CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label ரஜினி காந்த். Show all posts
Showing posts with label ரஜினி காந்த். Show all posts


ரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்


சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள், கர்நாடகாவில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். இவர்களின் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினிகாந்த். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் (ராமகிருஷ்ணா மிஷனின் அங்கம்)ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதே சமயத்தில் பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
மேலும் வாசிக்க... "ரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்"



"மங்காத்தா" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்!


   அஜித் குமார் நடிக்கும் 50-வது படமான ‘மங்காத்தா’வின் பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் தரப்பு கசியவிட்டு வருகிறது. அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் சிவாஜி படத்தில் இடம்பெறும் ‘பல்லேலக்கா’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். 
    இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு; “ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என்றார்.
   இதில் சுவாரசியம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.
மாலைமலர்
மேலும் வாசிக்க... ""மங்காத்தா" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்!"



மூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு


இந்த தொடர் பதிவை எழுத கோர்த்து விட்ட "கவிதை வீதி" சௌந்தர், "மாய உலகம்" ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.

1) நான் விரும்பும் மூன்று விஷயங்கள்...?

அப்பா, அம்மாவோட பாசம்...
மனைவியோட அன்பும், அனுசரணையும்...
நான் பார்க்கிற வேலை... 

2) நான் விரும்பாத மூன்று விஷயங்கள்?
நைட் ஷிப்ட் வேலை பிடிக்காதுங்க, ஆனாலும் தவிர்க்க முடியாதது.
மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் அடக்குமுறை (தீவிரவாதம்)
தேவைக்கு அதிகமாக பேசுபவர்களை (பந்தா பார்ட்டிகள்)

3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்?
அய்யோ நேரமாச்சே... சரியான நேரத்துக்கு சென்று விடுவோமா?
உலகில் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்குமோ?
வேலையில் கமிட்மன்ட் கொடுத்திட்டு முடிக்காமல் இருக்கும் போது...

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
இந்த தொடர் பதிவு ஏன் எழுதணும்?
இலக்கியமா ஓடு...ஓடு....
என்ன வாழ்க்கையடா இது... இப்படி சொல்லி ஏன் வெறுக்கணும்?

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
கம்ப்யுட்டர் மானிடர், 
நேரம், டெம்பரேச்சர் காட்டுகிற கடிகாரம்
ஆபீசில், என் ப்ளாகிற்கு(blog)  பதிவு எழுதிய பேப்பர்கள். 

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
எல்லோரும் தான் சொல்றாங்களே... வேறென்ன ஜோக்ஸ் பிட்டுகள்
அரசியல்வாதியான கேப்டன் படத்தில் நடித்தால் காமெடி தான்.
குழந்தைகளின் சேட்டை.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
வேறென்ன செய்றேன்... இந்த பதிவுக்காக டைப் பண்ணிட்டு இருக்கேன்.
கூகுளில சாட்டிங் போயிட்டு இருக்கு
நண்பர்கள் பதிவுக்கு கமென்ட்டுகிறேன்.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அட நம்ம பிரகாஷ் இவ்ளோ செய்திருக்கானா? மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
ஒரு முறையேனும் குடும்பத்தோட வெளிநாடு போகணும்.
எலோருக்கும் இருக்கற ஆசை தான்... நிறைய பணம் சேர்க்கணும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
கண்டிப்பா இந்த பதிவை எழுதி முடிச்சிருவேன். டோன்ட் வொர்ரி
ஓரளவு வசதியா இருக்கணும். கண்டிப்பா முடியும் .
எந்த வேலை செஞ்சாலும் கரெக்டா செய்யணும். கண்டிப்பா முடியும்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
வேறென்ன கெட்ட செய்திகள் தான்...
ஏன், எதுக்கு, எப்படி? கேட்கலாம். ஆனா அடிக்கடி கேட்கக்கூடாது.
உங்க சம்பளம் எவ்வளவு?

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
என் வேலைக்கு சம்பந்தமான CNC ப்ரோகிராம்ஸ்.
கம்ப்யுட்டர் ஹார்டுவேர்
எப்படித்தான் இவ்ளோ கருத்தோட பதிவு எழுதராங்களோ?

12) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?
ரஜினியின் "பாட்ஷா"
நம்பியாரின் "நெஞ்சம் மறப்பதில்லை" 
அஜித்தின் "தீனா"

13) நான் விரும்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?
உன்னைப் பார்த்த பின்பு தான்.... (காதல் மன்னன்)
என்னைத் தாலாட்ட வருவாளா.... (காதலுக்கு மரியாதை)
வசீகரா... என் நெஞ்சினில்... (மின்னலே)

14) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?
பணியாரம்
பிரியாணி வகைகள்
ஆப்பம் தேங்காய்பால்

15) இப்பதிவை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?
லீலைகளுக்கு நடுவில் இதற்காக நேரம் கிடைக்குமா?  "செங்கோவி"
எழுதுவார் என்ற நம்பிக்கையில், விக்கியுலகம் "விக்கி"
தொழில்நுட்பங்களுக்கு லீவ் கொடுங்க, வந்தேமாதரம் "சசி"
மேலும் வாசிக்க... "மூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு"



வரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவா‌ர்: த‌னு‌ஷ்


எப்போது வருவா‌ர் எ‌ப்படி வருவா‌ர் எ‌ன்று யாரு‌க்கு‌ம் தெ‌ரியாது, ஆனா‌ல் வரவே‌ண்டிய நேர‌த்த‌ி‌ல சூ‌ப்ப‌ர் ‌ஸ்‌டா‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌ண்டி‌ப்பாக வருவா‌ர் என‌்று அவரது மருமகனு‌ம், நடிகருமான த‌‌னு‌ஷ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக்குறைவா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் ஒரு மாதமாக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மரு‌‌த்துவமன‌ை‌யி‌ல் சிகிச்சை பெற்று வந்தார்.

ர‌ஜி‌னிகா‌ந்‌த் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொட‌ர்‌ந்து அ‌ண்மை‌யி‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் இரு‌ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் ‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் வாடகை‌க்கு ‌வீடு எடு‌த்து ஓ‌ய்வு எடு‌த்து வரு‌‌கிறா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ரஜினிகாந்தை பா‌ர்‌த்து ‌வி‌ட்டு நடிக‌ர் தனு‌ஷ் நே‌ற்‌றிரவு 10.30 மணிக்கு சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் எ‌ன்றா‌ர்.

தனி வீட்டில் அவர் தங்கி இருந்த படியே, மரு‌த்துவ‌ர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் எ‌ன்று‌ம் தனு‌ஷ் கூ‌றினா‌ர்.

ர‌ஜி‌னிகா‌ந்‌த் எ‌ப்போது செ‌ன்னை ‌திரு‌ம்புவ‌ா‌ர் எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, அவ‌ர் எ‌ப்போது வருவா‌ர் எ‌ப்படி வருவா‌ர் எ‌ன்று யாரு‌க்கு‌ம் தெ‌ரியாது, ஆனா‌ல் வரவே‌ண்டிய நேர‌த்த‌ி‌ல க‌ண்டி‌ப்பாக வருவா‌ர் எ‌ன்றா‌ர் த‌னு‌ஷ்.

மேலும் வாசிக்க... "வரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவா‌ர்: த‌னு‌ஷ்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1