CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பரமக்குடி கலவரம். Show all posts
Showing posts with label பரமக்குடி கலவரம். Show all posts


பரமக்குடி ?! என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...


பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இமானுவேல் சேகரன் நினைவு விழாவிற்காக வந்த ஒரு கட்சியின் தலைவரை, முன்கூட்டியே கைது செய்ததற்காக, தொண்டர்களின் எழுச்சியால், பரமக்குடியே ஸ்தம்பித்து, ராமநாதபுரம் மாவட்டமே சீர்குலைந்து, இன்று இந்தியாவில் அவப்பெயர் பெற்றுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
பின், 144 தடையுத்தரவு நீக்கப்பட்டு, படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதில் நடந்த அடிதடி சண்டையில், 2 கோடி ரூபாய்க்கு மேல், அரசுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகளில் படிக்கும்போது, மிகவும் வேதனையாக உள்ளது. 

எந்தவொரு தலைவரின் நினைவு விழா கொண்டாடப்பட்டாலும், அந்த தலைவரை தெய்வமாக நினைத்து, அவரின் கொள்கைகளை கடைபிடித்து, அவரின் வழியில் மற்றவர்களும் நடக்க வேண்டும். இதைத் தவிர்த்து, அடிதடி சண்டையில் இறங்கி, மற்ற கலவரங்களை உருவாக்கவோ, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உண்டாக்கவோ, மக்களின் பொதுச் சொத்துக்களை சீரழிக்கவோ கூடாது. 

இதுபோன்ற செயல்களைக் கண்டு இளைஞனாகிய எனக்கு, மிகவும் வேதனையாக உள்ளது. இதுபோன்ற விழாவிற்கு தலைவர்களோ, தொண்டர்களோ வராவிட்டால் அல்லது தடை செய்யப்பட்டாலோ, பஸ், ரயில் போன்றவைகளை சூறையாட வேண்டுமா? அதற்கான உத்தரவு பிறப்பித்த அதிகாரியுடன் கலந்தாலோசித்து காரணத்தை அறிந்துகொள்ள வேண்டியதுதானே புத்திசாலித்தனம். 

இதையெல்லாம் செய்யாமல், எவ்வளவோ அற்புத வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும், இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வது மனிதத் தன்மையல்ல. அதிலும், கலவரம் நடந்து பல நாட்கள் ஆகியும், விசாரணை என்ற பெயரில், நினைவு நாள் கொண்டாடக் கூடிய மக்கள், கிராமங்களில் இரவும், பகலும் வீட்டில் இருக்கும் ஆண்களை கைது செய்தும், ஆண்கள் இல்லாதபட்சத்தில், பெண்களை மிரட்டி விசாரிப்பதும், மிகப்பெரிய கொடுமை. 

இதனால், மக்கள் நிம்மதி இழந்து, மிகவும் பயந்து நடமாடுகின்றனர். செய்தி உதவி தினமலர். மக்களின் நண்பன் என சொல்லக்கூடிய காவல்துறையே, சம்பந்தமில்லாத நபர்களையும், கல்லூரி மாணவர்களையும் கைது செய்து, விசாரணை நடத்துவது மிகவும் கொடுமையானது.விசாரிக்க வேண்டுமென்றால், மாவட்ட எஸ்.பி., மூலம், கிராமத் தலைவரையோ அல்லது ஊராட்சித் தலைவரையோ அழைத்து, அந்தத் தலைவரின் மூலம், யாரெல்லாம் இவ்விழாவிற்கு சென்கின்றனரோ, அவர்களின் பட்டியலை வாங்கி, விசாரிப்பதுதான் முறை. 

சம்பந்தமில்லாதவர்களையும், கண்ணில் தெரிந்தவர்களையும் கைது செய்வது, துன்புறுத்துவது ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒன்று. எவ்வளவு நாள்தான் இப்படி அடிமையாக வாழ முடியும். ஒருவன் தவறு செய்தாலோ, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினாலோ, அவனுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் நம் சட்டம். 

அந்த வகையில், ஒருபோதும் அவர்களை மன்னிக்க முடியாது. கண்டிப்பாக அவர்களை கண்டறிந்து, தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்து.எனவே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற விழாவில் பங்கேற்பவர்கள், அவர் பங்கேற்பதற்கு அனுமதி பாஸ் வழங்கும்போது, அவர்களின் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதாரமான சான்றிதழ்கள் வாங்கிக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். 

அவ்வாறு செய்தால்தான், தவறு செய்தவர்களை மட்டும் தண்டிக்க முடியும். இல்லையெனில், சம்பந்தமில்லாமல் இருப்பவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது ஆகாது. தயவுசெய்து மக்களை துன்புறுத்தாமல், மக்களின் நண்பனாக நின்று விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். செய்யுமா?
மேலும் வாசிக்க... "பரமக்குடி ?! என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ..."

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1