்து அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என கண்டறிய இணையத்தில் வழி உள்ளது.

அதற்காக அந்த படத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து Google Image என்ற பக்கத்தில் கட்டத்தில் உள்ள சிறிய காமிரா போன்ற ஐகானை கிளிக் செய்து பதிவேற்றம் செய்யுங்கள். பின்னர் வருகிற கூகிள் தேடல் முடிவுகளில் அந்த படம் எந்த தளங்களில் வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற தள விவரங்களை காட்டும். இதன் மூலம் அந்த படம் இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது என அறியலாம்.

2. டைம்லைன்:
போலி என நீங்கள் யூகித்த முகவரியின் டைம்லைனில் அதிகப்படியான பெண்கள் சுயவிவர படம் கொண்ட கணக்குகளின் நிலைத் தகவல்களோ, அல்லது பெண்களை மட்டுமே நட்பு அழைப்பு விடுத்தது ஏற்றுக் கொள்ளப்பட்ட விவரங்களோ இருக்கும். அவ்வாறு இருந்தால் அவை எல்லாமே பெண்களின் முகநூல் கணக்கு என்ற முடிவுக்கும் வரக் கூடாது. அவ்வாறான வடிவில் தான் போலியான கணக்குகள் துவங்கப்படும் என நினைவில் கொள்க. ஏனெனில் பெரும்பாலான போலி முகவரிகள் பெண் பாலின விவரங்கள் கொண்டே துவங்கப்படுகிறது.

அவர்களின் புகைப்பட ஆல்பங்கள் நீங்கள் பார்க்கும் வண்ணமே அமைத்திருப்பார்கள். அதில் சில நடிகைகள் படங்களோ, பிரபலங்களின் படங்களோ அதிகம் இருக்கும். இதன் மூலமும் போலியான கணக்கு என்ற முடிவுக்கு வரலாம்.

அந்த நபர் சுயவிரக் குறிப்புகளை மேம்படுத்தாமல் இருந்தாலோ, நிலைத் தகவல்கள் பகிராமல் இருந்தாலோ, மற்றவர்களின் நிலைத் தகவல்களுக்கு கருத்திடாமல் இருந்தாலோ, உங்கள் நட்பு வட்டத்தில் அந்த நபரின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தாலோ, அந்த நபர் போலி முகவரி அல்லது உங்களை கண்காணிக்கும் முகவரி என அடையாளம் கொள்ளலாம்.

முகநூலில் About என்பது நமது சுயவிவரங்களை மற்றவர்கள் அறியவே உள்ளது. அந்த நபர் தனது சுயவிவர பட்டியலை மற்றவர்கள் அறியா வண்ணம் மூடி வைத்திருந்தாலும் அந்த நபர் போலி என அடையாளப்படுத்தலாம், 

3. ஜனவரி முதல் தேதி பிறந்தநாள்:
போலி கணக்கு துவங்கும் பெரும்பாலானோர் ஜனவரி முதல் தேதியை பிறந்தநாளாக வைப்பது ஏனோ வேடிக்கையாகவே உள்ளது. உண்மையிலே அந்த நபரது பிறந்தநாள் ஜனவரி ஒன்று என எந்த வழியிலாவது நீங்கள் அறியாத சூழல் ஏற்படின் தாராளமாக அவர்களது கணக்கு போலி என்ற முடிவுக்கு வரலாம்.

உங்களின் நட்பு வட்டத்தில் ஜனவரி முதல் தேதியில் அதிகப்படியான நபர்கள் பிறந்தநாளாக காட்டினால் போலிகளை கண்டறிய நேரம் வந்ததாக கருதி களையெடுக்க ஆரம்பிக்கலாம்.

இதுவரை கண்டறியப்பட்ட போலி கணக்குகளில் பெரும்பாலானவை ஜனவரி முதல் தேதியை பிறந்தநாளாக வைத்திருந்தார்கள் என இணைய புள்ளிவிவரம் சொல்கிறது.

4. பெண்களின் பெயர் மற்றும் சுயவிவரங்கள்:
அதிகபடியான போலி முகவரிகள் பெண்களின் பெயரிலேயே துவங்கப்பட்டு பெண்களின் புகைப்படத்தையே சுயவிவர படமாக அடையாளம் காட்டுகிறார்கள். முடிந்தால் அவ்வாறான கணக்குகள் பற்றி தங்களின் நம்பிக்கையான நட்பு வட்டத்தில் பகிர்ந்து அந்த நபரை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். அந்த நபரது இருப்பிடம், தொடர்பு எண், விலாசம் ஆகியவற்றை பெற முயன்று பாருங்கள். இந்த விவரங்கள் கிடைக்கப்பெற்றால் அந்த நபரிடமிருந்து நீங்கள் பாதுகாக்கப்படலாம்.

