புதிய திரைப்படங்களாக "இரவு கிளி", "பகல் கிளி" என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றிக்கரமாக ஓடிக கொண்டிருக்கிறது. அந்த இரண்டு படங்கள் பற்றி நமது பிரபல பதிவர்களின் விமர்சனம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. அதில் நமது பதிவர் மனோ அவர்கள் ரூம் பாயாக சிறப்பாக நடித்துள்ளார்.
நாஞ்சில் மனோ: பிடிச்ச படம் பிடிக்காத படம்னு எதுவும் இல்லை. ஆனா எங்க ஹோட்டல்ல எடுக்கற படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நான் ரூம் பாயா நடிச்ச "இரவு கிளி" படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நடிச்சத நானே விலாவாரியா சொல்றத விட அந்த படங்களை பார்த்தவங்க சொன்னா ரொம்ப நல்லா இருக்கும் என்பது என் கருத்து. பிடிக்காத படம்னா "பகல் கிளி". இந்த படத்தில் ஒரே ஒரு சீன்ல நான் தூங்குற மாதிரி வருவேன். அதனால என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல.
சிபி: ஆங்.... நான் படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவேன், அத பார்த்து எனக்கு படம் பிடிச்சிருக்கா, இல்லையான்னு தெரிஞ்சுக்கங்க. இருந்தாலும் நான் ரசிச்ச படம் ஒன்னு இருக்கு. ஆனா அதுக்கு நான் விமர்சனம் எழுதல. ஏன்னா ஒவ்வொரு முறை விமர்சனம் எழுத ஆரம்பிக்ரப்போ அந்த படம் பாக்கணும் போல தோணும். அப்படியே பலமுறை பார்த்திருக்கேன். அந்த படத்துல கடைசி அரை மணிநேரம் தான் செம இன்ட்ரஸ்ட். அந்த படத்தோட பேரு "இரவு கிளி". அதுல ஒரு கூலிங்கிளாஸ் பையன் செமையா நடிச்சிருப்பான். இதுக்கு மேல நான் சொல்லனும்னா. கொஞ்சம் பொறுங்க இன்னொரு முறை படம் பார்த்திட்டு வந்திடுறேன். ஹி..ஹி... வெயிட் பிளீஸ்... பாய்ஸ். பிடிக்காத படம்னா "பகல் கிளி" ஏன்னா அப்படித்தான் விமர்சனம் எழுதி இருக்கேன்.
கருன்: மச்சி நான் பார்த்தேன் படம். ஆனா அந்த படத்துல இல்ல காமெடி. ஆனா அதுல இருக்கு கா...நெடி... என்னத்த சொல்ல, எப்படி சொல்ல? ஆனா ஒன்ன மட்டும் சொல்றேன் அதுல ஒருத்தன் கலர் கண்ணாடி போட்டு ஒரு பையன் நடிச்சிருப்பான். இதுவர நான் பாக்காத நடிப்பு அது... மச்சி படம் பேரு சொல்லவா, "இரவு கிளி". முதல் நாள் முதல் ஷோ'ல அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கினேன் கடைசியா. ஆங்.... பிடிக்காத படம்னா அது "பகல்கிளி". ஏன்னா அதுல அந்த பையன் நடிப்புல தூங்கி வழிஞ்சான்,அதான் பிடிக்கல...

செங்கோவி: வணக்கம் நண்பர்களே, வேலைக்கு லீவு போட்டு மொத ஆளா குவைத்ல நான் பார்த்த படம்னா அது "இரவு கிளி" தான். செம படம். மொத சீன்ல இருந்து கடைசி சீன் வரை ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்த்த படம்னா அது இந்தப் படம் தான். அந்த படத்துல ஒரு ரூம் பாய் கூலிங் கிளாஸ் போட்டு நடிச்சிருப்பான் பாருங்க செம ரகள தான் அவன் வர்ற சீன் முழுசுமே செம கலக்கலா இருக்கும். அதை விட அவன் ஹன்சிகாவை கனவு கண்டுட்டே இன்னொரு பொண்ணு மேல இடிப்பான் பாருங்க. செம ரியலான சீன் அது. அப்புறம் எனக்கு பிடிக்காத படம்னா அது பகல் கிளி தான். ஆமாங்க, இரவு கிளியில நடிச்ச அந்த பையன் சொதப்பிட்டான் இந்தப் படத்துல.