அதிகப்படியான பெண்கள் அந்த நபரது நட்பு வட்டத்தில் இருந்தாலோ, அல்லது அந்த நபரை பின்பற்றுபவர்களாக இருந்தாலோ அந்த நபர் போலி என்ற முடிவுக்கு வரலாம். மேலும் அவரது வட்டத்தில் இருக்கும் பெண்களின் கணக்குகளின் சுயவிவரங்களை சோதனை செய்தும் பாருங்கள். அதன் பின் அந்த நபரைப் பற்றிய ஒரு முடிவுக்கு உங்களால் வர முடியும்.

போலி கணக்குகளை கண்டுபிடிக்க மேற்கண்ட சில வழிகள் இருந்தாலும், நம்மால் அந்த கணக்கை, நம் கணக்கிலிருந்து மறைக்கவோ(block) செய்யவோ அல்லது புகார் செய்ய மட்டுமே முடியும். அந்த கணக்கின் செயல்பாட்டை நிறுத்த முகநூலில் இருந்து முழுமையாக நீக்கினால் மட்டுமே முடியும். ஃபேக் ஐடி உங்க நட்பு வட்டத்திலும் இருந்தா அவங்க கிட்ட சொல்லி ப்ளாக் செய்ய சொல்லுங்க. பலரும் அந்த பேக் ஐடி பத்தி பேஸ்புக்கில் கம்ப்ளைன்ட் செஞ்சா பேஸ்புக்ல இருந்து முழுமையா நீக்க வாய்ப்புகள் அதிகம். 

ASL PLZ என ஒரு குறும்படம் யூட்யுப்ல இருக்கு. அதன் கதை பேஸ்புக் பத்தி இல்லாட்டியும், ஒரு ஆணும் பெண்ணும் போலியான பெயரில், தகவல்கள் கொடுத்து முகவரி உருவாக்கி முகம் பார்க்காமலே பேசி பழகுவார்கள்.. பின்னர் நேரில் சந்திக்கலாம்னு முடிவு செய்து ஓரிடத்தில் இருவரும் நேருக்கு நேரா பார்த்ததும் அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை உறவுகள். இவ்வாறு அந்த குறும்படம் போலி கணக்கின் அவலத்தை சொல்லும்.

மேற்கண்ட சில குறிப்புகள் மூலம் போலி முகவரிகளை ஓரளவு கண்டறிய முடியும் என நினைக்கிறேன். உங்களின் நட்பு வட்டங்களில் போலி முகவரிகளை பகிர்ந்து அவர்களையும் போலியிடமிருந்து காப்பாற்றுங்கள்.


10 கருத்துரைகள்:

Angel said... Best Blogger Tips

fake id மக்கள் நம்மை டார்கிட் செய்யுமுன் நம் நட்பு வட்டத்தில் உள்ளோரை நட்பாக்கி விடறாங்க .mutual friends என காட்டும்போது குழப்பமாயிருக்கும்
ஹிந்து /கிறிஸ்தவ முஸ்லிம் என மும்மத id எனக்கு மூவர்
ரிக்வஸ்ட் அனுப்பினார் .மூன்றும் ஏப்ரல் மாதம் ஆரம்பிச்ச id . ..விழிப்புடன் இருப்பது நல்லது .

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said... Best Blogger Tips

கவனமா இருக்கணும்..பயனுள்ள தகவல் பிரகாஷ். நன்றி

துரை செல்வராஜூ said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

வலிப்போக்கன் said... Best Blogger Tips

நல்ல தகவல்கள்.........

Unknown said... Best Blogger Tips

பலருக்கும் பயன் படும் பதிவு! நலமா?

சென்னை பித்தன் said... Best Blogger Tips

முக்கிய தகவல் பகிர்வு.நன்றி பிரகாஷ்

வெங்கட் நாகராஜ் said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்கள்.... நன்றி நண்பரே.

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

சிறப்பான விரிவான தகவல்கள்! நன்றி!

ஸ்ரத்தா, ஸபுரி... said... Best Blogger Tips

என் நண்பர் ஒருவருக்கு ஃபேஸ்புக் ஐடி முடக்கப்பட்டது. நீங்க சொன்னதுபோல பலபோட்டோ படங்கள் வந்து ஐடெண்டிஃபை பண்ணசூல்லி எல்லாமே தவறு என்று வந்தது. அவரால ஃபேஸ்புக் உள்ள போகவே முடயலை. வேற ஐடி ஆரம்பிக்கறதெல்லாம் இருக்கட்டும் அதுவரையிலும் அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் போனது போனதுதானே

ஸ்ரத்தா, ஸபுரி... said... Best Blogger Tips

என் நண்பர் ஒருவருக்கு ஃபேஸ்புக் ஐடி முடக்கப்பட்டது. நீங்க சொன்னதுபோல பலபோட்டோ படங்கள் வந்து ஐடெண்டிஃபை பண்ணசூல்லி எல்லாமே தவறு என்று வந்தது. அவரால ஃபேஸ்புக் உள்ள போகவே முடயலை. வேற ஐடி ஆரம்பிக்கறதெல்லாம் இருக்கட்டும் அதுவரையிலும் அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் போனது போனதுதானே

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1