தமிழ்வாசி பிரகாஷ்: அண்ணே வணக்கமுங்க. இந்த ரெண்டு படமும் ஒரே நாள்ல அடுத்து அடுத்து பார்த்து தொலைச்சேன். மொதல்ல பகல் கிளி பார்த்தேனுங்க. செம போர் படம்ங்க. இருந்தாலும் அதுல ஒரு பையன் தூங்கிட்டே நடிச்சிருக்கான். இருந்தாலும் ஓரளவு பரவாயில்ல. ஆனா அவன் தூங்குன சமயம் படம் செம ஸ்லோவா நகருது. ஆனா அவன் எந்திரிச்சு பாக்குறப்போ போயிட்டு வாங்கன்னு கும்பிடு போட்டு படத்தை முடிச்சுட்டாங்க. ஆனா அடுத்த ஷோ "இரவு கிளி" அப்படின்னு படம் பார்த்தேன். மொத படம் கொஞ்சம் மொக்கையா இருந்ததுனால ஒரு முன்னெச்சரிக்கையாக தலைவலி தைலம் வாங்கிட்டு போனேன். ஆனா படம் ஆரம்பிச்சதுல இருந்து செம ஸ்பீடுங்க. அந்த ரூம் பாயா நடிச்ச பையன் ரொம்ப சூப்பரா நடிச்சு இருக்கான். அவன் போட்டிருந்த கூலிங்கிளாஸ் நல்ல ஸ்டைல். அவன் வர்ற சீன்ஸ் எல்லாம் தியேட்டர்ல கைத்தட்டல் பலமா இருந்துச்சு. மொத்ததுல ரொம்ப நல்ல படம் "இரவு கிளி".
சசி குமார்: டெக்னிக்கலா பார்த்தா ரெண்டு படமும் சூப்பர். இருந்தாலும் "இரவு கிளி" அப்படிங்கிற படம் தான் டெக்னிக்கலா நல்லா பண்ணியிருக்காங்க. கேமரா ஆங்கிள் ரொம்ப நல்லா வச்சிருக்காங்க. அதிலும் ரூம் பாயோட ரூமை காட்டுற விதமே சூப்பரு. அப்புறம் பகல் கிளி படத்தை பற்றி சொல்லனும்னா கொஞ்சம் ஸ்லோ மூவ்மென்ட் படம். இரவு கிளி படத்தின் வேகத்திற்கு பகல் கிளி படத்தால் வர முடியாது. என்னைப்பொறுத்த வரை இரவு கிளி படத்துக்கு தான் புல் மார்க்.
நண்பர்களே சில பதிவர்களின் பார்வையில் இரவு கிளி, பகல் கிளி என்ற படங்களின் கருத்தை இங்கே பார்த்தோம். இதில் ரூம் பாயாக நடித்த பையனைப் பற்றியே எல்லோரும் கருத்து தெரிவித்திருப்பதை பார்க்கும் போது படத்தில் அந்த பையனின் கேரக்டர் ரொம்ப பேமசா பேசப்படும் போல என தெரிகிறது. இன்னும் சில பிராப்ள பதிவர்கள் இந்த படங்களை பார்க்காததால் அவர்களின் கருத்துகள் இங்கே இடம்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிஸ்கி: சம்பந்தப்பட்ட பெயருடைய பதிவர்கள் கவனிக்க, மேற்கண்ட கருத்துக்கள் யாவும் கற்பனையே.
இன்றைய பொன்மொழி:
நுனி நாக்கிலே தேனும், அடி நாக்கிலே நஞ்சும்!
இன்றைய விடுகதை:
அடி அடி என்று அடித்து
உரி உரி என்று உரித்து
உள்ளிருப்பதை எடுத்துக் கொண்டு
மேலே இருப்பதை எறிந்து விட்டேன். அது என்ன?
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் இட வேண்டாம். எனக்கு மெயில்(thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
விடை அடுத்த இடுகையில்...
சென்ற இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: பலாப்பழம்.
அந்த விடுகதைக்கான இடுகை: